Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 1 May 2016

26 ஆயிரம் பேர் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதினர்.

தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை 26 ஆயிரம் பேர் எழுதினர்.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 5 நகரங்களில்தேர்வு நடைபெற்றது. பெரும்பாலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் எழுதினர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் மின்ணணு சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதால் மறு தேர்வு நடத்தப்பட்டது. அதனால் இன்று நடைபெற்ற தேர்வில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.அகில இந்திய பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தேர்வு எழுதியவர்கள் ஜூலை மாதம் நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்வில் பங்கேற்க இயலாது.இந்தநிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை (மே.3) வருகிறது.

அரசு கல்லூரியில் சேர்க்கை; 2ம் தேதி முதல் விண்ணப்பம்!

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பம் மே, 2ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுவதாக, கல்லூரி முதல்வர் சுந்தரம் தெரிவித்தார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

8ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சி !


5,000 ஆசிரியர் அல்லாத பணியடங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை கடிதம் எண்-9657/ப.க -4(1) நாள் 22.04.2016 !


தினம் ஒரு புத்தகம் 'சிக்மண்ட் பிராய்டு "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்'தியானம்"

தியானம் பற்றி சில
உடலுக்கு உடற்பயிற்சி –உயிருக்குத் தியானப் பயிற்சி

தியானம் : தி = பேரறிவு
யானம் = பயணம்.

தியானம் என்றால் பேரறிவை நோக்கிய பயணம்.

இறைவனாகிய பேரறிவு, பெரும்சக்தி நம் இதயத்தில் வாழ்கிறது.
அந்தப் பேரறிவை, பேராற்றலை, தியானப் பயிற்சியால் வெளிக் கொணர்ந்து,
பெருக்கி பெரும் வல்லமை பெற்று, பேரானந்தம் (Eternal Bliss) பெற
வேண்டும்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் B.Ed சேர்க்கை அறிக்கை


கழிப்பறைகளை சுத்தம் செய்யமாணவர்களை வற்புறுத்த கூடாது.

திருப்பூர்:எக்காரணத்தை கொண்டும் பள்ளி வளாகம், கழிப்பறை பகுதி களை சுத்தம் செய்யும் பணிக்கு மாணவர்களை ஈடுபடுத்த கூடாது' என, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு வேலைகளுக்கு ஆன்லைன் மூலம் ஆட்களை தேர்வு செய்ய மத்திய அரசு திட்டம்..

மத்திய அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக ஆட்களை தேர்வு செய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்துவது குறி்த்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையில், வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் எந்த அரசு அதிகாரிகளையும் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.

மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை:வருகிறது மேலும் 7 புதிய நடமாடும்மையம்.

தமிழகத்தில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்காக, மேலும், ஏழு நடமாடும் மருத்துவ ஆலோசனை வாகனம் வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணத்தில்,மருத்துவக்கட்டணமாக தலா, ஒரு ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

பொது மருத்துவ நுழைவுத் தேர்வு: கடுமையான கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது.

சென்னை:பொது மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் இன்று முதல் கட்டமாக அந்த தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இத்தேர்வு நடைபெறுகிறது. 39 இடங்களில் நடைபெறும் இத்தேர்வை சுமார் 26,000 பேர் எழுதுகின்றனர்.

மருத்துவ நுழைவுத் தேர்வு: இன்று தேர்வு எழுதுபவர்கள் ஜூலை 24-ல் எழுத முடியாது.

இன்று நடைபெறும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதுபவர்கள் ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் தேசிய தகுதி காண் தேர்வில் பங்கேற்க இயலாது. பெரும்பாலான மாணவர்கள் முதல் தேர்வை தவிர்த்துவிட்டு, ஜூலை மாதம் நடைபெறும் தேர்வை எழுதலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒரு மாணவருக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகத் தொழிலாளர் தினம் ! ஒரு சிறப்புப் பார்வை !

தங்கள் உதிரத்தை வேர்வையாகச் சிந்தி உழைத்து மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள் 8 மணிநேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது!

யு.ஜி.சி.,யின் அதிகாரங்களை குறைக்க அரசு திட்டம்நிகர்நிலை பல்கலைகளுக்கு கட்டுப்பாடு தளர வாய்ப்பு

நிகர்நிலை பல்கலைகள் தொடர்பான சில விவகாரங்களை, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழு சரியாகக் கையாளவில்லை என, மத்திய அரசு கருதுகிறது; எனவே,அதன் அதிகாரங்களை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பிலானியில் உள்ள, 'பிட்ஸ்' எனப்படும், பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி மையம், மும்பை, நார்ஸி மாஞ்சி மேலாண்மை கல்வி மையம், டாடா அடிப்படை ஆராய்ச்சி கல்வி மையம் உள்ளிட்ட புகழ்பெற்ற சில கல்வி நிறுவனங்களுடன், அவற்றின் விரிவாக்கத் திட்டங்களுக்கு எதிராக, யு.ஜி.சி., உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. இவற்றை எதிர்த்து, இக்கல்வி நிறுவனங்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளன.யு.ஜி.சி., கடிதம்கடந்த ஆண்டு, நவம்பரில், கல்வி மைய வளாகத்துக்கு வெளியே செயல்படும், மையங்களை மூடிவிடுமாறு, 10 கல்வி நிறுவனங்களுக்கு, யு.ஜி.சி., கடிதம் எழுதியது. இந்த நிறுவனங்கள், விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை எனக் கூறி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு கடிதங்கள் எழுதியுள்ளன. யு.ஜி.சி.,யின் உத்தரவுக்கு எதிராக, பிட்ஸ் கல்வி மையம், கோர்ட்டில், இடைக்கால தடையுத்தரவு பெற்றுள்ளது.மத்திய அரசின் நிர்வாக உத்தரவு மூலம், நிகர்நிலை பல்கலையை உருவாக்குவதற்கான அனுமதி அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும், 123 நிகர்நிலை பல்கலைகள் உள்ளன. நிகர்நிலை பல்கலைகள் விஷயத்தில், யு.ஜி.சி., அத்துமீறி நடப்பதாக,மத்திய அரசு கருதுகிறது. இது பற்றி, மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'யு.ஜி.சி., பிறப்பித்த உத்தரவுகளால், அதிகளவில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.அந்த குழப்பங்களை சரிசெய்ய வேண்டிய தருணம் வந்து விட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நம்புகிறது' என, தெரிவித்தார்.

மற்றொரு மூத்த அதிகாரி கூறியதாவது:

நிகர்நிலை பல்கலைகள் மீதான புகார்கள் வெகுவாகக் குறைந்து வருகின்றன. 2014ல், 268 புகார்கள் கூறப்பட்டன. 2015ல், புகார்களின் எண்ணிக்கை, 112 ஆகக் குறைந்துள்ளது. சமீபத்தில், உயர்கல்வித்துறை செயலர், யு.ஜி.சி., நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில்,விவாதிக்கப்பட்ட பிரச்னை குறித்து ஆராய, சிறப்புக்குழு அமைக்கப்பட்டுஉள்ளது. அக்குழு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும். நிகர்நிலை பல்கலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஆராயப்பட வேண்டும். கல்வித் துறையில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும்,சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. சிறப்பான கல்வி அளிக்கும் நிறுவனங்களை பாராட்டி, ஊக்கப்படுத்த வேண்டும். யு.ஜி.சி.,க்குள்ள அதிகாரங்களை, என்.ஏ.ஏ.சி., எனப்படும், தேசிய மதிப்பீடு மற்றும் தர அங்கீகார கவுன்சில், மறுபரிசீலனை செய்யலாம். கல்விநிறுவனங்களின் தரத்தை, வெகு காலமாக ஆராய்ந்து, அவற்றுக்கு தரச்சான்றுகளை, என்.ஏ.ஏ.சி., வழங்கி வருகிறது.பரிசீலனையு.ஜி.சி., ஆய்வுக்கான நிபுணர்களை தேர்வு செய்யும் நடைமுறை பற்றி தெரிவிக்கப்படவில்லை. எனவே, யு.ஜி.சி.,யின்நடவடிக்கைகளில் தவறு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அது, தவறான தகவல்களை அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, யு.ஜி.சி.,யின் அதிகாரங்களை குறைக்கும் திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.இவ்வாறு மூத்த அரசு அதிகாரி கூறினார்.

அரசு நடவடிக்கை

நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிகர்நிலை பல்கலைகளின் நிதிக் குழுக்களில், யு.ஜி.சி.,யின் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுவோரின் பெயர்களை அளிக்குமாறு, ஏற்கனவே, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கேட்டுள்ளது. நிகர்நிலை பல்கலைகளின் மேலாண்மை குழுக்களுக்கு, யு.ஜி.சி.,யின் பிரதிநிதிகளை அனுப்பும்போதும், அதேபோன்ற முறையை பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்மிருதி இரானி உறுதி

நாடு முழுவதும் உள்ள, 300க்கும் மேற்பட்ட பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்,யு.ஜி.சி.,யின் அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகள் குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம், கடந்த மார்ச்சில் புகார் தெரிவித்துள்ளன. அவற்றிற்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் ஸ்மிருதி இரானிஉறுதியளித்துள்ளார்.இது குறித்து, இந்திய கல்வி மேம்பாட்டு சமூகம் என்ற அமைப்பின் தலைவர், ஹரிவன்ஷ் சதுர்வேதி கூறுகையில், ''யு.ஜி.சி., போன்ற கட்டுப்பாட்டு அமைப்புகள், தனியார் கல்வி நிறுவனங்கள் சிறப்பான வகையில் செயலாற்றஉதவுபவையாக இருக்க வேண்டும். பல்கலையுடன் இணைப்பு பெற்றகல்லுாரிகள் சிறப்பான வகையில் செயல்பட்டால், அவற்றிற்குதன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்,'' என, தெரிவித்தார்.

விதிமுறை என்ன?
கடந்த, 2010ல் உருவாக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ், நிகர்நிலை பல்கலைகளின் செயல்பாட்டை, யு.ஜி.சி., எப்போது வேண்டுமானாலும் பரிசோதிக்கலாம்; பல்கலைகளில் அளிக்கப்படும் வசதி வாய்ப்புகளை, மதிப்பீடு செய்யலாம். நிபுணர் குழுக்கள் அளித்த பரிந்துரைகளை, நிகர்நிலை பல்கலைகள் பின்பற்றுகின்றனவா என்பதை, யு.ஜி.சி., உறுதி செய்யலாம்.

இன்று முதல் அமலுக்கு வருகிறது மனை வணிகச் சட்டம்.

மனை வணிக (ரியல் எஸ்டேட்) துறையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மனை வணிகச் சட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 1) முதல் அமலுக்கு வருகிறது.இதுகுறித்து மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மனை வணிகச் சட்டத்தில் உள்ள அம்சங்களை 6 மாதங்களுக்குள் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அமல்படுத்த வேண்டும். கட்டுமானத் திட்டங்களில் காலதாமதம் ஏற்படாமல், குறிப்பிட்ட நேரத்துக்குள் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களை கட்டுமான நிறுவனங்கள் கட்டிமுடிப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.கட்டுமானத் திட்டங்கள் தொடர்பான வழக்குகளில், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் 60 நாள்களுக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குடியிருப்புகளை கட்டிக்கொடுப்பதில் தாமதம் ஏற்படாமல் தடுப்பதற்கும், கணக்கில் வராத பணத்தை மனை வணிகத்தில் முதலீடு செய்வதைத் தடுப்பதற்கும் மனை வணிகச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது.

மருத்துவ படிப்புக்கு இன்று நுழைவு தேர்வு:சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

மருத்துவப் படிப்புகளுக்கான, முதல்கட்ட பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான உத்தரவைமாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைவிசாரிக்க, சுப்ரீம் கோர்ட் நேற்று மறுத்துவிட்டது. இதனால், திட்டமிட்டபடி, இன்று தேர்வு நடக்கிறது.

இரண்டு கட்டமாக...

நாடு முழுவதும், 2016 - 17ம் கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான, பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம்விசாரணை நடந்தது.அப்போது, பொது நுழைவுத் தேர்வை, மே, 1;ஜூலை, 24 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாகநடத்த, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த உத்தரவை அடுத்து, நாடு முழுவதும் உள்ள, அனைத்து அரசு, நிகர்நிலை மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும். ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்படும். இந்நிலையில், சில மாணவர்கள் சார்பாக, சுப்ரீம் கோர்ட்டில், நேற்று, மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 'குறைந்த அவகாசமே உள்ள நிலையில், பொது நுழைவுத் தேர்வுக்கு தயாராவது கடினம்; எனவே, இது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மாற்றியமைக்க வேண்டும். இம்மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவை பரிசீலித்தது. பின், மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பொது நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்கை, சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரணை நடத்தி, ஏற்கனவே தீர்ப்பு வழங்கி விட்டது. இவ்விஷயம், இத்துடன் முடிந்துவிட்டது. தீர்ப்பில் கூறப்பட்ட தேதிகளில், பொது நுழைவுத் தேர்வை, திட்டமிட்டபடி நடத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் வழக்கமான அமர்வு முன், மனு தாக்கல் செய்யலாம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

6.5 லட்சம் பேர்:

இந்த உத்தரவை அடுத்து, நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கானமுதல்கட்ட பொது நுழைவுத் தேர்வு, இன்று நடக்கவுள்ளது.அடுத்த கட்ட தேர்வு, ஜூலை, 24ல் நடக்கும். இத்தேர்வுகளில், 6.5 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.இந்த இரு தேர்வுகளும் முடிந்த பின், ஆகஸ்ட், 17ல், முடிவுகள் அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து, செப்., 30ல், மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கை நடைமுறை நிறைவு பெறும்.

நேதாஜி தொடர்பான 25 ஆவணங்கள் வெளியீடு.

நேதாஜியின் இறுதி நாட்கள் தொடர்பான மேலும், 25ஆவணங்களை, மத்திய அரசு வெளியிட்டது. சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின், இறுதி நாட்கள் தொடர்பான சர்ச்சை இருந்து வரும் நிலையில், அது தொடர்பான ரகசிய ஆவணங்களை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டது. இந்நிலையில் மேலும், 25 ஆவணங்கள் வெளியிடப்பட்டன.

இதுகுறித்து, மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியதாவது:பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து, தலா ஐந்து ஆவணங்களும், வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து, 15 ஆவணங்களும் வெளியிடப்பட்டன. மக்களின் கோரிக்கையை ஏற்று, நேதாஜிக்கு டில்லியில் நினைவிடம் அமைக்கப்படும்இவ்வாறு அவர் கூறினார்.

பொது நுழைவுத்தேர்வு உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக முடிவு: அசாம் முதல்-மந்திரி தகவல்

பொது நுழைவுத்தேர்வு உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக முடிவு செய்துள்ளதாக அசாம் முதல்-மந்திரி தருண் கோகாய் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்

கவுகாத்தி : 

நாடு முழுவதும் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கு மே 1-ந் தேதியும், ஜூலை 24-ந் தேதியும் 2 கட்டங்களாக என்.இ.இ.டி. எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவால் பல மாநில அரசுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இது குறித்து அசாம் முதல்-மந்திரி தருண் கோகாய் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவால் அசாம் மாநில மாணவ-மாணவிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக அசாம் அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு சரியான தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் உட்பகுதியில் ஒரு சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

சென்னை : 

தமிழகத்தில் வேலூர், தர்மபுரி, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அனல் காற்று வீசியது. அதன் தாக்கத்தால் வெப்பநிலையும் அதிகரித்து காணப்பட்டது. இரவு நேரங்களில் கூட வெப்பம் குறையாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். இந்தநிலையில் தற்போது அனல்காற்று வீசுவது சற்று குறைந்து காணப்படுவதால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இதமான காலநிலை நீடிக்கிறது.

வரும் 4-ந்தேதி அக்னிநட்சத்திரம் என்ற கத்திரிவெயில் தொடங்கவிருக்கும் நிலையில் மீண்டும் வெப்பகாற்று வீச வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய அலுவலக அதிகாரிகளிடம் கேட்டதற்கு அவர்கள் அளித்த பதில் வருமாறு:-

தமிழ்நாட்டில் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் இருந்து ஓரளவுக்கு ஈரப்பதம் கலந்த காற்று வீசுகிறது. அந்த காற்று தொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்கு வீசும். அதன்காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்பு இல்லை என்பதால் வெப்பத்தின் தீவிரம் சற்று குறையும்.

காலநிலையும் இயல்பை ஓட்டியே இருக்கும். கோடை மழையை பொறுத்தவரையில் தமிழகத்தின் உட்பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் 94 முதல் 96 டிகிரி வரை வெப்பம் இருக்கும். காற்று அதிகம் வீச வாய்ப்பு உள்ளது என்பதால் மீனவர்களும் கவனமாக கடலுக்கு சென்று திரும்ப வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!