Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 10 April 2016

தினம் ஒரு புத்தகம்"தெனாலிராமன் கதை நாடகங்கள் "


75 பக்க திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கருணாநிதி

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 72 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார்.

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உரையாற்றி வருகிறார்.

தேர்தல் அறிக்கை விவரம்:

1. வேளாண் பொருள்களை சந்தைப்படுத்த புதிய கொள்ளை.

2. நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ. 2,000-ஆக நிர்ணயிக்கப்பட்டு படிப்படியாக ரூ. 2,500-ஆக உயர்த்தப்படும்.

3. சிறு, குறு விவசாயக் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.

RTI Letter: AEEO'S அலுவலக பணி செய்யுமாறு ஆசிரியர்களுக்கு ஆணையிடக்கூடாது, ஆசிரியர்களிடம் பணம் வசூல் செய்யக்கூடாது.

முதல்முறையாக அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடுகிறது ஐ.நா. சபை

ஏற்றத்தாழ்வுகளை களைந்து நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டும் வகையில் இந்திய சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை ஐக்கிய நாடுகள் சபை முதல்முறையாக கொண்டாட முடிவு செய்துள்ளது.

பல் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை: மருத்துவ கவுன்சில் தீவிரம்

தவறு செய்யும் பல் மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் மருத்துவ கவுன்சில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் தொடர்பான நாடாளுமன்ற எம்.பி.க்களின் நிலைக்குழு நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு செய்தது. மத்திய அரசுக்கு அக்குழு சமீபத்தில் அளித்த அறிக்கையில், “மருத்துவக் கல்வியின் தரம் குறைந்து வருவதால் நாடு முழுவதிலும் சிகிச்சையின் தரம் குறைந்து வருகிறது. மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைகள் பொதுநலமாக அன்றி வர்த்தக ரீதியாக மாறி வருவதே இதற்கு காரணம்” என்று கூறியிருந்தது.

திருவள்ளூரில் வேளாண்மைக் கல்லூரி: அன்புமணி உறுதி

திருவள்ளூரில் நேற்று முன்தினம் இரவு பாமக சார்பில் நடைபெற்ற ‘உங்கள் ஊர், உங்கள் அன்புமணி’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி யில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராம தாஸ் பேசியதாவது:

ஆசிரியர் வரைந்த ஓவியம் அரசு விளம்பரம் ஆனது: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பை வலியுறுத்தும் படைப்பு

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வுக்காக தயார் செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு விளம்பரத்துடன் ஓவிய ஆசிரியர் ஆர்.கிருஷ்ணன். படம்: ஜெ.மனோகரன்
சமூகத்தின் வளர்ச்சி குறியீடு கல்வி. ஆனால் பொருளாதார, புறச் சூழல் களால் அடிப்படைக் கல்வி மறுக் கப்படும் குழந்தைகள் சிறு வயதி லேயே தொழிலாளர்களாக மாற்றப்படும் கொடுமை நீடிக்கிறது. இந்த நிலையை மாற்றி, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியறிவு வழங்க வேண்டுமென அரசு வலி யுறுத்தி வருகிறது.

பள்ளி வாகனங்களில் மே மாதத்துக்குள் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

தமிழகத்தில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் வரும் மே மாதத்துக்குள் ஆய்வு நடத்தி அறிக்கை அனுப்புமாறு ஆர்டிஓ அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு உள்ள வாகனங்களின் பர்மிட் சஸ் பெண்ட் செய்யப்படும் என்று போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது.

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள் "பிரண்டை – மருத்துவ பயன்கள்"

பிரண்டை உடலைத் தேற்றும்; பசியைத் தூண்டும்; மாதவிலக்கைத் தூண்டும்; மந்தம், குன்மம், இரத்தக் கழிச்சல், அஜீரணம் ஆகியவற்றைக் குணமாக்கும்.
பிரண்டை சதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம்.  மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை;

தமிழக வேளாண் துறையில் பணியாற்றிய 110 பட்டதாரி ஊழியர்கள் திடீர் நீக்கம்.

மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற தமிழக அரசு தவறியதால், வேளாண்மைத் துறையில், 15 ஆண்டுகளாக வேலை செய்த, 110 பட்டதாரி பணியாளர்கள், முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நீர்பாசன வசதி இல்லாத தரிசு நிலங்களை மேம்படுத்தி, சாகுபடிக்கு உகந்த நிலமாக மாற்றுவதற்காக, மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன், 2002ம் ஆண்டு, தரிசு நில மேம்பாட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது.

தமிழக பல்கலை வரலாற்றில் புது முயற்சி:விரைவில் 'ஆன்லைன்' தேர்வு நடத்த திட்டம்.

தமிழக பல்கலைகளில் முதல்முறையாக, 'ஆன்லைன்' தேர்வு முறையை, சென்னை பல்கலை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான திட்டத்தை சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.திருமகன் அறிவித்துள்ளார்.சென்னை, வியாசர்பாடியில் உள்ள அரசு அம்பேத்கர் கலை கல்லுாரியின் பட்டமளிப்பு விழா, கல்லுாரி முதல்வர் சந்திரா தலைமையில், நேற்று நடந்தது.

செட் தேர்வு ரிசல்ட் தாமதம் நெட் தேர்வு எழுத முடியுமா?

தமிழக அரசு நடத்திய, உதவி பேராசிரியர் ஆவதற்கான தகுதி தேர்வான, 'செட்' தேர்வு முடிந்து, இரண்டு மாதங்கள் நெருங்கும் நிலையில், இன்னும் விடைக்குறிப்பு வெளியிடவில்லை. எனவே, மத்திய அரசு நடத்தும், 'நெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' தேர்வு அல்லது மாநில அரசின்,'செட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை: விண்ணப்ப விநியோகம் எப்போது?

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகங்கம் மே முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வ மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தன.இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 25-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

பல்கலை பணி நியமன விதிமீறல்:தேர்தல் கமிஷனுக்கு புகார் !

மதுரை காமராஜ் பல்கலையில், புலத் தலைவர் பணி நியமனத்தில், தேர்தல் நடத்தை விதிமீறல் நடந்துள்ளதாக, தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பப்பட்டு உள்ளது.சட்டசபை தேர்தல் காரணமாக, நன்னடத்தை விதி அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, சென்னையில் உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையில், கடந்த மாதம், 23ம் தேதி நடந்த, மதுரை காமராஜ் பல்கலைசிண்டிகேட் கூட்டத்தில், 'எவ்வித பணி நியமனங்களோ, கொள்கை முடிவோ எடுக்க வேண்டாம்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!