Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 20 April 2016

50 சதவீத கழிவில் புத்தகங்கள் விற்பனை பெரியார் திடலில் 22-ம் தேதி தொடங்குகிறது.

50 சதவீத கழிவில் புத்தகங்கள் விற்பனை பெரியார் திடலில் 22-ம் தேதி தொடங்குகிறது 

சென்னை புத்தகச் சங்கமத்தின் மேலாளர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலக புத்தக நாளை முன்னிட்டு சென்னை புத்தகச் சங்கமம் என்ற பெயரில் சிறப்பு புத்தக கண்காட்சி வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் ஏப்ரல் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறும். இக்கண்காட்சியில் இலக்கியம், அறிவியல், பகுத்தறிவு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து துறை நூல்களும் 50 சதவீத 
கழிவு விலையில் கிடைக்கும். கண்காட்சி நடைபெறும் மூன்று நாட்களும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறுவர்களுக்கான ஓவியம், கலைப் பொருட்கள் உருவாக்குதல், கதை சொல்லுதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளன. போட்டிகளில் வெற்றி பெறும் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். புத்தகங்களை கடன் அட்டையைப் (கிரெடிட் கார்டு) பயன்படுத்தி வாங்க வும், ஐ.ஓ.பி வங்கியின் நடமாடும் ஏ.டி.எம் மூலம் பணம் எடுப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. புத்தக கண்காட்சியை பார்வையிட வரும் அனைவருக்கும் அனுமதி இலவசம். கூடுதல் விவரங்களுக்கு www.chennaiputhagasangamam.com என்ற இணையதளத்திலும், 044-26618161, 26618162, 9840132684 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்'தேங்காயின் மருத்துவக் குணங்கள்'

தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

தினம் ஒரு புத்தகம் 'பழமொழிகள் 2500'


G.O.No.117 Dt: April 20, 2016 ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st January 2016 – Orders – Issued.

வாக்காளர் பெயர் வரிசை எண் ,தொகுதி பட்டியல் எண் அறிய !!!

இன்று முதல் மே 20ம் தேதி வரை மாநகராட்சியில் விடுப்பு கிடையாது

'தேர்தலை முன்னிட்டு, இன்று முதல் தேர்தல் பணிகள் முடியும் வரை, மாநகராட்சியின் எந்த ஒரு பணியாளருக்கும், எந்த காரணத்தை முன்னிட்டும் விடுப்பு கிடையாது. மீறி விடுப்பு எடுப்போர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

POLLING OFFICERS 1,2,3 ஆகியோரின் பணிகள்(DUTIES OF P1,P2,P3)TET - ஆசிரியர் தகுதி தேர்வு 2012,2013 தேர்ச்சி சான்றிதழ்கள் உண்மைத் தன்மை வழங்குதல் குறித்து அறிவுரைகள்


தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு.

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படியை தமிழக அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால், ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியம்! - ராமதாஸ்

பா.ம.க. ஆட்சிக்கு வந்ததும், அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியம் 15 நாட்களுக்கு ஒருமுறை வீதம் இரு தவணைகளில் வழங்கப்படும் என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவையில் 5ம் வகுப்புக்கான வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு

கோவை மாவட்டத்தில் தேர்வுக்கு முன்பாக 5ம் வகுப்புக்கான வினாத்தாள் வெளியாகி கடைகளில் விற்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைமற்றும் தொடக்க பள்ளிகளில் வரும் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

தேர்தல் பணியில் 13 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்: ஏப்.24-இல் பயிற்சி வகுப்பு.

மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 12,800 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கான முதல்கட்டப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.24) நடைபெறுகிறது.மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2,685 வாக்கு சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தி.மு.க.,வுக்கு முழு ஆதரவு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில், ஜூனில் நடக்கவுள்ள பத்தாவது மாநில மாநாட்டிற்கு தயாராக, நான்கு திசைகளிலும் ஆயத்த மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மேற்கு மண்டல ஆயத்த மாநாடு, சேலம் தலைவாசலில் உள்ள அரிமா சங்க கட்டடத்தில், நேற்று முன்தினம் நடந்தது.

தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு வேலை இல்லா ஆசிரியர்கள் எதிர்ப்பு; கருணாநிதி வீட்டில் மனு கொடுத்தனர்

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ளது போன்று பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்று வேலைஇல்லா ஆசிரியர்கள் கருணாநிதி வீட்டில் மனு அளித்தனர்.வேலைஇல்லா ஆசிரியர்கள்தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றும் ஓவிய, தையல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலான மையங்களில் இன்றுடன் முடிவடைகிறது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ல் முடிவடைந்தது.8 லட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 14-ம் தேதிதொடங்கியது. விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 64 மையங்கள் அமைக்கப்பட்டன.

பிஎஃப் புதிய விதிகள் ரத்து: எதிர்ப்புக்குப்பணிந்தது மத்திய அரசு.

தொழிலாளர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (பிஎஃப்) திரும்பப் பெறுவதற்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.முன்னதாக, பிஎஃப் புதிய விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் அரசுப் பேருந்துகள் உள்பட 25 வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.

தேர்தலில் ஈடுபடுவோருக்கு 3கட்ட பயிற்சிகள்: 24-ம் தேதி துவங்குகிறது.

கடலூர்:தேர்தலில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் 3 கட்ட பயிற்சியில் முதல் பயிற்சியான ஏப்.24-ம் தேதி துவங்குகிறது.தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு மே16-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒருபகுதியாக தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்பானது ஏப்.24-ம் தேதி நடைபெறுகிறது. மேலும், மே 7, 12-ம் தேதிகளிலும் இப்பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. 

9 மாதங்கள் ஆகியும் முடிவு வெளியிடப்படாத குரூப்-2 முதல்நிலைத் தேர்வு: 6 லட்சம் பட்டதாரிகள் ஏமாற்றம்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டு 9 மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வுமுடிவுகள் வெளியிடப்படாததால், தேர்வெழுதிய 6 லட்சம் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழக அரசுப் பணியில் துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர் (கிரேடு-2), சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர் உள்ளிட்ட 18 வகையான பதவிகளில் 1,241 காலியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி குரூப்-2 முதல்நிலைத் தேர்வை நடத்தியது.

மருத்துவ படிப்புக்கு மே 9 முதல் விண்ணப்பம் ஆன்லைன் வசதி கிடையாது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கு, மே, 9 முதல், விண்ணப்பம் வினியோகிக்கப்படும்,'' என, மருத்துவக்கல்விஇயக்குனர் விமலா தெரிவித்தார்.இன்ஜி., படிப்புக்கான விண்ணப்பங்கள், ஏப்., 15 முதல், 'ஆன்லைன்' மூலம் வழங்கப்படுகிறது. 'இந்நிலையில், மே, 9 முதல், மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்' என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

பி.இ. படிப்பில் சேர 72,000 மாணவர்கள் பதிவு.

பி.இ. படிப்பில் சேர செவ்வாய்க்கிழமை வரை 72 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.2016-17-ஆம் கல்வியாண்டு பொறியியல் ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் கடைசி வாரம் முதல் நடத்த உள்ளது.இந்த முறை மையங்கள் மூலமான விண்ணப்ப விநியோகத்தை ரத்து செய்யப்பட்டு, முதல்முறையாக இணையதளத்தில் விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கியது.

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் இலவசமாக பதிவு: அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைப்பு..

பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் இலவசமாக பதிவுசெய்யும் வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஆன்லைன் பதிவு தொடர்பான விவரங்களை மாணவர்கள் தொலைபேசி மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!