Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 21 May 2016

மாணவர் சான்றிதழை நிறுத்தினால் தண்டனை; யு.ஜி.சி., எச்சரிக்கை

கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், பட்டப்படிப்பு, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடித்ததும், உரிய காலத்தில் அவர்களது சான்றிதழ்களை, கல்லுாரி மற்றும் பல்கலைகள் வழங்க வேண்டும். ஆனால் பெரும்பாலான கல்லுாரி மற்றும் பல்கலைகள், மாணவர்களின் பட்டங்களை நிறுத்தி வைப்பதும், வழங்காமல் இருப்பதும் தொடர்கதையாக உள்ளது.

இலவச கல்வி திட்டம்; கல்லூரிகளில் சேர ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலைக்கழகம்

ஏழை மாணவர்களுக்கான இலவச கல்வி திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் சேர தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 31-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மாணவர் அஜீஸ் தேசிய அளவில் 3-ம் இடம்

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தமிழகத்தில் 97.32 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், சென்னை மாணவர் அஜீஸ் 500-க்கு 495 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் 3-ம் இடத்தை பிடித்தார்.

தமிழக அமைச்சர்களி்ன் கல்வித்தகுதி என்ன?

தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை வரும் 23-ம் தேதி சென்னை பல்கலை வளாகத்தில் பொறுப்பேற்க உள்ளது இதில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களி்ன கல்வித்தகுதி குறித்த பட்டியல் தரப்பட்டுள்ளது அவை குறித்த விவரம் வருமாறு:


1. ஜெயலலிதா - முதல்வர் ---

2. பன்னீர்செல்வம் - நிதி B.A.,

3. பி.தங்கமணி - மின்சாரம், மதுவிலக்கு B.A.,

தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் : டிஎன்பிசி மீது குற்றச்சாட்டு

கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு முடிவுகளை வெளியிடாமல் இழுத்தடித்து வருவதாக,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மீது தேர்வு எழுதியவர்கள் புகார்தெரிவித்துள்ளனர்.

DR.AMBEDKAR LAW UNIVERSITY - ADMISSION NOTIFICATION


புதிதாக அமையும் தமிழக அமைச்சரவை பட்டியல்

தமிழக ஆளுநர் ரோசய்யாவை ராஜ்பவன் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சனிக்கிழமை சந்தித்தார். அப்போது அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் ஜெயலலிதா வழங்கினார்.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்"டென்ஷன் குறைய என்ன செய்ய வேண்டும் ?"

இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்கவேண்டிய நிர்பந்தம் பலருக்கும் உண்டு. அலுவலகத்திற்கு செல்லும் பெரும்பாலோனோர் போட்டி நிறைந்த சூழலில் பணிபுரிவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. பணமும், இன்றைய ஆடம்பார வாழ்க்கைச் சூழலும் கூட மன அழுத்தத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக இருக்கின்றன என்பதை உணர வேண்டும்.. நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை விரட்ட எளிய பயிற்சிகளை உளவியல் நிபுணர்கள் சொல்லி உள்ளனர்.

தினம் ஒரு புத்தகம்"என்நாடுடைய இயற்கையே போற்றி"


பள்ளிக்கல்வி - EMIS கால அவகாசம் நீடிப்பு - 28.05.2016 குள் முடிக்க இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


மின் வாரிய ஊழியர் தேர்வு ஒத்திவைப்பு.

நாளை, மே, 22ம் தேதி நடக்க இருந்த, ஊழியர் நியமன எழுத்துத் தேர்வை, தமிழக மின் வாரியம் ஒத்திவைத்து உள்ளது. மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளதால், பல பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, இளநிலை உதவியாளர், தணிக்கையாளர் உட்பட, 2,175 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, மின் வாரியம் பிப்ரவரியில் வெளியிட்டது.

முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு.

பாரதியார் பல்கலையில் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடக்கும் முதுகலை படிப்புக்கு வரும், 31ம் தேதி வரையும், நேரடி சேர்க்கை படிப்புக்கு ஜூன், 15ம் தேதி வரையும் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.பாரதியார் பல்கலையில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க நேற்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

எம்.பில்., பட்டம் ரூ. 2 லட்சம் எம்.ஏ., தேர்வுக்கு ரூ.1700

மதுரை காமராஜ் பல்கலை மாலை நேர கல்லுாரி மற்றும் தொலைநிலைக்கல்வி மையங்களில் எம்.பில்., மற்றும் எம்.ஏ., பட்டம் வழங்குவதில் லட்சக்கணக்கான ரூபாய் பேரம் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்திற்கு உட்பட்டு தமிழகத்தில் 26 மையங்கள், வெளி மாநிலங்களில் 190 மையங்கள் உள்ளன.

இன்ஜி., 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியீடு: தொழில்நுட்ப கோளாறால் மாணவர்கள் தவிப்பு.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளின் கடந்த ஆண்டு, 'கட் - ஆப்' மதிப்பெண் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், தொழில்நுட்ப கோளாறால், இணையதளத்தில் மதிப்பெண்ணை பார்க்க முடியாமல், மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை'ஆன்லைனில்' விண்ணப்பம்.

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., - பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கான, விண்ணப்ப வினியோகம், ஒவ்வொரு ஆண்டும் மே, இரண்டா-வது வாரத்தில் துவங்கும்.

மெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கைவிண்ணப்ப தேதி நீட்டிப்பு.

தனியார் மெட்ரிக் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கைக்கு, மே, 30 வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் (பொறுப்பு) ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சிபஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று  பகல் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

OBC சான்றிதழ் சில தகவல்கள்

ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள்
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில்,
பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு
1993 முதல் வேலை வாய்ப்பிலும், 2007 முதல், மத்திய அரசின் கல்வி நிலையங்களான அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற உயர்கல்வி நிறு வனங்களில் நடைமுறைப்படுத்தப்படு கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து: ஆதாரமற்ற செய்தி திட்டமிட்டப்படி ஜூலை 24 ஆம் தேதி இரண்டாம் கட்ட பொது நுழைவுத் தேர்வு நடைபெறும் என்கிறார் மத்திய அமைச்சர்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கவுள்ளதாக வெளியான செய்தி ஆதாரமற்றது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார்.இந்தியா முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்குஅகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரவக்குறிச்சி, தஞ்சையில் ஜூன் 13-ல் தேர்தல்: தேர்தல் ஆணையம்

அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூரில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்கள் ஜூன் 13ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் மே 16 ஆம் தேதி 232 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அதிக அளவிலான பண விநியோகம் காரணமாக தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு மே 23 ஆம் தேதி நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டது.

2016-2017 ஆம் கல்வியாண்டில் RTE-வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு அனைத்து தனியார் ,சுயநிதி பள்ளிகளிலும் வழங்குதல்.சேர்க்கைக்கு விண்ணப்ப தேதி நீட்டிப்பு செய்து RTE முதன்மை தொடர்பு அலுவலர் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோரின் செயல்முறைகள்.நாள்:20/05/16