Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 11 May 2016

தினம் ஒரு புத்தகம்"மலரும் அறிவியல் "

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள் "முலிகை - முருங்கை கீரை"

சத்துப் பொருட்கள் உயிர்சத்துகள்
தாது உப்புகளும்
சுண்ணாம்பு சத்துகள்  இரும்பு சத்துக்கள்
வைட்டமின் சி
வைட்டமின்  ஏ
முருங்கைக் கீரையின் பயன்கள்
இக்கீரையில்  வைட்டமின் சி மிகுந்திருப்பதால்  சொறி சிரங்கு முதலிய நோய்கள் நீங்கும்.
பித்த மயக்கம் கண் நோய் சொரிய மாந்தம் முதலியவை நீங்கும்.
இக்கீரையில் வைட்டமின் ஏ மிகுந்திருப்பதால் கண்னுக்கு  ஒளிஊட்டகூடியது.
தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது .
மலசிக்கலை தடுக்கிறது .
இக்கீரையில் சுண்ணாம்பு சத்துக்களும் , இரும்புசத்துகளும் அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது .
முருங்கை கீரை சிறுநீரைப் பெருக்க வல்லது .

பொதுவான பயன்கள்
இக்கீரையை பொரியல் செய்து அடுப்புலிருந்து இறக்கும் பொழுது ஒரு கோழி முட்டையை உடைத்து ஊற்றி கிளறி எடுத்து தயார் செய்து பொரியலை தினமும் ஒரு வேளை பகலுணவில் தொடர்ந்து 40 நாட்கள்  சேர்த்து வந்தால் உடல் வலிமை பெறும். கண் தொடர்பான நோய்கள் நீங்கும் . உடல் அழகும் ,பலமும் , மதர்ப்பும்  கொடுக்கும் .
முருங்கை கீரையை நெய் விட்டு வதக்கிக் சாப்பிட்டால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம் .
முருங்கை இலையை கொண்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் வந்தால் நாளடைவில் உடல் வலி , கை கால் அசதியும் யாவும் நீங்கும் .
டைமன்ட்  கற்கண்டு தூளுடன் கீரையை வதக்கி சாப்பிட்டால் சுவையோடு மட்டுமில்லாமல் . நீர் உஷ்ணம் சம்பந்த பட்ட பிணிகளும் நீங்கும் .

ஆண்களுக்கான பயன்கள்
முருங்கைக் கீரையை நெய்யில்  பொரியல் செய்து உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் ஆண்களுக்கு வாலிபமும் , வீரியமும் உண்டாகும் .
தாது விருத்தியும் உண்டாகும்
இதை உணவில் 40  நாட்கள் சாப்பிட்டால் இல்லற வாழ்க்கை இன்பமாகும் .

பெண்களுக்கான  பயன்கள்
இதை தினமும்  உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை தடுக்கலாம் .
இக்கீரை இரத்த விருத்திக்கு மிகவும்  பயன்படுகிறது
பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் இக்கீரையை உணவுடன்  சேர்த்து வந்தால் பால் நன்றாக சுரக்கும் .
இக்கீரை சாற்றை ஒரு சங்கு அளவு தினமும் மூன்று வேளை சாப்பிட்டால் மணமாகாத  பெண்களுக்கு ஏற்படும் சூதக வயிற்று நோயும் ,அடி வயிற்று வலியும் நீங்கும் .
மருத்துவ பயன்கள் 
இக்கீரையை விளக்குஎண்ணெய் விட்டு வதக்கி  இடுப்பு வலி ,வாத மூட்டு வலி  உள்ள இடத்தில ஒத்தடம் கொடுத்தல் வலி நீங்கும்.
இலையையும் , மிளகையும் நசுக்கி சாறு எடுத்து நெற்றியல் தடவினால் தலைவலி நீங்கும் .
இலையை அரைத்து  வீக்கங்கலின்  மீது பூசினால் வீக்கம் தனியும் .
இக்கீரையை அரைத்து அதனின்று பிழிந்து எடுத்த சாறுடன்  கொஞ்சம் சுண்ணாம்பும் தேனும் கலந்து தொண்டையில் தடவினால் இருமல் குரல் கம்மல் நீங்கும் .
இலையை அரைத்து பிழிந்து சாறு எடுத்து சில துளிகள் கண்ணில் விட்டால் வலிகள் நீங்கும் .
எள்ளும் முருங்கைக் கீரையையும் சேர்த்து அவித்து உண்பதால் பித்த வாய்வால் ஏற்படும் மார்பு வலி நீங்கும் .

இரவில் முருங்கை கீரையை சமைத்து உண்ணக்கூடாது.
எந்த கீரையையாக இருந்தாலும் இரவில் உண்ணக்கூடாது

மலை உச்சியில் குழந்தைகள் கும்மாளம்

கோடை விடுமுறை தொடங்கினால் குழந்தைகளுக்கான முகாம்கள் களைகட்டத் தொடங்கிவிடும். படிப்பு, டான்ஸ், பாட்டு, விளையாட்டு எனப் பல முகாம்கள் குழந்தைகளை அன்போடு அழைக்கும். ஆனால், மதுரையைச் சேர்ந்த 35 குட்டிப் பசங்க போன முகாமோ ஜாலியான முகாம். அது சுற்றுலா முகாம்!

மதுரையிலுள்ள ‘செசி’ தன்னார்வத் தொண்டு நிறுவனம் பள்ளிக் குழந்தைகள் 35 பேரை வால்பாறை அருகே வில்லோனி என்ற ஆதிவாசிகள் கிராமத்துக்கு மூன்று நாள் முகாமுக்கு கூட்டிச் சென்றது. ‘குறிஞ்சியும் குழந்தைகளும்’ என்பதுதான் முகாமின் பெயர். கோடை முகாமை தனராஜ் என்பவர் வழி நடத்தினார். சரி எதற்காக இந்த முகாம்?

பூவிலிருக்கும் தேனை பூவைச் சேதப்படுத்தாமல் எடுத்துப் பழகும் வண்டுகளைப் போல, இயற்கையை சேதப்படுத்தாமல் அது தரும் வளங்களை உண்டு சூழலியலைப் பாதுகாக்கும் ஆதிவாசி மக்களின் வாழ்க்கை முறையைக் குழந்தைகள் அறிந்துகொள்ளவே இந்த முகாம். ஐவகை நிலங்களுக்குத் தலையாக இருப்பது குறிஞ்சி நிலம். குறிஞ்சி சரியாக இருந்தால்தான், மற்ற நான்கும் சரியாக இருக்கும் என்பதால் குறிஞ்சி நிலத்தை குழந்தைகள் முகாமுக்காகத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 30-ல் தொடங்கிய இந்த முகாமில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த அந்தக் குழந்தைகள், தூரத்தில் தெரிந்த யானையையும் அருகில் வந்து வாலாட்டிச் சென்ற சிங்கவால் குரங்குகளையும் பல குரலில் பேசிய பறவைகளையும் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். பூத்துக் குலுங்கிய காட்டுப் பூக்களை கண்டு ரசித்தார்கள். தங்களைச் சுற்றிலும் மரங்கள் இருந்தாலும் அவைகளை அழிக்காமல் எளிமையான ஆதிவாசிகளின் வாழ்க்கை முறை அந்தக் குழந்தைகளுக்கு வியப்பைத் தந்தது.

விருந்தாளிகளுக்குத் தங்களின் காடர் இனத்தின் பேச்சு மொழியை சொல்லிக் கொடுத்தனர் ஆதிவாசிக் குழந்தைகள். அதைத் தத்தித் தத்திச் சொல்லிப் பழகிய பள்ளிக் குழந்தைகள், தாங்கள் எடுத்து போன பரிசுப் பொருட்களை ஆதிவாசிப் பிள்ளைகளுக்குக் கொடுத்து ஆனந்தப்பட்டார்கள். ஆதிவாசிகள் தந்த காட்டுப் பழங்களையும் உண்டு களித்தார்கள். அருவியில் குளித்து, ஓடையின் தெளி நீரை அள்ளிக் குடித்து, மலை தேசத்தில் மகிழ்ச்சியின் உச்சம் தொட்ட அந்தக் குழந்தைகள், ஆதிவாசி மக்களுக்குச் சில நாடகங்களையும் நடித்துக் காட்டினார்கள். மூன்றாம் நாள் மாலை ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்றதும், “இன்னும் ரெண்டு நாளைக்கு இருந்துட்டுப் போலாம் சார்” என்று ஏக்கத்துடன் கேட்டார்கள். சில குழந்தைகள் கண் கலங்கி அழுதே விட்டார்கள்.

“இயற்கையோடு இணைந்த வாழ்க்கை குழந்தைகளை எந்த அளவுக்கு மகிழ்வித்திருக்கிறது என்பதை அந்தத் தருணத்தில் முழுமையாக உள்வாங்க முடிந்தது” என்று சொல்லும் தனராஜ்,

“சிறுவயதில் நமக்குக் கிடைத்த இயற்கையின் கொடைகள், இப்போது நம் குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை. நம் குழந்தைகளுக்குக் கிடைக்கும் ஒரு சிலவும் அவர்களின் குழந்தைகளுக்குக் கிடைக்குமா என்பதும் சந்தேகமே.

போர்வை, தலையணைகூட இல்லாமல் ஆதிவாசி மக்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள். ஆனால், நமக்கு ஏ.சி. போட்டாலும் தூக்கம் வர மறுக்கிறது. இதையெல்லாம் எங்களோடு வந்த குழந்தைகளுக்கு அனுபவ ரீதியாகப் புரிய வைத்தோம். அவர்கள் இனி நிச்சயம் இயற்கை சார்ந்து வாழப் பழகுவார்கள். குழந்தைகள் மத்தியில் மாற்றம் வந்தால், அது சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று சொன்னார் தன்ராஜ்.

முகாம் அனுபவம் குறித்து மாணவர் திருமலை நிறைய விஷயங்களைச் சொன்னார். “விலங்குகளுக்கு மத்தியில் வாழும் ஆதிவாசி மக்கள் விலங்குகளோடு பேசுகிறார்கள். கஷ்டப் பட்டாலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார்கள். கடுமையாக உழைத்து, கிடைப்பதை பகிர்ந்து சாப்பிடுகிறார்கள். இயற்கையை ரசிக்கவும், மாசுபடுத்தக் கூடாது என்பதை அந்த மக்களிடம் நாங்கள் கற்றுக்கொண்டோம்” என்றார்.

இது சமர்த்தான முகாம்தான் இல்லையா?


TNTET: ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் தடை விலகியது; நியமனப்பட்டியல் வெளியாக வாய்ப்பு..

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எதிர்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகளாக தடை நீடித்திருந்த நிலையில்

கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது சிறப்பாக வாதாடிய முதன்மை வழக்கறிஞர்.மாண்புமிகு.லஜபதிராய் அவர்கள் தடையாணையை உடைத்து எந்ததரபிற்க்கும் பாதிக்காதமுறையிலும் இனி ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் நிரப்ப தடையேதும் இல்லை என ஆணை பெற்று நீதியை பெற்றுத்தந்தார். .

பின்பு கடந்த 9-5-16 அன்று சென்னைக்கு  தோழர் .மதுரை ராஜ்குமார்,தலைமையில் திருமதி.சாந்தி மற்றும் திருமதி.ஹேமா, நண்பர்.பாஸ்கரன் மற்றும் சிலர்  அன்றைய  தினத்தன்று காலை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் சென்று கோரிக்கை மனுவுடன் வழக்கி நீதிமன்ற ஆணை அசல் சான்றை அங்குள்ள உயர் அதிகாரிகளின் பார்வைக்கு காண்பித்து பின் வழக்கை பின் தொடரும் அரசு அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளனர் பின் அவர்கள் தங்களிடம் TRB தேர்வுபட்டியல் வெளியிட்டால் நாங்கள் எங்கள் பணியை மேற்கொள்வோம் என தெரிவித்தனர்.பின் அங்கிருந்து தலைமைச்செயலகம் சென்று திரு.அண்ணாமலை அவர்களை சந்தித்து மனுவுடன் வழக்கின் சான்றிதழ் நகலும் வழங்கப்பட்டது அவர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக தொரிவித்தார்.

பின் அங்கிருந்து TRB அலுவலகம் சென்று TRB உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு கொடுத்து அவர்களிடமே நீதிமன்ற ஆணை அசல் உண்மை சான்றிதழ் வழங்கப்பட்டது.அவர்களிடம் நம் நிலைகுறித்தும் விளக்கப்பட்டது.பின் அவர்கள் விரைவில் முழுமையான தேர்வுபட்டியல் வெளியிட நடவடிக்கை மேற்கொள்கிறோம் என உறுதியளித்தனர்

ஆகவே ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகளின் மீதமுள்ள 30%சதவீத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப்பட்டியல் எப்போது வேண்டுமானாலும் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது...

சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கை தடைக்கு நீதிமன்றம் தடை !

சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கை ரத்து செய்து யுஜிசி உத்தரவிட்டுள்ளது. ‘இதுகுறித்து நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும்’ என பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார். சேலம், கருப்பூரில் கடந்த 1997-ம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகம் 
தொடங்கப்பட்டது. இங்கு 2001-ம் ஆண்டு 96 பாடப் பிரிவுகளுடன் தொலைதூரக் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, 156 பாடத் திட்டம் மற்றும் பல்கலைக் கழக தொழில் கூட்டுத் திட்டம் மூலம் 12 கல்வி நிலையங்களில் தொழில்சார் பாடப் பிரிவுகளும் உள்ளன. தொடக்கத்தில் தமிழகத்தில் 210 மையங்களும், பிற மாநிலங்களில் 70 மையங்களும், வெளிநாடுகளில் 6 மையங்கள் மூலம் மாணவர் சேர்க்கை நடந்தது. தற்போது, 350 மையங்கள் மூலம் 55 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். யுஜிசி வகுத்துள்ள விதிமுறைப் படி பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட மாவட்டங்களிலும், மாநிலங்களிலம் மையங்கள் தொடங்க முன்னுரிமை அளிக்கப் படுகிறது. பிறமாநிலங்கள், வெளி நாடுகளில் புதியதாக மையங்கள் தொடங்கக் கூடாது என யுஜிசி அறிவுறுத்தியது. இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகம் வெளி மாநிலங் களில் கூடுதலாக மையங்கள் தொடங்கியிருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 2014-15ம் ஆண்டு யுஜிசி மாணவர் சேர்க்கை அங்கீகாரம் வழங்க வில்லை.
இந்நிலையில் நடப் பாண்டு (2016-17) மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக அறிந்த யுஜிசி, பெரியார் பல்லைக்கழக தொலைதூர கல்வி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீ காரம் ரத்து செய்துள்ளதால், மாணவர்களை சேர்க்க வேண்டாம் என கடிதம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் கூறியதாவது: பிற மாநிலங்களில் பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்ட மையம் தொடங்க கூடாது என யுஜிசி கடந்த ஆண்டு கடிதம் அனுப்பியிருந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் பிற மாநிலங்களில் தொலைதூரக் கல்வி திட்டம் மூலம் மாணவர்கள் சேர்ப்பது நடைமுறையில் உள்ளது. இதுகுறித்து கடந்த 6 மாதத்துக்கு முன்பே நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, ‘உள்ளது உள்ளபடியான’ முறையில் தொலைதூரக் கல்வி திட்டத்தை நடத்திக்கொள்ள உத்தரவு பெற்றுள்ளோம். இதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், தொலைதூரக் கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீ காரம் ரத்து செய்துள்ளதாக யுஜிசி மீண்டும் அறிவித்துள்ளது. இதுவரை 21 ஆயிரம் மாணவர்களை சேர்த்துள்ளோம். இருப்பினும் கடந்த 3 நாட்களாக மாணவர் சேர்க்கை நிறுத்தியுள்ளோம். இப்பிரச்சினைக்கு தீர்வு காண மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடி, அதன் வழிகாட்டுதலின்படி, மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், தொலை தூரக் கல்வி திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர்களின் கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

12.5.16) Po,p1 காலை மற்றும் Po2, Po3, P05 பிற்பகல் பயிற்சி என திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்

எந்தெந்த காரணங்களுக்காக தபால் ஓட்டு நிராகரிக்கப்படும்?

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. இதில், தபால் வாக்குகளை பெறுவதற்கான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தபால் வாக்குகளை பெறும் நேரம் நாளை மாலை 5 மணியுடன் முடிகிறது. படிவம் 13சி உறை முதலில் பிரிக்கப்பட்டு, அதனுள் 13ஏ படிவம் இருக்க வேண்டும். 

இல்லையென்றால் நிராகரிக்கப்படும். படிவம் 13 ஏவில் வாக்காளரின் கையெழுத்து மற்றும் கெசட் பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பம் இருக்க வேண்டும். இல்லையென்றால் நிராகரிக்கப்படும். சரியாக உள்ள படிவம் 13ஏ மட்டும் தனி உறையில் வைக்கப்படும். சம்மந்தப்பட்ட உறையில்தான் வாக்குச்சீட்டு இருக்கவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குச்சீட்டுகள் இருந்தால் நிராகரிக்கப்படும்.

Election-2016 17 A பதிவேட்டில் வாக்காளர்கள் பயன்படுத்தும் அடையாள அட்டையின் சுருக்கக் குறியீடுகள்.

விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்களும் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் நாளிதழில் வெளியான செய்திக்கு முற்றுப்புள்ளி

செல்பேசி அழைப்பு துண்டிப்புக்கு இனி இழப்பீடுகிடைக்காது: டிராய் சட்டத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

புது தில்லி :அலைபேசி அழைப்புகள் தானாக துண்டிக்கப்படுவதற்கு இழப்பீடு வழங்குவதை கட்டாயப்படுத்திய டிராய் சட்டத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.தொலைத்தொடர்பு  நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அழைப்பு முறிவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று டிராய் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டால் இழப்பீடு வழங்க வலியுறுத்தும் டிராய் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர்.

நாளை 3. ம் கட்ட பயிற்சியின் போது ( 12.5.16) தபால் வாக்கு அளிக்க எடுத்து வரவேண்டிய ஆவணங்கள் - விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்

அண்ணாமலைப் பல்கலை: பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்முறை தொடக்கம்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ., பிஎஸ்சி வேளாண்மை, 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்ட படிப்புகள், பி.எஃப்.எஸ்சி பட்ட படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை துணைவேந்தர் பேராசிரியர்செ.மணியன் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பதிவாளர் கே.ஆறுமுகம், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ராம.சந்திரசேகரன், சிண்டிகேட் உறுப்பினர் கே.கதிரேசன், புல முதல்வர்கள் டாக்டர் என்.சிதம்பரம், ராஜேந்திரன், கல்வி திட்ட இயக்குநர் மணிவண்ணன், நெறி முறை அலுவலர் டி.ரங்கசாமி, ஒருங்கிணைப்பாளர் டி.ராம்குமார், மக்கள்-தொடர்பு அலுவலகமேலாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர் துணைவேந்தர் செ.மணியன் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: பிஇ, பிஎஸ்சி வேளாம்மை, 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் (5 year Integrated Coureses), பி.எஃப்.எஸ்சி (Batchalor of Fisheries Science) ஆகிய படிப்புகளுக்கு ஆன்மூலம் விண்ணப்பிக்கும் முறை புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க கடைசி 10-6-2016 ஆகும். பிஇ பட்டப்படிப்பில் சிவில், சிவில் அன்ட் ஸ்டெர்க்சரல், மெக்கானிக்கல், மேனுபேக்கசரிங் இன்ஜினியரிங், எலக்டிர்கல் எலக்டிரானிக்ஸ், எலக்டிரானிக் கம்யூனிக்கேஷன், எலக்டிரானிக் இன்ஸ்டிருமெண்டேஷன், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், தகவல்-தொழில்நுட்பம் ஆகிய 12 பிரிவுகளுக்கு மொத்தம் 810 பேர் அனுமதி சேர்க்கை செய்யப்படவுள்ளனர்.பிஎஸ்சி வேளாண்மை படிப்பிற்கு ஆயிரம் பேரும், பிஎஸ்சி தோட்டக்கலை படிப்பிற்கு 70 பேரும்,  பேட்சுலர் ஆஃப் பிஷ்ஷரிஸ் சயன்ஸ் (B.F.Sc) படிப்பிற்கு 30 பேரும், 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புகளான 25 படிப்புகளுக்கு தலா 30 பேரும் அனுமதி சேர்க்கை செய்யப்படுவார்கள். தமிழகஅரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் மூலம் மாணவ, மாணவர்கள் அனுமதிசேர்க்கை செய்யப்படுவார்கள். 

மருத்துவம், பல் மருத்துவம், பார்மசி ஆகிய படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.பிஇ., பிஎஸ்சி வேளாண்மை, பி.எஃப்.எஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பம் விலை ரூ.800, எஸ்சி., எஸ்டி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.400. 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்ப விலை ரூ.400. எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.200 ஆகும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.annamalaiuniversity.ac.in என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார்.

ஆணையத்துக்காக அல்லல்பட வேண்டுமா? கொந்தளிக்கும் ஆசிரியர்கள்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அவர்களின் அடிப்படை தேவைகளை தேர்தல் ஆணையம் நிறைவேற்றவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 

தற்போது வாட்ஸ் அப்பில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக செய்தி ஒன்று பரவி வருகிறது.அதில், தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற நமக்கு தேர்தல் ஆணையம் ஊதியம் வழங்குகிறது, ஆனால் உணவு வழங்குகிறதா?. இரண்டு நாட்கள் தேர்தல் பணி புரிகின்ற நமக்கு உணவு கிடைக்க என்ன ஏற்பாடு செய்யப்படுகிறது.?  இதற்கு எந்த அலுவலர் பொறுப்பேற்கிறார்..?தேர்தல் பணி பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை நிறுத்திவைப்பதற்கு   உத்தரவிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கும்போது, நமது அடிப்படை வசதியான உணவும், குடிநீரும் தடையின்றி நமக்கு கிடைக்கச் செய்ய ஏன் தேர்தல் ஆணையம் வழி வகை செய்யவில்லை..?காலை 6 மணி முதல் இரவு பெட்டி எடுக்கும் வரை நாம் பணியாற்ற வேண்டும். 

இதில் சிறுநீர் கழிப்பதற்கோ, உணவு உண்பதற்கோ என்று இடைவெளி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதா...? சிறுநீர் கழிக்க 5 முதல் 10 நிமிடம் காலை மற்றும் மாலையிலும் உணவு உண்ண 15நிமிடம் காலை மற்றும் மதியம் இரு வேளையும் ஏன் நமக்காக ஒதுக்கப்படக் கூடாது?நமக்கு உணவு ஏற்பாடு செய்து தரப்போவது யார்? நமக்கு யாரும் இலவசமாக உணவு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. சுகாதாரமான உணவும், குடிநீரும் தர வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை அல்லவா..?நம்மில் எத்தனை பேர் நல்ல உணவு கிடைக்காமலும் மற்றும் கிடைத்த உணவை உண்ண நேரமில்லாமலும் இன்னும் எத்தனை தேர்தல்களில்  பட்டினியாக பணியாற்றுவது? இனியும் தொடர வேண்டுமா இந்த அவலம்?

7-5-16 மற்றும் 12-5-16 பயிற்சிகளின் போது அனைத்து ஆசிரியர்களும், தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பயிற்சி மையங்களிலும் நமது இந்த இரண்டுகோரிக்கைகளை நிறைவேற்ற நாம் ஒன்றிணைந்து வலியுறுத்துவோம்..

* உணவும், குடிநீரும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

* உணவு இடைவேளை மற்றும் இயற்கை உபாதைகளை கழிக்க இடைவேளை அளிக்க வேண்டும்.

* பெண் ஆசிரியர்களை அந்தந்த தொகுதிகளுக்குள்ளேயே நியமனம் செய்ய வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை.

ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆணையம் கவனிக்குமா?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் என்ஜினீயர்,விஞ்ஞானி பணியிடங்கள்.!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) என்ஜினீயர்,விஞ்ஞானி பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.மொத்தம் 375 விஞ்ஞானி,என்ஜினீயர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. 

இந்தப் பணியில் சேர பி.இ.,அல்லது பி.டெக் அல்லது அதற்கு ஈ டான படிப்பை படித்திருக்கவேண்டும். மேலும்65சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது35-க்கு மிகாமல் இருக்கவேண்டும். ஊதியமாக ரூ.15,600முதல் ரூ.39,100பிளஸ் ரூ.5,400என்ற அடிப்படையில் தரப்படும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100வசூலிக்கப்படும். பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மட்டுமே கட்டணம் பெறப்படும். பெண்கள் மற்றும் இதர பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. 

இந்த வேலையில் ஆன்-லைனில் விண்ணப்பங்களை மே25-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை3-ம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு http://www.isro.gov.in/careers என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

ஸ்லெட் தேர்வு ‘கீ ஆன்ஸர்’ இணையதளத்தில் வெளியீடு.

ஸ்லெட்’ தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ மற்றும் சிஎஸ்ஆர் நெட் தேர்வுகளைப் போன்று இல்லாமல் தேர்வு எழுதியவர்கள் மட்டுமே கீ ஆன்சரை பார்க்க முடியும். தமிழகத்தில் மாநில அளவிலான தகுதித் தேர்வு (ஸ்லெட்) கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி சென்னை, மதுரை, கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது.

57 ஆயிரம் முதுகலை பட்டதாரிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில், தேர்வுக்கான உத்தேச விடைகள் இணையதளத் தில்(www.setexam2016.in) வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ மற்றும் சிஎஸ்ஐஆர் அமைப்புகள் நடத்தும் அகில இந்திய அளவிலான நெட் தேர்வைப் போல் அல்லாமல் தேர்வர்கள்மட்டும் உத்தேச விடைகளை பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (நெட் தேர்வுக்கான உத்தேச விடைகள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்படும்). 

தேர்வர்கள் தங்கள் பதிவெண், மொபைல் எண், இ-மெயில் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு கீ ஆன் ஸரை தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் குறித்து கொடைக்கா னல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளரும், ஸ்லெட் தேர்வுக் குழு செயலாளரு மான பேராசிரியை என்.கலாவிடம் கேட்டபோது, “தற்போது கீ ஆன்ஸர் வெளி யிட்டுள்ளோம். பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அதிகாரி களுடன் கலந்தாலோசனை செய்து விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்” என்றார்.

டி.இ.டி., தனித் தேர்வர்கள் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: டி.இ.டி., (தொடக்க கல்வி பட்டய தேர்வு) எழுத தனித் தேர்வர்கள் வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனமுதல்வர் மூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தொடக்க கல்வி பட்டய தேர்வு (டி.இ.டி.,) ஜூன் மாதம் நடக்கிறது. இத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், 'Google-ல் சென்று, Address barல் 218.248.44.57/diet என டைப் செய்து, விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.இணைய தளத்தின் பக்கம் 1 முதல் 4 வரை அறிவுரைகளையும் பதிவிறக்கம் செய்து, அதன்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

தேர்வரின் தகுதி மற் றும் அறிவுரைகளை பின்பற்றி, பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன், ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப் பெண் சான்றிதழ்களின் நகலை இணைத்து, புதுச்சேரி லாஸ்பேட்டை கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், கம்ப்யூட்டர் புகைப்பட கருவிகள் மூலமாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்துள்ளதால் அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்த பின் அங்கேயே தேர்வு கட்டணம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 14ம் தேதி மாலை 5:00 மணி வரை சமர்ப்பிக்கலாம். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!