Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 12 April 2016

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 15 வயதுள்ள பெண் குழந்தைகளும் சேரலாம்: அஞ்சல் துறை அறிவிப்பு

செல்வமகள் சேமிப்பு கணக்கில் பிறந்த குழந்தை முதல் 14 வயதான சிறுமிகள் வரை இணையலாம் என்ற நிலை இருந்தது. இனி 15 வயது வரை இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''பெண் குழந்தைகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்னும் திட்டம் கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் 12 லட்சத்து 38 ஆயிரம் கணக்குகள் உள்ளன. சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டத்தில் 4 லட்சத்து 38 ஆயிரம் கணக்குகள் உள்ளன.

இந்த திட்டத்தை நோக்கி அதிகப்படியான கணக்குகளை ஈர்க்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

செல்வமகள் சேமிப்பு கணக்கில் பிறந்த குழந்தை முதல் 14 வயதான சிறுமிகள் வரை இணையலாம் என்ற நிலை இருந்தது. இனி 15 வயது வரை இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம். மேலும், அபராதக் கட்டணம், பணம் செலுத்தாமை போன்ற இக்கட்டுகளால் வரும் விளைவுகளை தடுக்க ஆண்டு தோறும் ரூ.1000 வசூல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை சேமிப்பு கணக்கில் சேர்க்கப்பட்டு அதற்கான வட்டியும் தரப்படும்.

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களது இருப்பிடத்தை மாற்றும் போது, அந்த கணக்கு முடித்து வைக்கப்படும். கணக்கை மாற்றமாகி செல்லும் இருப்பிடத்தில் உள்ள அஞ்சலகத்துக்கு மாற்ற விரும்பினால், உரிய முகவரி சான்றினை பெற்றுக் கொண்டு கணக்கு மாற்றியளிக்கப்படும்.

5 ஆண்டுகளை நிறைவு செய்த கணக்கை கொண்ட சேமிப்புதாரர், நோய்வாய்ப்படுவதல், அசம்பாவிதங்களை சந்தித்து அபாய கட்டத்துக்கு செல்லுதல் போன்ற நிலையில் இருந்தால், அவரது கணக்கு முடித்து வைக்கப்பட்டு அவரது உறவினர் அல்லது காப்பாளரிடம் அளிக்கப்படும். 18 வயது நிறைவு செய்தவர்கள், 10-ம் வகுப்பு முடித்தவர்கள், தங்களின் மேற்படிப்புக்காக சேமிப்புத் தொகையில் பாதி அளவை பெற்றுக் கொள்ளலாம். 21 வயதிலோ அல்லது திருமணம் ஆன ஒரு மாதத்திலோ பெண்கள் தங்களின் கணக்கை முடித்துக் கொள்ளலாம். மேலும், வட்டி விகிதம் ஏப்ரல் 1 முதல் 8.6 சதவீதமாக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"வேப்பம் பூ - மருத்துவ பயன்கள்..!"


வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும்.
வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும். வேப்பங்காயை வெயிலில் உலர்த்தி அந்த பொடியை வெந்நீரில் கலந்து கொடுக்க மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.
வேப்பம்பழ சர்பத்தை குடித்து வந்தால் படிப்படியாக சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

தினம் ஒரு புத்தகம்,'தமிழ் இலக்கணம் '


G.O 60 SCHOOL EDUCATION DEPT DATE:01/04/16-RTE ACT 2009- 25% Reservations for Students belonging to Disadvantage Group/Weaker Section in All private Non Minority unaided school including CBSE/ICSE -Guidelines Order issued

MDS படிப்புக்கு இன்று கலந்தாய்வு.

முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு, இன்று நடக்கிறது.தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரியில், ஏப்., 4ம் தேதி முதல் துவங்கியது.எம்.எஸ்., - எம்.டி., படிப்புகளுக்கான கலந்தாய்வு, நேற்று நிறைவடைந்தது.

RTE FULL DETAILS AND IMPORTANT POINTS

தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை !
1.விண்ணப்பத்தின் தேதி மற்றும் இடம்.
2.உங்கள் முழுமுகவரி மற்றும் பொது தகவல்அலுவலரின் முழுமுகவரி அஞ்சல்குறியீட்டு எண்ணுடன்
3.நீங்கள் முன்னர்எதாவது மனு அனுப்பி இருந்தால் மனுவின்விபரம். பார்வை:என்ற தலைப்பின் கீழ்
4.எந்த தேதிக்குள் வழங்கப்படும்? என்றகேள்வி

பண்டக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மெடிக்கல் கம்பெனி என்சிசி அலுவலகத்தில் உள்ள பண்டக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு விண்ணப்பிப்போர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 

நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.

ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர்கள் முன்னுரிமை அடிப்படையில் எழுதுவது குறித்து-RTI பதில்

சென்டாக் இட ஒதுக்கீடு; மாணவர் சேர்க்கைக்கு சிக்கல்!

நாடு முழுவதும் ஒரே மருத்துவ பொது நுழைவு தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதால், இட ஒதுக்கீட்டைஅமல்படுத்தும் புதுச்சேரி மாநிலத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரையின் படி,தேசிய அளவில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடத்த,சுகாதார துறை முயற்சியை மேற்கொண்டது.

பழைய ஓய்வூதியம்; தேர்தலுக்கான அறிவிப்பு அரசுஊழியர்கள் குமுறல்.

சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதாக தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது,'என அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் செல்வம் கூறியதாவது: 

SBI வங்கியில் 17,140 பணியிடங்கள் தமிழகத்திற்கு 1541 இடங்கள்

ஸ்டேட் வங்கியில் 17 ஆயிரத்து 140 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்திற்கு 1541 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:

வாட்ஸ்ஆப்புக்கு வருது 'ஆப்பு': அரசு பரிசீலனை

வாட்ஸ்ஆப் செயலி இந்தியாவில் தடை செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இப்படி செய்யப்படலாம் என கூறப்படுகிறது.வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது செயலியில் சமீபத்தில் சில மாற்றங்களை செய்தது. இந்த மாற்றங்கள், இந்திய தொலைதொடர்பு சட்ட விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் இல்லை என்று கூறப்படுகிறது.

தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பில் விடைத்தாள் திருத்தும் மையங்கள்

சிவகங்கை:வாயிற் கூட்டங்களில் ஆசிரியர்கள் தங்களது ஆதரவு நிலையை தெரிவிக்க வாய்ப்புள்ளதால் 10 ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களை தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்க உள்ளனர்.பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிஏப்., 15 ல் துவங்குகிறது.

சமூக அறிவியலில் 'சென்டம்' எளிது.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டிருந்ததால், சென்டம் எடுப்பது எளிது என ஆசிரியர்கள் மாணவர்கள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:ஏ,அழகுராஜகுமாரி, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: சமூக அறிவியல் தேர்வு எல்லா தேர்வுகளை விடவும் எளிமை.மற்ற தேர்வுகளில் அதிகளவு கேள்விகள் பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டன.

தேர்தலில் ஓட்டுப்போட வேண்டுமா? புதிய வாக்காளராக சேர இன்னும் 4 நாள்தான்...

தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாமை நடத்தி வருகிறது. கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கப்பட்டு இந்த மாதம் 15ம் தேதி வரையிலும் 18 வயதை அடைந்த அனைத்து வாக்காளர்களும் புதிதாக தங்களது வாக்குகளை சேர்த்துகொள்ளலாம்.25 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் சேர்த்து கொள்ளும் வகையில் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது.

பணி வரன்முறை இன்றி ஊழியர் இறப்புகருணைப் பணி கோர முடியாது:உயர்நீதிமன்றம் உத்தரவு.

மதுரை:'பணி வரன்முறை செய்யப்படாத ஊழியர்இறந்தால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் கருணைப் பணி கோர முடியாது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.சிவகங்கை சண்முகம். திருப்புத்துார் நீதித்துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) நீதிமன்றத்தில் காவலாளியாக பணிபுரிந்தார்.அவரது பணி வரன்முறைப்படுத்தப்படவில்லை.வேலை நேரத்தில் அடிக்கடி வெளியில் சென்றுவிடுவார். 

10ம் வகுப்புக்கு முக்கிய தேர்வுகள் முடிவு

பத்தாம் வகுப்பு முக்கிய தேர்வுகள், நேற்றுடன் முடிந்தன. பிறமொழி மாணவர்களுக்கான விருப்ப பாட தேர்வுடன், நாளை அனைத்து தேர்வுகளும் நிறைவடைகின்றன.பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு, மார்ச் 15ம் தேதி துவங்கியது. மொழி பாடங்களுக்கு நான்கு தேர்வுகளும், மூன்று முக்கிய பாடங்களின் தேர்வுகளும் நடந்தன.நேற்று, சமூக அறிவியல் பாடத்துடன், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்தன. 

மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வு நடத்த ...2013 தீர்ப்பை மறுஆய்வு செய்கிறது சுப்ரீம் கோர்ட்.

புதுடில்லி,:நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் சேர, பொது நுழைவுத்தேர்வு நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அளித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் திரும்பப் பெற்றுள்ளது. இதனால், வரும் கல்வியாண்டில், மருத்துவக் கல்லுாரிகளுக்கான நுழைவுத்தேர்வு நடத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!