Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 10 May 2016

எம்பிபிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் எப்போது? அதிகாரிகள் தகவல்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மே 9-ஆம் தேதி எம்பிபிஎஸ் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் அறிவித்திருந்தார்.

அடிப்படைக் கல்வியில் ஆங்கில மாயை தேவையில்லை- மயில்சாமி அண்ணாதுரை கருத்து

மாணவர்கள் அமெரிக்கா, லண்டன் சென்று படிக்க வேண்டியதில்லை. இங்குள்ள குக்கிராமத்தில் படித்த நாங்கள் வெற்றியைப் பெற்றிருக்கும்போது , இன்றைக்கு நவீன வசதிகள் பெருகிவிட்ட நிலையில் தற்போதுள்ள மாணவர்கள் வெற்றி பெற முடியும்.

சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லியைச் சேர்ந்த டினா டாபி முதலிடம்-தமிழகத்தில் சரண்யா ஹரி முதலிடம்

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் பிரதான தேர்வில் தமிழக அளவில் சரண்யா ஹரி முதலிடம் பிடித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய அரசு துறைகளில் உள்ள பல்வேறு அதிகாரிகள் பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நியமனம் செய்கிறது.

பிஎப் சந்தாதாரர்களுக்கு குறைந்த விலை வீடுகள் !

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு மத்திய அரசு குறைந்த விலையிலான வீடுகளை கட்டிக் கொடுக்க பரீசீலித்து வருவதாக கூறியுள் ளது. தொழிலாளர் ஓய்வூதிய ஆணையத்தில் உள்ள 5 கோடிக் கும் அதிகமான சந்தாதாரர்க ளுக்கு
குறைந்த விலையிலான வீடுகளை கட்டிக் கொடுக்கும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக நேற்று நாடாளுமன்றதில் எழுத்து பூர்வமான பதிலில் தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா குறிப்பிட்டார்.

145 ஆண்டு கால பழமையான ஓய்வூதிய சட்டம் ரத்தா ???மோடி இறுதி முடிவு !

145 ஆண்டு கால பழமையான ஓய்வூதிய சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யாது என்று தெரிகிறது. அச்சட்டத்தில் திருத்தம் செய்வது பற்றி பிரதமர் மோடி இறுதி முடிவு எடுப்பார்.

வேட்பாளர் போட்டோவுடன் & பேலட் சீட்;... ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பொருத்தம் !!!தேர்தலுக்கு பயன்படுத்த உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர் பெயர், போட்டோ, சின்னம் அடங்கிய "பேலட் சீட்' பொருத்தும் பணி, திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது; தேர்தல் பார்வையாளர்கள், நேரில் ஆய்வு செய்தனர்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், ஓட்டுப்பதிவுக்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களை 5 சதவீதம் வரை பெயில் செய்ய அனுமதி !

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 1 மற்றும் 9ம் வகுப்புகளில், 5 சதவீதம் வரை, மாணவர்களை, 'பெயில்' செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

14ம் தேதியுடன் பிரசாரம் ஓய்வு !

தமிழகம் முழுவதும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வேட்பாளர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களை ஆதரித்து, தலைவர்கள், கூட்டணி கட்சியினர், குடும்பத்தினர் என, பல தரப்பினரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏஐசிடிஇ அங்கீகாரம் இல்லாத தனியார் சுயநிதிபாலிடெக்னிக் கல்லூரிகள் சேர்க்கை கூடாது !

ஏஐசிடிஇ அங்கீகாரம் புதுப்பிக்கப்படாத தனியார் சுயநிதிபாலிடெக்னிக் கல்லூரிகள் மாணவர்களை சேர்க்கக் கூடாது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் செய்ய வேண்டியது என்ன?

ஓட்டுப்பதிவு முடிந்த பின், சில ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், 'குளோஸ்' பொத்தானை அழுத்தி, ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்துவதில்லை. இதனால், முறைகேடு நிகழ்ந்துள்ளதாக, சிலர் சந்தேகம் கிளப்பும் சம்பவங்கள், கடந்த காலத்தில் நடந்தன.
அத்தகைய சந்தேகங்கள், இத்தேர்தலில் ஏற்படுவதை தவிர்க்க, தேர்தல் கமிஷன் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

பொதுத் தேர்தல் 2016 - வாக்குப்பதிவு முடிந்த பின்னர் சில வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் CLOSE பொத்தனை அழுத்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மூடுவதில்லை எனவும், இந்த நடவடிக்கையால் முறைகேடு நிகழ்ந்துள்ளது என ஐயம் எழுவதாக வந்த புகாரையடுத்து தேர்தல் நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

மாநிலங்கள் நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி இல்லை உச்ச நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மாநில அரசுகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்கட்ட தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் இரண்டாம்கட்ட தேர்வில் பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

யுரேனிய கழகத்தில் டிரெய்னி பணி

ஜார்கண்டில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான யுரேனிய கழகத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஷில்லாங்கில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ் உட்பட 7 மொழிகளில் மருத்துவ நுழைவுத் தேர்வு : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு

அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய கோரிக்கை மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தது.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்"உணவே மருந்து"

மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு. மக்கள் உண்ணும் உணவும் உணவுப் பழக்கவழக்கங்களுமே அவர்களது உடல் நலத்தைத் தீர்மானிக்கின்றன.

தினம் ஒரு புத்தகம்"இன்று ஒரு தகவல் '


EMIS பணியை மே 12க்குள் முடிக்காவிட்டால் கல்வித்துறை மிரட்டலால் ஆசிரியர்கள் தவிப்பு

'கல்வி தகவல் மேலாண்மை முறையை, இணையதளத்தில் மேம்படுத்தும் முறையை, மே 12ம் தேதிக்குள் முடிக்காவிட்டால், சென்னை இயக்குனரகம் செல்ல வேண்டியிருக்கும்' என, மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி பள்ளிகளில் உள்ள மாணவர்களின் விவரங்களை தொகுத்திடும் வகையில், கல்வி தகவல் மேலாண்மை முறை (எமிஸ்) கடந்த, 2012-13ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்களை சமர்ப்பிக்க உரிய கால அவகாசம் வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்கள் ஆண்டுதோறும் கல்வி தகவல் மேலாண்மை முறையில்(இஎம்ஐஎஸ்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

மருத்துவ கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வில் மாற்றமில்லை: மாநிலங்களின் கோரிக்கை நிராகரிப்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும்; மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட், திட்டவட்டமாக கூறியுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு 'கேஷ் ஆன் டெலிவரி' திட்டம்.

இணையதள வர்த்தகத்தில் உள்ள, 'கேஷ் ஆன் டெலிவரி' திட்டம் போல், ரயில் டிக்கெட் முன்பதிவிலும், இதேபோன்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில், ஐ.ஆர்.சி.டி.சி., ஈடுபட்டுள்ளது.சமீபகாலமாக, மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை, இணையதள வர்த்தக நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்து வாங்குகின்றனர்.
இவ்வாறு வாங்கப்படும் பொருட்களை,அந்தந்த வர்த்தக நிறுவனம், நேரடியாக வாடிக்கையாளரின்வீட்டுக்கே சென்று ஒப்படைத்துவிட்டு, அதற்கான பணத்தைபெற்றுக்கொள்கின்றன. 'கேஷ் ஆன் டெலிவரி' என்னும் இத்திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவதுடன், அவர்களின் வர்த்தகமும் அதிகரித்துள்ளது.இத்திட்டத்தில், வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்., டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளை பயன்படுத்துவதில்லை. நேரடியாக பணம் கொடுத்து பொருட்களை பெறுகின்றனர். இதைகருத்தில் வைத்து, இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் டிக்கெட் முன்பதிவிலும், 'கேஷ் ஆன் டெலிவரி' வசதி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான மென்பொருளைஉருவாக்கும் பணியில், ஐ.ஆர்.சி.டி.சி., ஈடுபட்டுள்ளது.'கேஷ் ஆன் டெலிவரி' திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளை, பயணிகளின் வீடுகளுக்கு சென்று தருவதற்கான கட்டணத்தையும், ஐ.ஆர்.சி.டி.சி., நிர்ணயித்துள்ளது. அதன்படி, படுக்கை வசதி உடைய டிக்கெட்டுக்கான கட்டணத்துடன், கூடுதலாக, 40 ரூபாயும், ஏ.சி., வகுப்பு டிக்கெட்டுக்கு, விலையுடன் கூடுதலாக, 60 ரூபாயும் செலுத்த வேண்டியிருக்கும்.

முதற்கட்டமாக, பாட்னா உள்ளிட்ட, 200 நகரங்களில் இத்திட்டத்தை துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் மூலம், பயணிகள், ஐந்து நாட்களுக்கு முன்பாக கூட, தங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை பெறலாம்.இந்த புதிய திட்டம் அமலுக்கு வரும்போது, டிக்கெட் முன்பதிவு கவுன்டர்களில் காத்திருக்கும் பயணிகள் கூட்டம், வெகுவாக குறையும்.

15ஆம் தேதி நாம் பணியாற்றும் பூத் அறிவிக்கப்பட்டவுடன் அந்த பூத் அமைந்த இடத்தை சென்றடைய வழி

15ஆம் தேதி நமக்கு நாம் பணியாற்றும் பூத் அறிவிக்கப்பட்டவுடன் அந்த பூத் அமைந்த இடத்தை சென்றடைய வழியை தெரிந்து கொள்ள 15 ந் தேதி கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

பி.எப். அலுவலகங்களில் நடைமுறையில் இல்லாத கணக்குகளில் ரூ.43 ஆயிரம் கோடி உள்ளது: மத்திய மந்திரி பதில்

பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி மற்றும் துணை கேள்விக்கு பதிலளித்த அவர், தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களின் மூலம் கடந்த 2015-16 நிதியாண்டில் மட்டும் ஒரு கோடியே 18 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் அதிகமான முறையீடுகள் தீரித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவற்றில் 98 சதவீத முறையீடுகள் விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது, ஒரு லட்சத்து 18 ஆயிரம் மனுக்கள்மீது பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் கேட்பாரற்று கிடக்கும் பணத்துக்கும் நடைமுறை செயல்பாட்டில் இல்லாத கணக்குகளில் வைக்கப்பட்டுள்ள பணத்துக்குமான வித்தியாசம் தெரியாமல் சிலர் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், பரிவர்த்தனைகள் நடைமுறையில் இல்லாத கணக்குகளில் மட்டும் 43 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பில் உள்ளதாக கூறினார்.தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களையும் இணைப்பதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. மேலும், டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் சைக்கிள் ரிக்‌ஷா தொழிலாளர்களையும், அங்கன்வாடி பணியாளர்களையும் இந்த திட்டத்தில் இணைக்கும் புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஆதார் அட்டை அல்லது வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (பான் கார்டு எண்) இணைத்திருக்கும் தொழிலாளர்கள், இனி தங்களுக்கு வேலை அளிக்கும் நிறுவனத்தின் அனுமதிக்காக காத்திருக்காமல் தங்களது பணத்தை கணக்கில் இருந்து எடுக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது

இந்திய ரயில்வேயின் முதல் பசுமை வழித்தடம்

இந்திய ரயில்வேயின் முதல் பசுமை வழித்தடம் :மானாமதுரை - ராமேஸ்வரம் இடையே அமைகிறது இரயில் பாதையில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, 'பயோ - டாய்லெட்' வசதி
நாட்டின் முதல், பசுமை வழித் தடமாக, தமிழகத்தின் மானாமதுரை - ராமேஸ்வரம் ரயில் பாதை அமைகிறது. இதற்கான அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக வுள்ளது. இந்த பாதையில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, 'பயோ - டாய்லெட்' வசதி முழுமையாக அமலுக்கு வருகிறது.

உலகின் மிகப்பெரிய ரயில்வேகளில் ஒன்றான இந்திய ரயில்வேயில், தற்போதுள்ள கழிப்பறை களை பயன்படுத்தும்போது, மலக்கழிவுகள்கீழே விழுந்து, ரயில் பாதையை அசுத்தப்படுகிறது.
இவ்வாறு ரயில் பாதையை அசுத்தம் செய்வதை தடுக்கும் வகையில், 'பயோ - டாய்லெட்' என்ற, சுற்றுச் சூழலை பாதிக்காத வசதி, சில ரயில்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அசுத்தமில்லாத...:ஆனால், நாட்டிலேயே முதல் முறையாக, ஒரு குறிப்பிட்ட வழித்தடம் முழுவதும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 114 கி.மீ., துாரமுள்ள மானாமதுரை - ராமேஸ்வரம் இடையே, இதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, தற்போது சோதனை செய்யப்பட்டுவருகிறது.

இதன்படி, நாட்டிலேயே, அசுத்தம் இல்லாத, பசுமையான ரயில் பாதையாக, மானாமதுரை -

ராமேஸ்வரம் இடையேயான ரயில் பாதை விளங்கும். இந்த மாத இறுதியில், இதற்கான எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, இந்த மார்க்கத்தில் இயங்கும், 16 ரயில்களைத் தவிர, இடையில் உள்ள, 14 ரயில் நிலையங்களிலும் பயோ - டாய்லெட் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த, 16 ரயில்களில் உள்ள அனைத்து பெட்டிகளிலும், பயோ - டாய்லெட் வசதி செய்யப்படுகிறது.

வாய்ப்பில்லை:இந்த முறையின்

கீழ், கழிப்பிடத்தில் சேரும் கழிவுகள், பாக்டீரியாக்கள் மூலம் அழிக்கப்படும்; மேலும், கழிப்பிடத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீர் மற்றும் திரவக் கழிவுகள், மறுசுழற்சி செய்யப்பட்டு, அவை மட்டும் வெளியேற்றப்படுவதால், சுகாதார கேடு ஏற்படாது. ரயில் பாதையில், மலக் கழிவுகள் விழுவதற்கான வாய்ப்பே இருக்காது.

அடுத்தது எங்கே?: தமிழகத்தைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக, குஜராத்தில், 141 கி.மீ., துாரமுள்ள கனாலஸ் - துவாரகா - ஓக்லா வழிதடத்திலும், 34 கி.மீ., துாரமுள்ள போர்பந்தர் - வான்ஸ்ஜால்யா வழிதடத்திலும் பயோ - டாய்லெட் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து ஜம்மு - காத்ரா மார்க்கத்திலும் இந்த வசதி செய்யப்பட உள்ளது.தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும், பல்வேறு ரயில்களில், 20 ஆயிரம் பயோ - டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டுக்குள் மேலும், 17 ஆயிரம் பயோ - டாய்லெட்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஒரு பயோ - டாய்லெட் அமைக்க, 3.5 லட்சம் ரூபாய்செலவாகிறது.

இந்திய ரயில்வே - ஒரு பார்வை

* நாடு முழுவதும், 1,15,000 கி.மீ., நீளமுள்ள ரயில் பாதை உள்ளது
*ஒட்டு மொத்தமாக, 7,112 ரயில்வே ஸ்டேஷன்கள்
உள்ளன
* புறநகர் ரயில்கள் உட்பட அனைத்து ரயில்களிலும், சராசரியாக, தினசரி 2.3 கோடி பேர் பயணிக்கின்றனர் முறையான அறிவிப்பு வெளியாகும் என *ரயில்களில், 66,392 பயணிகள் பெட்டிகள், 2,45,267 சரக்கு ரயில் பெட்டிகள் உள்ளன.

மரங்கள் நட திட்டம்: மத்திய அரசு துாய்மை இந்தியா திட்டத்தை அமல்படுத்திய பின், அதை முறையாக செயல்படுத்துவதில் ரயில்வே முன்னிலையில் உள்ளது. தற்போது பயோ - டாய்லெட் வசதி திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த வரிசையில், ரயில் பாதைகளை ஒட்டியுள்ள ரயில்வேயின் இடங்களில், மாநில அரசுகளுடன் இணைந்து, மரங்களை நடுவதற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இதைத் தவிர, ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு நிலப் பகுதிகளிலும் மரங்களை நடுவதற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திருவள்ளூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் - அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.

Manonmaniam Sundaranar University Directorate of Distance Education B.Ed(Two Years)- Admission Notification 2016-17

அரசு ஊழியர் வீடு ஒதுக்கீடு கண்காணிக்க புது திட்டம்

அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வதில், மோசடிகளை தடுக்க, புதிய நடைமுறையை, வீட்டுவசதி வாரியம் உருவாக்கி உள்ளது.
சென்னையில், பட்டினப்பாக்கம், லாயிட்ஸ் காலனி, பீட்டர்ஸ் சாலை, சைதாப்பேட்டை, நந்தனம், அண்ணா நகர், முகப்பேர் என பல்வேறு பகுதிகளில், அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் உள்ளன. இதே போல், பிற மாவட்டங்களிலும், அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் உள்ளன.

இந்த குடியிருப்புகளை பெற விரும்பும் அரசு ஊழியர்கள், முறையாக விண்ணப்பிக்க வேண்டும். காலியாக இருக்கும் வீடுகள் எண்ணிக்கை, விண்ணப்பங்கள் வந்த நாள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால், சிபாரிசு பெற்றவர்களுக்கும், அரசு ஊழியர் அல்லாத நபர்களுக்கும் வீடுகள் ஒதுக்குவதாகவும், வேண்டுமென்றே விண்ணப்பங்களை கிடப்பில் போடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. முறைகேட்டை தடுக்க, புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து, வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கூறியதாவது:முறைகேட்டை தடுக்க, புதிய திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்காக, வாடகை குடியிருப்புகள் குறித்த அனைத்து விவரங்களை, 'ஆன்லைன்' முறையில் கண்காணிக்க, பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பங்கள் பதிவு, விண்ணப்பங்களை வரிசைபடுத்துதல், ஒதுக்கீடு, வீடு ஒப்படைப்பு போன்ற பணிகள், ஆன்லைன் முறையில் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இன்று வாக்காளர் உறுதிமொழி ஏற்பு தேர்தல் கமிஷன் சிறப்பு ஏற்பாடு

தமிழகத்தில், இன்று வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து தரப்பு மக்களும், 'ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்; பணம் கொடுப்பவர்களை பிடித்து கொடுப்போம்' என, உறுதிமொழி எடுக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.

இன்று மட்டும், ஒரு கோடி மக்களை உறுதிமொழி ஏற்க வைக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. 'வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நாள்' குறித்து, சமூக வலைதளங்களில், பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள, 66 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளிலும், இன்று காலை, 10:00 மணிக்கு, குறைந்தது, 50 வாக்காளர்களை அழைத்து, உறுதிமொழி ஏற்கச் செய்யும்படி, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்கள், குடியிருப்பு சங்கங்கள், கிளப்புகள் போன்றவற்றில், வாக்காளர் உறுதிமொழி ஏற்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களும், கடிதம் எழுதி உள்ளனர். உறுதிமொழி எடுப்போர், அந்த புகைப்படங்களை, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அதேபோல், அனைத்து அரசியல் கட்சியினரும், உறுதிமொழி எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பயிற்சி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு

எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, பல்வேறு பயிற்சிகளை அளிக்க, தனியார் நிறுவனங்களை, மத்திய அரசு வரவேற்றுள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும், எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, சுருக்கெழுத்து மற்றும் போட்டி தேர்வுகளுக்கு, தயாராவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு, பயிற்சி அளிப்பதற்கான நிறுவனங்களை, மத்திய அரசு, தகுதி அடிப்படையில் தேர்வு செய்து வருகிறது. பயற்சி பெற்ற ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள், இடவசதி உள்ள நிறுவனங்கள் மட்டுமே, இதில் பங்கேற்க முடியும்.

தேர்வு செய்யப்படும் பயற்சி நிறுவனங்கள், மாணவர்களுக்கு பொது அறிவு, ஆங்கிலம், கணிதத் திறன், சுருக்கெழுத்து, அடிப்படை கணினி பயிற்சிகளை வழங்க வேண்டும். ஒரு மாணவரின் பயிற்சிக்கு, 800 ரூபாய் வீதம், மத்திய அரசு நிதி வழங்கும்.

விருப்பமுள்ள பயற்சி நிறுவனங்கள், சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள, எஸ்.சி., - எஸ்.டி., பயிற்சி நிறுவனத்தில், இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம். 'மேலும் விவரங்களுக்கு, 044 - 2461 5112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என, வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்து உள்ளார்.

மருத்துவ உபகரணங்களால், ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து புகார் தெரிவிக்க, 'மெட்டீரியோ விஜிலன்ஸ்' எனும் கமிட்டி

மருத்துவ உபகரணங்களால் என்ன பக்க விளைவுகள்?
மருத்துவ உபகரணங்களால், ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து புகார் தெரிவிக்க, 'மெட்டீரியோ விஜிலன்ஸ்' எனும் கமிட்டியை துவங்க, மத்திய அரசின் சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.
இந்திய பார்மா கவுன்சில் சார்பில், அனைத்து அரசு மருத்துவ கல்லுாரிகளிலும், கடந்தாண்டு ஜூலையில் 'பார்மா - கோ' கண்காணிப்பு மையம் மற்றும் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இம்மையத்துக்கு, மருந்துகள் குறித்த புகார்கள் வந்தன.

இதையடுத்து, மையத்தின் செயல்பாடுகளை அதிகரிக்க, இதற்கான பிரத்யேக 'மொபைல் ஆப்', பிரத்யேக இலவச எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், மருத்துவ கருவிகளால், ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த புகார்களை தெரிவிக்க, 'மெட்டீரியோ விஜிலன்ஸ்' எனும் கமிட்டியை துவங்க, மத்திய அரசின் சுகாதார துறை, அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை டீன் எட்வின் ஜோ கூறியதாவது:

மருத்துவ உபகரணங்களால், பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக தொற்றுநோய்கள் அதிகளவு பரவுகின்றன. இதை தடுக்கவே, மத்திய அரசு இதற்கான கமிட்டியை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது.

சிரின்ஜ், ஊசி, எச்.ஐ.வி., பரிசோதிக்கும் கருவி, இருதய ஸ்டென்ட், கண்களில் பொருத்தப்படும் லென்ஸ், எலும்புகளை ஒட்ட வைக்கும் சிமென்ட், குழந்தைகளுக்கான ஸ்கால்ப் வெயின்செட் உள்ளிட்ட, 14 வகையான மருத்துவ கருவிகளின் மீதான புகார்கள் குறித்து பதிவு செய்ய, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இத்தகைய மருத்துவ உபகரணங்களை டாக்டர்கள், நர்ஸ்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்பதால், புகார்களை அவர்களிடம் இருந்து பெற உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் மெட்டீரியோ விஜிலன்ஸ் கமிட்டி, விரைவில் உருவாக்கப்படும்.

கமிட்டியில், துணை கண்காணிப்பாளர், இருப்பிட மருத்துவ அலுவலர், பயோமெடிக்கல் துறையினர், நர்சிங் கண்காணிப்பாளர் உறுப்பினர்களாக இருப்பர். தற்போது நாடு முழுவதும் புகார்களை பெற திருவனந்தபுரம், காசியாபாத், டில்லி ஆகிய இடங்களில், மூன்று மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான தனி படிவமும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

ஆதார் அட்டை எதற்கெல்லாம் தேவை? எப்படி பெறலாம்?

கேஸ் இணைப்பு பெறுவது, பாஸ்போர்ட் பெறுவது உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளதால் அதை உடனே பெறுவது நல்லது.கேஸ் இணைப்பு பெற, பாஸ்போர்ட் வாங்க, வீடு வாங்க விற்க, பி.எப். கணக்கு துவங்க அல்லது அதில் இருந்து பணத்தை எடுக்க, வங்கி கணக்கு துவங்க என்று பலவற்றுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால் ஆதார் அட்டை வழங்கும் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதை பார்க்க முடிகிறது.

ஆதார் அட்டை பெறுவது எப்படி?
1. ஆதார் அட்டை பெற பதிவு செய்ய கட்டணம் எதுவுமில்லை.ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
2. ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று உங்களின் அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றை காண்பிக்கவும்.

3. ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அடையாள அட்டை மற்றும் வசிப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிடவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

4. புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐடி கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்கள் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

5. ஒரு வேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

6. எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

7. பதிவு மையத்தில் உங்கள் புகைப்படம், கைரேகை, கண்ணின் கருவிழி ஸ்கேன் ஆகியவை எடுக்கப்படும்.

8. ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால்ஒருவருக்கு ஒரு ஆதார் எண் தான் வழங்கப்படும்.

9. நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

10. ஆதார் எண் கிடைக்க 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம்.

11. ஆதார் கடிதங்களை அச்சடிப்பது வினியோகிப்பது இந்தியா போஸ்ட்டின் வேலை.

12. ஆதார் கடிதங்களை உரியவரிடம் கொடுக்க இந்தியா போஸ்ட் சாதாரணமாக 3-5 வாரங்கள் எடுத்துக்கொள்ளும்.

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு 'கேஷ் ஆன் டெலிவரி' திட்டம்.

இணையதள வர்த்தகத்தில் உள்ள, 'கேஷ் ஆன் டெலிவரி' திட்டம் போல், ரயில் டிக்கெட் முன்பதிவிலும், இதேபோன்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில், ஐ.ஆர்.சி.டி.சி., ஈடுபட்டுள்ளது.சமீபகாலமாக, மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை, இணையதள வர்த்தக நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்து வாங்குகின்றனர்.
இவ்வாறு வாங்கப்படும் பொருட்களை,அந்தந்த வர்த்தக நிறுவனம், நேரடியாக வாடிக்கையாளரின்வீட்டுக்கே சென்று ஒப்படைத்துவிட்டு, அதற்கான பணத்தைபெற்றுக்கொள்கின்றன. 'கேஷ் ஆன் டெலிவரி' என்னும் இத்திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவதுடன், அவர்களின் வர்த்தகமும் அதிகரித்துள்ளது.இத்திட்டத்தில், வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்., டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளை பயன்படுத்துவதில்லை. நேரடியாக பணம் கொடுத்து பொருட்களை பெறுகின்றனர். இதைகருத்தில் வைத்து, இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் டிக்கெட் முன்பதிவிலும், 'கேஷ் ஆன் டெலிவரி' வசதி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான மென்பொருளைஉருவாக்கும் பணியில், ஐ.ஆர்.சி.டி.சி., ஈடுபட்டுள்ளது.'கேஷ் ஆன் டெலிவரி' திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளை, பயணிகளின் வீடுகளுக்கு சென்று தருவதற்கான கட்டணத்தையும், ஐ.ஆர்.சி.டி.சி., நிர்ணயித்துள்ளது. அதன்படி, படுக்கை வசதி உடைய டிக்கெட்டுக்கான கட்டணத்துடன், கூடுதலாக, 40 ரூபாயும், ஏ.சி., வகுப்பு டிக்கெட்டுக்கு, விலையுடன் கூடுதலாக, 60 ரூபாயும் செலுத்த வேண்டியிருக்கும்.

முதற்கட்டமாக, பாட்னா உள்ளிட்ட, 200 நகரங்களில் இத்திட்டத்தை துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் மூலம், பயணிகள், ஐந்து நாட்களுக்கு முன்பாக கூட, தங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை பெறலாம்.இந்த புதிய திட்டம் அமலுக்கு வரும்போது, டிக்கெட் முன்பதிவு கவுன்டர்களில் காத்திருக்கும் பயணிகள் கூட்டம், வெகுவாக குறையும்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!