Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 25 April 2016

கொளுத்தும் வெயில்: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்தது ஒடிசா

புவனேஷ்வர் : மிகக் கடுமையான கோடை வெயில் காரணமாக, பள்ளிகளுக்கு நா ளை முதல் கோடை விடுமுறை அறிவித்துள்ளது ஒடிசா மாநில அரசு.

ஒடிசாவில் கடந்த சில நாட்களாக 42 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் வாட்டிவருகிறது. இதனை முன்னிட்டு, ஒடிசாவில், முன்னதாகவே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் படிப்பை விலைக்கு விற்கும் "லெட்டர்பேடு' கல்லூரிகள் மீது நடவடிக்கை தேவை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டப் படிப்பை விலைக்கு விற்கும் "லெட்டர்பேடு' சட்டக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தஞ்சாவூரைச் சேர்ந்த பி.ராமு, 1966 முதல் 2001 வரை தமிழக அரசின் விவசாயத் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணிபுரிந்தார். 2001-இல் பெங்களூருவிலுள்ள ஒரு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்துள்ளார். வழக்குரைஞராகப் பதிவு செய்ய முயன்றபோது, "அரசுப் பணியில் இருந்து கொண்டே எப்படி படித்தீர்கள்' என தமிழ்நாடு பார் கவுன்சில் மறுத்துள்ளது.

இதையடுத்து, வழக்குரைஞராகப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும், பார் கவுன்சில் விதிமுறைகளையும் தளர்த்தக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பி.ராமு மனு தாக்கல் செய்தார்.

  இந்த மனு நீதிபதிகள் வெ.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

  மனுதாரர் 2001 வரை அரசு ஊழியராக இருந்துள்ளார். ஆனால், 1998 முதல் 2001 இடைப்பட்ட காலத்தில் எப்படி சட்டப் படிப்பை முழு நேரமாகப் படித்தார் என்பது புரியவில்லை. விடுப்பு எடுத்துப் படித்ததாகக் கூறும் மனுதாரர், ஆதாரங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை.

இது போன்ற சட்டப் படிப்புகளை விலைக்கு விற்கும் "லெட்டர்பேடு' கல்லூரிகள் மீது   அகில இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குப் பதிலாக, மனுதாரருக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

கிரிமினல்களும், ரௌடிகளும் வழக்குரைஞர் போர்வையில் உலா வருவதற்கு இது போன்ற கல்லூரிகளைத்தான் மொத்தமாக ஏலம் எடுக்கின்றனர். இந்தக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். இல்லையெனில், அது சமுதாயத்துக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

வழக்குரைஞர் பதிவு விவகாரத்தில், தமிழ்நாடு பார் கவுன்சில் சரியான முடிவை எடுத்துள்ளது என உத்தரவிட்டனர்.

தேர்தல் அலுவலர் ஊதியம்

ELECTION-2016:வாக்குச்சாவடி அலுவலர்(PO) - மண்டல அலுவலரிடம்(zonal officer) ஒப்படைக்க வேண்டிய பொருள்கள் என்னென்ன?


வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கீழ் கண்ட பொருள்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்:        

                                                 ************************                                                          


       பகுதி - I

1. வாக்குப் பதிவு இயந்திரம் 1/2/3 2. வாக்குப் பதிவு இயந்திர கட்டுப்பாட்டு கருவி - 1 (இவற்றை முறையாக மூடி, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மெட்டல் சீல் வைக்க வேண்டும். முகவர்களும் முத்திரை வைக்கலாம்)  


                                      ********************************

முதுலை படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதியை அறிவித்தது அண்ணா பல்கலை

சென்னை:முதுகலை படிப்புக்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.முதுகலை படிக்கு மே 2 முதல் 17-ம் தேதி வரை இணையதளம் வழியாக நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்கலாம்.

மாணவர் சேர்க்கை அதிகரிக்க அறிவுரை

அரசு பள்ளிகளில்,கடந்தாண்டை விட, 10சதவீதம் வரை,மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என,தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோடை காலத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை குறித்து,தலைமை ஆசிரியர்களுக்கு,பள்ளி கல்வித்துறை சார்பில்,அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஏ.ஐ.இ.இ.ஏ., நுழைவுத்தேர்வு.

இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சரல் ரிசர்ச் (ஐ.சி.ஏ.ஆர்.,) அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் 2016ம் ஆண்டு மாணவர்சேர்க்கைக்கான, நுழைவுத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினம் ஒரு புத்தகம்"உடல் ஆரோக்கியத்தை காக்கும் கீரைகள் '


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்"கோடை டிப்ஸ்..."

  கோடைக் காலத்தில்  சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து காத்துக் கொள்வதற்கு, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தாகமே இல்லையென்றாலும், நிறையத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

  பழங்களில்: பப்பாளி, மாம்பழம், கிர்ணிப் பழம், தர்பூசணி, போன்றவற்றை உட்கொள்ளலாம். பெரி வகையை சார்ந்த பழங்களில்:  ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி, ப்ளாக்பெரி, கூஸ்பெரி, ராஸ்பெரி ஆப்பிள், செர்ரி போன்றவை உட்கொள்ளலாம்.

மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இரு தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.

பள்ளிக் குழந்தைகளை கண்காணிக்க புதிய நடைமுறை

நாடு முழுவதிலுமுள்ள சுமார் 20 கோடி பள்ளிக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளை அடையாளம் காணவும் உதவும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சனிக்கிழமை தெரிவித்தார்.
 இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 மையங்களில் நடைபெற்று வந்த பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது.

தரமான கல்வி தருவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: நரேந்திர மோடி

நாடு முழுவதும் தரமான கல்வி தருவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று தனது 19-வது 'மன் கி பாத்' வானொலி உரையின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

Cetral Govt likely to implement 7th Pay Commission award around September-October

The Central government employees will have to wait till September-October to get higher salaries under the 7th Pay Commission.
As per a Financial Express report, government is expecting that higher salaries released around the festival period starting with Durga Puja and Diwali will boost consumption, which will have a multiplier effect on the economy. 
Though the employees will get arrears with retrospective effect from January 1, no retrospective arrears in allowances will be given. With the move, the exchequer would be able to save around Rs 11,000 crore. 
The commission had estimated the additional outgo in FY17 due to its award at R73,650 crore.

கை குழந்தையோடு வருவோருக்கு... முன்னுரிமை! மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுரை

ஓட்டளிக்க வரும் முதியோர், நிறைமாத கர்ப்பிணிகள், கை குழந்தையுடன் வரும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, ஓட்டுச்சாவடிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்,''
என, திருப்பூர் கலெக்டர் ஜெயந்தி அறிவுறுத்தினார்.

மதிய உணவுக்கு பதில் ரூ.150 :தேர்தல் கமிஷன் உத்தரவு.

தேர்தல் பணி தொடர்பான பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவுக்கு பதிலாக, உணவுப்படி வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், மே, 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில், 1.97 லட்சம் பெண்கள் உட்பட, 3.29 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம், நேற்று தமிழகம் முழுவதும் துவங்கியது.

தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் அவதி:அடிப்படை வசதிகள் செய்யப்படாததால் புலம்பல்.

சட்டசபை தேர்தல் தொடர்பாக, ஆசிரியர்களுக்கான, முதல் கட்ட பயிற்சி வகுப்பு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதில், தேர்தல் அதிகாரிகள், எந்த அடிப்படை வசதியையும் செய்யாததால், ஆசிரியர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.சட்டசபை தேர்தல் அன்று, ஓட்டுச்சாவடி மையத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப் பதிவு இயந்திரங்களை ஒருங்கிணைத்து, ஓட்டு எண்ணும் மையத்துக்கு அனுப்புதல்; ஓட்டு எண்ணிக்கை போன்ற பணிகளிலும்ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் 29ம் தேதி வெளியீடு.

'இறுதி வாக்காளர் பட்டியல், 29ம் தேதி வெளியிடப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.தமிழகத்தில், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், ஜன., 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

CTET தேர்வு முடிவுகள் மே -8 ல் வெளியாகிறது !

சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ம் தேதி வெளியாகின்றன.

பகுதி நேர பி.இ., பி.டெக்.: ஏப்ரல் 25 முதல் விண்ணப்பிக்கலாம் !

பகுதி நேர பொறியியல் (பி.இ., பி.டெக்.) படிப்புகளில் சேர விரும்புவோர் ஏப்ரல் 25 முதல் மே 9 வரை விண்ணப்பிக்கலாம். 2016-17ஆம் கல்வியாண்டில் பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர பாலிடெக்னிக் முடித்து, பணியில் இருப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோடை துவங்கியாச்சு பெற்றோர்களே உஷார் :அறிவுத்திறன்களை வளர்க்க வழி செய்வோமே:அவசியம் கண்காணிப்பு

பள்ளி வகுப்புகள் முடிந்து கோடை விடுமுறை துவங்கும் நிலையில், தற்போது வெயில் கொளுத்தி வருவதால் தங்களது பிள்ளைகளின் மீது பெற்றோர்கள் கண்காணிப்பு மிக அவசியமாகிறது. கோடை விடுமுறையை பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகதானகவும் இருக்குமாறு பெற்றோர்கள் பார்த்துகொள்ளவேண்டும்.

சட்ட மன்ற தேர்தல் - 2016 பணி சார்பாக உயர் நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு சலுகைகள் வழங்கி உள்ளார்கள்

டாட்டா சங்கம் -ஆசிரியர்கள் - -2016 சட்ட மன்ற தேர்தல் பணி சார்பாக உயர் நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு சலுகைகள் வழங்கி உள்ளார்கள் .அதன்படிமாற்று திரனாளிகளுக்கு தேர்தல் பணியில் இருந்து விளக்கு -தமிழக தலைமை தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள்-
நன்றி : TATA KIPSON.தேர்தல் பற்றிய முழுமையான வீடியோ தொகுப்பு தமிழில் தமிழக தேர்தல் ஆணையம் வெளியீடு.

தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் பற்றிய முழுமையான கையேடு ஒன்றை தமிழில் YouTube இல் பதிவிட்டுள்ளது. 1 மணி 12 நிமிடம் ஓடக்கூடிய 525 mb அளவில் 720p HD video வாக இது கிடைக்கிறது.
Click the link to download ....

கற்றல் - கற்பித்தல் தொடர்பான கருத்தரங்கம்

காஞ்சிபுரத்தில் கற்றல் - கற்பித்தல் உத்திகள் மூலம் எதிர்கால கல்வியை மேம்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
இரு தினங்களாக நடைபெற்ற இக்கருத்தரங்கில் முதல் நாள் அமர்வில் கல்லூரி முதல்வர் டி.அன்பு வரவேற்றார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஏ.ஜோதிமுருகன் தொடங்கி வைத்து பேசினார்.

108 ஆண்டுகளுக்குப் பின்னர் வேலூரில் 111 டிகிரி வெயில்:வட மாவட்டங்களில் கடும் வெப்ப அலை தாக்கம் இருக்கும்

வேலூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் வட மாவட்டங்களில், வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

வண்டலூர் பூங்காவை பார்வையிட்ட 5,000 ஆதரவற்ற குழந்தைகள்:சென்னை உணவு வங்கி ஏற்பாடு

சென்னை உணவு வங்கியின் 23-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 5,000 ஆதரவற்ற குழந்தைகள் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!