Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 21 April 2016

ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் நடத்தும் ஏடிஎம் செக்யூரிட்டி

டெகரடூனின் அலகாபாத் வங்கியின் ஏடிஎம் அறையின் பாதுகாவலராக முன்னாள் ராணுவ வீரர் விஜயேந்தர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16 வருடங்களாக தனது பணியுடன் சேர்த்து ஏழைக்குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருகிறார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் தலைநகராக இருப்பது டெகரடூன். இதன் ஐ.எஸ்.பி.டி பேருந்து நிலையம் அருகில் அலகாபாத்தின் வங்கி அமைந்துள்ளது. இதை ஒட்டியுள்ள வங்கியின் ஏடிஎம் இரவு நேரக் காவலராக விஜயேந்தர்(54) எனும் முன்னாள் ராணுவ வீரர் பணியாற்றி வருகிறார். இவர் அக்கம் பக்கம் வசிக்கும் ஏழைக் குழந்தைகள் மற்றும் தெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் பாடம் சொல்லித் தருகிறார். துவக்கப்பள்ளியின் பாடங்களை விஜயேந்தரிடம் படிக்கும் குழந்தைகளில் பலர் பள்ளிக்கு செல்லாதவர்கள். இவர்களில் சிலர், விஜயேந்தர் அளிக்கும் ஊக்கத்தினால் கவரப்பட்டு பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய விஜயேந்தர் கூறுகையில், ‘பாதுகாப்பு எனும் பெயரில் பலசமயம் வெறுமனே அமர்ந்து இருக்க வேண்டியதாக உள்ளது. இத்துடன், குழந்தைகளுக்கு துவக்கக் கல்விப் பாடங்கள் சொல்லிக் கொடுப்பது ஒன்றும் சிரமமாக இல்லை. என்னிடம் படித்து பல குழந்தைகள் இன்று பல பிரபல கல்லூரிகளில் இணைந்து பயின்று வருகின்றனர்.’ எனத் தெரிவித்தார்.

இதற்காக, குழந்தைகளிடம் எந்தவிதக் கட்டணமும் பெறாமல் இலவசமாகவே சொல்லித் தருகிறார் விஜயேந்தர். மாலைவேளைகளில் அப்பகுதியில் மூடப்பட்டு விடும் கடைகளின் வாசலில் குழந்தைகள் அமர்ந்து கல்வி பயில்கின்றனர். இதற்கு உதவியாக அந்த வங்கிப் பலகையின் விளக்குகள் உள்ளன. நாட்டில் பலரும் செய்து வரும் பல்வேறு வகையான சமூகத் தொண்டுகளில் விஜயேந்தரின் பணி தனிச்சிறப்பு பெற்றுள்ளது.

தினம் ஒரு புத்தகம் 'தமிழகத்தின் தனிப்பெரும் தொழில் மேதை ஜி .டி .நாயுடு '


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "கோடை வெயிலை சமாளிக்க டிப்ஸ் !!!"

பத்து மணிக்கு மேல் வெளியில் தலை காட்டவே மக்கள் பயப்படுகின்றனர் வெயில் மண்டையைப் பிளக்கிறது அரை மணி நேரம் வெயிலில் செல்ல நேர்ந்தால் கண் எரிச்சல், தோல் வறட்சி, வியர்வை, உடல் சோர்வு, சிறுநீர் தொற்று என பல பிரச்னைகள் வாட்டுகிறது இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக்கொள்ள ஆலோசனை சொல்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி:

தேர்தல் பணி உத்தரவை வாங்க மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை.

ஈரோடு:தேர்தல் பணி உத்தரவை வாங்க மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வியாழக்கிழமை விடுத்த செய்தி:

ரூ.5க்கு 'குளுக்கோ மீட்டர்' உணர் கருவிகள்: அழகப்பா பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு.

சர்க்கரை நோயாளிகளின் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும், 'குளுக்கோ மீட்டரில்' உள்ள உணர் கருவிகளை, ஐந்து ரூபாய்க்கு குறைவான செலவில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை, அழகப்பா பல்கலை உயிர் மின்னணு மற்றும் உயிர் உணர்விகள் துறை கண்டுபிடித்துள்ளது.

4.73 லட்சம் தபால் ஓட்டுகள்

4.73 லட்சம் தபால் ஓட்டுகள்தமிழகத்தில், 4.73 லட்சம் வாக்காளர்கள், தபால் ஓட்டு போட உள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தல் பணியில், 3 லட்சத்து 3 ஆயிரம் அரசு ஊழியர்கள்; ஒரு லட்சம் போலீசார்; 70 ஆயிரம் டிரைவர், வீடியோகிராபர் மற்றும் பிற ஊழியர்கள் என, மொத்தம் 4.73 லட்சம் ஊழியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இவர்களுக்கு, மே 5ம் தேதி, தபால் ஓட்டு சீட்டு வழங்கப்படும்.

தபால் ஓட்டுக்கான படிவம் 24ம் தேதி வழங்கல்!

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு வரும் 24ம் தேதி நடைபெறும் முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் வழங்கப்பட உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.

வருவாய் துறை பதவி உயர்வு தேர்தல் கமிஷன் அனுமதி.

தமிழக வருவாய்த்துறையில், தாசில்தார், துணை தாசில்தார் பதவி உயர்வுக்கான பட்டியல் தயாராக இருந்தும், தேர்தல் தேதி அறிவிப்பால் பதவி உயர்வு தரப்படவில்லை.வழக்கமான பதவி உயர்வு தான் என்பதால், தேர்தல் கமிஷனின் அனுமதி கோரப்பட்டது; ஒரு மாதத்திற்கு மேலாகியும் அனுமதி கிடைக்கவில்லை.

குமரிக்கு ஏப்ரல் 22ல் உள்ளூர் விடுமுறை.

குமரிக்கு ஏப்ரல் 22ல் உள்ளூர் விடுமுறை.தக்கலை அஞ்சுவர்ணம் தர்க்கா ஆண்டுவிழாவை முன்னிட்டு, குமரிக்கு நாளை (22.04.2016) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சஜன்சிங் சவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாடப் புத்தகங்கள் விலை தாறுமாறாக .... உயர்வு! கைடு'களை தலையில் கட்டுவதால் கூடுதல் சுமை.

பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், மாணவர்கள், பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.கோடை வெயில் உக்கிரத்திலிருந்து தப்பிக்கவும், விடுமுறையில் வகுப்பறை கல்வியையும் தாண்டி வெளியுலகை அறிந்து, புரிந்து கொள்ளவும், குடும்ப உறவு மேம்படவும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை காலம் உதவுகிறது.
இந்த உளவியல் அடிப்படையிலேயே, ஆங்கிலேயர் காலத்திலிருந்து ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு ஏப்.24-ல் முதற்கட்ட பயிற்சி

காரைக்குடி: தேர்தல் பணியில் ஈடுபட உள்ளஓட்டுசாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வரும் 24ம் தேதி தொடங்குகிறது.தேர்தலன்று ஓட்டு சாவடியில் தலைமை அலுவலர், நிலை 1, நிலை 2, நிலை 3 ஆகிய பணியிடங்களில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

TNPSC தேர்வு முடிவுகள்தமிழக அரசின் அரசுப்பணி தேர்வாணையம்

டி.ன்.பி.எஸ்.சி., கடந்த ஆண்டுநடத்திய பல்வேறு தேர்வுகளுக்கான முடிவுகளை இணையதளத்தில் அறிவித்து உள்ளது.தமிழக அரசுப்பணி தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., கடந்த ஆண்டில் நவம்பர் 8 ல் குரூப் 1 தேர்வு, ஆகஸ்ட் 1ல் பல்வேறு நிலைகளில் நுாலகர் தேர்வு, ஜூலை 11ல் உதவி புள்ளியல் அதிகாரி தேர்வு டிசம்பர் 21ல் குரூப் 4 தேர்வு ஆகியவற்றை நடத்தியது.
இவற்றிற்கான தேர்வு முடிவுகளை இன்று டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விநியோகம்.

அடுத்த கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்காக புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன மேலாண் இயக்குநர் மைதிலி கே.ராஜேந்திரன் கூறியதாவது:

ஜூலை 29ல் குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வு: மூன்று நாட்கள் நடக்கிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 29, 30, 31 ஆகிய தேதிகளில் முதன்மை எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது.  ஒருங்கிணைந்த குடிமைப்பணி-I தேர்வு தொகுதி-1ல்அடங்கிய 74 காலி பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.  தேர்வில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 696 பேர் கலந்து கொண்டனர்.
அதில் 4,033 பேர் முதன்மை எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வரும் ஜீலை மாதம் 29, 30, 31 ஆகிய தேதிகளில் முதன்மை எழுத்து தேர்வு நடத்தப்படும்.

தேர்தல் பணிக்கான படிவங்களில் குழப்பம் பகுதி நேர ஆசிரியர்கள் தவிப்பு.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களில் போதிய காலங்கள் ஒதுக்கப்படாமல் கொடுக்கப்பட்டுள்ளதால்,விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதில் குழப்பம் எழுந்துள்ளது.தேர்தல் பணியில் ஈடுபடுவர்கள் அதற்கான, சுய விபர விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டியது கட்டாயம்.

TNPSC: குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை:குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) இன்று வெளியிட்டது.இதன்படி, 4 ஆயிரத்து 33 பேர் பிரதானத் தேர்வினை எழுதுவதர்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். பிரதானத் தேர்வு ஜூலை 29 ஆம் தேதி தொடங்குகிறது.இதுகுறித்து, தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு:

ஸ்டேட் வங்கி தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு

பாரத ஸ்டேட் வங்கியில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான உதவியாளர் காலிப் பணியிடங் களை நிரப்ப விரைவில் போட் டித் தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு தயாராவது குறித்த ஒரு வார கால இலவச வழிகாட்டி கருத்தரங்கம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ‘தி வெங்கடேஸ்வரா ஸ்கூல் ஆப் பேங்கிங்’ பயிற்சி மையத்தில் நடக்க உள்ளது.

புதுச்சேரி அரசு பள்ளிகளில் 7-ம் வகுப்புக்கு 9-ம் வகுப்பு கேள்வித்தாள் விநியோகம்: தேர்வுகள் ஒத்திவைப்பு

புதுச்சேரியில் 7-ம் வகுப்பு அறிவியல் பாடத் தேர்வுக்கு9-ம் வகுப்பு கேள்வித்தாளை விநியோகித்தனர். அதிகாரிகளின் குளறுபடியால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் இறுதியாண்டு தேர்வு நடந்து வருகிறது. அதன்படி நேற்று காலை 7-ம் வகுப்பு அறிவியல் பாடத்தேர்வு நடந்தது.

தேசிய திறந்தவெளி பள்ளியில் அதிகாரி பணி

தேசிய திறந்தவெளி பள்ளியில் காலியாக அதிகாரி பணயிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாணவர்களின் புத்தக பை சுமையை குறைக்க வேண்டும்: பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. ஆலோசனை

மத்திய பள்ளி கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது
புதுடெல்லி :
மத்திய பள்ளி கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது.

மருத்துவ படிப்பில் சேர இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு கிடையாது: அதிகாரி தகவல்

மருத்துவ படிப்பில் சேர இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு கிடையாது
சென்னை: 
மருத்துவப்படிப்பில் சேர இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பொது நுழைவுத்தேர்வு கிடையாது என்றும், பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் கட்- ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்க்கப்படுவார்கள் என்றும் மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குனர் டாக்டர் செல்வராஜ் தெரிவித்தார். 

TNPSC: குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை:குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நேற்று  வெளியிட்டது.இதன்படி, 4 ஆயிரத்து 33 பேர் பிரதானத் தேர்வினை எழுதுவதர்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். பிரதானத் தேர்வு ஜூலை 29 ஆம் தேதி தொடங்குகிறது.இதுகுறித்து, தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு:

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!