Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 11 April 2016

விடைத்தாள் திருத்தும் பணியில் அனுபவமற்ற ஆசிரியர்கள்? - வலுக்கிறது எதிர்ப்பு

கோவை, நீலகிரி மாவட்டங்களில் பிளஸ்2 விடைத்தாள் பணி ஒதுக்கீட்டில், அனுபவமிக்க அரசு பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு,அனுபவமில்லாத தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமை அதிகாரிகள் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு பெற்றுள்ளது.

இம்மாணவர்களின் விடைத்தாள்கள், மார்ச் 14ம் தேதி முதல்மதிப்பீடு செய்யப்படுகிறது. மதிப்பீட்டு பணிகளில், 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ள ஆசிரியர்களை மட்டுமே, சி.இ., ஹெச். ஓ., ஆகிய கண்காணிப்பு பொறுப்புகளை வழங்கவேண்டும். ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பின் விடைத்தாள்களை திருத்தும் பணியில் தனியார் பள்ளிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.ஆனால், கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெரும்பாலான தனியார் பள்ளிகளின் அனுபவமில்லா, ஆசிரியர்களுக்கு தலைமை கண்காணிப்பு பொறுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.குறிப்பாக, வேதியியல், இயற்பியல், தாவரவியல் உள்ளிட்ட மதிப்பீடுகளில் இந்நிலை உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.மத்திய மாநில அரசு ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'தேர்வு சமயங்களிலேயே அனுபவமில்லாத ஆசிரியர்களுக்கு தலைமை பொறுப்பு அளிக்கப்பட்டு, அனுபவமிக்கவர்களை அறை கண்காணிப்பாளர்களாக நியமித்தனர்.

இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்தும் பயனில்லை. விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் இதே நிலை உள்ளது. அனுபவமில்லா ஆசிரியர்களுக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், பிழைகள் மற்றும் முறைகேடுகள் ஏற்படவும் வழிவகுக்கும்,' என்றார்.

கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய "ஸ்மார்ட் ரேஷன் கார்டு'

ஸ்மார்ட் ரேஷன் கார்டு' என்னும் புதிய முயற்சியை சென்னை ராமாபுரத்திலுள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் தொடங்கியுள்ளனர்.

 இதுகுறித்து கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் தலைவர் டாக்டர் கே.எம். ஆனந்த்குமார் கூறியதாவது:

 ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதில் உள்ள குளறுபடிகள், பிரச்னைகளை நீக்கும் விதமாக இந்த புதிய "ஸ்மார்ட் ரேஷன் கார்டு' திட்டத்தை எங்கள் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

 வங்கி கிரெடிட் கார்டைப் போலவே இந்தக் கார்டில் பயனாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும். இதைக் கொண்டு சென்று ரேஷன் கடைகளில் கொடுக்கும்போது அந்தந்த பொருட்கள் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி செய்யலாம். அவர் பெயரில் வேறு யாரும் பொருட்களை வாங்க முடியாது. இந்தப் புதிய திட்டம் நுகர்வோருக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்தத் தவறும் நிகழாது. வேறு யாரும் பொருட்களை வாங்க முடியாது. நுகர்வோருக்கும் நேரம் காலம் மீதமாகும் போன்ற நல்ல விஷயங்கள் இதில் உள்ளன.

 சமூகத்துக்குப் பயன்படும் வகையில் இந்தத் திட்டத்தை எங்களது பிரிவு மாணவர்கள் கார்த்திகேயன், கிரண் ராஜ், ஆனந்தன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

 கல்லூரியின் தலைவர் டாக்டர் ஆர். சிவக்குமார், முதல்வர் டாக்டர் கே.எஸ். சீனிவாசன் ஆகியோரது வழிகாட்டுதலின் பேரில் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். 

 தமிழக அரசு இந்தத் திட்டத்தை எடுத்துச் செயல்படுத்தும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சமுதாயத்துக்குத் தேவையான மிகவும் அவசியமான திட்டமாகும் இது.என்றார் அவர்.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்"குப்பை மேனி மருத்துவ குணங்கள்'


குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றது
போலும். வேறு பெயர்கள்: அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி.

தாவரப்பெயர் :- ACALYPHA INDICA.
குடும்பம் :- EUPHORBIACEAE.

இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும். காடுமேட்டில்  எங்கும் காணப்படுகிறது.

தினம் ஒரு புத்தகம்"பொது அறிவுத் தகவல்கள் "


TCIL நிறுவனத்தில் 50 தொழிலாளர் பணி

மத்திய அரசின் தகவல்தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (Telecommunications Consultants India Ltd (TCIL)) (TCIL) காலியாக உள்ள 60 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன கலெக்டர் ஆய்வு

வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணியினை கலெக்டர் நந்தகோபால் நேரில் ஆய்வு செய்தார்.
சட்டமன்ற தேர்தல்

தேசிய தரவரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலை... அசத்தல்அரசு பொறியியல் கல்லூரிக்கு 13வது இடம்

மத்திய அரசின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 13வது இடத்தையும், அரசு பொறியியல் கல்லுாரி 49வது இடத்தையும் பிடித்துள்ளதால், இந்தாண்டு விண்ணப்பங்கள் குவியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அலுவலக பணிகளுக்கு ஆசிரியர்களுக்கு தடை!

கோவை: உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில்,ஆசிரியர்களுக்கு அலுவலக பணிகளை வழங்க ஆணையிடும் அதிகாரம் இல்லை என்று,தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக,தொடக்க கல்வி துணை இயக்குனர் தகவல் அளித்துள்ளார்.ஒவ்வொரு மாவட்டங்களும்,ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு தொடக்க கல்வித்துறை சார்ந்த பொறுப்புகள் உதவி தொடக்க கல்வி அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

விடுமுறை கால சிறப்பு வகுப்பு கூடாது!

ஈரோடு:கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு என்ற பெயரில்,குழந்தைகளை பள்ளியில் அனுமதிக்கக்கூடாது,என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி,கலெக்டர் மற்றும் தமிழக அரசுக்கும்,தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.அக்கடிதத்தில்,நல்லசாமி கூறியிருப்பதாவது:

அரசு வேலை வழங்கும் வேளாண் துறை.

வேளாண் படிப்புகள் குறித்து,கோவை வேளாண் பல்கலை பேராசிரியர் சுதாகர் பேசியதாவது:வேளாண் கல்லூரியில், 13வகையான படிப்புகள் உள்ளன. விவசாய துறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப,புதிய தொழில்நுட்பங்களை விளக்கும் வகையில்,அவ்வப்போது பாடங்கள் வடிவமைக்கப்படுகின்றன.13வகையான படிப்புகளில்,எந்த படிப்பை தேர்வு செய்தாலும்,அனைத்துக்கும் ஒரே வகையானவிண்ணப்பமே வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: 'கீ ஆன்சரால்' குழப்பம்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், மதிப்பெண் பதிவு மற்றும், இரண்டு முறை வழங்கப்பட்ட, 'கீ ஆன்சர்' எனப்படும் விடைக் குறிப்புகளால், குளறுபடி ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில், மொழிப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து விட்டது. ஏப்.,7ல் முக்கிய பாடங்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது.

JEE தேர்வில் புதிய முறை அறிமுகம்:பள்ளிக்கல்விக்கு மீண்டும் முக்கியத்துவம்.

அடுத்த கல்வியாண்டு முதல், பிளஸ் 2வில், 75 சதவீத மதிப்பெண் பெறுவோர் மட்டுமே, ஐ.ஐ.டி.,க்களில் சேர்வதற்கான, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான ஜே.இ.இ., தேர்வை எழுத முடியும்.தேசிய கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்நுழைவுத்தேர்வில், 25 ஆயிரத்துக்குள், 'ரேங்க்' எடுக்கவேண்டும்நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணுடன், பிளஸ் 2 மதிப்பெண்ணை,40 சதவீதத்திற்கு கணக்கிட்டு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக மாற்றி சேர்ப்பார்கள்.

வங்கி ஊழியர்கள் மே 25ல் ஸ்டிரைக்

அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் வெங்கடாசலம், கூறியதாவது:இந்திய வங்கிகளில், வராக்கடன் எட்டு லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகம் உள்ளது. இதில், 5,600 பேர் மட்டும்,60 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை.அவர்களின் பெயர் பட்டியலை அரசு வெளியிடவில்லை என்றால் வங்கிகளே வெளியிடும்.

TNPSC :எல்காட் நிறுவனத்தில் 12 துணை மேலாளர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசின் எல்காட் (தகவல் தொழில்நுட்ப துறை) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 12 துணை மேலாளர்-II  பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துவக்க, நடுநிலை பள்ளிகளில் 22ம் தேதி முழு ஆண்டு தேர்வு.

துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் வரும், 22ம் தேதி முழு ஆண்டு தேர்வு துவங்குகிறது.பிளஸ்2தேர்வு முடிந்துள்ள நிலையில்,எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு நடந்து வருகிறது. வரும், 13ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. பிளஸ்1தேர்வு நடந்து வருகிறது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 12ம் தேதி தேர்வு துவங்கி, 22ம் தேதி முடிவடைகிறது.

மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தஉச்சநீதிமன்றம் அனுமதி.

இளநிலை, முதுநிலை மருத்துவப் பாடப் பிரிவுகளுக்கு அனைத்துக் கல்லூரிகளிலும், தேசிய அளவில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.2012-ம் ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும், 2013-ம் ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

தேசிய கீதம், தேசியக் கொடி ஆகியவை அவமதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்:மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

தேசிய கீதமும், தேசியக் கொடியும் அவமதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தேசப்பற்று குறித்து நாடெங்கிலும் விவாதம் நடைபெறுவதுடன், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்தை சிலர் அவமதிக்கின்ற இந்தச் சூழலில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
இதுகுறித்து அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை 2016 - முக்கிய அம்சங்கள்

2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து திமுக தலைவர் கருணாநிதி ஞாயிறன்று 72 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் மதுவிலக்குச் சட்டம் நடைமுறைப்படுத்தும் என்பதை முதலில் அறிவித்தார்.பிறகு விவசாயத்துக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு, துரைமுருகன், கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

மதுவிலக்கை அமல்படுத்தச் சட்டம் நிறைவேற்றப்படும்,.மதுவிற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனம் கலைக்கப்படும்.

*மதுவிலக்கு இழப்பை ஈடுகட்ட உரிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.

*டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு.

*மதுவுக்கு அடிமையானோருக்கு சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு.

*விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை மற்றும் சிறு, குறு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

*ஏரிகளைத் தூர்வார ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

*வெள்ளத்தினால் ஏற்படும் சேதத்தை தடுக்க ரூ.5,000 கோடி.

*அனைத்து ரக விதை நெல்லுக்கும் முழு மானியம்.

*மகளிருக்கு 9 மாதம் பேறுகால விடுப்பு அளிக்கப்படும்.

*கல்விக் கடன் தள்ளுபடிஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்படும்.

*மாதத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும்.

*பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியருக்குக் ரூ.5 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும்.

*ஆட்டோ வாங்குவதற்கு அரசு ரூ.10,000 மானியம் வழங்கும்.

*முதியோர் உதவித்தொகை ரூ.1,300 ஆக உயர்த்தப்படும்.

*பட்டதாரிப் பெண்கள் கலப்புத் திருமண உதவித் தொகை ரூ.60,000 மற்றும் 4 கிராம் தங்கம்.

*அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

*நெசவாளர் வீடுகட்ட ரூ.3 லட்சம் மானியம் அளிக்கப்படும்.மாதம் ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.

*மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

*படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்.

*முதியோருக்குக் கட்டணமில்லா பயணச் சலுகை.தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும்.

*விசைத்தறிக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

*நெல்கொள்முதலுக்கு ஆதார விலை ரூ.2000 என்று நிர்ணயிக்கப்பட்டு ரூ.2,500 வரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

*தந்தை பெரியார் பிறந்தநாள் பகுத்தறிவு தினமாக கொண்டாடப்படும்.

*பட்டாதாரிகள் சுயதொழில் தொடங்க ரூ.1 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.

*100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் தொடரும்.

*அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழு அமைக்கப்படும்.

*ஏழை மக்கள் வசதிக்காக அறிஞர் அண்ணா உணவகங்கள் அமைக்கப்படும்.

*விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு போன்ற குடும்ப அட்டை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

*மதுரை முதல் தூத்துகுடி வரை தொழிற்சாலைகள் நிரம்பிய நெடுஞ்சாலை.

*மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச் சலுகை.

*அனைத்து மாணவர்களுக்கும் 3ஜி/4ஜி இணையதள வசதி செய்து தரப்படும்.

*மீனவர் சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும்.

*தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமேலவை கொண்டு வரப்படும்.

*சென்னையை அடுத்த வண்டலூரில் துணை நகரம் அமைக்கப்படும்.

*நியாயமான விலையில் மணல் விற்பனை செய்யப்படும்.

*அரசுப்பள்ளிகளில் உள்ள 54,233 வேலைக்காலியிடங்கள் நிரப்பப்படும்.

*வசதியில்லாதவர்களுக்கு சலுகை விலையில் கைபேசி வழங்கப்படும்.

*ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

*கொடைக்கானலில் தோட்டக்கலை ஆய்வு மையம்.

*ஊரக வேலைவாய்ப்புக் கூலி ரூ.100லிருந்து ரூ.150ஆக அதிகரிக்கப்படும்.

*தொடக்கப்பள்ளி சத்துணவில் பால் சேர்க்கப்படும்.

*பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும்.

*பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.

*வெள்ளத்தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!