Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 31 March 2016

ஏப்ரல் மாதம்... தேவதைகளின் மாதம்..

ஏப்ரல் ஆங்கில நாட்காட்டியின்நான்காவது மாதமாகும். 30 நாள்களைக் கொண்ட நான்கு மாதங்களில் ஏப்ரலும் ஒன்றாகும்.

ஏப்ரல் மாதம் வடக்கு அரைக்கோளத்தில்இளவேனிற்காலத்திலும், தெற்கு அரைக்கோளப் பகுதிகளில்இலையுதிர்காலத்திலும் வருகிறது.

🎽பெயர்க் காரணம்

ரோமானிய நம்பிக்கைகளின் படி ஏப்ரல் மாதம் வீனசு தேவதையின் மாதமாகக் கருதப்படுகிறது. கிரேக்கர்கள் வீனசை 'அஃப்ரோடைட்' என்றே அழைக்கின்றனர். அதன்படி வீனசு தேவதையின் மாதம் எனப் பொருள் தரும் "அப்லோரிஸ்" என்ற சொல்லே ஏப்ரல் மாதத்திற்கு வழங்கப்பட்டது எனக் கூறுவர்.

🎽🎀சித்திரைப் புத்தாண்டு என அழைக்கப்படும் தமிழ்ப் புத்தாண்டுஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

🎽🍎🎽🍎🎽🍎🎽
ஏப்ரல் நிகழ்வுகள்

*முட்டாள்கள் நாள் – ஏப்ரல் 1

*விடுதலை நாள் (கினி) - 3 ஏப்ரல்

*விடுதலை நாள் (செனிகல்) - 4 ஏப்ரல்

*மர நாள் (கொரியா) – ஏப்ரல் 5

*பாஸ்கா - யூதத் திருநாள்
உலக சுகாதார நாள் – ஏப்ரல் 7

*புத்தரின் பிறந்தநாள் – பாரம்பரிய நாள் – ஏப்ரல் 8

*தாய்லாந்தின் புத்தாண்டு - ஏப்ரல் 13

*புத்தாணு - லாவோசு பர்மியப் புத்தாண்டு - ஏப்ரல் 13

*கம்போடியப் புத்தாண்டு, – ஏப்ரல் 13

*ஏப்ரல் 14 - தமிழ்ப் புத்தாண்டு

*நாட்டுப்பற்றாளர்களின் நாள் – 
ஏப்ரல் 21

*புவி நாள் – ஏப்ரல் 22

*அன்சாக் நாள், (ஆத்திரேலியா, நியூசிலாந்து) ஏப்ரல் 25

*குழந்தைகள் நாள் (மெக்சிக்கோ),ஏப்ரல் 30

*ஆசிரியர் நாள் (பரகுவை), ஏப்ரல் 30

🎽🍎🎽🍎🎽🍎🎽
முக்கிய தினங்கள்

01.   உத்கல் திவாஸ் (ஒடிசா தினம்)

02.   ஆடிசம் (அறிவுத்திறன் குறைபாடு) விழிப்புணர்வு தினம்

07.   உடல் நல தினம்

18.   பாரம்பரிய தினம்

22.   உலக நாள்

23.   நூல் மற்றும் காப்புரிமை தினம்

25.   மலேரியா நோய் விழிப்புணர்வு தினம்

28.   பாதுகாப்பு விழிப்புணர்வு தினம்

28.   உலகத் தொழிலாளர்கள் நினைவு தினம்

29.   உலக நடன தினம்

🎽🍎🎽🍎🎽🍎🎽
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நாட்கள்

1-4-1912 - இந்தியாவின் தலைநகரமாக புது தில்லி அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் கல்கத்தா இந்தியாவின் தலைநகராக செயல்பட்டு வந்தது.

1-4-1936 - ஒரிசா மாநிலம் -ஆங்கிலேயர் ஆட்சியில் (பிஹாரிலிருந்து பிரிக்கப்பட்டு) உருவாக்கப்பட்டது. 1935-ம் ஆண்டு இதற்கான சட்டம் பார்லிமெண்டில் நிறைவேறியது. (ஒத்ர விஷயா என்ற சமஸ்கிருத சொற்களைக் கொண்ட ஒரிசா என்ற பெயர் உருவாக்கப்பட்டது. தற்போது ஒடிசா என்று மாற்றப்பட்டுள்ளது)

1-4-1956 - இந்தியக் கம்பெனிகள் சட்டம் அமலாக்கப்பட்டது. மத்திய அரசுக்கு கம்பெனிகளை நிறுவுதல், பண உதவி செய்தல், நடத்துதல் மற்றும் அவசியமானால் தொழில் நிறுவனங்களை மூடுவதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டது.

2-4-1970 - மேகாலயா மாநிலம் - அஸ்ஸôம் மாநிலத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது.

6-4-1930 - ஆங்கிலேயர்களின் உப்பு சட்டத்தை எதிர்த்து மகாத்மா காந்தியடிகள் தண்டி யாத்திரை மேற்கொண்டார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமான கட்டங்களில் ஒன்று தண்டி யாத்திரை.

6-4-1942 - ஜப்பான் விமானப் படை இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது இந்தியாவின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.

12-4-1978 - இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் ரெயில் பம்பாயிலுள்ள விக்டோரியா டெர்மினஸ் - புனே இடையில் தனது முதல் பயணத்தைத் துவக்கியது. இந்த ரெயிலின் பெயர் ஜனதா எக்ஸ்பிரஸ்.

13-4-1919 - ஜாலியன் வாலா பாக் படுகொலை. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் துக்ககரமான சம்பவம். அமிர்தசரஸ் நகரிலுள்ள ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் கூடியிருந்த மக்களின் மீது ஆங்கிலேய அதிகாரி டயர் என்பவர் 50 காவலர்களோடு நடத்திய துப்பாக்கிசூட்டில் 389 பேர் கொல்லப்பட்டனர். 1,516 பேர் காயமுற்றனர்.

13-4-1948 - ஒரிசா மாநிலத்தின் தலைநகராக புவனேஷ்வர் அறிவிக்கப்பட்டது. 12-ம் நூற்றாண்டிலிருந்து ஒரிசாவின் தலைநகராக கட்டாக் இருந்தது.

15-4-1952 - இமாசலப் பிரதேசம் (இந்திய யூனியன் பிரதேசம்) உருவாக்கப்பட்ட நாள். 30 சிறிய பிரதேசங்களை ஒன்றிணைத்து இமாசலப் பிரதேசம் உருவாக்கப்பட்டது.

17-4-1952 - இந்தியாவின் முதல் மக்களவை (லோக் சபா) அமையப்பெற்றது. அனந்தசயனம் அய்யங்கார் முதல் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

18-4-1991 - இந்தியாவிலேயே முழுவதும் கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்ட மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டது. கணக்கெடுக்கின்படி கேரளாவின் கல்வியறிவு விகிதம் 93.91 சதவீதம். மிசோரம் மாநிலம் இரண்டாவதாக உள்ளது. அதன் கல்வியறிவு விகிதம் 91.58 சதவீதம்.

19-4-1975 - இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆர்யபட்டா விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. (ரஷியாவின் உதவியோடு இது விண்ணில் ஏவப்பட்டது)

25-4-1982 - தூர்தர்ஷன் முதல்முதலாக வண்ணத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. (15-9-1959-ல் அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் புது தில்லியில் அரை மணி நேர (வாரத்தில் மூன்று நாட்கள்) ஒளிபரப்பாக இந்திய தொலைக்காட்சியைத் தொடங்கி வைத்தார்)

30-4-1998 - சமூக சேவகரான அன்னா ஹசாரேவுக்கு கேர் (இஅதஉ) அமைப்பின் சார்பாக அகில உலக மக்கள் நல விருது வழங்கப்பட்டது.

🎽🍎🎽🍎🎽🍎🎽
ஏப்ரல் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்

1. அஜீத் வடேகர் (இந்திய கிரிக்கெட் வீரர்) 1941.

3. ஹரிஹரன் (பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர்) 1955.

3. பிரபுதேவா (நடிகர், நடன ஆசிரியர்) 1973.

6. திலீப் வெங்சர்க்கார் (இந்திய கிரிக்கெட் வீரர்) 1956.

10. ஜி.டி.பிர்லா (தொழிலதிபர்) 1894.

11. கஸ்தூரிபாய் காந்தி (தேசப் பிதாவின் துணைவி) 1869.

14. பி.ஆர்.அம்பேத்கர் 1891.

17. விக்ரம் (நடிகர்) 1966.

18. ராம்நாத் கோயங்கா (இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிறுவனர், தலைவர்) 1904.

19. முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் நிறுவனம்) 1957.

19. அஞ்சு பாபி ஜார்ஜ் (தடகள வீராங்கனை) 1977.

20. என்.சந்திரபாபு நாயுடு (ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர்) 1950.

23. எஸ்.ஜானகி (பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி) 1938.

24. சச்சின் டெண்டுல்கர் (கிரிக்கெட் வீரர்) 1973.

24. இல.கணேசன் (அரசியல்வாதி) 1934.

29. ராஜா ரவி வர்மா (புகழ்பெற்ற ஓவியர்) 1848.

30. ரோஹித் சர்மா (கிரிக்கெட் வீரர்) 1987.
🎽🍎🎽🍎🎽🍎🎽
நினைவு தினங்கள்

5. லீலா மஜும்தார் (வங்காள எழுத்தாளர்) 2007.

5. பூர்ணசந்திர தேஜஸ்வி (கன்னட எழுத்தாளர்) 2007.

8. மங்கள் பாண்டே (இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்) 1857.

8. பங்கிம் சந்திர சட்டோபாத்யாய (வங்காள எழுத்தாளர்) 1894.

10. மொரார்ஜி தேசாய் (முன்னாள் பாரதப் பிரதமர்) 1995.

12. ராஜ்குமார் ( கன்னட நடிகர்) 2006.

14. எம். விஸ்வேஸ்வரய்யா (பிரபல பொறியாளர்) 1962.

15. எஸ். பாலசந்தர் (வீணை வித்வான் மற்றும் நடிகர்) 1990.

17. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (முன்னாள் பாரத குடியரசுத் தலைவர்) 1975.

23. சத்யஜித் ரே (பிரபல வங்காளத் திரைப்பட இயக்குநர்) 1992.

26. ஸ்ரீநிவாச ராமானுஜன் (கணிதமேதை) 1920.

125-வது பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயங்கள்: மத்திய அரசு தகவல்

பி.ஆர்.அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் ஆண்டை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படவுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் ஆண்டினை குறிக்கும் வண்ணம், அவரது உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயங்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அந்த நாணயத்தின் வெளிவட்டம் அலுமினியம் மற்றும் வெண்கல உலோக கலவையால் செய்யப்பட்டுள்ளது. நாணயத்தின் மையப்பகுதி கப்ரோ நிக்கலால் உருவாக்கப்பட்டுள்ளது.

நாணயத்தின் ஒருபுறம் அசோக ஸ்தூபியும், மறுபுறம் அம்பேத்கரின் உருவமும் இடம்பெற்றிருக்கும். அம்பேத்கரின் உருவம் பொறிக்கப்பட்ட பகுதிகளில் ‘125th BIRTH ANNIVERSARY OF Dr.B.R.AMBEDKAR’ என்று எழுதப்பட்டிருக்கும். இந்தியிலும் அதே வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

125 அடி உயர அம்பேத்கர் சிலை: சந்திரபாபு அறிவிப்பு

ஆந்திர மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, “அம்பேத்கர் பிறந்தநாளை முன் னிட்டு, புதிய தலைநகரான அமரா வதியில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்படும். மேலும் பழங்குடியினர், தலித் இனத்தவருக்கான துணை திட்டம் அமல்படுத்தப்படும். அன்றைய தினம் 6 லட்சம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்படும். அம்பேத்கர் கண்ட கனவை நினைவாக்க மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்” என்றார்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு எவ்வளவு? ஐகோர்ட்டில் விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மற்றும் சரஸ்வதி நர்சரி பள்ளிகளில் கடந்த 2004–ம் ஆண்டு ஜூலை 16–ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில், குழந்தைகள் உட்பட 93 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். 16 குழந்தைகள் தீ காயங்களுடன் உயிர் தப்பினார்கள். 

இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கும், படுகாயமடைந்த குழந்தைகளுக்கும் தகுந்த இழப்பீட்டை நிர்ணயம் செய்யக் கோரி குழந்தைகளின் பெற்றோர் சார்பில் கே.இன்பராஜ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், இழப்பீட்டை நிர்ணயம் செய்ய ஓய்வுப் பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து கடந்த 2014–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதி என்.பால்வசந்தகுமார் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் விசாரணை நடத்தி வந்தது. இந்த ஆணையத்திடம் இழப்பீடு கேட்டு, தீ விபத்தில் பலியானவர்களின் பெற்றோர் 93 பேரும், தீ காயம் பட்டவர்கள் 14 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரிடமும் நீதிபதி கே.வெங்கட்ராமன் விசாரணை நடத்தினார். இதன்பின்னர் தீ விபத்தில் பலியான குழந்தைகள், படுகாயமடைந்த குழந்தைகள் ஆகியோரது பெற்றோருக்கு எவ்வளவு தொகை இழப்பீடாக வழங்கலாம் என்ற பரிந்துரையை நீதிபதி வெங்கட்ராமன் அறிக்கையாக தயாரித்தார். சீலிடப்பட்ட அந்த அறிக்கையை, சென்னை ஐகோர்ட்டில் இன்று பிற்பகல் தாக்கல் செய்தார்.

அகில இந்திய தேசிய திறனறிவு போட்டியில் தேர்ச்சி பெற்ற காரைக்கால் அரசுப் பள்ளி மாணவர்கள் !!!

அகில இந்திய தேசிய திறனறிவு போட்டியில் தேர்ச்சி பெற்ற காரைக்கால் அரசுப் பள்ளி மாணவர்களை கலெக்டர் கரிகாலன் பாராட்டினார்.

             அகில இந்திய தேசிய திறனறிவு தேர்வில், காரைக்கால் வடமறைக்காடு அரசு தொடக்கப்பள்ளியை சேர்ந்த 16 மாணவர்கள் கலந்து கொண்டனர். 
இத்தேர்வுகள் நான்கு பாடப்பிரிவுகளில் நடந்தது.

கணிதம், ஆங்கிலம், அறிவியல், கணிப்பொறி அறிவியல் ஆகிய பிரிவுகளில், வடமறைக்காடு பள்ளி மாணவர்ரகள் 12 பேர் தேர்வாகினர்.அதையொட்டி, இப் பள்ளிக்கு, 'கோல்டன் ஸ்கூல் அவார்டு' வழங்கப் பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன், ஆசிரியர்கள் நிர்மலா, வசந்தி, விக்னேஸ்வரி ஆகியோருக்கு ஊக்கப்பரிசு வழக்கப்பட்டது.விருது பெற்ற மாணவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களை கலெக்டர் கரிகாலன் பாராட்டினர்.இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அதிகாரி வெற்றிவேல், கல்வித்துறை துணை வட்ட ஆய்வாளர் மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேர்தல் பணிக்கென அறிமுக கூட்டம்-கிருஷ்ணகிரி மாவட்டம் -02.04.2016


தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு வசதிகள்: தேர்தல் ஆணையம் உறுதி


Election Class Training Time schedule


இணையத்தில் தடை செய்த 344 மருந்து பட்டியல் வெளியீடு.

புதுச்சேரி: மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள 344 மருந்துகளின் பெயர்ப்பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வாழ்வுச் சான்று அனுப்பாவிட்டால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் 'கடும் வெயிலுக்கு கம்பங்கூழ்'

நாம் கொளுத்தும் வெயிலில் நாம் குளிர்பானங்களை தேடிச் செல்வதுண்டு.
பல வகையான வேதிப்பொருட்களும், சாயப்பொருட்களும் நிறைந்த செயற்கை குளிர்பானங்களை குடிப்பதால் பல் எனாமல் தேய்ந்து, பற்கூச்சம் ஏற்படுவதுடன், கண்டு பிடிக்க இயலாத பலவிதமான வயிற்று உபாதைகளும் உண்டாகின்றன. உடனடியாக கிடைத்தல், அவசரம், நிற ஈர்ப்பு போன்ற காரணங்களால் செயற்கை குளிர்பானங்களை நாடி அதற்கு அடிமையாகி விடுகின்றனர்.

தினம் ஒரு புத்தகம் 'ஏன்? எப்படி?"


Bharathidasan University M.Phil Part Time May 2016 Exam Timetable


பிளஸ்-2 தேர்வு நாளையுடன் முடிவடைகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது. 8 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வில் கலந்துகொண்டுள்ளனர்.இதுவரை நடந்த தேர்வுகளில் வேதியியல் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறியுள் ளனர்.

மத்திய அரசின் சுகாதார துறைகளில் சிறப்பு அதிகாரி பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு.

மத்திய அரசின் சுகாதார துறைகளில் காலியாக உள்ள கிரேடு-III பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. சம்மந்தப்பட்ட துறைகளில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்தல் நாளில் 30 நிமிட உணவு இடைவேளை தேவை: ஆசிரியர்கள் வலியுறுத்தல்.

தேர்தல் நடைபெறும் நாளில் தமிழகம் முழுவதும் 30 நிமிடம் உணவு இடைவேளை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியர்கள் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம்மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரனிடம் அளிக்கப்பட்டுள்ள மனு:தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கையாக பள்ளி மாணவர்களிடம் தேர்தல் உறுதிமொழி படிவம் வழங்கி பெற்றோரிடம் கையெழுத்து பெற்று வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்க்கும் 200 எளிய ஆங்கில வார்த்தைச் சொற்கள்

தொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 200 எளிய ஆங்கில வார்த்தைச் சொற்கள் கலைக்கப்பட்டு அதனை சரியான முறையில் எழுதும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 200 வார்த்தைகளுக்கான சரியான தமிழ் அர்த்தமும் அதன் எதிரே விடைக்குறிப்பாக கொடுக்கப் பட்டுள்ளது
Thanks Raghupathi


10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தாமதமாகும்?

பள்ளி ஆசிரியர்களுக்கு, சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்பு துவங்க உள்ள நிலையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கவில்லை. எனவே, தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகலாம் என, தெரிகிறது.பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளையுடன் பொதுத் தேர்வுகள் முடிகின்றன. மொழி பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது; முக்கிய பாடங்களுக்கு, ஏப்., 6 முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது.

மின் வாரிய தேர்வு திடீர் தள்ளிவைப்பு

தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை, தமிழ்நாடு மின் வாரியம் திடீரென தள்ளிவைத்துள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், 525 தொழில்நுட்ப உதவியாளர்; 50 உதவி வரைவாளர்; 900 கள உதவியாளர் என, 1,475 காலி பணியிடங்களை நிரப்ப, சென்னை,அண்ணா பல்கலை மூலம், ஏப்., 3ல், எழுத்து தேர்வு நடத்த இருந்தது.

துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு.

அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், உயர் பதவிகளுக்கான தேர்வு டிசம்பர் மற்றும் மே மாதம் நடைபெறும். மே மாதம் நடைபெற இருக்கும் துறைக்கு விண்ணப்பிக்க தேதி மார்ச் 31 ல் இருந்து ஏப்ரல் 11 எனநீடிப்பு செய்யப்பட்டுள்ளது'மே' மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் இணையதளம் , (www.tnpsc.gov.in ) மூலமாக மட்டும் விண்ணபிக்க முடியும்.

From the Director of Treasuries and Accounts on mustering of pensioners and family pensioners

யுனெஸ்கோ பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் அகஸ்தியர்மலை!

உலகெங்கிலும் அரிய வனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் யுனெஸ்கோ இணைத்து வருகிறது

அதனடிப்படையில், தமிழகக்ததில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் மலையை உலகின் http://tn/பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் யுனெஸ்கோ இந்த மாதம் 19-ஆம் தேதி முதல் இணைத்துக் கொண்டது. இந்தப் பட்டியலில் அகஸ்தியர் மலை இணைந்ததின் மூலம் உலகளவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தமிழக வனத் துறையினர் தெரிவித்தனர்.

 கடந்த ஆண்டு யுனெஸ்கோ பட்டியலில் கனடா நாட்டின் பீவர் மலைப் பகுதியும், இந்தோனேசியாவின் பாம்பங்கன் வனப் பகுதியும் இணைந்தன.
 தமிழகத்தில் ஏற்கெனவே நீலகிரி மலைப் பகுதி 2000 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் இணைக்கப்பட்டது. அதேபோல, 2001 ஆம் ஆண்டு மன்னார் வளைகுடாப் பகுதியும் யுனெஸ்கோவின் பட்டியலில் இடம் பெற்றது. இந்தியாவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 10 பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில், தமிழகம் மூன்று வனப் பகுதிகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
 அகஸ்தியர்மலை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர்மலை தமிழக- கேரள மாநில எல்லைகளையொட்டி 3500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அகஸ்தியர் மலை வனப் பகுதியில் 2,250 தாவர வகைகளும், 337 பறவை இனங்களும், 79 பாலூட்டிகளும், 88 வகையான ஊர்வனங்களும், 46 வகை மீன்களும், 45 நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய சிறிய உயிரினங்களும் உள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
 அகஸ்தியர் மலையின் பாதுகாப்பட்ட வனத்தில் யானை, புலி, சிறுத்தை, காட்டு நாய், சாம்பார் (மான்), நான்கு கொம்பு மான்கள், காட்டெருமை, வரையாடு, காட்டுப் பன்றி ஆகியவை அதிகளவில் காணப்படுகின்றன. மேலும், இந்தக் காடுகளில்தான் அதிகளவில் இந்திய பெரிய அணில்கள் ஏராளமாக உள்ளன. அகஸ்தியர் மலைப் பகுதிக்கு உள்பட்ட களக்காடு- முண்டன்துறை புலிகள் சரணாலயமும், கன்னியாகுமரி விலங்குகள் சரணலாயமும் இந்தப் பகுதிகளில் உள்ளன.

 மிகப் பழைமையானது: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் இமயமலையைவிடப் மிகப் பழைமையானவை எனக் கண்டறியப்பட்டு, அவற்றை உலகின் பாரம்பரியமிக்க இடமாக யுனெஸ்கோ 2012-இல் அறிவித்தது. 8 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் உருவான புவியியல் அமைப்பே மேற்குத் தொடர்ச்சி மலைகள் என்பது புவியியல் வல்லுநர்களின் ஆய்வு முடிவாகும்.
 உயிர்ப்பன்மை பாதுகாப்பு: தமிழக அரசு அகஸ்தியர் மலை நிலப்பரப்பில் உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் ஊரக வாழ்வாதார மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. அகஸ்தியர் மலை நிலப்பரப்பில் ஊரக வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் மலைக் கிராம மக்களின் பங்கேற்புடன் வனம் பாதுகாக்கப்படும். வனத்தைச் சார்ந்து வாழ்பவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புக்கு கடனுதவி அளிக்கப்படும். இது மக்களையும், வனங்களையும் பிரிக்காதவாறு செயல்படுத்தக் கூடிய திட்டமாகும்.

குழந்தைகள் காணாமல் போவது அதிகரிப்பு: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்து வருவதாக கடந்த சில தினங்களுக்கு முன் ஊடகங்களில் செய்தி வெளியானது. 2014ம் ஆண்டு 441 குழந்தைகள் காணாமல் போனதாகவும், 2015ல் இந்த எண்ணிக்கை 656 ஆக அதிகரித்திருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

சென்னையில் 2014ம் ஆண்டு 114 குழந்தைகள் காணமல் போனதாகவும், கடந்த ஆண்டு 71 பெண் குழந்தைகள் உள்பட 149 குழந்தைகள் காணாமல் போனதாகவும், இந்த ஆண்டு இதுவரை 58 குழந்தைகள் மாயமாகியிருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தகவல் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு சென்றதும், ஆணையம் தானாக முன்வந்து இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபற்றி விளக்கம் கேட்டு தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை ஐ.ஜி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி கேட்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

குழந்தைகள் காணாமல் போகும் விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளை மனித உரிமை ஆணையம் வெளியிட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!