Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 3 May 2016

தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் தற்போது உள்ள வெப்பநிலையை விட 2- 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கேலி, கிண்டல் மீம்ஸ் மக்களே... சமூக வலைதளங்களில் வெளியாகும் பதிவுகள், தேர்தல் ஆணையம் உங்களைக் கண்காணிக்கிறது!

தேர்தல் நேரத்தில் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளுக்கு கடிவாளம் இல்லாமல் இருப்பதால் அது குறித்து உரிய தீர்வு காண, தேர்தல் ஆணையத்துக்கு புகார்களும், வேண்டு கோள்களும் இடைவிடாமல் வந்து கொண்டிருந்த நிலையில், தேர்தல் ஆணையம் அதில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையில் அதிசயம்
எங்காவது அரசுப் பள்ளியில் அட்மிஷனுக்கு அடிதடி நடந்திருக்கிறதா? மதுரை மாவட்டம் யா.ஒத்தக் கடையில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அந்த அதிசயம் நடந்திருக்கிறது.

மாவட்டத்தின் முதல் பெரிய தொடக்கப்பள்ளியான இந்தப் பள்ளியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் ஏக தள்ளுமுள்ளு ஆகிப் போனதால், வரிசையில் நிற்க வைத்து, டோக்கன் கொடுத்து ஒலி பெருக்கியில் பெயர்களை அறிவித்து அட்மிஷன் நடத்தி இருக்கிறார்கள்.

தினம் ஒரு புத்தகம் "அறிவியல் ஆனந்தம் "


தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள் "ரத்த புற்றுநோயை குணமாகும் வெண்டைக்காய்"

வெண்டைக்காய் எந்தவிதமான நச்சுத் தன்மையையும் பெற்றிருக்கவில்லை என்பதாலும் சுவை மிக்கது என்பதாலும் இளஞ்சிறார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் கூட தருவதற்கு பாதுகாப்பானதும் பயன் உள்ளதாகும்.

மருத்துவ பொது நுழைவுத்தேர்வு: வழக்கு விசாரணை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் தொடந்த வழக்கு விசாரணை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வை அந்தந்த மாநில அரசுகளே நடத்த அனுமதிக்கக் கோரி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

கேடு விளைவிப்பது உறுதியானால் மைதா மாவை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; உணவு துறை ஆணையருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு.

அலொட்சான்’ ரசாயன கலவையுடன் கூடிய மைதா மாவு மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் என்று ஆய்வு மூலம் தெரியவந்தால், அந்த மைதாவுக்கு 3 மாதங்களுக்குள் தடை விதிக்க வேண்டும் என்று உணவுபாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத்துறை ஆணையருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

G.O.No.131 Dt: May 02, 2016திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.01.2016 முதல் தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

மருத்துவ நுழைவுத் தேர்வு: முழுமையாக எதிர்க்க வேண்டுமா?

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நிச்சயம் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது நல்ல, சிறந்த ஆரம்பம். இந்த சந்தர்ப்பத்தை ஆக்கப்பூர்வமாக எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று யோசிக்க வேண்டும்.

அரசுப்பள்ளியில் அட்மிஷனுக்கு அடிதடி

முதல்கட்ட நுழைவுத்தேர்வு எழுதாத மாணவர்கள்: இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க முடியாது - சிபிஎஸ்இ அறிவிப்பு

முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எழுதாத 3,250 மாணவர்கள் இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க முடியாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (NEET) கடந்த 1-ம் தேதி நடத்தியது. நாடுமுழுவதும் 52 நகரங்களில் 1,040 மையங்களில் நடந்த இந்த தேர்வை சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் 26 ஆயிரம் மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 22,750 மாணவர்கள் மட்டுமே தேர்வை எழுதினர். பல்வேறு காரணங்களால் தேர்வில் கலந்துகொள்ளாத 3,250 மாணவர்களும் (8 சதவீதம்) இந்த ஆண்டு டாக்டருக்கு படிக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

Click Here!
இதுதொடர்பாக சிபிஎஸ்இ அதிகாரி கள் கூறியதாவது:

உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET) என்ற ஒரே நுழைவுத் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மே 1-ம் தேதி அகில இந்திய மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வை, முதல்கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வாக மாற்றி நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், இந்த தேர்வை எழுத வேண்டும். தேர்வை தவறவிட்டால், ஜூலை 24-ம் தேதி நடைபெறும் இரண் டாம்கட்ட தேர்வை எழுத முடியாது.

முதல் கட்ட தேர்வுக்கு விண் ணப்பிக்காதவர்கள் மட்டுமே இரண்டாம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவித்திருந்தோம். ஆனாலும் 8 சதவீதம் மாணவர்கள் முதல்கட்ட தேர்வை எழுதவில்லை. தேர்வு எழுதாத மாணவர்களால் இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு படிக்க முடியாது. இரண்டுகட்ட தேர்வு முடிவுகளையும் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அரசு டாக்டர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் (எஸ்டிபிஜிஏ - SDPGA) சங்கத்தின் அமைப்புச் செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம் கூறியதாவது:

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடுக்கு சென்றுள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நுழைவுத்தேர்வை ரத்து செய்தாலோ அல்லது நுழைவுத் தேர்வுக்கு தடை விதித்தாலோ தேர்வு எழுதாத 8 சதவீதம் மாணவர்கள் தமிழக அரசு நடத்தும் கலந்தாய்வு மூலமாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க முடியும்.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடைமுறைக்கு வந்தாலும், அகில இந்திய ஒதுக்கீடு கண்டிப்பாக இருக்கும். 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு போக மீதமுள்ள 85 சதவீதம் இடங்களை நிரப்புவதற்கான பட்டியல் தமிழக அரசிடம் கொடுக்கப்படும். தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுவதால், தமிழக அரசால் நிரப்பப்படாத இடங்கள் மீண்டும் மத்திய அரசுக்கு சென்றுவிடும். அந்த இடங்களில் வடமாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் சேர்ந்துவிடுவார்கள். இதனால் தமிழக மாணவர்களின் டாக்டராகும் கனவு தகர்ந்துவிடும். அதனால்தான் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை எதிர்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்

பொறியியல் ஆன்லைன் பதிவு 1.5 லட்சத்தை நெருங்குகிறது

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. நேற்று வரையில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 94 பேர் ஆன்லைனில் பதிவு செய்திருப்ப தாகவும், அவர்களில் 83 ஆயிரத்து 554 பேர் ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியிருப்பதாக வும் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை இந்துமதி ஆகியோர் தெரிவித்தனர்.

பூமியைப் போல மனிதர்கள் வாழ 3 கிரகங்கள் கண்டுபிடிப்பு!

பூமியைப் போலவே மனிதர்கள் வாழத் தகுந்த மூன்று கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

பெல்ஜியத்தில் உள்ள லீகே பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த ஆராய்ச்சியின் முடிவில் இது தெரிய வந்துள்ளது.

இது குறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் விண்வெளித் துறை விஞ்ஞானி மைக்கேல் கிலோன் கூறியதாவது:

உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியமுள்ள வேதியியல் படிவங்கள் உள்ள ஒரு சிறு சூரிய குடும்பம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம்.

நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே இதுபோன்ற வேதியியல் படிவங்கள் இருப்பது முதல் முறையாகத் தெரிய வந்துள்ளது.

39 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள ஒரு சிறு நட்சத்திரத்தை 3 கிரகங்கள் சுற்றி வருகின்றன.

ஒளியாண்டு என்பது, ஓராண்டில் ஒளி பயணம் செய்யும் தொலைவான 6 லட்சம் கோடி கி.மீ. ஆகும். 39 ஒளியாண்டுத் தொலைவில் இந்த கிரகங்கள் அமைந்துள்ளன.

அந்த 3 கிரகங்களிலும் நமது பூமி, சுக்கிரன் (வீனஸ்) கிரகத்தைப் போன்ற அளவு, தட்ப வெப்பம் இருப்பதாகத் தெரிகிறது. இது மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்றவை எனக் கூற முடியும்.

சிலி நாட்டில் அமைக்கப்பட்டுள்ள "டிராப்பிஸ்ட்' தொலைநோக்கி வழியாக அந்த சிறு நட்சத்திரத்தையும் அதனைச் சுற்றி வரும் 3 கிரகங்களின் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் பல மாதங்கள் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, அவை மனிதர்கள் வாழத் தகுந்த கிரகங்கள் என முடிவுக்கு வந்தனர் என்றார் அவர். இந்த ஆய்வு முடிவுகள் "தி நேச்சர்' ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது.

கலை - அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் மாணவர்கள் கூட்டம்

கடந்த ஆண்டுகளைப் போலவே கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவ, மாணவிகளிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பெரும்பாலான அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளிலேயே கூட்டம் அலைமோதியது.  முதல் நாளில் கடந்த ஆண்டுகளை விட 25 சதவீதம் கூடுதலாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வேலைவாய்ப்புகள் குறைந்தது, மென்பொருள் நிறுவனங்களின் ஊதியக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாக 2011-ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் குறைந்து, கலை - அறிவியல் படிப்புகள் பக்கம் திரும்பியது. 2015-16ஆம் கல்வியாண்டு வரை இதே நிலைதான் நீடித்து வந்தது.

அதுபோல, நிகழாண்டும் கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. இம் மாதம் 20-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். இருப்பினும், முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக, சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரி, காயிதே மில்லத், மாநிலக் கல்லூரி ஆகிய அரசுக் கல்லூரிகளில் விண்ணப்பங்களை வாங்க கூட்டம் அலைமோதியது. அதுபோல எழும்பூர் எத்திராஜ் கல்லூரி, நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி போன்ற தனியார் கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

25 சதவீதம் கூடுதல் விற்பனை: முதல் நாள் விண்ணப்ப விநியோகம் குறித்து சென்னை காயிதேமில்லத் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் கே.சீதாலட்சுமி கூறியது:

விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கலை, அறிவியல் படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.

முதல் நாளான திங்கள்கிழமை 2,696 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 600 கூடுதலாகும் என்றார்.

இதுகுறித்து ராணி மேரிக் கல்லூரி முதல்வர் அக்தர் பேகம் கூறியதாவது:-

முதல் நாளில் 1,300 விணணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 25 சதவீதம் கூடுதல் என்றார்.

அதுபோல சென்னை மாநிலக் கல்லூரியில் 650 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் மிக அதிகம் என அந்தக் கல்லூரியின் முதல்வர் பிரேமானந்த பெருமாள் கூறினார்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியான பிறகு, விண்ணப்ப விநியோகம் மேலும் அதிகரிக்கும் எனவும் கல்லூரி நிர்வாகிகள் கூறினர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் தேர்வு எழுதும் பார்வையற்றோர் உதவியாளரை பயன்படுத்தலாம்: மத்திய அரசு

பார்வையற்றோர்கள், உடல் இயக்கக் குறைபாடுள்ளவர்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் உதவியாளரின் துணைக் கொண்டு மத்தியத் தேர்வாணையத் தேர்வுகளில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குடிமைப் பணித் தேர்வுகளான இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) மற்றும் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்டவற்றை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்துகிறது.

முதல் நிலை, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய 3 நிலைகளாக இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வை ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்தியப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:

பொதுவாக, இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள் கைப்பட தேர்வை எழுத வேண்டும் என்பது விதிமுறையாகும்.

இந்நிலையில், தசை மற்றும் மூட்டுகளின் இயக்கக் குறைபாடுள்ளவர்கள், கண்பார்வையற்றவர்கள், உடல் இயக்கக் குறைபாடுள்ளவர்கள் ஆகியோர் தங்கள் கைப்படத் தேர்வு எழுத இயலாத சூழ்நிலை இருப்பதால், அவர்கள் உதவியாளரைக் கொண்டு முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளை எழுதலாம்.

இத்தகையவர்கள் தேர்வு எழுதுவதற்கு ஒரு மணிநேரத்துக்கு 20 நிமிடங்கள் வீதம் கூடுதலாக நேரம் வழங்கப்படும் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே 5 முதல் 'பூத் சிலிப்' வினியோகம்

வாக்காளர்களுக்கு, 'பூத் சிலிப்' வரும், 5ம் தேதி முதல், வீடு வீடாகச் சென்று வழங்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், புகைப்படத்துடன் கூடிய, பூத் சிலிப் அச்சிடும் பணி முடிந்துள்ளது. அனைத்து வாக்காளர்களுக்கும், மே 5ம் தேதி முதல் பூத் சிலிப் வழங்கப்படும். ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று வழங்குவர். வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புவோர், தேர்தல் கமிஷன் இணையதளத்தில், விரைவு தபால் மூலம் பெற விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர்களில், இரண்டு கோடி பேரின் மொபைல் போன் எண், தேர்தல் கமிஷனிடம் உள்ளது. அவர்களுக்கு, வாக்காளர் வரிசை எண், பாகம் எண், ஓட்டுச்சாவடி அமைந்துள்ள இடம் போன்ற விவரம், இன்று முதல், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு லக்கானி தெரிவித்தார்.

பயிற்சிக்கு வந்த ஆசிரியர்களுக்கும் 'நோட்டீஸ்' அனுப்பி... அலைக்கழிப்பு! தேர்வு பிரிவின் 'ஒருவருக்கு இரு உத்தரவால்' குழப்பம்.

மதுரையில் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கும் 'நோட்டீஸ்' அனுப்பி 'பயிற்சி வகுப்பிற்கு ஏன் வரவில்லை' என நேரில் வந்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இதனால் பயிற்சியில் பங்கேற்றவர்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.சட்டசபை தேர்தல் மே 16ல் நடக்கிறது. இதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

Seventh Pay Commission News....

Government employees to get better pay scales than recommended earlierThe much awaited Seventh Pay Commission review report is likely to be submitted once the elections in four states get over. There are reports that the Central Government employeesmay get a better pay scales than recommended earlier.

தேர்தல் பயிற்சி வகுப்பை புறக்கணித்த ஆசிரியர்கள்!

மதுரையில் சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத ஆசிரியர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வீரராகவராவ் எச்சரித்துள்ளார்.தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஏப்.,24ல் நடந்தது.

இதில் பல ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. இவர்கள் தங்களது தேர்தல் அதிகாரிகளிடம் அதற்கான தகுந்த விளக்கத்தை மே 3க்குள் (நாளை) அளிக்க வேண்டும்.

இல்லாதபட்சத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 136ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!