Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 8 May 2016

ராஜஸ்தான் பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு வரலாறு நீக்கம்

ராஜஸ்தான் மாநில கல்வித்துறையின் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து ஜவஹர்லால் நேருவின் வரலாறு நீக்கப்பட்டது.
ஜெய்பூர்:

8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ஜவஹர்லால் நேருவின் வரலாறு நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் யார்? என்பது புத்தகத்தில் விளக்கப்படவில்லை

தினம் ஒரு புத்தகம்"சாக்குபோக்குகளை விட்டொழியுங்கள்"

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"கடுகு – மருத்துவ பயன்கள்"

கடுகு காரச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. குன்மம், வாதநோய் ஆகியவைகளைக் குணமாக்கும்; ஜீரண உறுப்புகளைப் பலப்படுத்தும்; வாந்தியுண்டாக்கும்; சிறுநீர் பெருக்கும்; விஷத்தை முறிக்கும்.

கடுகு பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகளை அழிக்கும் மருத்துவக் குணம் உடையது, எனவே கடுகை ஊறுகாய், தொக்கு போன்றவற்றிலும் சேர்க்கிறார்கள். இதனால், இவை கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படும்.

கடுகு எண்ணெய் நெடியும் விறுவிறுப்பும் கொண்டதாகும். தோல் நோய்களைக் குணமாக்கும்.பொதுவாக‌ கடுகு எனக் குறிப்பிடப்படுவது கடுகுச் செடியிலிருந்து பெறப்படும் விதைகளையே குறிக்கும்.

கடுகு ஓராண்டு மட்டுமே உயிர்வாழும் செடி வகையைச் சேர்ந்த‌ தாவரம். 1 மீ. உயரம் வரை வளரும். பூக்கள் நுனியில் கொத்தாக அமைந்தவை, மஞ்சள் நிறமானவை. விதைகள் கடுகு எனப்படுபவை.

வெள்ளைக் கடுகு மற்றும் சமையலில் பயன்படுத்தும் கடுகு என இரண்டு வகைகள் உண்டு. கடுகில் இருந்து பெறப்படுவது கடுகு எண்ணெய் ஆகும். கடுகு பெருமளவில், உணவு மற்றும் மருத்துவ உபயோகங்களுக்குப் பயிர் செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் பெரும்பாலும் துணைப் பயிராகவும், தரிசு நிலங்களிலும், சமவெளி பகுதிகளிலும் கூட வளர்கின்றன.

சமையல் கடுகு மளிகைக் கடைகளில் சாதாரணமாகக் கிடைப்பதாகும். நம் அனைவருக்கும் நன்கு பழக்கமானதாகும். கடுகு எண்ணெய் மற்றும் வெள்ளைக் கடுகு ஆகியவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

தேவையான அளவு கடுகை, தேனுடன் சேர்த்து அரைத்து, பசையாகச் செய்து, கட்டிகளின் மீது பூச கட்டிகள் உடையும்.

கிரந்திப்புண், தோல் நோய்கள் குணமாக கடுகு எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும்.

ஒரு தேக்கரண்டி கடுகை, நீர் சேர்த்து அரைத்து, குடிக்கக் கொடுத்தால் வாந்தியுண்டாகும்; குடிபோதை மாறும்.

வெள்ளைக்கடுகு காரச்சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை. குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்களைப் போக்கும்; முடக்குவாத நோயைக் கட்டப்படுத்தும்.

வெள்ளைக்கடுகு பூச்சிக் கடி விஷத்தைக் குறைக்கும். விஷத்தை உட்கொண்டவர்களுக்கு வெள்ளைக்கடுகை நீரில் ஊறவைத்து, நெல்லிக்காய் அளவு அரைத்துக் கொடுக்க, குமட்டல் இன்றி வாந்தியை உண்டாக்கி நஞ்சை வெளியேற்றும்.

வெள்ளைக்கடுகை அரைத்து, பருத்தித் துணியில் தடவி, கீல்வாயு, இரத்தக்கட்டு உள்ள இடங்களில் பற்றாகப் போட அவை குணமாகும்.

¼ தேக்கரண்டி அளவு வெள்ளைக் கடுகைத் தூளாக்கி, தேனில் குழைத்து உள்ளுக்குள் சாப்பிட இரைப்பு, இருமல், சுவாச நோய்கள் குணமாகும்.

10.05.2016 குள் EMIS UPDATION முடிக்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும்!

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 10,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விரைவில் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட உள்ளதாக மாநில அரசு  அறிவித்துள்ளது.டெல்லியில் 1,021 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 17,000 ஒப்பந்த ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு,  அரசு சார்பில் வழங்கப்படும் சுலுகைகள் எதுவும் கிடையாது. இதனால், ஆசிரியர் பணிக்கான இடங்கள்காலியாகவே இருந்து வருகிறது. தங்களது பணியை  நிரந்தரமாக்கக் கோரி மாநில அரசுக்கு ஒப்பந்த ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்தனர்.இதன் பின்னர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9,623 கூடுதல் ஆசிரியர் பணிக்கு  ஒப்புதல் அளிக்கப்பட்டன. இந்நிலையில், அரசு பள்ளிகளில் உள்ள 10,000 ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த மாநில அரசு முடிவு  செய்துள்ளது.

இது குறித்து மாநில அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு பள்ளிகளில் காலியாகஉள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் தேர்வு  நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கவர்னரிடம் ஒப்புதல் பெற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் தேர்வு தேதி குறித்து  அறிவிக்கப்படும். இந்த தேர்வில் ஒப்பந்த ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம்.குறிப்பாக, ஒப்பந்த ஆசிரியர்களுக்கு கூடுதலாக ஐந்து ஆண்டு வரை வயது நிர்ணயம் அறிவிக்கப்படுகிறது. மேலும், ஒரு ஆண்டு அனுபவம் பெற்றுள்ள ஒப்பந்த  ஆசிரியர்களுக்கு0.75 மதிப்பெண்ணும், மூன்று ஆண்டு அனுபவம் பெற்றுள்ள ஒப்பந்த ஆசிரியர்களுக்கு 2.25 மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்கப்படும்.இவ்வாறு உயர்  அதிகாரி கூறினார்

ஐ.சி.எஸ்.இ.,பாடத்திட்டத்தின் தேர்ச்சி முடிவுகள் வெளியீடு!

ஐ.சி.எஸ்.இ.,பாடத்திட்டத்தின் கீழ் தேர்வில் பங்கேற்ற பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில், 100சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.ஐ.சி.எஸ்.இ.,பாடத்திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு,பிளஸ்2பொதுத்தேர்வுகள் கடந்த பிப்., -மார்ச்மாதங்களில் நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள்,நேற்று மதியம், 3:00மணியளவில் 
இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
கோவை மாவட்டத்தில்,ஈஷா மற்றும் ஸ்டேன்ஸ் பள்ளிகளை சேர்ந்த90மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.

அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள ஸ்டேன்ஸ் பள்ளி,இரண்டாவது ஆண்டாக,பத்தாம் வகுப்பு தேர்வை சந்தித்துள்ளது. இதில், 55மாணவர்களுடன், 100சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. ஈஷா பள்ளியில்,பத்தாம் வகுப்பு,பிளஸ்2இருபிரிவு மாணவர்களும், 100சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தொடக்கப்பள்ளிச் சிறார்கள் 'ஸ்ட்ரைக்' !

பிரிட்டனில் தொடக்கப்பள்ளிச் சிறார்கள் 'ஸ்ட்ரைக்' !

பிரிட்டனில் ஆறு வயது, ஏழு வயது பள்ளிச் சிறுவர்களுக்கு தேசிய அளவிலான பொதுத் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து தொடக்கப் பள்ளிச்சிறுவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போகிறார்களாம் !

பிரிட்டனில் தொடக்கப் பள்ளிச் சிறுவர்கள் "ஸ்ட்ரைக்" திட்டம் !
சுமார் 300 பெற்றோர் குழுக்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பள்ளிச்சிறுவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

"சேட்ஸ்" (SATS) என்றழைக்கப்படும், தரச் சாதனைத் தேர்வுகளின் மீதே மிகவும் குறுகிய நோக்கோடு கவனம் செலுத்தப்படுவது, பள்ளிச் சிறார்களின் பரந்துபட்ட கல்வித் தரத்தைக் குலைக்கும் என்று ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்..

'சிறார்கள் சிறுவர்களாக இருக்கட்டும்' (Let Our Kids Be Kids ) என்ற இந்த இயக்கம் , இன்று செவ்வாய்க்கிழமை வகுப்புப் புறக்கணிப்பு தினத்தை குழந்தைகளுக்கு வேடிக்கை மூலம் கல்வி தரும் தினமாக அமைத்துத் தருமாறு பெற்றோரைக் கோருகிறது.

ஆனால் பிரிட்டனின் கல்வி அமைச்சரோ வகுப்புகளை ஒரு நாள் கூட புறக்கணிப்பது என்பது சிறார்களைப் பாதிக்கும் என்கிறார்..

இலங்கையில் தமிழர்கள் மீதான சித்ரவதை தொடர்கிறது !

இலங்கையில் தமிழர்கள் மீதான சித்ரவதை தொடர்வதாக ஐ.நா. சிறப்புக் கண்காணிப்பு அதிகாரி ஜுவான் மென்டீஸ் தெரிவித்தார்.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற 

இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு, அங்கு மனித உரிமையைப் பாதுகாப்பதற்காக ஐ.நா. சில நடவடிக்கைகளை எடுத்து 
வருகிறது. இந்நிலையில், மெண்டீஸ் தற்போது இலங்கையில் 8 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, கொழும்பில் செய்தியாளர்களை நேற்று சந்தித்து ஜுவான் மென்டீஸ் கூறியதாவது:இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அரசு அடக்குமுறையில் அன்றைய நிலைமைதான் இப்போதும் உள்ளது. அதில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. சட்டம் பலவீனமாக இருப்பதால், தமிழர்கள் மீதான சித்ரவதை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சிறைகளிலும், தடுப்பு முகாம்களிலும் நிலைமை இன்னமும் மோசமாக உள்ளது. இதுதொடர்பான முழு விவரங்கள் இலங்கை அரசிடம் அளிக்கப்படும் என்றார் ஜுவான் மென்டீஸ்.

நாம் சாப்பிடுவது ஐஸ்கிரீம்தானா?


       வீட்டிலும் வெளியிலும் தகிக்கிற வெயிலுக்கு நாளெல்லாம் நாக்கைச் சுழற்றி ஐஸ்கிரீமைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் வெம்மை குறையாது போலிருக்கிறது. பெரியவர்களுக்கே இந்த நிலை என்றால் குழந்தைகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

பிளஸ் 2 ரிசல்ட் தேதி அறிவிப்பு; தேர்தல் பணியால் ஆசிரியர்கள் அதிர்ச்சி.

பிளஸ் 2 தேர்வு வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணி சுமையாலும், தேர்தலுக்கு அடுத்த நாள் பிளஸ்2 ரிசல்ட் என்பதாலும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியாவதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தள்ளி போகிறது: மருத்துவக் கல்வி இயக்குநர் அறிவிப்பு

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தாமத மாக வெளியாவதாலும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய் யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு வெளியாவதாலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் அறிவிக்கப் பட்டபடி நாளை தொடங்காமல் தள்ளிப் போவதாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.விமலா தெரிவித்துள்ளார்.

தபால் ஓட்டுப்பதிவு துவக்கம்:மே 18 வரை கால அவகாசம்

 சென்னையில், தேர்தல் பணியில் ஈடுபடும், 36 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கான, தபால் ஓட்டுப்பதிவு நேற்று துவங்கியது

Manonmaniam Sundaranar University Admission Notification B.Ed ( Two Years) Programme for the Academic Year 2016-17 Manonmaniam Sundaranar University (DD&CE)

Directorate of Distance Education

Admission Notification

B.Ed ( Two Years) Programme for the Academic Year 2016-17

*Eligibility- 10+2+3 or 11+1+3

*Medium of Instruction- English only

* Cost of Application - Rs.650/-

*Last date to submit the filled applications- 10.06.2016

MOCK POLL STEPS


இணையதள சேவைகள் வாக்காளர்கள் வரவேற்பு

வாக்காளர்களுக்காக தேர்தல் கமிஷன் பல்வேறு இணையதள சேவைகளை, உருவாக்கி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, வாக்காளர்கள், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை, தமிழக தேர்தல் கமிஷன் இணையதளத்தில் (www.elections.tn.gov.in) அறிந்து கொள்ளலாம்.

BLINDER's VOTE ,TENDER VOTE ,CHALLENGES VOTE DETAIL'S

BLINDER's VOTE:

கண் பார்வையற்றவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

மின்னணு இயந்திரத்தை தடவிப் பார்த்து, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.

ஓட்டுப்பதிவு நடைமுறைகள் அனைத்தையும் படிவம் ' 17C' யில் பதிவு செய்ய வேண்டும்.

தேர்தல் ஆணையம் உயர் தலைமை அலுவலக அதிகாரிகளின் தொலைபேசி எண்கள்


MADRAS UNIVERSITY IDE - MAY 2016 - EXAMINATIONS TIME TABLE

MADRAS UNIVERSITY

IDE - MAY 2016 - EXAMINATIONS TIME TABLE

Very important instruction: Candidates are directed to download the hall ticket directly from the IDE website. Manual Hall ticket will not be issued.

IDE - MAY 2016 UG & PG EXAMINATIONS TIME TABLE PUBLISHED

Download in www.ideunom.ac.in

தேர்தல் 2016 - PO, P1, P2 , P3 ஆகியோரின் கடமைகள் - தேர்தல் நாள் அன்று, மற்றும் முந்தய நாள் செய்ய வேண்டியவைகள் - EVM, MOCK POLL, SEAL பற்றிய முழுமையான தகவல்கள் - அனைத்தும் எளிய தமிழில் பட விளக்கங்களுடன்

சட்டபேரவைத் தேர்தல் 2016-GREEN PAPER SEAL & ABCD STRIP SEAL SETTING VIDEO

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு பதிவு தொடங்கியது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தங்களது தபால் ஓட்டுக்களை இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை பதிவு செய்யலாம்.தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், ஆரம்ப சுகாதார ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டள்ளனர்.

போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று முதல் தபால் ஓட்டுக்களை போடலாம்.சென்னையில் 16 தொகுதிகளிலும் உள்ள 3,770 வாக்குச்சாவடிகளில் 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக பணியில் உள்ளனர். இதைதவிர 16 ஆயிரம் போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் செய்துள்ளார்.அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலகங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாம்களிலேயே அவர்கள் வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக போலீஸ் பாதுகாப்புடன் தனி அறை உருவாக்கப்பட்டுள்ளது. தபால் ஓட்டுக்கான படிவம் 12-ஐ பூர்த்தி செய்து பயிற்சி அலுவலர்கள் மூலமாக அரசு ஊழியர்கள் தங்களது வாக்குகளை 14-ந் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் கூறும் போது, “தபால் ஓட்டுக்களை போடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு பதிவுக்கு முந்தைய நாளான 15-ந் தேதி அன்று இரவே தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் வாக்குபதிவு மையங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!