Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 28 April 2016

பிஎப்புக்கு 8.7% வட்டி தரக்கூட நிதியே இல்லை: நிதியமைச்சகம் திடீர் விளக்கம்

பிஎப்புக்கு 8.7 சதவீத வட்டி வழங்கக்கூட நிதியில்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களுக்கு 2015-16 நிதியாண்டுக்கான வட்டியாக 8.8 சதவீதம் அளிக்க வேண்டும் மத்திய அறக்கட்டளை வாரியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் நிதியமைச்சகம் 8.7 சதவீதம் வழங்க ஒப்புதல் அளித்தது.பிஎப் நிறுவனம் கடந்த 2013-14 மற்றும் 2014-15 நிதியாண்டுகளுக்கான வட்டியாக 8.75 சதவீதம் வழங்கியது.

இது 2012-13 நிதியாண்டில் 8.5 சதவீதமாகவும், 2011-12 நிதியாண்டில் 8.25 சதவீதமாகவும் இருந்தது. இதற்கு முன்பு கால் சதவீதம் அளவுக்கு வட்டி உயர்த்தப்பட்டது. அதோடு கடந்த பிப்ரவரி 16ம் தேதி 2015-16க்கான இடைக்கால பிஎப் வட்டி விகிதமாக 8.8 சதவீதமாக முடிவு செய்யப்பட்டது. இந்த இடைக்கால வட்டியை கூட தர மறுத்துள்ளது நிதியமைச்சகம்.

இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.அதோடு, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன. இதற்கிடையில், வட்டி குறைத்ததற்கு நிதி பற்றாக்குறையே காரணம் என நிதியமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த 2014-15நிதியாண்டில் பிஎப் நிதி முதலீடு மூலம் கிடைத்த வருவாய் ரூ.1,604.05 கோடி உபரி இருந்தது. தற்போது 8.8 சதவீத வட்டி அளித்தால் இந்த உபரித்தொகை ரூ.673.85 கோடியாக குறைந்து விடும்.

இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு இந்த அளவுக்கு கூட நிலையான வட்டி கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும். 8.7 சதவீதம் கொடுத்தால் இந்த உபரி ரூ.1,000 கோடியாக இருக்கும்.ஆனால் இதை தரக்கூட போதுமான நிதியில்லை. அதுமட்டுமின்றி, செயல்படாத 9 கோடி பிஎப் கணக்குகளில்உள்ள ரூ.35,000 கோடிக்கு மேற்பட்ட மூலனத தொகையில் கிடைத்த வட்டி வருவாய் மத்திய அறக்கட்டளை குழு முடிவின்படி தற்போது செயல்பாட்டில் உள்ள கணக்குகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

155 பள்ளி செல்லாத குழந்தைகள்!

முதல்கட்ட கணக்கெடுப்பில், 70 மாற்றுத்திறனாளிகள் உட்பட, 155 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.
எஸ்.எஸ்.ஏ., சார்பில், ஆண்டுதோறும் ஏப்., மே மாதங்களில், பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு 
நடத்தப்படும். இதில் கண்டறியப்படும் குழந்தைகள், உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் சிறப்பு பள்ளிகளில் சேர்க்கப்படுவர். பின், ரெகுலர் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

திருப்பூரில், எஸ்.எஸ்.ஏ., ஆசிரியர் பயிற்றுனர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு மைய ஊழியர்களை கொண்ட குழுக்கள், பகுதி வாரியாக தினமும் வீடு வீடாகச் சென்று, பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து, கணக்கெடுத்தனர். ஆறு முதல், 14 வயதுக்கு உட்பட்டவர்கள், பிறந்த குழந்தை முதல், 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் விசாரிக்கப்படுகின்றனர்.

வரும், 30 வரை முதல்கட்டமாகவும்; மே, 17 முதல், 24 வரை இரண்டாம் கட்டமாகவும், கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதுவரை, 70 மாற்றுத்திறனாளிகள் உட்பட, 155 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளதாக, எஸ்.எஸ்.ஏ., அலுவலர்கள் தெரிவித்தனர்

ஆங்கில கல்வியில் அசத்தும் அரசு பள்ளி!

ராசிபுரம் அருகே, தமிழ் மற்றும் ஆங்கில கல்வியில் தனியார் பள்ளிக்கு இணையாக அசத்தும் கிராமப்புற பள்ளி, தற்போது இட நெருக்கடியால் அவதிப்பட்டு வருகிறது.

ராசிபுரம் அடுத்த, குட்டலாடம்பட்டி பஞ்சாயத்து, மலையம்பாளையம் கிராம சுற்றுப்பகுதியில், 300 குடும்பங்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு துவக்கப்பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு நிகராக வாகன வசதி, இசை, நடனம், கராத்தே, யோகா, அடையாள அட்டை என செயல்பட்டு வருவதால், இப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இதுகுறித்து, இப்பள்ளியில், 14 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியர் செந்தில் கூறியதாவது:

இக்கிராமத்தில் கூலித்தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அதனால், குடும்ப வறுமை காரணமாக வயல் வேலைக்கு செல்வது, கால்நடை மேய்க்க செல்வது, செங்கல் சூளைகளுக்கு செல்வது போன்றவை மாணவர்களிடம் இருந்தது. இந்நிலை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் வேலைக்கு செல்வது படிப்படியாக குறைக்கப்பட்டது.

இப்பள்ளி, 2000ம் ஆண்டுக்கு பின், ஈராசிரியர் பள்ளியாக தரம் உயர்த்தி மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், ஒன்றாம் வகுப்பு முதல், மூன்றாம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது, 114 மாணவர், 106 மாணவியர் உட்பட, 220 பேர் படிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக துவக்கக்கல்வி துறையின் சிறந்த பள்ளிக்கான விருதும், நாமக்கல் மாவட்டத்தின் முன் மாதிரி பள்ளிக்கான விருதும் பெற்றுள்ள இப்பள்ளி, தற்போது இட நெருக்கடியால் திணறி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, எட்டு பிரிவுகளாக நடக்கும் பள்ளி மரத்தடியிலும், அருகில் உள்ள கோவிலிலும் நடந்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.

விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி: அதிவேக சேவையின் மூலம் அசத்துகிறது பாஸ்போர்ட் துறை

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி செய்யும் அளவுக்கு பாஸ்போர்ட் துறையின் சேவை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள கீழத் திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கவின். இவனது பெற்றோருக்கு ஏற் கெனவே பாஸ்போர்ட் உள்ளது. மகனுக்கும் பாஸ்போர்ட் எடுக்க முடிவு செய்தனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். விண்ணப்பத் துடன் சிறுவனின் பிறப்புச் சான்றி தழ், பெற்றோரின் பாஸ்போர்ட் நகல் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.

தஞ்சாவூரில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நேர்காணலுக்காக நேரம் கிடைத்தது. சிறுவனும், பெற்றோரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு பாஸ்போர்ட் சேவை மையத்துக்குள் நுழைந்தனர். அசல் ஆவணங்கள் சரிபார்த்தல், சிறுவனின் கைரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல், அதிகாரிக ளுடன் நேர்காணல் என அடுத்தடுத்த 4 கவுன்ட்டர்களுக்குச் சென்றனர். எல்லா நடைமுறைகளும் 30 நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன.

காலை 10.30 மணிக்கு சேவை மையத்தை விட்டு வெளியே வந்தனர். ‘பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வருகை தந்தமைக் காக நன்றி’ என்ற குறுந்தகவல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டி ருந்த பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு காலை 10.31 மணிக்கு வந்தது. ‘காவல் துறை விசாரணை தேவையில்லை என்ற அடிப்படை யில் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது’ என்ற குறுந் தகவல் காலை 10.35 மணிக்கு வந்தது.

‘பாஸ்போர்ட் அச்சிடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன’ என்ற மற்றொரு குறுந்தகவல் காலை 11.02 மணிக்கு வந்தது. ‘பாஸ்போர்ட் அச்சிடும் பணி முடிந்துவிட்டது’ என்ற குறுந்தகவல் மதியம் 1.30 மணிக்கு கிடைத்தது. அதாவது பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பித்துவிட்டு, வீடு வந்து சேருவதற்குள் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டுவிட்டது.

‘அடுத்து விரைவு தபால் சேவை மூலம் உங்கள் பாஸ்போர்ட் அனுப்பப்பட்டு விட்டது’ என்ற குறுந்தகவல் மாலை 6.30 மணிக்கு கிடைத்தது. மறுநாள் காலை சுமார் 11 மணிக்கு வீட்டில் பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்டுவிட்டது.

விண்ணப்பித்த 24 மணி நேரத் தில் வீட்டிலேயே பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்ட இந்த நிகழ்வானது சிறுவன் கவின் குடும்பத்தாரை மட்டுமின்றி, இதனை அறிந்த அந்த கிராமத்தினர் அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருந்த காலம் மாறி, 24 மணி நேரத்தில் வீட்டுக்கே பாஸ்போர்ட் கிடைக்கும் அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமே அவர்களது வியப்புக்கு காரணம்.

இந்த முன்னேற்றம் எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.லிங்கசாமி கூறியதாவது:

கணினிமயம்

பாஸ்போர்ட் அலுவலக செயல் பாடுகள் அனைத்தும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டதுதான் விரைவான சேவைக்கான முதல் காரணம். இதன் காரணமாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டன. இதனால் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, காவல் துறை விசாரணை அறிக்கையும் கிடைக்கப் பெற்றால் உடனே பாஸ்போர்ட் விநியோகம் செய்ய முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

பிறப்புச் சான்று, முகவரிச் சான்று போன்ற அசல் ஆவணங்கள் எவ்வித வில்லங்கமும் இன்றி மிகச் சரியாக இருந்தால், பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு அழைக்கப்படும் அதே தினத்தில் அவர்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். காவல் துறை விசாரணை தேவையில்லாத விண்ணப்பங்களுக்கு அன்றைய தினமே பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு, அடுத்த நாளோ அல்லது அதற்கு மறுநாளோ விண்ணப்பதாரருக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிடும். காவல் துறை விசாரணை தேவை எனில், பாஸ்போர்ட் விண்ணப்பம் ஏற்கப்படும் அதே வினாடியில் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு விண்ணப்பதாரர் பற்றிய தகவல்கள் ஆன்லைன் மூலம் சென்றுவிடும். அங்கிருந்து காவல் நிலையத்துக்கு தகவல்கள் அனுப்பப்பட்டு, காவல் துறையினர் விண்ணப்பதாரரின் இருப்பிடத்துக்கு சென்று விசாரணை செய்து, அறிக்கை அனுப்புவார்கள்.

21 நாட்கள்

காவல் துறையினரின் இந்த நடைமுறைகள் முடிய அதிக பட்சம் 21 நாட்கள் ஆகும். காவல் துறை அறிக்கை எங்களுக்கு கிடைத் தவுடன், அடுத்த ஓரிரு நாட்களில் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு, விண்ணப்பதாரருக்கு கிடைத்து விடும்.

ஆக, பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு செல்லும்போது தேவையான அனைத்து அசல் ஆவணங்களையும் மிகச் சரியாக விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்தால், எங்களால் மிக விரைவில் பாஸ்போர்ட் விநியோகம் செய்ய முடியும். திருச்சி மண்டலத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 19 ஆயிரத்து 832 பேர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தனர். அவர் களில் 18 ஆயிரத்து 256 பேருக்கு பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டுவிட்டது.

சாதாரண முறையிலேயே பாஸ் போர்ட் மிக விரைவாக கிடைத்து விடுவதால், தத்கால் திட்டத்தில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள் 'கோடையில் உடல் சூட்டை தணிக்க சில ஸ்பெஷல் குளு குளு குளியல்கள்!!"

கோடை என்றாலே உடலுக்கு படு பேஜாராக தான் இருக்கும். சரும எரிச்சல்கள், உஷ்ணம், உடல் சூடு அதிகரிப்பது, வெளியில் சென்று வீடு திரும்புவதற்குள் வெந்து நூடல்ஸ் ஆகிவிடுவோம்

இதில் இருந்து தப்பிக்க நாள் முழுதும் தண்ணீர் குள்ளேயே குடி இருக்கலாம் போல இருக்கும். அது எல்லாம் தேவை இல்லை, கோடை வெயிலில் இருந்து தப்பித்து உடல் சூட்டை தணிக்க சில ஸ்பெஷல் குளு குளு குளியல்கள் இருக்கின்றன.

இனி அந்த ஸ்பெஷல் குளு குளு குளியல்கள் பற்றி காணலாம்…

தினம் ஒரு புத்தகம் "EVERY DAY ENGLISH GRAMMAR "


DEPARTMENT OF TECHNICAL EDUCATION Conduct of Government Technical Examinations TENTATIVE PROGRAMME FOR 2016 – 2017


ஜே.இ.இ ரிசல்ட் வெளியீடு குறைந்தபட்ச கட் ஆப் -100


746 பள்ளிகளுக்கு அங்கிகாரம் பறிபோகும் அபாயம் !!!


மருத்துவ மாணவர் சேர்க்கை 2016-17-க்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றம் அனுமதி

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய அளவில் 2016-17 கல்வியாண்டுக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு.

தேர்தல் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிக்க, மாநில மற்றும் மாவட்ட அளவில்கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை தேர்தல், மே, 16ம் தேதி நடக்கிறது. தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதிசெய்ய, அனைத்து நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜிப்மரில் நர்சிங், துணை மருத்துவ படிப்புகள் ஆன்-லைனில் விண்ணப்பம் வினியோகம்.

ஜிப்மர் பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், 75 பி.எஸ்சி., நர்சிங் இடங்கள் உள்ளன. இதுமட்டுமின்றி, அனஸ்தீசியா, கார்டியாக் லேபரேட்டரி டெக்னாலஜி, டயாலிஸ் டெக்னாலாஜி, ரேடியோ டயாகனைஸ், எம்.எல்.டி., பிளட் பேங்கிங், நியூரோ டெக்னலஜி, நியூக்ளியர் மெடிக்கல் டெக்னாலாஜி, ஆபரேஷன் தியேட்டர் அனஸ்தீசியா டெக்னாலஜி, பெர்பிஷன் டெக்னாலஜி, ரேடியோதெரபி டெக்னாலஜி உள்ளிட்ட பி.எஸ்சி., துணை மருத்துவ படிப்புகளில் தலா 4 இடங்கள் உள்ளன.நர்சிங் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் ஒட்டுமொத்தமாக 154 இடங்கள் உள்ளன.

‌சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிக்கை வெளியீடு.

ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான 2016-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிக்கையை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 7-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவு: தேதிகளை அறிவித்தது உச்ச நீதிமன்றம்.

புது தில்லி :அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பான தீர்ப்பை இன்று வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

17 ஆயிரம் ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டில் புதிதாக நியமனம் - மந்திரி கிம்மனே ரத்னாகர் தகவல்

பெங்களூரு:
வரும் கல்வி ஆண்டில் புதிதாக 17 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மந்திரி கிம்மனே ரத்னாகர் கூறினார்.கல்வித்துறை மந்திரி கிம்மனே ரத்னாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தேர்தல் பணி நியமன தகுதி சிறப்பு ஆசிரியர்கள் கவலை.

"தேர்தல் பணியில், எந்த"கிரேடு' அடிப்படையில் நியமிக்கப்படுகிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்' என, சிறப்பு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஓவியம், தையல், உடற்கல்வி, வாழ்வியல் திறன் கற்றுத்தருவதற்காக, சில ஆண்டுகளுக்கு முன், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

24-4-16 அன்று தேர்தல் வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள் 29_4_16 அன்று நடைபெறும் சிறப்பு வகுப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்க்கான முதன்மைக் கல்வி அலுவலரின் மின்னஞ்சல்.

மெட்ராஸ் ஐஐடி நடத்தும் எச்எஸ்இஇ தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிப்பு...!!

மெட்ராஸ் ஐஐடி நடத்தும் ஹிமானிடீஸ் அண்ட் சோஷியல் சயின்ஸஸ் நுழைவுத் தேர்வு (எச்எஸ்இஇ) முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தேர்வுகள் கடந்த 17-ம் தேதி நடைபெற்றன. இந்தத் தேர்வு முடிவுகள் மே 11-ம் தேதி வெளியாகும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் ஒருங்கிணைந்தஎம்.ஏ படிப்பு (ஆங்கிலம்), எம்ஏ (வெலப்மெண்ட் ஸ்டடீஸ்) ஆகிய படிப்புகளில் சேர முடியும். இந்தப் படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.இந்தத் தேர்வானது 3 மணி நேரம் நடைபெறும். தாள் 1, தாள் 2 என இரு தேர்வுகள் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு http://www.iitm.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

விரைவில் கால்நடை படிப்புக்கான விண்ணப்பம் வழங்கப்படும்: துணைவேந்தர்

சென்னை:கால்நடை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம் மே 8 அல்லது 10-ம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணைவேந்தர் கூறியுள்ளார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் தனியார் தொலைக்கட்சி ஒன்றிற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

புதுக்கோட்டை ஆய்வு மைய மருத்துவ அறிவியல் துறையில் நடப்பாண்டு முதல் தொழில்நுட்ப படிப்புகள் வழங்கப்படும் என்று திலகர் தெரிவித்துள்ளார்.

தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை !!! 100% தபால் ஓட்டு பதிவிற்காக....

தபால் ஓட்டு பதிவு செய்யும் போது  கவனிக்க  ...

முதலில்  கட்சிகளின் சின்னம்  அடங்கிய  துண்டு  சீட்டில் தங்களுக்கு  பிடித்த  சின்னத்துக்கு அருகில்✅       டிக் அடிக்க  வேண்டும்.

*** நாம்  அடிக்கின்ற டிக் பக்கத்தில்  இருக்கும்  சின்னத்தில் படாமல் பார்த்துக்  கொள்ள வேண்டும்.
***டிக் அடித்த துண்டு சீட்டை A என்ற rose color office cover ல் வைத்து ஒட்ட வேண்டும்.

***stable பண்ணக்கூடாது.

*** 13A  என்று  ஒரு form இருக்கும் . அதை சரியாக  fill பண்ணி தங்களுக்கு  தெரிந்த attested பண்ண தகுதி உடைய நண்பர்களிடம் அந்த form 13A ல் attested  வாங்க வேண்டும்.

*** பின்னர்  A என்ற ஒட்டிய rose color office cover யும் , form 13A யும் சேர்த்து  B என்ற  கவரில் போட்டு ஒட்டி விட வேண்டும்.

குறிப்பு : செய்யக்கூடாதது ...

** form 13A ல் attested வாங்காமல் இருக்கக் கூடாது.

**இரண்டு office cover யும் ஒட்டாமல் இருக்கக் கூடாது.

**form 13A ஐ A என்ற கவருக்குள் தப்பபித்தவரி கூட வைத்து விடக்கூடாது.

**மேலும்  சந்தேகம்  இருந்தால்  உங்கள்  நண்பர்களிடம் discuss பண்ணி தெளிவு படுத்தி  கொள்ளுங்கள்.

**இந்த முறை ஒரு தபால் வாக்கு கூட செல்லாத வாக்காக இருக்கக்கூடாது.

மே மாதம்சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, இடமாறுதல் கலந்தாய்வை தள்ளி போடக்கூடாது;ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

மே மாதம் பொது இட மாறுதல் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, ஆசிரியர்கள் இடையே வலுத்துள்ளது.அரசு துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு மூலம், பொது இட மாறுதல் வழங்கப்படும். மே மாதத்தில், மாவட்ட தலைநகரங்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஆசிரியர்கள் தங்கள் விருப்ப அடிப்படையில், புதிய பள்ளிகளில் பணி அமர்த்தப்படுவது வழக்கம்.

இம்மாத இறுதிக்குள், இடமாறுதலுக்கான விண்ணப்பம் ஆசிரியர்களிடம் இருந்து பெறப்படும். அதன்பின், பணிமூப்பு அடிப்படையில் மாறுதலுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் கலந்தாய்வு நடத்தப்படும்.கோடை விடுமுறைக்குபின், பள்ளி திறக்கப்படும் நாளில் (ஜூன் 1), மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் புதிய பள்ளிகளில் பணியில் சேருவர். இதனால், ஆசிரியர்களும் பணியாற்ற வேண்டிய ஊருக்கு குடும்பத்துடன் குடிபெயர்வதும், கல்வியாண்டின் துவக்கத்திலேயே, பள்ளியில் பணியில் சேருவதால், மாணவர்களின் கல்வி நலன்பாதிப்பதும், இதன் மூலம் தவிர்க்கப்படும்.

நடப்பாண்டில் இதுவரை, இடமாறுதல் விண்ணப்பம் பெறுவதற்கான, எந்த நடவடிக்கையும் இல்லாதது, ஆசிரியர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, இடமாறுதல் கலந்தாய்வைதள்ளி போடக்கூடாது; தேர்தல் கமிஷனிடம் சிறப்பு அனுமதிபெற்று, ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக கலந்தாய்வு நடத்த வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மே 14-இல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலத் திருவிழாவை முன்னிட்டு, வருகிற மே 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலத் திருவிழாவில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள ஏதுவாக, மாவட்டம் முழுவதும் மே மாதம் 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது

ஒரே பள்ளி 21 இரட்டையர்கள்!


சீர்காழியில் உள்ளது சபாநாயக முதலியார் இந்து மெட்ரிக்பள்ளி. எல்.கே.ஜி முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கையின் போது அதில் இரட்டையர்கள் இல்லாமல் இருக்காது.  இப்பள்ளியில் மட்டுமே வெவ்வேறு வகுப்புகளில் 21 ஜோடி இரட்டையர்கள் எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பறையிலும் இரட்டையர்கள் படிக்கிறார்கள் என்கிறார்  பள்ளி முதல்வர் கே.தங்கத்துரை:

Tamilnadu Open University Instructions, UG, PG, B.Ed & B.Ed (SE)- Time Table for June-2016 Term End Examination

TNOU - UG,PG,B.Ed&B.Ed Timetable & B.Ed -2016 IV Counselling List
Tamilnadu Open University

▪UG,PG,B.Ed&B.Ed (SE) Timetable for Term End Examination June -2016 Published

Download in www.tnou.ac.in

▪B.Ed -2016 IV Counselling List (Tamil Medium) on 06.05.2016 @8.30AM

Avail in www.tnou.ac.in

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்?8 லட்சம் பேர் பரிதவிப்பு

8 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பரிதவிப்புடன்காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி துளியும்அக்கறையின்றி மௌனித்துக் கிடக்கிறது அரசு. ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வுமுடிந்து, 11 மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள்அறிவிக்கப்படவில்லை.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!