Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 7 May 2016

பயனில்லா பட்டங்களை வழங்கும் கல்வி மையங்களின் பொறியில் சிக்க வேண்டாம்: ரகுராம் ராஜன்


ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன். | படம்: ஏ.பி.

மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் விஷயத்தில் வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார்.

நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், பயனில்லா பட்டங்களை வழங்கும் கல்வி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு அதனால் எந்தப் பயனும் கிடைக்காது. வேலையும் கிடைக்கப் போவதில்லை. பயனற்ற இந்த பட்டங்களை அளிக்கும் கல்வி மையங்களை வங்கிகள் அடையாளம் காண வேண்டும். அதில் படிக்க மாணவர்கள் கல்விக் கடன் கோரினால் அதை அனுமதிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

கல்வியை வணிக நோக்கில் நடத்தி பணம் சம்பாதிக்கும் முறையற்ற கல்வி மையங்களால் வங்கிகளின் கடன் சுமைதான் அதிகரிக்கும். 

மிகவும் உயர்ந்த தரத்திலான பல்கலைக் கழகங்களில் கல்விக் கட்டணம் மிக அதிகமாகத்தான் இருக்கும். எதிர்காலத்தில் இவை மேலும் அதிகரிக்கக் கூடும். இருப்பினும் தகுதிபடைத்த அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. 

திறமையான மாணவர்கள் மேற்படிப்பைத் தொடர இருக்கும் வாய்ப்புகளில் முதன்மையானது வங்கிகளின் மூலம்கிடைக்கு கல்விக் கடன். அவ்விதம் கடன் வழங்கும் வங்கிகள், அந்தத் தொகையை மாணவர்கள் திரும்ப செலுத்த முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். அவ்விதம் படித்து முடித்த மாணவர்கள் வேறு வேலை கிடைக்காமல் கடைசியில் குறைந்த ஊதியம் கிடைக்கும் பணிக்குச் செல்ல நேரிடும். அப்போது அவர்களால் வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாமத சூழல் ஏற்படும்.

இதுபோன்ற லாப நோக்கிலான கல்வி மையங்களை அடையாளம் காண வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது. வெறுமனே கல்விக் கடனை வழங்கி அவர்களை கடனாளி ஆக்கி உதவாத பட்டத்தை பெற வைப்பதில் என்ன பயன் இருக்க முடியும் என்று அவர் கேள்வியெழுப்பினார்.

தனியார் கல்வி மையங்களில் எப்போதுமே கல்விக் கட்டணம் அதிகமாகத்தான் இருக்கும். எதிர்காலத்திலும் இது அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர குறையாது என்றார்.

இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதால் இனி பட்டமளிப்பு விழாவில் பேச்சைக் குறைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வரலாம் என வேடிக்கையாகக் குறிப்பிட்டார் ராஜன்.

இப்போது உங்களிடம் நான் பேசிய வார்த்தைகளில் ஏதேனும் ஓரிரண்டு வார்த்தைகளை சில ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் நினைவில் வைத்திருந்தீர்களானால் நானும் ஒரு சாராசரி பட்டமளிப்பு விழா பேச்சாளராவேன். ஆனால் பெரும்பாலும் யார் பட்டம் அளித்தார்கள் என்பதே பலருக்கும் நினைவில் இருப்பதில்லை. அப்படி இருக்கையில் அவர்கள் கூறியது எங்கு நினைவிருக்கப் போகிறது.

தாராள சந்தை என்பதில் பாரபட்சம் இருக்கக் கூடாது. ஆனால் முன்னேறிய நாடுகளில் கூட செல்வந்தர்களுக்குச் சாதகமாகவே சந்தைப் பொருளாதாரம் உள்ளது.

மிக அதிக ஊதியம் வழங்கும் பணிகளுக்கு திறமை மிக அவசியம். இதற்குரிய சூழலில் படித்து வரும் மாணவர்களுக்கு இது எளிதாகக் கைகூடுகிறது என்றார் ராஜன்.

முக்கிய அறிவிப்பு! -- சேலம் பெரியார் பல்கலை தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கான அங்கீகாரம் ரத்து! யுஜிசி அதிரடி! MoU எனக் கூறப்படும் Franchise மூலம் மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் நடத்தியதால் வந்த வினை!

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் 'ஏலக்காய் – மருத்துவ பயன்கள்"

ஏலக்காய் கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. சிறுநீரைப் பெருக்கும். தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, வறட்சி, கபம் முதலியவற்றைக் கட்டுப் படுத்தும்.

தினம் ஒரு புத்தகம் 'உழைப்பால் உயர்தவர்கள் '


தேர்தல் முந்தததும் Po ஒப்படைக்க வேண்டிய உறைகள் விவரம்.


அனைவருக்கும் கல்வி இயக்ககம் (SSA) கால திட்டம் முடிவா?


கல்வித்துறையில் தணிக்கை தொடக்கம் !


மே 12-இல் முதுநிலை மருத்துவ கலந்தாய்வு.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னையில் மே 12-ஆம் தேதி தொடங்கவுள்ளது.முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள் நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவம் ஆகியவற்றில்2016-18-ஆம் கல்வியாண்டுக்கு தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் நடைபெற்றது.

மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஒத்தி வைப்பு.

சென்னை:மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியிடப்படுவதால், விண்ணப்ப விநியோகம் தாமதமாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.

தரமான கல்வி, மருத்துவம் கிடைக்க தடையாக உள்ளவர்கள் வாக்கு கேட்டு வர வேண்டாம்: வீட்டின் முன் துண்டுப்பிரசுரம் ஒட்டிய வாக்காளர்

மக்களுக்கு தரமான கல்வி, மருத்துவம் கிடைக்க தடையாக உள்ளவர்கள் வாக்கு கேட்டு வர வேண்டாம் என திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வீட்டின் முன் துண்டுப் பிரசுரம் ஒட்டியுள்ளார்.

400 ரயில்வே ஸ்டேஷன்களில் வைபை !

இன்னும் ஒராண்டில் 400 ரயில்வே ஸ்டேஷன்களில் வைபை இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும் என ரயில்டெல் கார்ப்ரேஷன் மார்க்கெட்டிங் பொது மேலாளர் சைலேஷ் திவாரி கூறினார்.

மகன் திருமணத்திற்காக பள்ளிக்கு விடுமுறை அளித்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் !

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், மகனின் திருமண நிகழ்ச்சிக்காக அரசுப் பள்ளிக்கு விடுமுறையளித்த தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய வரைபடத்தில் பிழையா? : ரூ.100 கோடி அபராதம்; 7 ஆண்டு சிறை !

தவறான இந்திய வரைபடத்தை பயன்படுத்தினால், 100 கோடி ரூபாய் அபராதம் மற்றும், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது.
பல்வேறு இணையதளங்கள், இணைய சேவைகளில், இந்திய வரைபடம் தவறாகக் காட்டப்படுகின்றன.
குறிப்பாக, அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதியாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, பாகிஸ்தானின் ஒரு
பகுதியாகவும் காட்டப்படுகின்றன

அனைத்து பள்ளிகளிலும் யோகா கட்டாயமாகிறது !

அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் யோகா கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும், இந்த உத்தரவு வரும் கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வர
உள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் ஸ்ரீபத் யாசோ நாயக் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்று ஆவணங்கள்அறிவிப்பு

சட்டசபை தேர்தலில், வாக்காளர்கள் அடையாள அட்டையாக, 11 ஆவணங்களை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.சட்டசபை தேர்தலில், ஓட்டு போட செல்லும் வாக்காளர்கள், தங்களுடைய அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கு, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும். அதை அளிக்க இயலாதவர்கள், தங்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க, மாற்று புகைப்பட அடையாள ஆவணமாக, 11 ஆவணங்களில், ஏதேனும் ஒன்றை காண்பிக்கலாம்.அவற்றின் விவரம்:

மே 9 முதல் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்: தேர்வுக் குழு தகவல்.

மருத்துவக் கல்வி இயக்ககம் ஏமே 9 முதல் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்: தேர்வுக் குழு தகவல்.ற்கெனவே அறிவித்தபடி மே 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கவுள்ளது. தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு கலந்தாய்வுமூலம் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு மே 9-ஆம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது

தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு அடிப்படை வசதிகள் தேவை: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் எம்.கலைச்செல்வி தாக்கல் செய்த மனுவில்,

தபால் ஓட்டு செலவு குறைக்க தேர்தல் கமிஷன் புது முயற்சி !

தபால் செலவை குறைக்க, அனைத்து தொகுதிகளிலும் தபால் ஓட்டுப்பதிவு மையம் அமைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலர்கள் தேர்தலில் தபால் மூலமாக, தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்கின்றனர்.ஓட்டை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட தொகுதிக்கு அனுப்புவது வழக்கமாக உள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு... கட்டாயம் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க சுப்ரீம் கோர்ட் பரிசீலனை

தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது.அதே நேரத்தில் பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து, மத்திய அரசின் கருத்தை சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது.

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி கோடை விடுமுறைக்குள் பள்ளி வாகனங்கள் ஆய்வு போக்குவரத்து அதிகாரிகள் தீவிரம்

கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து கோடை விடுமுறைக்குள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியில் வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஐகோர்ட்டு உத்தரவுகோடை விடுமுறை முடிவதற்குள் பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என போக்குவரத்துதுறைக்கு சமீபத்தில் நாக்பூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்கை: மாணவர்களைத் தேர்வு செய்ய இன்று ஆன்லைன் லாட்டரி

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க பொதுக் கல்வித் துறை சார்பில் சனிக்கிழமை ஆன்லைன் லாட்டரி நடைபெறுகிறது.கர்நாடகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளில் 2016-17-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை பெற இணையதளத்தில் விண்ணப்பங்களைச் செலுத்த கேட்கப்பட்டிருந்தது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!