Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 2 April 2016

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள் ' கோடையில் குளிர்ச்சி தரும் நுங்கு"


கோடை வெயில் கொளுத்திட்டிருக்கு. வெயிலோட தாக்கத்தில இருந்து தப்பிக்க குளிர்பானங்கள், பழங்கள், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை சாப்பிட்டு வர்ற இந்த நேரத்துல இயற்கையோட கொடையான நுங்கு சீசனும் தொடங்கியிருக்கு. நாம விரும்பி சாப்பிடற இந்த நுங்குல ஏராளமான நன்மைகள் இருக்கு. 

50 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் பொறியியல் படிப்புகள்

\ மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித் தொகையுடன் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 50 பேர் பி.இ., பி.டெக்., படிப்பில் சேர்க்கப்பட உள்ளனர்.
 எபிலிட்டி பவுண்டேசனும், சத்தியபாமா பல்கலைக்கழகமும் இணைந்து மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான இந்தச் சலுகையை அளிக்க முன்வந்துள்ளன.

அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்விக்கு பெற்றோர்கள் வரவேற்பு

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதால் அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்விக்கு பெற்றோர்களிடம் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்சி., மெட்ரிக் போன்ற தனியார் பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம், பள்ளி கட்டிட நிதி, அறக்கட்டளை நிதி என தனித்தனியாக வசூலிக்கின்றனர். இதனால் அரசு பள்ளியில் உள்ள ஆங்கிலவழி கல்விக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

தினம் ஒரு புத்தகம் "இந்திய வரலாறும் பண்பாடும் "


தொடக்க வகுப்பு மாணவர்களின் தமிழ் வார்த்தைகள் அறிதல் மற்றும் எழுதுதல் திறன் வளர்க்கும் தேர்வுத்தாள். கலைக்கப்பட்ட 200 தமிழ் வார்த்தைச் சொற்களை வரிசைப்படுத்தி வார்த்தைகளை உருவாக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

Thanks Ragupathi


PENSION – Contributory Pension Scheme – Settlement of accumulation under Contributory Pension Scheme in respect of CPS subscribers retired/resigned, died and terminated from service - Orders Issued – Clarification sought – Regarding.

Letter No.185[S(E)]/Fin (PGC) /2016-1 
Dt: April 01, 2016

PENSION – Contributory Pension Scheme – Settlement of accumulation under Contributory Pension Scheme in respect of CPS subscribers retired/resigned, died and terminated from service - Orders Issued – Clarification sought – Regarding.

பிளஸ் 2 தேர்வு அறையில் கண்காணிப்பாளர் உயிரிழப்பு.

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வு அறை கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியர் மயங்கிவிழுந்ததில் இறந்தார். பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொருளியல் தேர்வு, நேற்று காலை நடந்தது.

புதிய தொழில்நுட்பத்தில் ‘செவ்வாய்’ கண்காட்சி: மைக்ரோசாப்டுடன் இணைந்து நாசா ஏற்பாடு

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறு வனமான நாசா, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செவ்வாய் கிரக (டெஸ்டினேஷன்: மார்ஸ்) கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தின் பார்வையாளர் வளா கத்தில் வரும் கோடை காலத்தில் இந்த கண்காட்சி நடைபெறும் என்று நாசா தெரிவித்துள்ளது.

இதில், கடந்த 1969-ல் நிலவில் நடந்த விண்வெளி விஞ்ஞானி பஸ் ஆல்ட்ரின் வழிகாட்டியாக செயல்படுவார். இவர் இங்கு வரும் பார்வை யாளர்களுக்கு, ‘ஹோலோ லென்ஸ் ஹெட்செட்’ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள தோற்றப் பதிவுகளை காண்பித்து அதுபற்றி விளக்குவார்.

வரும் 2030-ல் மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இந் நிலையில், இந்த கண்காட்சி செவ்வாய் கிரக சுற்றுப் பயணத்துக்கான முன் அனுபவ மாக இருக்கும் என்று கருதப் படுகிறது.

பிளஸ் 2 பொருளியல் தேர்வு: சிந்திக்க வைத்த '22 மதிப்பெண்'

பிளஸ் 2 பொருளியல் தேர்வில் 22 மதிப்பெண்களுக்கு 'புக் பேக்கில்' இடம் பெறாத வினாக்கள் கேட்கப்பட்டு மாணவர்கள் சிந்தித்து எழுதும் வகையில் இருந்ததால் 'சென்டம்' பெறுவது சவாலாக இருக்கும்,' என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.சென்ற ஆண்டு பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் 'சென்டம்' பெற்றது சர்ச்சை ஏற்படுத்தியது.

ஒரு மதிப்பெண் வினாவால் 'சென்டம்' கடினம்:இயற்பியல் எழுதிய பிளஸ்2 மாணவர்கள் கருத்து.

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 'புளூபிரின்ட்' படி கேட்கப்படாததால், நுாறு மதிப்பெண் எடுப்பது கடினம்,' என, மாணவர்கள் தெரிவித்தனர்.வினாத்தாள் தொடர்பாக விருதுநகர் மாவட்டமாணவர்கள் கூறியதாவது:

மந்திரமா, தந்திரமா? - அறிவியல் உண்மை விளக்கம்


கண்ணாடியை திண்ணும் வித்தை எப்படி ? மந்திரமா, தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சியில் ருசிகரம் காதில் குளிர்பானம் குடிப்பது எப்படி ? அறிவியல் உண்மை விளக்கம்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புக: வாசன்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகிறது. இப்பள்ளிகளில் மத்திய அரசு ஊழியர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பணியாளர்களின் குழந்தைகள் லட்சக்கணக்கில் படித்து வருகின்றனர்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10 சதவீதம் பணியிடங்கள் காலியாக இருந்தாலே முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என அரசாங்க நடைமுறை விதிகள் உள்ள நிலையில் தற்போது 23 சதவீத பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது.

நாடு முழுவதும் புதிதாக 101 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க சுமார் ஆயிரத்து 600 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ரூ.577 கோடி மட்டு ஒதுக்கியுள்ளது. எனவே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலிப் பணியிடங்களை உடனடியாக முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும், அப்பள்ளிகளுக்கான நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்து தர வேண்டும். அதேபோல் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலிப் பணியிடங்களையும் உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

வரும் 2050-ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்: அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை

வரும் 2050-ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாஷிங்டன்: 

உலகம்  71 சதவீத தண்ணீரை கடல் மூலம் சூழ்ந்து கிடக்கிறது. மீத முள்ள 29 சதவீதம் பூமிக்கு அடியில் குடிநீராகவும், பனிப்பாறைகளாகவும், ஐஸ் கட்டிகளாகவும் உள்ளன. தற்போது பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகி கடலின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. 

இந்த  நிலையில் அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் உலகில் ஏற்படும் தண்ணீர் பிரச்சினை குறித்து ஆய்வு மேற் கொண்டனர். 

அதில், வருகிற 2050-ம் ஆண்டில் உலகில் அதிக நிலப்பரப்பை கொண்ட ஆசியா கண்டத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் சிக்கி தவிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு இன்றைய சமூக பொருளாதார மாற்றம் ஒரு சிறிய அளவிலான காரணமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் புகை போன்ற காற்று மாசுவினால் பருவ நிலை மாற்றமே மிக முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கமும் மிக முக்கிய காரணம் என மசாசூ செட்ஸ் தொழில் நுட்ப நிறுவன விஞ்ஞானி ஆடம் ஸ்கால்சர் உறுதி பட கூறியுள்ளார். இன்னும் 35 ஆண்டுகளில் ஆசியா கண்டத்தில் கடுமையான தண்ணீர்  பஞ்சத்தால் 100 கோடி  மக்கள்  அவதிப்படுவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

விடைத்தாள் திருத்தும் பணி:முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை.

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை மனுவை புதன்கிழமை அளித்தனர்.தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில் அளித்த மனு: கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூர் என இரு மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தேர்தல் பணியில் விலக்கு அளிக்க கணக்கெடுப்பு ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்துவிலக்களிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கையைஅதிகரிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்., மே மாதங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியும், மே மாதங்களில் ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நேரடியாக விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்வது வழக்கம்.

கிராம மேம்பாட்டு தேசிய வங்கியில் அதிகாரியாக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!

‘நபார்டு’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கியில் அதிகாரியாக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!

பணி பிரிவுகள்:

விஐடி பல்கலைக்கழகத்தில் படிக்க 2.12 லட்சம் பேர் விண்ணப்பம்: ஏப்ரல் 6 முதல் 17 வரை நுழைவுத் தேர்வு நடக்கும் என அறிவிப்பு.

விஐடி பல்கலைக்கழகத்தில் கல்வி பயில நடத்தப்படும் நுழைவுத் தேர்வை (VITEEE) எழுத 2.12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது ஒரு சாதனை அளவாகும் என்று அந்த பல்கலை. தெரிவித்துள்ளது.விஐடி பல்கலைக்கழகத்தில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நுழைவுத் தேர்வுக்காக 2,02,406 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

ஆய்வக உதவியாளர்,இளநிலை உதவியாளர் 6157 பணியிடங்களுக்கு ஓராண்டிற்கு ஊதிய நீட்டிப்பு ஆணை !


CPS - பங்களிப்பு ஓய்வூதியம்- ஓய்வு, பணிதுறப்பு, மரணம் மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆணை வழங்கப்பட்டது - திருத்தம் வெளியீடு - நிதித்துறை செயலாளர் செயல்முறைகள்

  (01/04/2016)
Letter No.185[S(E)]/Fin (PGC) /2016-1 Dt: April 01, 2016 PENSION – Contributory Pension Scheme – Settlement of accumulation under Contributory Pension Scheme in respect of CPS subscribers retired/resigned, died and terminated from service - Orders Issued – Clarification sought – Regarding

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!