Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 4 April 2016

Manonmaniam Sundaranar University DD&CE- MAY-2016 - UG/PG/B.Ed/M.Phil Examinations Timetable Announced

உயா்திணை - அஃறிணை பயிற்சித்தாள்

தொடக்க வகுப்பு மாணவர்களின் திறனை உயர்த்த உதவும் பயிற்சித்தாள்.
    உயர்திணை-அஃறிணை , ஆண்பால்-பெண்பால்,  ஒருமை- பன்மை, எதிர்ச்சொல் எழுதுதல் உள்ளிட்ட திறன்களை வளர்க்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.  சற்று கூடுதலான இடத்தை நிரப்பும் பொருட்டு  110 மதிப்பெண்களுக்கு வினாக்கள் உள்ளது.
நன்றி
ப.ரகுபதி  இநிஆ

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள் "வெள்ளரி - 25 மருத்துவ பயன்கள்"


1. காய்கறிகளுள்ளே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும்கலோரி 18தான்.

2. விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்;பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர்.

3. வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.

4. இக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.

தினம் ஒரு புத்தகம் "குழந்தைகளின் எதிர்காலம்"


வாகன ஆவணங்கள் தேவையில்லை 'மொபைல்' இருந்தால் போதும்!


இனி வாகனத்தை எடுக்கும்போது, லைசென்ஸ் இருக்கா, ஆர்.சி., புக் இருக்கா என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை; கையில் மொபைல் வைத்திருந்தால் போதும்; டிராபிக் போலீசிடம் சிக்க வேண்டிய அவசியமில்லை.

50 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்காளர் அடையாள மை தயாரிக்கும் ஒரே நிறுவனம்

50 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்காளர் அடையாள மை தயாரிக்கும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நிறுவனம்
அடையாள மை இதுவரை கவுரவத்தின் அடையாளம் ஆள் காட்டி விரலில் வைக்கப்பட்டு நாட்டை ஆள தகுதி உள்ளவர்களை அடையாளம் காட்டுகிறோம்.

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசை பட்டியல் வெளியீடு: சென்னை ஐ.ஐ.டி.க்கு முதலிடம்

நாடுமுழுவதிலும் இயங்கிவரும் கல்வி நிலையங்களுக்கான தரவரிசை வெளியிடும் நிகழ்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இதன்படி, பொறியியல் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

அகஇ - 2016 SLAS- மாணவர்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகளை ஆராய உத்தரவு - பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - மாநில திட்ட இயக்குனரின் அறிவுரைகள் - செயல்முறைகள்


மத்திய அரசு கல்லூரியில் ஆய்வக உதவியாளர் பணி

தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Hans Raj College-ல் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர், நூலகர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி - காலியிடங்கள் விவரம்:

பொறியியல் கல்வி நிறுவனங்களில் சென்னை ஜஜடி சிறந்த நிறுவனமாக தேர்வு

 சென்னை:பொறியியல் கல்வி நிறுவனங்களில் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு செய்யப்பட்டுள்ளது.2016-க்கான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அதில், சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெங்களூருஇந்திய மேலாண்மை கழகம் சிறந்த மேலாண்மை நிறுவனமாக தேர்வாகியுள்ளது.

ஏடிஎம்களில் இரவு 8 மணிக்குப் பிறகு பணம் நிரப்பக் கூடாது: மத்திய அரசு பரிந்துரை.

இரவு 8 மணிக்கு மேல் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பக் கூடாது என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.ஏடிஎம் இயந்திரங்களில் பணம் போட செல்லும் வாகனங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்கும் வகையில், ஏடிஎம் இயந்திரங்களில் பணம் போடும் பணியை இரவு 8 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளின் தானியங்கி பணம்வழங்கும் இயந்திரங்களில் (ஏடிஎம்) அன்றாடம் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிரப்பப்படுகிறது.

தேர்தல் பணிச் சான்றை முன்கூட்டியே வழங்க அரசு அலுவலர்கள் வலியுறுத்தல்.

சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான தேர்தல் பணிச் சான்றை முன்கூட்டியே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசு அலுவலர்கள் வலியுறுத்தினர்.வரும் மே16-ஆம் தேதி நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் மூன்று நிலைகளில் அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர், கல்வித் துறை அலுவலர்கள், வங்கி அலுவலர்கள் உள்ளிட்டோர் வாக்குச் சாவடி அலுவலர்களாகப் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர்.

பி.எப்., புதிய நடைமுறையால் சிக்கல் சலசலப்பு! மத்திய அரசிடம் தொழில்துறையினர் முறையீடு

"தொழிலாளர்கள் மத்தியில் புகைச்சல் கிளம்புவதையடுத்து, பி.எப்., புதிய நடைமுறையை வாபஸ் பெற வேண்டும்' என்ற கோரிக்கை, திருப்பூர் தொழில் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.உலகளாவிய ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வாயிலாக, ஆண்டுக்கு ரூ.23 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி, உள்நாட்டு வர்த்தகம் வாயிலாக, ரூ.10 ஆயிரம் ÷காடி ஈட்டுகிறது, திருப்பூர்.

எந்த துறையில் என்ன வாய்ப்புகள்?

'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில், பேராசிரியை ரமா வைத்யநாதன் பேசியதாவது: 'பயோ டெக்னாலஜி' துறையில், வேலை மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த படிப்பின் மூலம் விஞ்ஞானியாகவும், தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களின் அதிகாரியாகவும் மாறலாம்.

'அனிமேஷன்' படிக்கும் போதே வேலைவாய்ப்பு பேராசிரியர் திருநாவுக்கரசு பேச்சு.

''அனிமேஷன் துறை படிப்புகளை தேர்வு செய்தால் படிக்கும் போதே வேலைவாய்ப்பு தேடி வரும்,'' என, மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,) அனிமேஷன் துறைத் தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.மதுரையில் தினமலர் சார்பில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் 'அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங்' குறித்து அவர் பேசியதாவது:

ஊடகத் துறையில் பிரம்மாண்டத்தை கண்முன் கொண்டு வர அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பிற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றால் போதும். வித்தியாசமாக சிந்திக்கும் திறன் மட்டும்தான் இதற்கு முதலீடு. தமிழகத்தில் அனிமேஷன் நிறுவனங்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து துறைகளிலும் அனிமேஷன் நுட்பம் தேவைப்படுகிறது.இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரம் முதல் சம்பளம் பெறலாம்.கிராபிக் டிசைன், வெப் டிசைன், பிரின்டிங் டிசைன், லோகோ டிசைன், பிரின்ட் அண்ட் பேக்கிங் டிசைன் என பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளில் படிக்கலாம்.24 மணி நேரம் நிகழ்ச்சிகளை தரும் தொலைக்காட்சிகளில், பல நிகழ்ச்சிகளை வெளி நிறுவனங்கள்தான் தயாரித்து வழங்குகின்றன.

 இதன் மூலம் அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இருந்து கொண்டு இருக்கும். சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி போன்ற தரமான கட்டமைப்பு வசதிகள் உள்ள கல்லுாரிகளை தேர்வு செய்து மாணவர்கள் படிக்க வேண்டும். பெண்கள் இப்படிப்பை முடித்தால், இணையதள வசதியுடன் கம்ப்யூட்டர் இருந்தால் போதும், வீட்டில் இருந்தபடியே ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்றார்.

''பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பொதுத் தேர்வைத் தவிர உயர்கல்விக்கான நுாற்றுக்கணக்கான நுழைவுத் தேர்வுகளை கட்டாயம் எழுத வேண்டும்,'' என, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

சென்னையில் நடந்து வரும், 'தினமலர்' நாளிதழின் வழிகாட்டி நிகழ்ச்சியில் நேற்று, பிரபல கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மட்டுமே, பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்ணை மட்டும் நம்பி உள்ளனர். ஆனால், மற்ற மாநில மாணவர்கள், நுாற்றுக்கணக்கான படிப்புகளை தேர்வு செய்து, அதற்கான நுழைவுத் தேர்வு மதிப்பெண் மூலம் எளிதாக, உயர்கல்வி வாய்ப்பை பெறுகின்றனர்.

வேலைவாய்ப்பு அளிக்கும் கலை, அறிவியல் படிப்புகள் 'அடுக்குகிறார்' ரமேஷ்பிரபா

 ''மருத்துவப் படிப்பு கிடைக்காத மாணவர்கள் மருத்துவம் சார்ந்த படிப்புகளும், கலை அறிவியல் பிரிவு படிப்புகளையும் தேர்வு செய்யலாம்,'' என, கல்வி ஆலோசகர் ரமேஷ்பிரபா தெரிவித்தார்.மதுரையில் தினமலர் சார்பில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் 'கலை அறிவியல் படிப்புகள்' குறித்து அவர் பேசியதாவது:

VELLORE DISTRICT-DIET Training for teachers for 3 days (ICT) 04.04.2016 - 06.04.2016

இன்று 4.4.16 இராணிப்பேட்டை B.M.T-ல் ICT Workshop பயிற்சி முதல் நாள் நடைபெற்றது.
பயிற்சியில் இணை இயக்குநர் திரு.மணி (SCERT) அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி குறித்தும், சிறப்பான பயிற்சி செயல்பாடுகள்  குறித்து பாராட்டியும் தகுந்த ஆலோசனைகளையும் வழங்கினார்.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திரு.பஷீர் அஹமத் அவர்கள்  பயிற்சியினை  தொடங்கி  வைத்து பயிற்சி நோக்கம் குறித்து விளக்கினார்.
பயிற்சி ஒருங்கிணைப்பாளர்  திருமதி N. வளர்மதி (முதுநிலை விரிவுரையாளர்) மற்றும்
பயிற்சி கருத்தாளர்களாக P.S.இறையருள் மற்றும் D. கவியரசு ஆகியோர் பயிற்சி அளித்தனர்

Letter No.52367/ CMPC / 2015-1 Dt: September 21, 2015Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 – Grant of notional increment to Government Servants who retires on superannuation on the preceding day of increment due date - Further clarification – Regarding


சத்துணவு பணியாளர்களின் கோரிக்கைகள் தேர்தல்அறிக்கையில் இடம்பெற வேண்டும்.

சத்துணவு பணியாளர்களின் பணிநிரந்தரம், மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தால் அக்கட்சிக்கு ஆதரவுதருவோம்,' என மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர்.பழநியில் ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்களுக்கு பாராட்டுவிழா நடந்தது.

தபால் ஓட்டுப் போடுவதில் தொடரும்...சிக்கல்! தேர்தல் பணிக்கு செல்வோர் புலம்பல்.

தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள் தபால் ஓட்டு போடுவதில் சிக்கல் ஏற்படுவதைத் தடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தலின்போது ஓட்டுச் சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்ப்பது, விரலில் மை வைப்பது உள்ளிட்ட பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

'15 நாட்களுக்கு பிறகே வாக்காளர் அடையாள அட்டை'

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது: தற்போது ஆன்லைனில் விண்ணப்பிப்போருக்கு மட்டும், வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. விண்ணப்பம் நேரடியாக கொடுத்தால் தாமதமாகும். புகைப்படம் மாற்றம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு விண்ணப்பித்தால், புதிய வாக்காளர் அடையாள அட்டை வர, குறைந்தது, 15 நாட்களாகும்.

கால்நடை பல்கலை மாணவர் சேர்க்கை எப்போது?

மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை, 'ஆன்லைன்' மூலம் வினியோகிக்கும் நடைமுறையை, கடந்த ஆண்டில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது.அதை பின்பற்றி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு மருத்துவ கல்லுாரிகளில், ஆன்லைனில் விண்ணப்பம் வினியோகிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

சூரிய ஒளியின் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்: மத்திய மந்திரி தகவல்

இந்தியாவில் வருகிற 2017-ம் ஆண்டுக்குள் சூரிய ஒளியின் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறினார்.

கம்ப்யூட்டர் மூலமாக வருமான வரி கணக்கு தாக்கல் தொடங்கியது

2016-17 வரிவிதிப்பு ஆண்டுக்கான வருமான வரி கணக்கை குறிப்பிட்ட நிறுவனங்கள், தனிநபர்கள் கம்ப்யூட்டர் மூலமாக தாக்கல் செய்வது நேற்று தொடங்கியது

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!