Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 17 April 2016

வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த பழங்குடியினத் தலைவர்கள் தேர்தல் தூதர்களாக நியமனம்

வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த, கேரளாவில் பழங்குடி யினத் தலைவர்கள் தேர்தல் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் மே 16-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடதுசாரிகள் முன்னணி, பாஜக கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலில் அதிக வாக்கு கள் பதிவாவதை உறுதி செய்ய தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நட வடிக்கைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக, கேரளாவில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் வாக்களிக்கும் கடமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அதி காரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற் காக பழங்குடியினத் தலைவர்கள் 7 பேரை மாவட்ட அதிகாரிகள் தேர்ந் தெடுத்து தேர்தல் தூதுவர்களாக பணியாற்ற கேட்டுக்கொண்டு உள்ளனர்.

இவர்கள் பழங்குடியின மக்களிடம் வாக்களிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். இதன் மூலம் வாக்குப் பதிவு சத வீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. குறிப்பாக அருவிக் கரா தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் பகுதியில் பழங்குடியினத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்ற னர். அவர்களிடம் பழங்குடியினத் தலைவர்கள் விழிப்புணர்வு பிரச் சாரத்தில் ஈடுபடுவார்கள். இதற்கான செயல் திட்டத்தை மாவட்ட ஆட்சி யரும் தேர்தல் அதிகாரியுமான பிஜு பிரபாகர் நேற்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் பழங்குடி யினத் தலைவர்கள் குஞ்சுராமன் கனி, மல்லன் கனி, செல்லப்பன் கனி, சந்திரன் கனி, கிருஷ்ணன் கனி, வெள்ளியாயன் கனி, சுனில் குமார் கனி ஆகியோர் தேர்தல் தூதுவர் களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்?

+2 முடித்தவுடன் இவர்கள்என்ன மாதிரியானபடிப்பைத்தேர்ந்தெடுக்கலாம் என்றுபார்க்கும்போது, எவர்கிரீன்படிப்புகளான மெடிக்கல்,இன்ஜினியரிங் தாண்டி,ஏராளமான வித்தியாசமான

தேர்வுகள் உள்ளனஎன்றாலும், பாப்புலரானஇந்த இரண்டுவகைகளையும் நாம்போகிற போக்கில்விட்டுவிட முடியாது. எனவே,முதலில், இவைஇரண்டையும் பார்த்துவிட்டு,பிறகு மற்றவற்றைப்பட்டியலிடுவோம்.

இன்ஜினியரிங் படிப்பைப்பொறுத்தவரை,தமிழகத்தில் உள்ளபொறியியல் கல்லூரிகள்மற்றும் அவற்றில் உள்ளஇடங்களின்எண்ணிக்கையைப்பார்த்தால், விண்ணப்பித்தஅனைவருக்குமே சீட்கொடுத்தும், மீதம் காலியாகஇருக்கிறது என்பதுதான்உண்மை. எனவே,இன்ஜினியரிங் சீட்வாங்குவதைவிட,அப்படிப்பை வெற்றிகரமாகமுடிப்பதுதான் இன்றைக்குசிரமமான விஷயமாகஇருக்கிறது.எனவே,இன்ஜினியரிங் படிப்பைசிறப்பாக வெற்றிகரமாகமுடிக்கக்கூடிய சக்திஇருக்கிறதா என்பதைதெளிவாக ஆராய்ந்து,பிறகு முடிவெடுப்பதுசிறப்பாக இருக்கும்.

மெடிக்கல் படிப்பைபொறுத்தவரை,தமிழகத்தில் குறைந்தளவுகல்லூரிகளே இருப்பதால்,மிக அதிகளவு மதிப்பெண்வாங்கியவர்களுக்கானபடிப்பாக மட்டுமே அதுஇருந்து வருகிறது.எனினும், MBBS என்கிறஒரேயொரு படிப்பிற்குமட்டும், நாம் முயற்சிசெய்வதைத் தாண்டி,மருத்துவத்தில் உள்ள மற்றபடிப்புகளிலும் கவனம்செலுத்தினால், சீட்கிடைக்கும் வாய்ப்பு சற்றேஅதிகரிக்கும். MBBSபோலவே, அதேகாலஅளவில் உள்ள மாற்றுமருத்துவம் சார்ந்த சித்தா,ஆயுர்வேதா, ஓமியோபதி,யுனானி ஆகியவற்றின்மருத்துவப் பட்டப்படிப்புகளும் சமீபஆண்டுகளில் புகழ்பெற்றுவருகின்றன.தவிர, BDSஎனப்படும் பல் மருத்துவப்படிப்பு, MBBSசொல்லித்தரப்படுகிறகல்லூரிகளைவிட, சற்றுஅதிகமான கல்லூரிகளில்,தமிழகத்தில் உள்ளதால்,இவற்றில் சீட் கிடைக்கும்வாய்ப்பு சற்றே அதிகம்.கூடவே, B.Pharm எனப்படும்மருந்தியல், B.Sc(Nursing), B.P.T எனப்படும்பிசியோதெரபி, கண்மருத்துவம் சார்ந்தஆப்டோமெட்ரிஆகியவையும், மருத்துவம்சார்ந்த நாம் கவனிக்கவேண்டியபடிப்புகளாகும்.மருத்துவத்தில், மனிதர்களுக்கானமருத்துவம் தாண்டி,கால்நடைகளுக்கானமருத்துவம், காலம்காலமாகபுகழ்பெற்ற ஒன்றாகும். B.V.Sc. எனப்படும் வெர்ட்னரிசயின்ஸ் படிப்பு, சென்னைவேப்பேரியில் உள்ளகால்நடை மருத்துவக்கல்லூரியிலும், இந்தப்பல்கலையின் கீழ் இயங்கும்நாமக்கல் கல்லூரியிலும்சொல்லித் தரப்படுகிறது.

தவிர, B.F.Sc. எனப்படுகிறமீன்வளம் சார்ந்தவிஷயங்களை பட்டப்படிப்பாக சொல்லித்தருவதற்கென,தூத்துக்குடியில் அரசுமீன்வளக் கல்லூரி ஒன்றும்உள்ளது. இந்தக்கல்லூரியும், கால்நடைமருத்துவப் பல்கலையின்கீழ்தான் செயல்படுகிறது.இது, சமீப ஆண்டுகளில்வரவேற்பை பெற்றுவரும்இன்னொரு புதியபடிப்பாகும்.

வேளாண் துறை சார்ந்தபடிப்பான B.Sc. (Agriculture),எப்போதுமே வரவேற்புள்ளஒரு படிப்பாகும்.கோவையிலுள்ள வேளாண்பல்கலைக்கழகத்தின் கீழ்,கோவையில் மட்டுமல்லாது,திருச்சி, பெரியகுளம் எனபல்வேறு இடங்களில் உள்ளஉறுப்புக் கல்லூரிகளிலும்,இந்தப் படிப்பு சொல்லித்தரப்படுகிறது. வேளாண்கல்லூரிகளில், சமீபஆண்டுகளில் அதிகம்நாடப்படும் இன்னொருபடிப்பு, Horticulture எனப்படும்தோட்டக்கலை சார்ந்தபடிப்பாகும்.

தவிர, கோவை வேளாண்பல்கலையில், ஒருசிலசிறப்பு இன்ஜினியரிங்பட்டப் படிப்புகளும்சொல்லித் தரப்படுகின்றனஎன்பது பலர் அறியாதசெய்தி. B.Tech(BioTechnology), Food Process Engineering, Agricultural IT போன்ற இந்தஇன்ஜினியரிங்படிப்புகளுக்கு, நீங்கள்நேரடியாக கோவைவேளாண் பல்கலைக்கு,தனியாக ஒரு விண்ணப்பம்போட வேண்டும்.

ஒரு காலத்தில், அரசியலில்நுழைய வேண்டுமானால்,அதற்கு சட்டக் கல்லூரியில்சேர்வதானது, பாஸ்போர்ட்எடுப்பது போன்றது என்றகருத்து இருந்து வந்தது.ஆனால், இடையில்கொஞ்சம் தொய்வு ஏற்பட்டு,மீண்டும் சமீப ஆண்டுகளில்சட்டப் படிப்பிற்கான மவுசுகூடிவருகிறது. சென்னை,கோவை, திருச்சி, நெல்லை,மதுரை மற்றும்செங்கல்பட்டு ஆகியஇடங்களிலுள்ள அரசு சட்டக்கல்லூரிகளில், ஐந்தாண்டுசட்டப் படிப்பில் சேர +2வில்நீங்கள் எந்த குரூப்எடுத்திருந்தாலும்போதுமானது.

இப்படியான தொழிற்படிப்புகளுக்கானகல்லூரிகள் ஒருபுறம்இருந்தாலும், B.A., B.Sc., B.Com. போன்ற படிப்புகளைவழங்கும் கலை அறிவியல்கல்லூரிகளும்,நூற்றுக்கணக்கில்புகழ்பெற்றுவிளங்குகின்றன. எனினும்,இந்தக் கலை அறிவியல்கல்லூரிகள், ஒருகாலத்திலிருந்தவழக்கமானபடிப்புகளிலிருந்துமாறுபட்டு, இன்று நிறையபுதிய படிப்புகளைஅறிமுகப்படுத்தியுள்ளன.சொல்லப்போனால்,இன்ஜினியரிங்கல்லூரியிலுள்ளகம்ப்யூட்டர் சயின்ஸ்,பயோடெக்னாலஜிபோன்றவை, B.Sc.படிப்புகளாக, கலைஅறிவியல் கல்லூரிகளில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தவிர, சயின்ஸ்பாடங்களில்கூட, சிறப்புத்துறைகளாகமைக்ரோபயாலஜி,பயோகெமிஸ்ட்ரி, பிளான்ட்பயாலஜி என சிறப்புபட்டங்கள் தரப்படுகின்றன.சத்துணவு, இந்தியசுற்றுலா, ஹோம் சயின்ஸ்,உளவியல் என பெண்களைமையப்படுத்தி, நிறையசிறப்பு பட்டப் படிப்புகள்,குறிப்பாக, மகளிர்கல்லூரிகளில்சொல்லித்தரப்படுகின்றன.

கலை, அறிவியல்கல்லூரிகளில் மிகவும்பிரபலமான இன்னொருபடிப்பு B.Com. என்றாலும்,அதோடு சேர்ந்த படிக்கவேண்டிய இன்னும் சிலகோர்ஸ்களை நம்மாணவர்கள் கவனத்தில்கொள்ளாமல்விட்டுவிடுகின்றனர்.அதாவதாக, சார்ட்டர்டுஅக்கவுன்டன்ட் எனப்படும்CA, காஸ்ட் அக்கவுன்டன்ட்எனப்படும் ICWAI மற்றும்கம்பெனி செக்ரட்டரிஎனப்படும் ACS ஆகியமூன்றும்தான் அவை.

ஒருகாலத்தில், பட்டப்படிப்பை முடித்தப்பிறகுதான், இவற்றைமுயற்சி செய்யவே முடியும்.ஆனால் இன்று, +2 முடித்துபட்டப் படிப்பில்சேர்ந்தவுடனேயேஇவற்றுக்கானதொடக்கநிலைத்தேர்வுகளை எழுத முடியும்என்பதால், பட்டப் படிப்பைபடித்துக்கொண்டே ஒரேநேரத்தில், இந்தத்தேர்வுகளையும்எழுதுவதால், மூன்றாண்டுகாலம், விரயமாகாமல்பார்த்துக்கொள்ள முடியும்.

திரைப்படக் கல்லூரியில்சேர்ந்து படிப்பதை, ஒருகாலத்தில், பல வீடுகளில்அனுமதிக்கவே மாட்டார்கள்.ஆனால் இன்று, திரைப்படக்கல்லூரியில் சேர்ந்துபடிக்கும் அத்தனைப்படிப்புகளும்,தொலைக்காட்சித்துறைக்கும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதால், அந்த எதிர்ப்புநிலை மாறியுள்ளது.

சென்னை அரசு திரைப்படக்கல்லூரியில், ஒளிப்பதிவு,ஒலிப்பதிவு மற்றும்படத்தொகுப்பு போன்றபல்வேறு பிரிவுகளில்டிப்ளமோ படிப்பு சொல்லித்தரப்படுகிறது. அதேபோல்,சென்னை அடையாறில்உள்ள அரசு இசைக்கல்லூரியில், இசை மற்றும்நடனம் சார்ந்த பல்வேறுபிரிவுகளில் படிப்புகள்சொல்லித் தரப்படுவதோடு,இன்று பல்வேறு மாவட்டதலைநகரங்களிலும் அரசுஇசைக் கல்லூரிகள்உள்ளன.

உங்களின் ஓவியத்திறமையை மட்டுமேவைத்து பட்டப் படிப்பில்நுழையும் வாய்ப்பு உள்ளதுதெரியுமா? சென்னைஎழும்பூரிலுள்ளநூற்றாண்டு பழமைவாய்ந்த அரசு ஓவியநுண்கலைக்கல்லூரியிலும்,கும்பகோணத்திலுள்ளஇதே அரசுக் கல்லூரியிலும்BFA எனப்படும் Fine Arts பட்டப்படிப்பு, பல்வேறு சிறப்புபிரிவுகளில் சொல்லித்தரப்படுகிறது. இதில் சேர,உங்களது ஓவியத்திறமையைப்பரிசோதிக்கும்நுழைவுத்தேர்வு ஒன்றுநடத்தப்பட்டு, அதன்மூலம்நீங்கள் சேர்க்கப்படுவீர்கள்.இரண்டுமே அரசுக்கல்லூரிகள் என்பதால்,கல்விக் கட்டணமும் மிகக்குறைவுதான். இன்றுதென்னிந்திய திரையுலகில்புகழ்பெற்று விளங்கும்பல்வேறு ஆர்ட்டைரக்டர்களும்இக்கல்லூரிகளின்மாணவர்களே!

சமீப ஆண்டுகளில் பலரதுகவனத்தையும் ஈர்த்துவரும்படிப்புகளில், முக்கியமானஇன்னொரு படிப்பு பேஷன்டெக்னாலஜி. சென்னைதரமணியில் அமைந்துள்ளமத்திய அரசுக்கல்லூரியான NIFTஎனப்படும் நேஷனல்இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன்டெக்னாலஜி, அகில இந்தியஅளவில் புகழ்பெற்ற ஒருகல்வி நிறுவனமாகும்.இங்கு பல்வேறு பிரிவுகளில்ஆடை வடிவமைப்பு, ஆடைஉற்பத்தி போன்ற டிசைனிங்கோர்ஸ்கள், பட்டப்படிப்புகளாக சொல்லித்தரப்படுகின்றன.

சமையல் சார்ந்த படிப்பானகேட்டரிங் டெக்னாலஜி,ஹோட்டல் மேனேஜ்மென்ட்படிப்பும், எப்போதுமே நேரடிவேலை வாய்ப்பைஉருவாக்கித் தரும்படிப்புகளாகும். ஐந்துநட்சத்திர ஹோட்டல்கள்,கப்பல், விமானம் எனஉலகின் பல்வேறுநாடுகளுக்கும் பயணம்செய்து வேலைபார்க்கும்வாய்ப்பை கேட்டரிங்படிப்புகள் தருவதால்,அதுசார்ந்த ரசனைஉள்ளவர்கள் தாராளமாகதேர்ந்தெடுக்கலாம்.

அதேபோல், பத்திரிக்கை,தொலைக்காட்சி மற்றும்விளம்பரம் என,ஊடகத்துறை வளர்ச்சி,இன்று சிறப்பாகவேஇருந்து வருவதால், மீடியாபடிப்புகளான B.Sc. Visual Communication, Mass Communication, Public Relations, Journalism, Electronic Mediaபோன்ற பட்டப் படிப்புகளும்,நீங்கள் கவனம் செலுத்தவேண்டிய படிப்புகளாகும்.

எனவே, காலங்காலமாகதேர்ந்தெடுக்கப்படும்ஒரேமாதிரியானபடிப்புகளையேதேர்ந்தெடுக்காமல், உங்கள்ரசனை மற்றும்வேலைவாய்ப்பு ஆகியஇரண்டையும் கருத்தில்கொண்டு, வித்தியாசமானஒரு பட்டப் படிப்பைதேர்ந்தெடுத்து படிப்பதேசிறப்பாக அமையும்.

25 சதவீத இடஒதுக்கீட்டில் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பிக்கலாம் என்றார் ஆட்சியர்.

இதுகுறித்து ஆட்சியர் டிபி.ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12(1)ன் படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு அப்பள்ளியின் நுழைவுநிலை (எல்.கே.ஜி அல்லது 1 ஆம் வகுப்பு) வகுப்புகளில் குறைந்த பட்சம் 25 இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 2016-17 ஆம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் தமது குழந்தைகளை சேர்க்க விரும்பும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், உதவித் தொடக்கக் கல்வி அலுலவர் அலுவலகங்கள், அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் மே 3 முதல் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவண நகல்களின் இணைப்புகளுடன் மே 18 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களைப் பெற்ற அலுவலகத்திலோ அல்லது தமது குழந்தையினை சேர்க்க விரும்பும் பள்ளி அலுவலகத்திலோ ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியர்களை பெருமை கொள்ள செய்த இஸ்ரோவின் சாதனைகள்!

உலக அரங்கில் இந்தியாவின் கவுரவத்தையும், பெருமையையும் பன்மடங்கு உயரச் செய்வதில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்[இஸ்ரோ] பங்கு மிக முக்கியமானதாக அமைந்து வருகிறது. இந்தியர்கள் பெருமை கொள்ளத்தக்க பல்வேறு சாதனைகளை இஸ்ரோ தொடர்ந்து படைத்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை போன்று, ஐஆர்என்எஸ்எஸ் என்ற பெயரில் புதிய ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை இஸ்ரோ அறிமுகம் செய்ய இருப்பது குறித்து சமீபத்தில் விரிவான செய்தித் 
தொகுப்பை வழங்கியிருந்தோம். இந்த நிலையில், பல சாதனைகளை இஸ்ரோ தொடர்ந்து படைத்து வந்தாலும், அதில் இந்தியர்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளக்கூடிய சில முக்கியமான சாதனைகளை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.
செய்தியின் தொடர்ச்சியை ஸ்லைடரில் க்ளிக் / ஸ்வைப் செய்து படிக்கலாம்.

1/12
மங்கள்யான்
இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்ப வல்லமையை உலக அரங்கில் பல மடங்கு உயர்த்தியதற்கு மங்கள்யான் திட்டம் முக்கியமானது. பல்வேறு தொழில்நுட்ப சவால்கள் நிறைந்த மங்கள்யான் திட்டம் மூலமாக செவ்வாய்க்கு ராக்கெட்டை செலுத்தி புதிய சாதனையை படைத்தது. இதை பார்த்து உலகமே வாய் பிளந்து நின்றது. மேலும், மங்கள்யானை வெற்றிகரமாக செலுத்தியதுடன், செவ்வாய் குறித்த ஆய்வுக்கு வலு சேர்க்கும் விதத்தில் துல்லியமான புகைப்படங்களை அனுப்பியும் இந்தியர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

2/12
ராக்கெட் நுட்பம்
அமெரிக்காவே அலறும் அளவுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்தியா சிறந்து விளங்குகிறது. அதிக எடையை சுமந்து செல்லும் ராக்கெட்டுகளை வெற்றிகரமாக செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டு பிஎஸ்எல்வி-சி28 ராக்கெட்டில் வைத்து, 1440 கிலோவுக்கும் அதிக எடை கொண்ட இங்கிலாந்து நாட்டின் 5 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. கடந்த ஆண்டு அக்டோபரில் பிஎஸ்எல்வி சி29 ராக்கெட்டில் வைத்து 6 சிங்கப்பூர் செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பியது. இதைத்தொடர்ந்து, ஒரே நேரத்தில் 22 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை விரைவில் செய்ய உள்ளது இஸ்ரோ.

3/12
ஜிஎஸ்எல்வி எம்கே3
விண்வெளி வீரர்களை வைத்து அனுப்பும் வசதி கொண்ட ஜிஎஸ்எல்வி எம்கே3 ராக்கெட்டையும் சமீபத்தில் வெற்றிகரமாக இஸ்ரோ சோதனை செய்துள்ளது. இதன்மூலமாக, விண்வெளி ஆய்வு துறையில் புதிய மைல்கல்லை இஸ்ரோ எட்ட இருக்கிறது. எதிர்காலத்தில் இந்தியர்களின் பெருமையை மேலும் உயர்த்துவதற்கு இஸ்ரோ மேற்கொண்டிருக்கும் சில அட்டகாசமான திட்டங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

4/12
விண்கலம்
அமெரிக்கா போன்று, விண்வெளிக்கு சென்றுவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் விண்கலங்களை உருவாக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு இருக்கிறது. இது மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ராக்கெட் விஞ்ஞானியுமான அப்துல்கலாமின் கனவு திட்டம். இதற்காக, Reusable Launch Vehicle[RLV] விண்கலத்தை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இது ராக்கெட்டின் மீது வைத்து பொருத்தி விண்வெளிக்கு செலுத்தப்படும். விண்வெளியில் 70 கிமீ உயரத்திற்கு ராக்கெட் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் வங்காள விரிகுடாவில் தரையிறக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து, 2 கிமீ ஓடுபாதையில் தரையிறக்கி சோதனை செய்யவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

5/12
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம்
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பம் திட்டத்தையும் தீவிரமாக மேற்கொண்டிருக்கிறது இஸ்ரோ. கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 18ந் தேதி இதற்காக ஜிஎஸ்எல்வி எம்கே3 ராக்கெட்டில், மனிதர்கள் செல்வதற்கான மோடியூலை வைத்து செலுத்தியது. 80 கிமீ உயரத்தை தொட்ட பின்னர், வெற்றிகரமாக ராட்சத பாரசூட்டுகள் மூலமாக கடலில் தரையிறக்கப்பட்டது.

6/12
அடுத்த கட்டம்
மூன்று விண்வெளி வீரர்களுடன் முதல் விண்கலத்தை 2021ம் ஆண்டில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது. விண்வெளி வீரர்களை தேர்வு செய்வது, பயிற்சியளிக்கும் பணிகளை இந்திய விமானப்படை மேற்கொண்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதை வெற்றிகரமாக மேற்கொள்ளுபட்சத்தில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய 4வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.

விரிவுரையாளராக வாய்ப்பு

மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.
பணி விபரங்கள்:

விரிவுரையாளர், ஆராய்ச்சியாளர், துணை சட்டமன்ற ஆலோசகர் மற்றும் பயிற்சி அதிகாரி. பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதிகள் மாறுபடும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:ஏப்ரல் 28

மேலும் விவரங்களுக்கு: www.upsc.gov.in

தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்கள் தபால் ஓட்டுக்கான வாக்கு சீட்டு பெறுதல் குறித்து பள்ளி கல்வி செயலர் அவர்களின் செயல்முறைகள்

வெற்றி தோல்வியை ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்:விஞ்ஞானி சர்மா அறிவுரை:

வெற்றி தோல்விகளை ஏற்கிற மனப்பக்குவம் இருந்தால் வாழ்க்கை வசமாகும்' என திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி மைய இயக்குனர் சர்மா தெரிவித்தார்.

அசத்த போகும் அரசுப்பள்ளிகள் !!!


தினம் ஒரு புத்தகம் "சுட்டிகளுக்கு குட்டிக் கதைகள் "


தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள் "ஆரோக்கியமான கோடை கால உணவுகள்"


ஆரோக்கியமான கோடை கால உணவுகள் கோடை வெப்பத்தைத் தவிர்க்க சில பயனுள்ள வழிமுறைகள்:

தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை குளிர்ச் சியாக்க முடியும். தண்ணீர் அதிகம் பருகுவதன் மூலம் ஈரப்பதம் எளிதில் ஆவியாவதை தவிர்க்க முடியும். ஏனெனில் வெப்பம் ஈரப்பதத்தின் மூலமாக வெளியாகி உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது. உங்களுக்கு தாகம் எடுக்கும் போது தான் தண்ணீர் பருக வேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம். அவ்வப்போது ஹைட்ரேட் நிறைந்த தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய செயல் பாடுகள் நீங்கள் பருகும் தண்ணீர் மூலம் தான் அதிகரிக்கும். தண்ணீர் பருகாமல் இருந்தால் அது சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும் ஆதலால் தண்ணீரை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

தமிழக அரசின்கீழ் செயல்படும் ‘எல்காட்’ நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
வயது வரம்பு:18 முதல் 30. வயது வரம்பு சலுகையும் உண்டு.
தகுதிகள்:

விரிவுரையாளராக வாய்ப்பு

விரிவுரையாளராக வாய்ப்புமத்திய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.
பணி விபரங்கள்:

தமிழக அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு?

அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைமுறை விதிகள் அமுலில் உள்ளதால் அறிவிப்பு ஏதும் வெளியாக வாய்ப்பு இல்லையென்றும், ஆனால் கோப்புகள் தயாராக உள்ளதெனவும் தகவல் வெளியாகியுள்ளது.

முடிந்தது வாக்காளர் பெயர் சேர்ப்பு:ராஜேஷ் லக்கானி தகவல் !

வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்கும் பணி நிறைவு பெற்றது. பெயர் சேர்க்காதவர்கள், ஓட்டு போட முடியாது' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

எம்.பார்ம். படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்:

எம்.பார்ம். படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்:எம்.பார்ம். படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட எம்.பார்ம் படிப்புக்கு அரசு, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை www.tnhealth.org என்றஇணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பள்ளி வாகனங்களில் ஆய்வு :மே மாதம் முடிக்க உத்தரவு:

பள்ளி வாகனங்களில் ஆய்வுப் பணிகளை மே மாதத்திற்குள் முடிக்க, போக்குவரத்து ஆணையர் சத்தியபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவு:

மதுரை காமராஜ் பல்கலை தேர்வுகள் மே 25ல் துவக்கம்:

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி மாணவர்களுக்கான தேர்வு மே 25ல் துவங்குகின்றன.இதுகுறித்து பல்கலை கூடுதல்தேர்வாணையர் மனோகரன் தெரிவித்துள்ளதாவது:இளங்கலை மற்றும் பி.எட்., தேர்வுகள் மே 25 முதலும். முதுகலை மற்றும் எம்.எல்.ஐ.எஸ்.சி., பட்டப் படிப்புகளுக்கு ஜூன் 1ம் தேதியும், சான்றிதழ், பட்டயம், எம்.சி.ஏ., எம்.பி.ஏ., மற்றும் திறந்தவெளி தொடக்க மற்றும் அடிப்படை நிலைப் படிப்புகளுக்கான தேர்வுகள் ஜூன் 6 முதலும் துவங்குகின்றன.

பள்ளித் தலைமை ஆசிரியர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது தொடர்பாக மாவட்டம் முழுவதும் 796 பள்ளித் தலைமை ஆசிரியர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கே. விவேகானந்தன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் பேசியது:

அசோக சக்ரா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வீர, தீரச் செயல் புரிந்தமைக்காக வழங்கப்படும் அசோக சக்ரா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

லஞ்சம் வாங்கவோ,கொடுக்கவோ கூடாது காவல் ஆய்வாளர் பேச்சு 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் லஞ்சம் வாங்கவோ,கொடுக்கவோ கூடாது என பேசினார்.

சுலபமான மொபைல் பண பரிமாற்றம் மத்திய அரசின் திட்டம் அறிமுகம்

புதுடில்லி: 'ஸ்மார்ட்போனில்' இருந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்புவது போல், மிகவும் சுலபமாக, பணத்தை பரிமாறிக் கொள்ளும், யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.மத்திய அரசின், தேசிய பணம் செலுத்தும் வாரியம் மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி இணைந்து, இந்த புதிய முறையை வடிவமைத்து உள்ளன.தற்போது, நாடு முழுவதும் நடக்கும் வர்த்தகத்தில், 95 சதவீதம் மற்றும் அதன் மதிப்பில், 65 சதவீதம் ரொக்கமாகவே செலுத்தப்படுகிறது

பள்ளிகள் ஏப்., 22 முதல் மூடல் :ஜூன் 1ல் மீண்டும் திறப்பு.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ல் துவங்கும் கோடை விடுமுறை, தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மே, 1ல்துவங்குகிறது. 'ஜூன், 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்' என, அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!