Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 12 May 2016

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்'முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்!'

முள்ளங்கி வெள்ளை, சிவப்பு, ஊதா அல்லது கருப்பு ஆகிய நிறங்களில் இருக்கின்றன. மற்றும் இது வடிவம் வகையில்,  நீண்ட மற்றும் உருளை அல்லது வட்ட வடிவிலும் இருக்கிறது. முள்ளங்கி விதைகளில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் பொருட்கள் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். முள்ளங்கியின் அறிவியல் பெயர் ரபானஸ் சடைவஸ் என்பதாகும். இது பிராசிகாசியா தாவர குடும்பத்தை சேர்ந்தது.

தினம் ஒரு புத்தகம்"உலகம் சுற்றலாம் வாங்க "


கோவை பாரதியார் பல்கலையில் சிறப்பு ஆராய்ச்சி மையம்


அமெரிக்காவில் பணியாற்றும் சென்னை ஆசிரியைக்கு ஒபாமா அளித்த கவுரவம்


யாருக்கு வாக்கு? உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆய்வு.

"யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்களை சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் பி.சந்திரமோகன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.அண்ணா நகர் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 258 வாக்குச்சாவடிகளில் அமைக்கப்படும் இந்த இயந்திரங்களின் மூலம், வாக்களிப்போர் தாங்கள் யாருக்கு அளித்தார்கள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

நாட்டில் உலா வரும் 22 போலி பல்கலை.கள்...! மத்திய அமைச்சகம் அளித்த அதிர்ச்சி லிஸ்ட்....!!

நாட்டில் போலியாக 22 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக ராஜ்யசபையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.இதுதொடர்பாக அவையில் அவர் தெரிவித்ததாவது:

உங்கள் வாக்குச்சாவடியை எஸ்.எம்.எஸ். மூலம் அறிய வசதி

உங்கள் வாக்குச்சாவடி விவரத்தை எஸ்.எம்.எஸ். மூலம் எளிதில் அறிந்துகொள்ள வழிவகுக்கப்பட்டுள்ளது.அதற்கான எளிய வழி இதுதான்:உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை மட்டும் டைப் செய்து'1950'என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள். உடனே உங்களுக்கு எஸ்.எம்.எஸ். வரும்.

அரசு பள்ளிகளில் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்க்க கூடாது-கல்வி அதிகாரிகள் உத்தரவு.


ஆயிரம் ரூபாய் நோட்டில் அச்சாகிறது 'ஆர்' : ரிசர்வ் பேங்க் அறிமுகம்.

புது தில்லி :இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரிசர்வ் பேங்க ஆப் இந்தியா ஏராளமான புதிய யுக்திகளைக் கையாண்டு வருகிறது.அந்த வகையில், தற்போது ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் ஆர் என்ற ஆங்கில எழுத்தை அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி அலுவர்கள் வாக்குச்சாவடிக்குள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!!!


பறக்கும் படையில் ஆசிரியர்கள்....

பறக்கும் படையில் ஆசிரியர்கள்....
                                                  வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு இன்று முதல் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் மற்றும் ஒரு காவலர் அடங்கிய ஒரு  சிறப்பு பறக்கும் படை
அமைக்கப்பட்டுள்ளது.. இந்தக் குழு இன்று முதல் 14 ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் பணியாற்ற நேற்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆணை வழங்கப்பட்டுள்ளது..

ஐ.டி., நிறுவனங்கள் டிமிக்கி தேர்தல் கமிஷன் விசாரணை !

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தேர்தல் நாளன்று, ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காமல், தேர்தல் கமிஷனை ஏமாற்ற முயற்சிப்பது குறித்து விசாரணை நடத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
'வரும், 16ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, அன்றைய தினம், அனைத்து நிறுவனங்களும், தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

போலீசாரின் தபால் ஓட்டுகள் அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவு !

போலீசாரின் தபால் ஓட்டு முடிவுகள், அ.தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன.

நோட்டாவால் தேர்தல் ரத்தாகுமா? தேர்தல் கமிஷன் பதிலளிக்க உத்தரவு !

பெரும்பான்மை ஓட்டுகள், 'நோட்டா'வுக்கு கிடைத்தால், தேர்தலை ரத்து செய்யும் வகையில், புதிய விதிகள் வகுக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை !

அனைவரும் ஓட்டு அளிக்க வசதியாக, சட்டசபை தேர்தல் ஓட்டுப் பதிவு நாளான, 16ம் தேதி, சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்' என, அரசு அறிவுறுத்தி உள்ளது.

பூத் சிலிப் வினியோகத்தில் மெத்தனம் 100 சதவீத இலக்குக்கு வேட்டு!

வாக்காளர்களுக்கு, 'பூத் சிலிப்' வழங்குவதில் பெறும்
குளறுபடி நீடிக்கிறது. இதனால், ஓட்டுப்பதிவில் நுாறு சதவீத இலக்கை அடைவது சந்தேகமாகியுள்ளது.

தமிழக தேர்தல் 2016 - அறிந்திட 13 அடிப்படைத் தகவல்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 16.05.2016-ல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் தொடர்பான சில முக்கிய புள்ளிவிவரங்களை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

கல்வி தகுதி முறைகேடு புகார்: புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜினாமா

கல்வி தகுதி முறைகேடு புகாரில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி ராஜினாமா செய்வதாக கூறி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் மத்திய அரசின் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் துணைவேந்தராக சந்திரா கிருஷ்ணமூர்த்தி இருந்து வந்தார். இவர் 2013–ம் ஆண்டு பிப்ரவரி 1–ந் தேதி புதுவை துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

P -2 அலுவலரால் பராமரிக்கப்படும் FORM 17A

பதற்றமான ஓட்டுச்சாவடியில் அரசியல் பேசினால்'அலாரம்'

பதற்றமான ஓட்டுச்சாவடிக்குள் தேவையின்றி பேசிக்கொண்டிருந்தால், கட்டுப்பாட்டு அறைக்கு, 'அலாரம்' வாயிலாக தெரிவிக்கும் புதிய தொழில்நுட்பம், வரும் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது.வரும் சட்டசபை தேர்தலில், பதற்றமான ஓட்டுச் சாவடிகளை, வழக்கம்போல், 'வெப் கேமரா' மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சொந்தமாக 'லேப்-டாப்' வைத்துள்ள, கல்லுாரி மாணவ, மாணவியர், இளைஞர்கள், இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.வழக்கமாக, 'வீடியோ' பதிவு மூலம், ஓட்டுச்சாவடி கண்காணிக்கப்படும். தற்போது, ஓட்டுச்சாவடிக்குள் தேவையின்றி அரசியல் பேசுவதை, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கவும், 'வெப் கேமரா' வாயிலாக சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது.தேவையின்றி பேச்சுகள் எழும்போது, மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கும், ஓட்டுச்சாவடிதலைமை அலுவலரின் மொபைல் போனுக்கும், 'அலாரம்' அடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஓட்டுப்பதிவிற்கு மாற்று ஆவணங்களின் பட்டியல்... வெளிநாடு வாழ் வாக்காளருக்கு பாஸ்போர்ட் கட்டாயம்

புதுச்சேரி:வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டையை ஓட்டுச் சாவடியில் காண்பிக்க இயலாதவர்கள், புகைப்படம்உள்ள ௧௧ ஆவணங்களில் ஒன்றை தங்களின் அடையாளத்தை நிரூபிக்க பயன்படுத்தலாம்' என்று தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு கூறியுள்ளார்.ஓட்டுச்சாவடிக்கு எந்தெந்த ஆவணங்களை கொண்டு செல்லலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு கூறியிருப்பதாவது:

வாக்காளர் ஆள் மாறாட்டத்தை தடுக்கவும், வாக்காளர் கள்தங்கள் அடையாளத்தை நிரூபிக்கவும், ஓட்டளிக்க செல்லும்போது, தங்கள் புகைப்பட அட்டையை காண்பிக்க வேண்டும்.அவ்வாறு காண்பிக்க தவறுதல் அல்லது மறுத்தல் அவர் கள் வாக்களிப்பதை மறுக்கும் நிலைக்கு இட்டு செல்லும்.எனவே, ஓட்டளிக்க வாக்களர் பட்டியலில் பெயர் இருப்பதும், புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதும்அவசியம். இதன்படி புதுச்சேரியில் பதிவு செய்திருந்த அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்பட வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.தற்போது அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட வாக்காளர் சீட்டு அளிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.அவ்வாறு செய்ய இயலாதவர்கள் மாற்றாக புகைப்படம் உள்ள பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசு சார் பொது நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் இவற்றால் அளிக்கப்பட்ட புகைப்படம் உள்ள பணியிட அடையாள அட்டைகள். வங்கி, அஞ்சல் அலுவலகத்தால் அளிக்கப்பட்ட புகைப்படம் உள்ள கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றை அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்.மேலும், பான் கார்டு, என்.பி.ஆரின் கீழ் ஆர்.ஜி.ஐ.,யினால் அளிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, எம்.என்.ஆன்.இ.ஜி.ஏ. பணிநிலை அட்டை, தொழிலாளர் நலத்துறையின் திட்டத்தில் அளிக்கப்பட்ட நலவாழ்வு காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படம் உள்ள ஓய்வூதிய ஆவணம், தேர்தல் நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட ஓட்டுச்சீட்டு, பாராளுமன்ற, சட்டசபை, சட்ட மேலவை உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட அலுவல் அடையாள அட்டைகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

வாக்காளரின் அடையாளம், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை மூலம் நிறுவப்பட்டால் அதிலுள்ள எழுத்து பிழைகள் போன்றவை புறக்கணிக்கப்படலாம். மேலும் மற்றொரு தொகுதி யின் வாக்காளர் பதிவு அதிகாரியால் அளிக்கப்பட்ட புகைப்பட வாக்காளர் அட்டை காண்பிக்கப்பட்டால் அவ்வாக்காளர் ஓட்டுளிக்க வரும் போது ஓட்டுச்சாவடிக்கு தொடர்புடைய வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர் இருக்கும் பட்சத்தில் அவ்வகையான புகைப்பட அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.புகைப்படம் ஒற்றுமையில்லாத சூழலில் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க இயலாவிட்டால் மேற்கண்ட மாற்று ஆவணங்களில் ஒன்றை வாக்காளர் காண்பிக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (20 ஏ)ன் படி பாஸ்போர்ட்டின் அடிப்படையில் வாக்காளராக பதிவு செய்துள்ள வெளிநாடு வாழ் வாக்காளர்கள் தங்களுடைய ஒரிஜினல் பாஸ்போர்ட்டுடன் மட்டுமே அடையாளம் காணப்படுவர். வேறு எந்தவித அடையாள ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படாதுஇவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்துள்ளார்.

பெரியார் பல்கலையில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்

பெரியார் பல்கலை தொலைநிலைக் கல்விக்கு அங்கீகாரம் இல்லாததால், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை, பல்கலை நிர்வாகம் நிறுத்தி உள்ளது.பெரியார் பல்கலை தொலைநிலைக் கல்வியை வழங்கும்,'பிரைடு' அமைப்பு, 2001ம் ஆண்டு துவங்கப்பட்டது.
இதில், 156 பாடத் திட்டங்களில், தமிழகத்தில், 210 மையங்களிலும்; பிற மாநிலங்களில், 70 மையங்களிலும்; வெளிநாடுகளில், ஆறு மையங்களிலும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில், 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.பல நிபந்தனைகள்பல்கலை மானியக்குழு, கடந்த பல ஆண்டுகளாக, வெளிமாநிலங்களில் மையங்களோ, தொலைதுாரக் கல்வியோ வழங்குவதை நிறுத்த வேண்டும். தொழில்சார் பாடப் பிரிவுகள் தொலைநிலைக் கல்வியில் வழங்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகிறது.இவற்றை பெரியார் பல்கலை பின்பற்றாததால், பல்கலை மானியக்குழு, 2014 - 15ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை வழங்கவில்லை. மேலும், 2015 ஆகஸ்ட், 27ம் தேதியிட்ட கடிதத்தில், 2015 - 16க்கான மாணவர் சேர்க்கையை நிறுத்துமாறு, அறிவுறுத்தியுள்ளது.

பல்கலை மானிய குழு

ஆனாலும், தொடர்ந்து தொலைநிலைக் கல்வியில் மாணவர் சேர்க்கையை நிறுத்தாமல், நடத்தி வந்ததால், பல்கலை மானியக்குழு, 'பெரியார் பல்கலை தொலைதுாரக் கல்வியில், மாணவர்கள் சேர வேண்டாம்' என, 'பப்ளிக் நோட்டீஸ்' வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தற்போது பெரியார் பல்கலை தொலை நிலைக் கல்வியில், மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில், 25 ஆயிரம் மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றம் மூலம் தீர்வு

மாணவர் சேர்க்கை நிறுத்தம் குறித்து பெரியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் கூறியதாவது: பிற மாநிலங்களில் தொலைநிலைக் கல்வி திட்ட மையம் துவங்கக்கூடாது என, பல்கலை மானியக்குழு, கடந்த ஆண்டு அறிவுறுத்தியது. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும், பிற மாநிலங்களிலும் தொலைதுாரக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இது குறித்து ஆறு மாதத்துக்கு முன், நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தொலைதுாரக் கல்வித் திட்டத்தை தொடர உத்தரவு பெற்றுள்ளோம். தற்போது பெரியார் தொலைநிலைக் கல்வியில், மாணவர்கள் சேர வேண்டாம் என, பல்கலை மானியக்குழுஅறிவித்துள்ளது.

இதனால், தற்போது மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான பதில் கடிதம், மானியக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உரிய கால அவகாசத்துக்குள் அவர்கள் பதில் அளிக்காத நிலையில், நீதிமன்றம் மூலம் இதற்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

நோட்டா வாக்குகள்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

வெற்றி பெற்ற வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட நோட்டாவில் பதிவாகும் வாக்குகள் அதிகமாக இருந்தால் அந்த தேர்தலை ரத்து செய்துவி்ட்டு மறுதேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய் யப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சென்னையைச் சேர்ந்த வழக்க றிஞர் டி.துரைவாசு என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனுவில்,

‘நோட்டாவில் பதிவாகும் வாக்குகள், வெற்றி பெறும் வேட்பாளர் பெறும் வாக்கு களை விட அதிகமாக இருந்தால், அந்த தேர்தலை செல்லாது என அறிவித்து மறு தேர்தல் நடத்தும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். அதேபோல மருத்துவமனை மற்றும் வீடுகளில் படுத்த படுக்கையாக இருக்கும் வாக்காளர்களுக்கு தபால் ஓட்டு அளிக்க உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று விடுமுறை கால நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.வி.முரளித ரன் ஆகியோர் முன்பு நடந்தது. அப்போது நீதிபதிகள் நோட்டாவில் பதிவாகும் வாக்குகள் அதிகமாக இருந்தால் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்பே ாகிறது என்பது குறித்து விரிவாக பதிலளிக்க உத்தரவிட்டனர்.

எம்.பார்ம், முதுநிலை இயன்முறை படிப்புகளுக்கு 18-இல் கலந்தாய்வு

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட அரசு, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்ட்டில் உள்ள முதுநிலை இயன்முறை மருத்துவம், எம்.பார்ம் ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு மே 18-இல் (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவக் கல்வி இயக்ககத்தில் உள்ள தேர்வுக் குழு அலுவலகத்தில் இந்தக் கலந்தாய்வு நடைபெறும்.  முதுநிலை இயன்முறை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு காலை 10 மணிக்கும், எம்.பார்ம்படிப்புக்கான கலந்தாய்வு காலை 10.30 மணிக்கும் தொடங்குகிறது.பங்கேற்பாளர்களுக்கான அழைப்புக் கடிதத்தை www.tnhealth.org எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இன்று முதல் முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு

சென்னையில் வியாழக்கிழமை (மே 12) தொடங்கவுள்ளது.முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள் நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவம் ஆகியவற்றில்2016-2018-ஆம் கல்வியாண்டுக்கு மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2-ஆம் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில், அரசு கல்லூரி இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 854 இடங்களில் 751 இடங்கள் நிரம்பின.மீதம் உள்ள 103 இடங்களுக்கு மே 12, 13 ஆகிய தேதிகளில் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.

தமிழக அரசின் பயிற்சி மையத்தில் படித்து 42 பேர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...!!

தமிழக அரசு நடத்தி வரும் குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து 42 பேர் ஐஏஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் பயிற்சி மையத்தை தமிழக அரசு தொடங்கியது.

இந்த மையத்துக்கு தமிழக அரசு இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த மையத்தில் படித்து தான் 42 பேர் இறுதித் தேர்வில் தகுதி பெற்று ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.இதுகுறித்து தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மைத்தின் முதல்வர் எம். ரவிச்சந்திரன் கூறியது:2015-ஆம் ஆண்டு குடிமைப் பணிகளுக்கானத் தேர்வில் தமிழக அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 42 பேர்தேர்ச்சி பெற்று, ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இதில், அகில இந்திய அளவில் 7-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சரண்யா ஹரியும் தமிழக அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது என்றார். இந்த 42 பேரில் 30 பேர் பொறியியல் பட்டதாரிகள் ஆவர் என்றார் அவர்.

தேர்தல் பணியால் ஆசிரியர்கள் அவஸ்தை.

தேர்தல் பணிகளில், ஆண், பெண் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஓட்டுச்சாவடி அதிகாரி, அலுவலர் பணிகளில், பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர். இவர்கள், வரும் 15ம் தேதி முதல், 16ம் தேதி இரவு வரை, தேர்தல் பணியாற்ற வேண்டும். இதற்கான உத்தரவுகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுஉள்ளன.

அதில், சில ஆசிரியைகளுக்கு, அவர்களது வீட்டிலிருந்து, 80 கி.மீ., துாரத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளில், பணி ஒதுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணிக்கு முடிந்து, மின்னணு ஓட்டுப் பெட்டிகளை, ஓட்டு எண்ணும் மையத்துக்கு அனுப்ப, இரவு 9:00 மணி ஆகிவிடும்.அதன்பின், நகர்ப்புறம் அல்லாத மற்ற பகுதிகளிலிருந்து, வீடுகளுக்கு திரும்ப போக்குவரத்து வசதி கிடைக்காது. பணி முடித்து, வீட்டுக்கு வந்து சேர நள்ளிரவை தாண்டி விடும் என்பதால், அவர்கள் அச்சமடைந்து உள்ளனர்.இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:தேர்தல் பணிக்கான சம்பளம், மிக குறைவாக இருந்தாலும், ஜனநாயக கடமை என்ற அடிப்படையில், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால், பணி இடங்களை ஒதுக்குவதில், அதிகாரிகள் உரியவிதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. இதனால், 80 கி.மீ., துாரத்தில், தேர்தல் பணி ஒதுக்கப்படுவதால், பெண் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இரவில், தாமதமாக தேர்தல் பணி முடியும் நிலையில், அவர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதி களை,தேர்தல் அதிகாரிகள் செய்து கொடுப்பதில்லை.இதேபோல், காலை 5:00 மணிக்கு, தேர்தல் பணி துவங்கும் நிலையில், இரவு 7:00 மணிக்கு முடியும் வரையில், ஆசிரியர்களுக்கு எந்த இடைவேளையும் ஒதுக்கப்படுவதில்லை. அதனால், கழிப்பறைக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, தேர்தல் பணியில் அவர்களது கவனம் சிதறும் நிலை உள்ளது. எனவே, உரிய வசதிகள் செய்து தரவும், மாற்று பணியாளர்கள் நியமித்து, ஆசிரியர்களுக்கு சில நிமிடங்கள் இடைப்பட்ட ஓய்வு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணாமலைப் பல்கலை: பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்முறை தொடக்கம்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ., பிஎஸ்சி வேளாண்மை, 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்ட படிப்புகள், பி.எஃப்.எஸ்சி பட்ட படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை துணைவேந்தர் பேராசிரியர்செ.மணியன் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பதிவாளர் கே.ஆறுமுகம், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ராம.சந்திரசேகரன், சிண்டிகேட் உறுப்பினர் கே.கதிரேசன், புல முதல்வர்கள் டாக்டர் என்.சிதம்பரம், ராஜேந்திரன், கல்வி திட்ட இயக்குநர் மணிவண்ணன், நெறி முறை அலுவலர் டி.ரங்கசாமி, ஒருங்கிணைப்பாளர் டி.ராம்குமார், மக்கள்-தொடர்பு அலுவலகமேலாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர் துணைவேந்தர் செ.மணியன் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: பிஇ, பிஎஸ்சி வேளாம்மை, 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் (5 year Integrated Coureses), பி.எஃப்.எஸ்சி (Batchalor of Fisheries Science) ஆகிய படிப்புகளுக்கு ஆன்மூலம் விண்ணப்பிக்கும் முறை புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி 10-6-2016 ஆகும். பிஇ பட்டப்படிப்பில் சிவில், சிவில் அன்ட் ஸ்டெர்க்சரல், மெக்கானிக்கல், மேனுபேக்கசரிங் இன்ஜினியரிங், எலக்டிர்கல் எலக்டிரானிக்ஸ், எலக்டிரானிக் கம்யூனிக்கேஷன், எலக்டிரானிக் இன்ஸ்டிருமெண்டேஷன், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், தகவல்-தொழில்நுட்பம் ஆகிய 12 பிரிவுகளுக்கு மொத்தம் 810 பேர் அனுமதி சேர்க்கை செய்யப்படவுள்ளனர்.பிஎஸ்சி வேளாண்மை படிப்பிற்கு ஆயிரம் பேரும், பிஎஸ்சி தோட்டக்கலை படிப்பிற்கு 70 பேரும்,  பேட்சுலர் ஆஃப் பிஷ்ஷரிஸ் சயன்ஸ் (B.F.Sc) படிப்பிற்கு 30 பேரும், 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புகளான 25 படிப்புகளுக்கு தலா 30 பேரும் அனுமதி சேர்க்கை செய்யப்படுவார்கள். தமிழகஅரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் மூலம் மாணவ, மாணவர்கள் அனுமதிசேர்க்கை செய்யப்படுவார்கள்.

மருத்துவம், பல் மருத்துவம், பார்மசி ஆகிய படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.பிஇ., பிஎஸ்சி வேளாண்மை, பி.எஃப்.எஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பம் விலை ரூ.800, எஸ்சி., எஸ்டி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.400. 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்ப விலை ரூ.400. எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.200 ஆகும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.annamalaiuniversity.ac.in என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிதாக 4 நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி 

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதலின் பெயரில் சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிதாக 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டிற்கு நான்கு நீதிபதிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். டி.ஓய்.சந்திரசூட், அஜய் கான்வி்ல்கர், அசோக் பூஷன், நாகேஷ்வர் ராவ் ஆகிய நான்கு பேர் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதிகள் நியமன ஆணையத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று நள்ளிரவு கையெழுத்திட்டார். 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு பேரும் நாளை(வெள்ளிக்கிழமை) பதவி ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்ட அமைச்சகத்தால் இதற்கான ஆணை நாளை வெளியிடப்படும்.

நான்கு நீதிபதிகளின் நியமனத்தை சட்ட மந்திரி சதானந்த கௌடா தனது டுவிட்டர் வலைதளத்தில் உறுதி செய்துள்ளார்.

தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணைக்குழுச் சட்டம் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி நடைமுறை வந்தது முதல் செய்யப்படும் முதல் நீதிபதிகள் நியமனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!