Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 22 May 2016

RTI:உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே காலஅட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்.

தினம் ஒரு புத்தகம்.அறிவியலில் பெண்கள்..

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்..சர்க்கரை நோய் பற்றிய கேள்வி-பதில்கள்

சர்க்கரை நோய் பற்றிய கேள்வி-பதில்கள்

சர்க்கரை நோய் என்றால் என்ன? அறிகுறிகள், ஏற்படக்கூடிய விளைவுகள்.
1. சர்க்கரை நோய் என்றால் என்ன?
முதலில் நாம் உண்ணுகின்ற உணவு உடலுக்குள் என்ன செய்கிறது என்று பார்ப்போம். நமது இரைப்பையும் குடலும் உணவிலிருந்து க்ளுகோஸ் எனும் சர்க்கரையை எடுத்து இரத்தத்தில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கிறது.
க்ளுகோஸ் எனும் சர்க்கரை தான் நம் உடலுக்கு கிடைக்கும் சக்தி. இது ரத்தத்தின் மூலம் உடலில் உள்ள செல்களை சென்றடைய வேண்டும். ஆனால் செல்கள் தானாக சர்க்கரையை உள்ளே அனுமதிக்காது. அதற்குத் தான் இன்சுலின் உபயோகப்படுகிறது.
ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை தேவையான அளவிற்கு செல்களுக்குள் செல்ல முடியாமல் ரத்தத்திலேயே தங்கி விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விடும். இவ்வாறு இருக்கும் நிலை தொடர்ந்து காணப்பட்டால் தான் அது சர்க்கரை நோய்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவை உடலுக்கான சக்தியாக மாற்ற முடியாததால் தேவையான அளவு உணவு உண்டும் களைத்தும் சோர்வாகவும் காணப்படலாம்.
2. ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியாததன் காரணம்?
பல காரணங்களால் இது நிகழலாம்.
1. தேவையான அளவு இன்சுலின் கணையத்திலிருந்து உற்பத்தியாகாமல் போகலாம்.
2. இன்சுலின் தேவையான அளவு இருந்தும் சரியாக செயல்படாமல் இருத்தல்.
போன்ற காரணங்களால் ஏற்படலாம்.
3. சர்க்கரை நோய் யாருக்கு ஏற்படும்?
யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும்
1. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்
2. பரம்பரையில் சர்க்கரை நோய் இருப்பவர்கள்
3. எடை அதிகமாக இருப்பவர்கள்
ஆகியவர்களுக்கு சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.
4. சர்க்கரை நோய் வந்ததன் அறிகுறிகள் என்னென்ன?
பல சமயங்களில் அறிகுறிகள் சரியாக தென்படாமல் போகிறது. சில பொதுவான அறிகுறிகள்
* அடிக்கடி சிறுநீர் கழிப்பது
* அடிக்கடி தாகம்
* அதிக பசி
* மிக வேகமாக எடை குறைதல்
* அதிகமாக சோர்வடைவது
* கண்பார்வை மங்குதல்
* வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல்
* திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய்

மாணவர்களின் சான்றிதழ்களை நிறுத்தி வைத்தால் கடும் நடவடிக்கை !!!

எந்த காரணத்தை கொண்டும் மாணவர்களின் சான்றிதழ்களை நிறுத்தி வைக்கக் கூடாது' என, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் 
மாணவர்கள், பட்டப்படிப்பு, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடித்ததும், உரிய காலத்தில் அவர்களது சான்றிதழ்களை, கல்லுாரி மற்றும் பல்கலைகள் வழங்க வேண்டும்.

ஆனால் பெரும்பாலான கல்லுாரி மற்றும் பல்கலைகள், மாணவர்களின் பட்டங்களை நிறுத்தி வைப்பதும், வழங்காமல் இருப்பதும் தொடர்கதையாக உள்ளது.

கட்டண பாக்கி, அபராத பாக்கி, தேர்வு முடிவை நிறுத்திவைத்தல், கல்லுாரியின் நிர்வாக புகார், பேராசிரியர்களின் தனிப்பட்ட பிரச்னைகள் போன்ற பல காரணங்களால் சான்றிதழ்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.இதனால் அந்த மாணவர்கள், தங்களுக்கான பட்டம் உரிய காலத்தில் கிடைக்காமல், வேலைவாய்ப்பு மற்றும் மேல் படிப்புக்கு வழியின்றி கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால், பல்கலைக்கழகங்களும், கல்லுாரிகளும் பணமே குறியாக, மாணவர்களின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் நடந்து கொள்கின்றன. இதுபோன்று பல பல்கலைக்கழகங்கள் மீது, யு.ஜி.சி.,க்கு புகார்கள் சென்றுள்ளன. அவற்றை விசாரித்த யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து, அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளுக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
கடும் நடவடிக்கை நிச்சயம்
அதில் அவர் கூறியுள்ளதாவது:
ஒரு மாணவரின் பட்ட சான்றிதழை, மிக அரிதான நடைமுறைகளுக்காக மட்டுமே, 180 நாட்களுக்கு நிறுத்தி வைக்க முடியும். ஆனாலும் அதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம் சான்றிதழ் வழங்க வேண்டும். ஆனால், பல பல்கலைகள் சான்றிதழை நிறுத்தி வைப்பது தெரிய வந்துள்ளது.இந்நிலை நீடித்தால் அந்த பல்கலைகள் மீது யு.ஜி.சி.,யின் குறைதீர் ஒழுங்குமுறை சட்டம் - 2012, விதிமுறை, 9ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகள் எந்த காரணமாக இருந்தாலும் மாணவர்களின் சான்றிதழ்களை நிறுத்தி வைக்காமல் உடனடியாக அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் எச்சரித்துள்ளார்.

வேளாண்மைப் படிப்புகளில் சேர 8 ஆயிரம் பேர் விண்ணப்பம் .....

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக இதுவரை 8,258 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அதன் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் இளம் 
அறிவியல் பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் உள்ளிட்ட 6 படிப்புகளும், இளம் தொழில்நுட்பப் படிப்புகளில் உயிரி தொழில்நுட்பவியல், உயிரி தகவலியல் உள்ளிட்ட 7 படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளில் ஆண்டுதோறும் சுமார் 2,600 மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர்.
 2016-17ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் குறித்த அறிவிப்பு கடந்த 4-ஆம் தேதி வெளியான நிலையில், ஆன்லைன் மூலம் விண்ணப்ப விநியோகம் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. மாணவ-மாணவிகள் www.tnau.ac.inadmission.html என்ற இணையதள பக்கத்துக்குச் சென்று விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து ஏராளமான மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பி வருகின்றனர்.
 மாணவர் சேர்க்கைக்காக சனிக்கிழமை வரையிலும் 10,625 மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்களில் 8,258 பேர் படிவங்களைப் பூர்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
 கடந்த ஆண்டு 42 ஆயிரம் மாணவ-மாணவிகள் வரை விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து 32 ஆயிரம் பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர்.
 மேலும், ஜூன் 11-ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து ஜூன் 27-ஆம் தேதி முதல் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தஞ்சை, அரவக்குறிச்சியில் தேர்தலுக்கான வாக்குப் பதிவு எப்போது? மே 27-க்குள் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !

தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளின் வேட்பாளர்களின் கருத்துகளை மே 27-ஆம் தேதிக்குள் கேட்டு வாக்குப்பதிவு எப்போது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகார்களின்பேரில், தஞ்சை, 
அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு மே 16-இல் நடைபெறவிருந்த வாக்குப் பதிவு 23-க்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
 இந்த நிலையில், முறைகேடு நடைபெற்று இருப்பதை தேர்தல் ஆணையமே உறுதி செய்துள்ளதால் ஒரு வாரம் தேர்தலைத் தள்ளி வைப்பதால் எந்தவிதப் பயனும் இல்லை என்றும் வேட்பாளர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களை தகுதியிழக்கச் செய்ய வேண்டும் என்றும் அரவக்குறிச்சி தொகுதி பாமக வேட்பாளர் எம். பாஸ்கரன், தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் எம்.எஸ்.ராமலிங்கம் உள்பட 5 பேர் மனு தாக்கல் செய்தனர்.
 இந்த மனுக்கள் நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, "இரு தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு மேலும் 3 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது' என தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்து, அப்போது வேட்பாளர்கள் உள்பட 5 பேரின் மனுக்கள் மீதும் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று உத்தரவிட்டனர்.
 அவசர வழக்கு தாக்கல்: இதையடுத்து, ஜூன் 13-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதை எதிர்த்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 அதில், ஜூன் 13-ஆம் தேதி தேர்தல் என்ற ஆணையத்தின் அறிவிப்பை ரத்து செய்து, "மே 23-ஆம் தேதியே தேர்தல் நடத்த வேண்டும். மாநிலங்களவைத் தேர்தலுக்கான பணிகள் மே 24-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கு மனுத் தாக்கல் செய்வதற்கு மே 31-ஆம் தேதி கடைசி நாளாகும். இரு தொகுதிகளுக்கும், மே 31-ஆம் தேதிக்குள் தேர்தல் நடைபெறவில்லை என்றால் கூடுதல் மாநிலங்களவை இடங்கள் பெறுவதில் திமுகவுக்கு இடையூறு ஏற்படும். அதே நேரத்தில், ஜூன் 6 முதல் ஜூலை 5 வரையிலான நாள்களில் இஸ்லாமியர்களின் நோன்பு காலமாகும். இந்தக் காலக் கட்டத்தில் இஸ்லாமிய பெண்கள் வெளியில் வர மாட்டார்கள். ஆகவே, இரு தொகுதிகளிலும் 20 சதவீத அளவுக்கு இஸ்லாமியர்கள் உள்ளனர். ஆகையால், ஜூன் 13-ஆம் தேதி தேர்தல் நடந்தால், அவர்களின் வாக்குரிமை பாதிப்புக்குள்ளாகும்' என குறிப்பிடப்பட்டது.
 இந்த மனு அவசர வழக்கு நீதிபதிகள் கே.கல்யாண சுந்தரம், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, "தேதியானது இறுதி அல்லது மாறுதலுக்கு உள்படலாம். இறுதி தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். இருப்பினும், சூழ்நிலைகளுக்கேற்ப வேட்பாளர்களிடம் இருந்து பெறப்படும் ஆட்சேபணைகளைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும்' என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 இதையடுத்து, வேட்பாளர்களின் தரப்பு கருத்துகள், ஆட்சேபணை, கோரிக்கைகளை மே 27-ஆம் தேதிக்குள் கேட்டு தேர்தல் நடைபெறும் தேதி குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

28 தமிழக அமைச்சர்களின் வாழ்க்கைக் குறிப்பு....

ஓ.பன்னீர்செல்வம்
 வயது : 65
 படிப்பு : பி.ஏ.,
 ஊர் : பெரியகுளம்
 குடும்பம் : மனைவி விஜயலட்சுமி,
 மகன்கள்: ரவீந்திரநாத்குமார்,
 ஜெயபிரதீப், மகள்: கவிதா
 பதவிகள்: 1996 முதல் 2001வரை பெரியகுளம் நகர்மன்றத் தலைவர், 2001இல் வருவாய் துறை அமைச்சர்,2001 முதல் 2002 வரை முதல்வர், 2002 முதல் 2006 பொதுப் பணித்துறை மற்றும் கலால் துறை அமைச்சர், 2006 முதல் 2011 எதிர்க்கட்சித் துணைத் தலைவர், 2011முதல் 2014 வரை நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர், 2014 முதல் 2015 முதல்வர்,

 2015 முதல் 2016 நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர். தற்போது போடிநாயக்கனூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு மீண்டும் நிதித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் சி. சீனிவாசன்
 வயது : 68
 படிப்பு : எம்.ஏ.
 ஊர் : ஆர்.எம். காலனி, திண்டுக்கல்.
 பதவிகள்: 1972 முதல் அதிமுக உறுப்பினர், ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட விவசாயப்பிரிவு செயலர், திணடுக்கல் மாவட்டச் செயலர், மாநிலப் பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது திண்டுக்கல் மாவட்ட அவைத் தலைவராக உள்ளார்.
 பதவி: திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும், 4 முறை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு தற்போது வனத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி க.பழனிச்சாமி
 வயது : 62
 படிப்பு : பி.எஸ்.சி
 ஊர் : எடப்பாடி அருகே உள்ள
 சிலுவம்பாளையம்.
 குடும்பம் : மனைவி ராதா, மகன்
 பி.மிதுன்குமார்.
 பதவிகள்: ஆரம்பம் காலம் முதலே அதிமுகவில் உறுப்பினராக உள்ளார். 1989, 1991, 2011 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். பின்னர் 1998ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1999 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2006 தேர்தலில் போட்டியிட்டுதோல்வியடைந்தார். 2011 தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக தேர்வானார்.
செல்லூர் ராஜு
 வயது : 62
 படிப்பு : பி.எஸ்சி.
 ஊர் : செல்லூர், மதுரை.
 குடும்பம் : மனைவி ஜெயந்தி,
 மகள்கள் செளம்யா, ரம்யா
 பதவிகள்: மதுரை மாநகர் மாவட்டச் செயலர். 2011-இல் மதுரை மேற்குத் தொகுதியில் வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர். தற்போது அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு கூட்டுறவு மற்றும் தொழிலாளர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பி.தங்கமணி
 வயது : 56
 படிப்பு : பி.ஏ.
 ஊர் : பள்ளிபாளையம் அருகே
 கோவிந்தம்பாளையம்.
 குடும்பம் : மனைவி சாந்தி,
 மகள் லதாஸ்ரீ,
 மகன் தரணிதரன்.
 பதவிகள்: கோவிந்தம்பாளையம் அதிமுக கிளைக் கழக பிரதிநிதி, செயலாளர், 2001-ல் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகப் பதவி வகித்தார். 2006-ல் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினரான இவர், குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியின் முதல் சட்டப்பேரவை உறுப்பினராக 2011-ல் வெற்றி பெற்றார். 2011-2016 வரை அமைச்சர். தற்போது நாமக்கல் அதிமுக செயலாளராக பதவி வகித்து வருகிறார். கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
எஸ்.பி.வேலுமணி
 வயது : 47
 படிப்பு : எம்.ஏ., எம்.ஃபில்.
 ஊர் : கோவை சுகுணாபுரம்.
 குடும்பம் : மனைவி, மகன்,
 மகள் உள்ளனர்.
 பதவிகள்: கோவை மாவட்ட அதிமுக இளைஞரணிச் செயலராக அரசியலைத் தொடங்கிய இவர், 2001-இல் குனியமுத்தூர் நகராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்., 2006, 2011 தேர்தலில் வெற்றி பெற்றார்.
 சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறையின் அமைச்சராக 2011 மே 16-இல் பொறுப்பேற்றார்.
 மே 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அவருக்கு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் பதவி கிடைத்தது.
டி.ஜெயக்குமார்
 வயது : 55
 படிப்பு : பி.எஸ்.ஸி., பி.எல்.,
 ஊர் : சென்னை.
 குடும்பம் : மனைவி இந்திரா காந்தி,
 மகன் அருண்குமார்,
 மகள் காயத்ரி
 பதவிகள்: 1991 முதல் 5 முறை சட்டப் பேரவை உறுப்பினர். 1991-1996 வரையில் மீன்வளம், பால்வளம், வனத் துறை அமைச்சர். 2001-2006 வரையில் சட்டம், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் ஆகிய துறைகளின் அமைச்சர். 1998-இல் சென்னை துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர். 2011 முதல் 2012-ஆம் ஆண்டு வரையில், சட்டப் பேரவைத் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளார். அதிமுக மாணவர் அணிச் செயலாளர், தலைமை நிலையச் செயலாளர், வடசென்னை மாவட்ட அதிமுக செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
சி.வி.சண்முகம்
 வயது : 50
 படிப்பு : பிஏபிஎல்
 ஊர் : திண்டிவனம் வட்டம்,
 அவ்வையார்குப்பம்.
 குடும்பம் : மனைவி-கௌரி, மகன்-
 ஜெயசிம்மன், மகள் வள்ளி
 பதவிகள்: திண்டிவனத்தில் வழக்குரைஞராக இருந்த அவர், 1990-ஆம் ஆண்டில் அதிமுகவில் வடக்கு மாவட்டப் பிரதிநிதியாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். திண்டிவனம் தொகுதியில் 2001, 2006 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் விழுப்புரம் தொகுதியில் 2011 தேர்தல் மற்றும் தற்போதைய (2016) தேர்தலிலும் என 4 முறை வெற்றி கண்டுள்ளார்.
 கடந்த 2011-இல் சட்டம், சிறைத் துறை மற்றும் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தார். 2001-06 அதிமுக ஆட்சியின் போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தார்.
கே.பி.அன்பழகன்
 வயது : 58
 படிப்பு : பி.எஸ்சி
 ஊர் : கெரகோடஹள்ளி, பாலக்கோடு
 வட்டம், தருமபுரி.
 குடும்பம் : மனைவி மல்லிகா, மகள் வித்யா,
 மகன்கள் சந்திரமோகன்,
 சசிமோகன்.
 பதவிகள்: தொடக்கம் முதலே அதிமுக கட்சி உறுப்பினரான இவர் 1997-இல் மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலர், 1998-இல் காரிமங்கலம் ஒன்றியச் செயலர், 2000, 2010-இல் அதிமுக மாவட்டச் செயலர், தற்போது மீண்டும் கட்சி மாவட்டச் செயலராக உள்ளார். 1996-இல் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், 2001, 2006, 2011 மற்றும் தற்போதைய (2016) தேர்தல் என நான்கு முறை பாலக்கோடு தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2003-இல் செய்தி, உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி வகித்துள்ளார்.
வி. சரோஜா
 வயது : 68
 படிப்பு : எம்பிபிஎஸ்.
 ஊர் : சேலம் மாவட்டம் சங்ககிரி.
 குடும்பம் : கணவர் டாக்டர்
 எல்.லோகரஞ்சன்.
 பதவிகள்: தற்போது அதிமுகவில் மாநில மகளிரணி இணை செயலாளர் பதவி வகித்து வருகிறார். 1989 முதல் அதிமுக உறுப்பினர், 1991-96 - சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர், 1998-1999 - ராசிபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர், 1999-2004 - ராசிபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர், 2004-2006 - தாட்கோ வாரியத்தலைவர், 2012-2013 - தகவல் உரிமை ஆணையத்தின் ஆணையர்.
கே.சி.கருப்பணன்
 வயது : 59
 படிப்பு : எஸ்எஸ்எல்சி
 ஊர் : காட்டுவலசு.
 குடும்பம் : மனைவி தேவி,
 மகன் டாக்டர் யுவராஜா
 உள்ளனர்.
 பதவிகள்: 1972-இல் கவுந்தப்பாடியை அடுத்த காட்டுவலசு அதிமுக கிளைச் செயலாளராக இருந்தார்.2001 முதல் 2006 வரை பவானி தொகுதி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். 2006-இல் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது மூன்றாவது முறையாக பவானி தொகுதியில் போட்டியிட்ட கே.சி.கருப்பணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரைக் காட்டிலும் 24,887 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
எம்.சி.சம்பத்
 வயது : 58
 படிப்பு : எம்.எஸ்சி வேதியியல்.
 ஊர் : மேல்குமாரமங்கலம், பண்ருட்டி
 குடும்பம் : தமிழ்வாணி,
 மகன் பிரவீன், மகள் திவ்யா.
 பதவிகள்: டலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலர்,
 2001ஆம் ஆண்டு நெல்லிக்குப்பம் தொகுதியில் வெற்றி பெற்று உள்ளாட்சி மற்றும் வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சர்.
 2011ஆம் ஆண்டு கடலூர் தொகுதியில் வெற்றி பெற்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்.
ஆர்.காமராஜ்
 வயது : 55
 படிப்பு : முதுகலைப் பட்டதாரி
 ஊர் : மன்னார்குடி அருகே எளவனூர்-
 சோத்திரியம் கிராமம்
 குடும்பம் : மனைவி கே. லதாமகேஷ்வரி,
 மகன்கள் மருத்துவர்கள்
 எம்.கே. இனியன், கே. இன்பன்.
 பதவிகள்: 1982-இல் மன்னார்குடி இராஜகோபாலசுவாமி அரசு கலைக் கல்லூரியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மாணவர் தலைவரானார். 2001 முதல் 2007 வரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் மற்றும் கொறடா. 2006-இல் மன்னார்குடி பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி. 2003 முதல் தற்போது வரை மாவட்டச் செயலர் பதவி.
 2011 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். 2016 தேர்தலில் மீண்டும் நன்னிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி.
ஓ.எஸ். மணியன்
 வயது : 61
 படிப்பு : பியூசி.
 ஊர் : வேதாரண்யத்தை அடுத்த
 ஓரடியம்புலம் கிராமம்.
 குடும்பம் : மனைவி கலைச்செல்வி,
 மகள்கள் பாரதி, வாசுகி
 பதவிகள்: 1972-இல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்து, 1976-இல் ஒன்றியச் செயலாளராகவும் பின்னர் மாவட்டச் செயலாளர், மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
 வகித்த பதவி: 1995-2001-இல் மாநிலங்களவை உறுப்பினராகவும், 2009 தேர்தலில் மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினராகவும் வெற்றி பெற்று பதவி வகித்தவர். 1989 (அதிமுக ஜெ அணி), 2006 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.
உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
 வயது : 51
 படிப்பு : பி.காம்.
 ஊர் : உடுமலையடுத்த
 கோலார்பட்டி.
 .குடும்பம் : மனைவி ஆர்.கிருஷ்ணபிருந்தா,
 மகள் ஆர்.ஜெயபிரணிதா,
 மகன் ஆர்.நிவாஸ்ரீ
 பதவிகள்: அதிமுகவில் முதல்முதலாக இவர் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் இளைஞரணிச் செயலாளராகப் பணியாற்றினார். இதன் பின்னர் திருப்பூர் மாவட்டச் செயலாளராக 2012இல் நியமிக்கப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. வாரியத் தலைவராகப் பதவி வகித்து வந்தார். தற்போது திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளராக உள்ளார். தற்போதைய தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.
சி. விஜயபாஸ்கர்
 வயது : 40
 படிப்பு : எம்பிபிஎஸ், பி.எல்
 ஊர் : விராலிமலைத் தொகுதிக்குள்பட்ட
 இலுப்பூர் அருகே ராப்பூசல் கிராமம்
 குடும்பம் : மனைவி ரம்யா, மகள்கள்
 ரித்தன்யா பிரியா, அனன்யா
 பதவிகள்: கட்சியில் முன்னாள் மாநில மாணவரணி செயலர், முன்னாள் மாவட்டச் செயலராகவும் இருந்தார்.
 கடந்த 2001-2006 -ல் புதுக்கோட்டை எம்எல்ஏவாகவும், 2011-ல் விராலிமலை எம்எல்ஏவாகவும் இருந்தார்.
 இதையடுத்து 2013 - 2016 வரை மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
 இவரது அண்ணன் இரா.சி. உதயகுமார்,
 தங்கைகள் மருத்துவர் தனலெட்சுமி, பொறியாளர்
ராஜலெட்சுமி.
சண்முகநாதன்
 வயது : 53
 படிப்பு : 8ஆம் வகுப்பு
 ஊர் : தூத்துக்குடி மாவட்டம்,
 ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள
 பண்டாரவிளை.
 குடும்பம் : மனைவி ஆஷா,
 5 மகள்கள், ஒரு மகன்.
 பதவிகள்: தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலர். 2000இல் தூத்துக்குடி மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்ட இவர், 2001 சட்டப்பேரவைத் தேர்தலில், வெற்றி பெற்று அமைச்சரானார்.
 தொடர்ந்து, 2006இல் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி செல்வராஜிடம் வெற்றி வாய்ப்பை இழந்த எஸ்.பி. சண்முகநாதன், 2011இல் மீண்டும் வெற்றி பெற்று, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரானார். சில மாதங்கள் அப் பதவியில் இருந்த அவர், 2014 இல் சுற்றுலாத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஆர். துரைக்கண்ணு
 வயது : 68
 படிப்பு : பட்டப்படிப்பு
 ஊர் : பாபநாசம் அருகேயுள்ள ராஜகிரி.
 குடும்பம் : மனைவி பானுமதி,
 இரு மகன்கள், 4 மகள்கள்
 பதவிகள்: அதிமுகவில் 1972-ம் ஆண்டு இணைந்த இவர் மாணவரணி, இளைஞரணியில் பல்வேறு பொறுப்புகளிலும், கிளைக் கழகச் செயலராகவும் இருந்தவர். இப்போது பாபநாசம் அதிமுக ஒன்றியச் செயலராக உள்ளார்.
 இவர் பாபநாசம் தொகுதியில் 2006-ம் ஆண்டு முதல் அதிமுக சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது முதல் முறையாக அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார்.
கடம்பூர் செ.ராஜு
 வயது : 57
 படிப்பு : ஆசிரியர் பட்டயப் படிப்பு
 ஊர் : கடம்பூர்
 குடும்பம் : மனைவி இந்திரா காந்தி,
 மகன் அருண்குமார்,
 மகள் காயத்ரி
 பதவிகள்: தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர், 2011 பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்.எல்.ஏ. ஆனவர். இதே தொகுதியில் இத்தேர்தலில் 2ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
ஆர்.பி. உதயகுமார்
 வயது : 43
 படிப்பு : எம்காம்.,எம்.எஸ்.டபிள்யு.,பிஎல்
 ஊர் : ராமநாதபுரம் மாவட்டம்.
 குடும்பம் : மனைவி உ.தாமரைச் செல்வி,
 மகள்கள் பிரியதர்ஷினி,
 தனலெட்சுமி.
 பதவிகள்: ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலராக உள்ளார். 2011 தேர்தலில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் இருந்து பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். மீண்டும் அமைச்சரவை மாற்றத்தில் வருவாய்த் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு மீண்டும் வருவாய்த் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கே.டி.ராஜேந்திர பாலாஜி
 வயது : 48
 படிப்பு : 10-ஆம் வகுப்பு
 ஊர் : அருப்புக்கோட்டை (குருந்தமடம்)
 குடும்பம் : திருமணமாகாதவர்
 பதவிகள்: 1991இல் திருத்தங்கல் நகர கழக செயலாளர், 1996, 2001,2006 திருத்தங்கல் நகராட்சி துணைத் தலைவர், 2000-2011 வரை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர், விருதுநகர் மாவட்ட செயலாளர். 2011இல் செய்தி மற்றும் விளம்பரத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர். தற்போது சிவகாசி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு ஊரக தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கே.சி.வீரமணி
 வயது : 52
 படிப்பு : பி.ஏ.,
 ஊர் : இடையம்பட்டி, ஜோலார்பேட்டை.
 குடும்பம் : மேகலை (முதல் மனைவி),
 மகன் இனியவன், மகள் யாழினி,
 பத்மாஷினி (2}ஆவது மனைவி)
 மகள் அசிலா
 பதவிகள்: 1997 மதுல் 1999 வரை ஒன்றிய அதிமுக செயலாளராகவும், 1999 முதல் 2006 வரை மாவட்ட விவசாய அணிச் செயலாளராகவும் பணியாற்றியவர்.
 2006 முதல் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். 2011-இல் ஜோலார்ப்பேட்டை தொகுதி எம்எல்ஏவாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். 2012-இல் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2013-ஆம் ஆண்டு முதல் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்து வந்தார். தற்போது ஜோலார்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்றார்.
பா.பெஞ்சமின்
 வயது : 47
 படிப்பு : பி.ஏ.,
 ஊர் : நொளம்பூர்
 குடும்பம் : மனைவி ஷீலா, மகன்கள்
 விஜய்பெர்லின் (23),
 சாம்சன்பால் (21).
 பதவிகள்: 1988-இல் அதிமுகவில் சேர்ந்தார். அயனம்பாக்கம் அதிமுக கிளை செயலாளராகவும், 1991 முதல் திருவேற்காடு 4-ஆவது வட்ட கிளைச் செயலாளராகவும் பதவி வகித்தார். 2002 முதல் 2015 வரை வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளராக இருந்தார். 2015 முதல் மதுரவாயல் பகுதி செயலாளராக பணியாற்றி வருகிறார். 2011-இல் சென்னை மாநகராட்சி தேர்தலில் 145-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து துணை மேயராக நியமிக்கப்பட்டார். தற்போது வரை அப்பதவியில் நீடித்து வருகிறார்.
வெல்லமண்டி என்.நடராஜன்
 வயது : 66
 படிப்பு : எஸ்எஸ்எல்சி
 ஊர் : திருச்சி மாவட்டம்.
 குடும்பம் : மனைவி என். சரோஜாதேவி,
 மகன்கள் கிருபாகரன்,
 ஜவஹர்லால் நேரு
 பதவிகள்: 1972-ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் உறுப்பினராக உள்ளார். திருச்சி நகரக் கூட்டுறவு வங்கித் தலைவராகவும், நகரக் கூட்டுறவு வங்கி இணையத்தின் மாநிலத் தலைவராகவும் பொறுப்பில் உள்ளார்.
 கடந்த 2000 முதல் 2003-ம் ஆண்டு வரை மாநகர் மாவட்ட அதிமுக செயலராக பொறுப்பு வகித்தார். 2003-ம் ஆண்டு முதல் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அவைத் தலைவராக உள்ளார். முதல் முறையாக பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எஸ். வளர்மதி
 வயது : 51
 படிப்பு : எம்ஏ. பி.எல்.,
 ஊர் : ஸ்ரீரங்கம்
 குடும்பம் : கணவர் சீதாராமன்
 பெல் ஊழியர். மகன்கள்
 ஸ்ரீராம், ஹரிராம்.
 பதவிகள்: 1983-ம் ஆண்டில் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்த வளர்மதி, சட்டக்கல்லூரியில் மாணவரணிச் செயலர், மாவட்ட மகளிரணித் துணைச் செயலர், பொதுக்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்.
 முத்தரையர் இனத்தைச் சேர்ந்த இவர், ஸ்ரீரங்கம் தொகுதியில் 2015-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து கட்சியின் அமைப்புச் செயலர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து 2016 பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வி.எம்.ராஜலட்சுமி
 வயது : 30
 படிப்பு : எம்.எஸ்சி. பி.எட்.
 ஊர் : சங்கரன்கோவில்
 குடும்பம் : கணவர் வி. முருகன்,
 மகள் ஹிரணி (9),
 மகன் பிரதீப் (7).
 பதவிகள்: 2004முதல் இளம்பெண்கள் பாசறையில் 18 ஆவது வார்டு செயலர். 2015இல் நகர அதிமுக இணைச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 தேர்தல் அனுபவம்: சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவியாக 2014இல் தேர்வு. தற்போது சங்கரன்கோவில் தொகுதியிலிருந்து பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் எம். மணிகண்டன்
 வயது : 40
 படிப்பு : எம்.பிபி.எஸ். எம்.எஸ்.
 ஊர் : ராமநாதபுரம்
 குடும்பம் : மனைவி வசந்தி,
 மகள்கள் லீலா, லெனிஷா
 பதவிகள்: மாநில மருத்துவ அணியின் துணைச் செயலாளராக இருந்து வருகிறார். தற்போது ராமநாதபுரம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
எம்.ஆர். விஜயபாஸ்கர்
 வயது : 42
 படிப்பு : பி.ஏ.,
 ஊர் : கரூர்
 குடும்பம் : மனைவி வி. விஜயலட்சுமி,
 மகள்கள் வி. அட்சயா
 நிவேதா, வி.அஸ்வதவர்ணிகா.
 பதவிகள்: 2006 முதல் ஒன்றியக் கழகச் செயலாளர் (தாந்தோணி), 2004 முதல் 2006 வரை: கரூர் பசுபதீஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர். உள்ளாட்சி பதவி: ஒன்றியக்குழு உறுப்பினர் .

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!