Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 1 April 2016

தினம் ஒரு புத்தகம் "கணித மன்ற செயல்பாடுகள் '


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நடத்தை விதிகளில் சில

1. அரசு ஊழியர்கள் /ஆசிரியர்கள் வேறு எவ்வித தொழிலையும் முழு நேரமாகவோ பகுதி நேரமாகவோ செய்யக் கூடாது.
2. சமூக பணிகள், இலக்கியம், அற இயல்புடைய பணிகள், கலைப் பணிகள், அறிவியல் பணிகள் ஆகியவற்றில் அலுவலக/பள்ளி பணிக்கு ஊறு நேராமல் ஈடுபடலாம்.

ஜேஎன்யூ பல்கலை. சேர்க்கைக்கான மாணவர் விண்ணப்பங்கள் 3000 குறைந்தன

டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் சுமார் 3000 குறைந்துள்ளன. இதற்கு அதன் மாணவர் தலைவர்கள் மீது தேசவிரோத வழக்குகள் பதிவு மீதான சர்ச்சைகள் காரணம் எனக் கருதப்படுகிறது.

டெல்லி வரலாற்றுச் சின்னங்களின் புகழ் மங்குகிறதா?: குறையும் சுற்றுலாப் பயணிகள் வரத்து

டெல்லியில் உள்ள வரலாற்று சின்னங்களை பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வரத்து கடந்த இரு வருடங்களாக குறைந்துள்ளது. இந்த புள்ளிவிவரம் இந்திய தொல்லியல் துறையின் பதிவேடுகளில் இருந்து வெளியாகி உள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் மாணவர்களை களம் இறக்க அரசியல் கட்சிகள் திட்டம்

சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரத்துக்கும், இளைய தலைமுறையினரின் வாக்குகளை கவர்ந்திழுக்கவும், கல்லூரி மாணவர்களை பயன்படுத்த அரசியல் கட்சியினர் வியூகம் அமைத்து வருகின்றனர்.

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.'நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திப்பிலி"

திப்பிலி கொடி வகையை சார்ந்தது. கொடியில் காய்க்கும் காய்தான் திப்பிலி என்றழைக்கப்படுகிறது. செடியின் வேரும் மருத்துவகுணம் வாய்ந்ததாக இருக்கிறது. அவை சிறு முடிச்சுகளுடன் நீண்டு மெலிதாக காணப்படும். அதனை கண்டந்திப்பிலி என்று அழைக்கிறோம்.

மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் எப்போது?

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், ஏப்., 15ல் துவங்குகிறது. 

150 கோடி ரூபாய் பாக்கி - வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை ?

தமிழக அரசு, 150 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதால் வரும் கல்வியாண்டில், கட்டாய கல்விச் சட்டத்தின்படி, இலவச மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது' என, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன. மத்திய அரசு, 2009ல், கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. இதே சட்டத்தை, மாநில அரசுகளும் கொண்டு வந்தன. அதன்படி, அனைத்து மாநிலங்களிலும், ஆறு வயது முதல், 14 வயது வரையிலான குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கும் கட்டண செலவை மத்திய அரசே ஏற்கிறது.

ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதியில் தேர்தல் பயிற்சி வகுப்பு தொடக்கம்

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள் நாளை நிறைவு பெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.

Validity period of OBC Certificate in respect of creamy layer status of the candidates.


சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகித குறைப்பு இன்று முதல் அமல்

சிறு சேமிப்புகளுக்கான வட்டி விதிகம் குறைக்கப்படும் என கடந்த 16-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பி.எப்., கிஸான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகித குறைப்பு இன்று(ஏப்.,1) முதல் அமலுக்கு வருகிறது.

இன்று முதல் உயரும் வாகனங்களுக்கான காப்பீடு கட்டணங்கள்... இருசக்கர வாகனங்கள்

* 75 சிசி முதல் 150 சிசி வரை - 6 % முதல் 15 % வரை.
*150 சிசி முதல் 350 சிசி வரை
25 %வரை
*1000 சிசி சிறிய வகை கார்களுக்கான (ஆல்டோ, நானோ போன்றவை) 40% வரை.
(தற்போது ரூ. 1468 வசூலிக்கப்படும் தொகை ரூ. 2,055 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.­)
* 1000-1500 சிசி கார்களுக்கு 40 % வரை.( ரூ. 1598லிருந்து ரூ. 2237 ஆக உயர்ந்துள்ளது)

DEE:6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை -திருவள்ளூர் மாவட்டம்.


கட்டாய வேக கட்டுப்பாட்டு கருவி சட்டம் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது: லாரி, வேன்களில்பொருத்தாவிட்டால் எப்.சி. வழங்கப்படாது.

லாரி மற்றும் வேன்களில் ‘கட்டாயம் வேக கட்டுபாட்டு கருவியை பொருத் தும் சட்டம்’ இன்று முதல் (ஏப்ரல்-1) அமலாகிறது. வாகனங்களில் வேகக் கட்டுபாட்டு கருவி பொருத்தா விட்டால் அவற்றை இயக்குவதற் கான எப்.சி (தகுதிசான்று) வழங்கப்படாது என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி மாணவர்களே ஆசிரியர்களை மதிப்பீடு செய்யும் முறை-கல்வி திட்டத்தில் வருகிறது மாற்றம் - பிரதமர் மோடி பரிந்துரை.

பள்ளிகள் முதல் பல்கலை., வரை கல்வி கட்டமைப்பில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என நிதி ஆயோக் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறைக்கு பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளார்.இது தொடர்பாக சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பள்ளி மாணவர்களே ஆசிரியர்களை மதிப்பீடு செய்யும் முறை கொண்டு வரப்பட வேண்டும்.

கல்வி கட்டண கமிட்டிக்கு அதிகாரி நியமனம்.

கல்விக்கட்டண நிர்ணய கமிட்டியின் சிறப்பு அதிகாரியாக,மெட்ரிக் இணை இயக்குனர் ஸ்ரீதேவிநியமிக்கப்பட்டு உள்ளார்.கடந்த, 2009ல், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் வந்ததும், சுயநிதி தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. 2012 ஜனவரியில், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு, இந்த கமிட்டி தலைவரானார்.

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை பணால்!

தமிழக அரசு, 150 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதால் வரும் கல்வியாண்டில், கட்டாய கல்விச் சட்டத்தின்படி, இலவச மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது' என, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன. மத்திய அரசு, 2009ல், கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. இதே சட்டத்தை, மாநில அரசுகளும் கொண்டு வந்தன. அதன்படி, அனைத்து மாநிலங்களிலும், ஆறு வயது முதல், 14 வயது வரையிலான குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கும் கட்டண செலவை மத்திய அரசே ஏற்கிறது.

சட்டசபை தேர்தலால் பாதிப்பா? எழுத்தறிவில் தமிழகம் பின்தங்குமா?

சட்டசபை தேர்தலால், பள்ளி செல்லா குழந்தைகளை, பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான எஸ்.எஸ்.ஏ., சார்பில், ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து, பெயர் விவரங்களுடன் ஆசிரியர்கள் கணக்கெடுப்பு நடத்துவர்.

நாளை முதல் 3 நாட்கள் 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி:சென்னை, மதுரை, கோவையில் நடக்கிறது

பிளஸ் 2வுக்கு பின், உயர்கல்வியில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ற மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும், 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி, நாளை முதல், மூன்று நாட்கள், சென்னை, மதுரை மற்றும் கோவையில்நடக்கிறது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு, உயர்கல்வியின் பாடப்பிரிவு, கல்லுாரிகளின் விவரங்கள் குறித்து வழிகாட்டும், 'வழிகாட்டி' நிகழ்ச்சி, 'தினமலர்' நாளிதழ் சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இன்ஜினியரிங் விண்ணப்பத்துக்கு டி.டி., தேவையா? அண்ணா பல்கலை திட்டத்தை மாற்ற கோரிக்கை.

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்துக்கு, டி.டி., எடுக்க வேண்டும் என்பதால், மாணவர்களின் பணம், 1.5 கோடி ரூபாய் வீணாகும் என, பெற்றோர் தெரிவித்துள்ளனர். எனவே, நேரடியாக வங்கியில் கட்டண தொகையை செலுத்தும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.'அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., படிப்புகளுக்கு, 'ஆன்லைனில்' மட்டுமேவிண்ணப்பம் வழங்கப்படும்' என, அண்ணா பல்கலை அறிவித்துஉள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!