Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 24 May 2016

New tneb tariff

NMMS Result of Vellore

To View The Results click here

RTE சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கை - விதிமுறை மற்றும் விண்ணப்ப நாள் வெளியீடு - இயக்குனர் செயல்முறைகள்

விலையில்லா,சீருடை,மற்றும் புத்தகங்கள்-1முதல் 8 வகுப்புவரை 25/5/16 முதல் 31/5/16 வரை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு 1/6/16 அன்று அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த இயக்குனர் உத்திரவு

தினம் ஒருபுத்தகம்..மூச்சுவிட கற்றுக்கொள்ளுங்கள்..

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்...*எந்த பாத்திரங்களில் சமைப்பது உடலுக்கு நல்லது?*

*எந்த பாத்திரங்களில் சமைப்பது உடலுக்கு நல்லது?*

சமையல் அறையில் நாம் பயன்படுத்தும் பாத்திரங்கள் மருத்துவருக்குச் சமம் என்கிறார்கள் மருத்துவ ஆர்வலர்கள். இரும்புப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் உடல் வெப்பம் தணியும். சோகை நீங்கி உடல் சுகம் பெறும். இரும்புச் சட்டியில் தாளித்தவுடன், அதில் சாதத்தைப் போட்டுப் பிசைந்து சாப்பிடும்போது உணவின் வாசம் அதிகரிப்பதுடன் சுவையும் கூடும். தாமிரப் பாத்திரங்களில் உணவு சமைக்கும்போது, அது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். திருப்பதி லட்டு தாமிரப் பாத்திரங்களில்தான் செய்யப்படுகிறது. தாமிரப் பாத்திரங்களில் தயாரிக்கப்பட்ட தேநீரை அருந்தும்போது, உடலில் உள்ள கிருமிகள் நீங்கும். வெண்புள்ளி, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அண்டாது. காய்ச்சலில் அவதிப்படுபவர்கள், பித்தளைப் பாத்திரத்தில் தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கும்போது தாகம் குறைந்து, உடல் வலுப்பெறும். நீர்க்கடுப்பு உள்ளவர்களுக்கு உடல் குளிர்ச்சியடையும். ஈயம் மற்றும் வெளிப்பூச்சாக ஈயம் பூசப்பட்ட பாத்திரங்களில் சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டால் தோல் தொடர்பான நோய்கள், கண் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறையும். இதில் உணவு சமைக்கும்போது வாசனை மிகுந்து இருக்கும். சுவையும் அதிகமாக இருக்கும். அலுமினியப் பாத்திரங்கள் எடை குறைவாக இருக்கும். இதில் சமைத்துச் சாப்பிடுவதால், உணவு எளிதில் செரிமானம் ஆகும். இருப்பினும், தொடர்ந்து அலுமினியப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது அல்ல. அலுமினியப் பாத்திரத்தில் தக்காளி, புளி, எலுமிச்சை போன்ற புளிப்புச் சுவையுள்ள உணவுப் பொருட்களைச் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். புளிப்புச் சுவையில் உள்ள அமிலத்தன்மை பாத்திரத்தை அரிக்கத் தொடங்கிவிடும். இதனால் உணவும் நச்சுத் தன்மை அடைந்து, உடலுக்குக் கேட்டை விளைவிக்கும். பிளாஸ்டிக், நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தி உடலுக்கு நோயை வரவழைத்துக்கொள்ளாமல், முடிந்தவரை நம் முன்னோர்கள் பயன்படுத்திய உலோக, மண் சட்டிகளைப் பயன்படுத்துவதே உடல் நலத்திற்கு நல்லது. நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும்போது, எண்ணெயின் அளவு மிகக் குறைவாகத்தான் தேவைப்படும். அதனால், கொழுப்பு சேராது என்று நினைத்துப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நான்ஸ்டிக் பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் PFOA (Perfluorooctanoic Acid) என்ற வேதிப்பொருள் தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருட்களுடன் ஒட்டுவது இல்லை. எனவே இந்த வகைப் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவை உட்கொள்ளும் குழந்தைகளின் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். லைபோபுரோட்டீன் என்னும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது. எனவே, சமைக்கும் பாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பதிலும் பழமையைக் கடைப்பிடிப்பதே ஆரோக்கியத்துக்கான வழி!

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை: கல்வி இயக்குநர் உத்தரவு

பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூய்மையான பள்ளி வளாகம், காற்றோட்டத்துடன் கூடிய சுத்தமான வகுப்பறைகள், பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர், சுகாதாரமிக்க கழிப்பறைகள் போன்றவற்றை உறுதி செய்யவேண்டும்.

குடிநீர் தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர், வாளி, சோப், பினாயில், பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை வைத்திருந்து கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளின் தரம் குறித்து பொதுமக்களுக்கு தெரி விக்கும் வகையில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு, அரசுப் பள்ளிகளில் படித்து உயர்ந்த நிலைக்கு சென்ற மாணவர்களின் விவரம், இலவச கல்வி, பள்ளியின் சிறப்பான செயல்பாடுகள் போன்றவை குறித்து துண்டறிக்கை விநியோ கம், ஊர்வலங்கள் நடத்தி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் பொதுமக்கள் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும். பணி நேரங்களில் ஆசிரியர்கள் பள்ளி வளாகங்களிலிருந்து வெளியே செல்லக்கூடாது. வகுப்பறையில் ஆசிரியர்கள் கைபேசி பயன்படுத்தக் கூடாது. பள்ளியில் சேரும் மாணவர்களை தக்க வைத்து இடைநிற்றல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். பெற்றோர்- ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்களுடன் சுமுக உறவை ஏற்படுத்திக்கொண்டு பள்ளிக்குத் தேவையான உதவி களைப் பெறலாம்.

அனைத்து மாணவர்களின் பின்புலங்களையும் ஆசிரியர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பாடப்புத்தகம் தவிர்த்த அறிவுசார் பிற புத்தகங்களை ஆசிரியர்கள் நிறைய வாசிக்க வேண்டும்.

மருத்துவ பொதுநுழைவுத் தேர்வுக்கான அவசர சட்டத்துக்கு பிரணாப் ஒப்புதல்- தமிழகத்துக்கு விலக்கு

டெல்லி: மருத்துவ பொதுநுழைவுத்தேர்வுக்கான அவசரசட்டத்தில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜிகையெழுத்திட்டுள்ளார். இதில் தமிழகம், மகாராஷ்டிராஉள்ளிட்ட மாநிலங்களில் நடப்பாண்டில்மருத்துவபடிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விலக்குஅளிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்டமருத்துவப் படிப்புகளுக்குநாடு முழுவதும்பொது

நுழைவுத்தேர்வுநடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கு தமிழகம், மகாராஷ்டிரம்உட்பட 15-க்கும்மேற்பட்டமாநிலங்கள்கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றன.தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகிடையாது. பிளஸ்2மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் மாணவர்சேர்க்கைநடைபெறுகிறது. மகாராஷ்டிரம் உள்ளிட்டமாநிலங்களில் அந்தந்தஅரசுகள்சார்பில்நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதுதொடர்பாக அனைத்து மாநிலஅமைச்சர்களுடன் மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாடெல்லியில்அண்மையில் ஆலோசனை நடத்தினார்.அப்போதுசிபிஎஸ்இ பாடத்துக்கும்மாநிலபாடத்திட்டத்துக்கும்ஏராளமான வேறுபாடுகள்உள்ளன.சிபிஎஸ்இபாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும்நுழைவுத்தேர்வால் கிராமப்புற மாணவர்கள்பாதிக்கப்படுவார்கள் என்று மாநில அமைச்சர்கள்தெரிவித்தனர். இதையடுத்து நடப்பாண்டில் மட்டும் பொதுநுழைவுத்தேர்வில்இருந்து மாநிலங்களுக்குவிலக்குஅளிக்கமுடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பான அவசரசட்டத்துக்கும் மத்திய அமைச்சரவைகடந்தவெள்ளிக்கிழமைஒப்புதல் வழங்கியது. இருப்பினும் இந்தஅவசர சட்டத்தில் ஜனாதிபதிபிரணாப் முகர்ஜிஉடனேகையெழுத்திடவில்லை. இந்த சட்டம்குறித்துமத்தியஅரசிடம் கூடுதல்விளக்கங்களை அவர்கோரியிருந்தார். இதனால் அமைச்சர்நட்டாஜனாதிபதியைசந்தித்து விளக்கங்களைஅளித்திருந்தார்.இந்நிலையில் இன்று பொதுநுழைவுத் தேர்வுக்கானஅவசரசட்டத்தில்ஜனாதிபதி பிரணாப்முகர்ஜிகையெழுத்திட்டுள்ளார். இந்த அவசரசட்டத்தில் தமிழகம்,மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்குஓராண்டுவிலக்குஅளிக்கப்பட்டுள்ளது. இதனால்தமிழகத்தில்நடப்பாண்டில் நுழைவுத் தேர்வு முறையில்இல்லாமல், பிளஸ் 2 மதிப்பெண்அடிப்படையிலேயேகலந்தாய்வு மூலமாக மட்டுமே மருத்துவமாணவர்சேர்க்கைநடைபெறும். 

100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை கட்டணத்தை எப்படி கணக்கிடுவது?


தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். முதல்வrர் ஜெயலலிதாவின் உத்தரவில், 

மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும்.  இதன் காரணமாக அரசு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1,607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கும். இந்தச் சலுகை 23.5.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சலுகை யாருக்கெல்லாம் பொருந்தும், மின் கட்டணத்தை எப்படி கணக்கிடுவது என்பது குறித்து தமிழக மின்வாரிய உயரதிகாரிகள் கூறியதாவது:தற்போது, முதல் 100 யூனிட் பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.3. இதில் தமிழக அரசு மானியம் ரூ.2 போக மீதமுள்ள ஒரு ரூபாய் மட்டும் நுகர்வோரிடம் வசூலிக்கப்படுகிறது. மேலும் கட்டணத்தில் 1 முதல் 100 யூனிட்டுகளுக்கு ஒரு ரூபாயும், 101 முதல் 200 யூனிட்டுக்கு ரூ.1.50ம் வசூல் செய்யப்படுகிறது. அதுவே501 யூனிட்டுக்கு மேல் ரூ.6.60 வசூலிக்கப்படும்.

தற்போது உள்ள புதிய நடைமுறைபடி ஒரு நுகர்வோர் எவ்வளவு யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தி இருந்தாலும், அதில் முதல் 100 யூனிட் மின்சாரம் போக மீதமுள்ள யூனிட்டுக்கு மட்டும் தான் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், 500 யூனிட்டுக்கு மேல் சென்றால், முதல்100 யூனிட் கழித்து விட்டு மீதமுள்ள 400 யூனிட்டுகளுக்கு ரூ.3 என கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாளை 10ம் வகுப்பு 'ரிசல்ட்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மே 25) காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன. இந்தப் பொதுத்தேர்வு மார்ச் 15 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளன.

தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டுஆகியவற்றை www.tnresults.nic.in,   www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவு செய்து முடிவுகளை பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.இதுதவிர, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய, கிளை நூலகங்களில் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறியலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தெரிந்துகொள்ளலாம்.

தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்:

தேர்வு எழுதிய மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதி முதல் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in  என்ற இணையதளத்தில் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அத்துடன், அன்றைய தினமே மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.சிறப்பு துணைத் தேர்வு: தேர்வெழுத பதிவு செய்து தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் விடைத்தாள் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய புதன்கிழமை (மே 25) முதல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.

அதைத் தொடர்ந்து தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய மே 25 முதல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய பள்ளி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத்துக்கு ரூ. 305-ம், பிற பாடங்களுக்கு ரூ. 205-ம் மறுகூட்டலுக்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

மறுகூட்டலுக்குக் கட்டணம் செலுத்தும் முறை: மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை, மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே, தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும். என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மாநகராட்சிப் பள்ளியில் மாணவியர் சேர்க்கைக்கு அலைமோதிய கூட்டம்! தனியார் பள்ளிகளை விஞ்சியது.

திருநெல்வேலி மாநகராட்சி மகளிர் பள்ளியில் மாணவிகள் சேர்க்கைக்கு தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் பெற்றோர், மாணவிகள் கூட்டம் திங்கள்கிழமை அலைமோதியது. திருநெல்வேலி மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ், கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 


இந்தப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் 5 ஆயிரம் மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் இந்தப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். இதனால், ஆண்டுதோறும் மாணவிகள் சேர்க்கைக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.இதேபோல், 2016-17ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கை தொடங்கிய முதல்நாளிலேயே கூட்டம் அலைமோதியது. மே 23-ஆம் தேதிமுதல் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, திங்கள்கிழமை அதிகாலையே மாணவிகளை அழைத்துக் கொண்டு பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிடத் தொடங்கினர். 

திருநெல்வேலி நகரம், பேட்டை, பாட்டப்பத்து, பழைய பேட்டை, திருவேங்கடநாதபுரம், சுத்தமல்லி என நகரத்தின் பெரும்பான்மை பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளும் இந்தப் பள்ளிக்கு படையெடுத்தனர்.6-ஆம் வகுப்பு சேர்க்கைக்கு மட்டும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் வந்திருந்தனர். இதேபோல, 9ஆம்வகுப்பு சேர்க்கைக்கு 100-க்கும் மேற்பட்ட மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் வந்திருந்தனர்.6ஆம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலவழியில் 13 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 55 முதல் 60 மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவர். இதேபோல, 9ஆம் வகுப்பிலும் தமிழ், ஆங்கிலப் பிரிவுகள் உள்ளன. திங்கள்கிழமை நடைபெற்ற முதல்நாள் சேர்க்கையில் தமிழ், ஆங்கில வழியில் 6ஆம் வகுப்பில் 400 மாணவிகளுக்கு சேர்க்கை நடைபெற்றது. 9ஆம் வகுப்பில் 50 மாணவிகள் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து சேர்க்கை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக, பள்ளியின் தலைமையாசிரியை நாச்சியார் ஆனந்த பைரவி கூறியது:தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக பொதுத் தேர்வில் தொடர்ந்து மாநில இடங்களையும், மாவட்ட இடங்களையும் பெற்று வருகிறோம். 10ஆம் வகுப்பில் கடந்தாண்டு மாநில அளவில் 2 மாணவிகள் இரண்டாமிடம் பிடித்தனர்.இப்போது பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் மாநகராட்சிப் பள்ளி வரிசையில் முதல் 3 இடங்களையும் எங்களது பள்ளி பிடித்துள்ளது. மாணவியர் சேர்க்கைக்கான கட்டணத்தை (ரூ.50, ரூ.200) தவிர வேறு எந்தக் கட்டணமும் இல்லை. அனைத்தும் அரசே இலவசமாக வழங்குகிறது. எனவேதான் சேர்க்கையின்போது மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மாணவிகளிடமும் பள்ளிக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றார் அவர்.

ஜிப்மரில் நர்சிங் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி

ஜிப்மரில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, வரும் ஜூலை மாதம், 10ம் தேதி நடக்கிறது.புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், நர்சிங் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் ஒட்டு மொத்தமாக, 154 இடங்கள் உள்ளன. 

இந்த இடங்களுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்பங்கள், இணையதளத்தில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.ஜூன், 8ம் தேதி, மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஹால் டிக்கெட்டுகளை, ஜூன், 29ம் தேதி முதல் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

நுழைவுத்தேர்வு:

நர்சிங் நுழைவுத் தேர்வு, ஜூலை 10ம் தேதி காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரை, சென்னை, புவனேஸ்வர், காந்தி நகர்,ஜம்மு, மும்பை, புதுச்சேரி, ராஞ்சி, திருவனந்தபுரம், சோனிபட் உள்ளிட்ட இடங்களில் நடக்கிறது. நுழைவுத் தேர்வு, 90 நிமிடங்களுக்கு நடக்கும்.பொது, ஓ.பி.சி., பிரிவினருக்கு 600 ரூபாய், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு 400 ரூபாய் கட்டணம். மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டண விலக்கு உண்டு. மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய மருத்துவச் சான்றிதழ்களை, விண்ணப்பத்துடன் இணைத்து, ஜூன், 26ம் தேதிக்குள், பதிவாளர், ஜிப்மர் நிர்வாக கட்டடம், புதுச்சேரி - 605 006 என்ற முகவரிக்கு அனுப்பி, கட்டண விலக்கு பெறலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ நுழைவுத்தேர்வை நிறுத்திவைக்க அவசரசட்டம்: மத்திய மந்திரி ஜே.பி.நட்டா ஜனாதிபதியை சந்தித்து விளக்கம்.

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை ஒரு வருடத்துக்கு நிறுத்திவைக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மத்திய மந்திரி ஜே.பி.நட்டா சந்தித்து உரிய விளக்கங்களை அளித்தார்.

பொது நுழைவுத்தேர்வு

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு ‘நீட்’ எனும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு மூலம் தான் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி கடந்த 1-ந் தேதி நடந்த நுழைவுத்தேர்வை சுமார் 6½ லட்சம் மாணவர்கள் எழுதினர். ஜூலை 24-ந் தேதி 2-வது கட்ட நுழைவுத்தேர்வு நடக்க உள்ளது.பொது நுழைவுத்தேர்வு கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என்று கருத்து எழுந்துள்ளது. நகர்ப்புற மாணவர்கள் மற்றும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்களுடன் அவர்கள் போட்டிபோட முடியாது என்பதால் நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

அவசர சட்டம்

இந்த ஆண்டு மட்டுமாவது பொது நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.இதையடுத்து மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்து, இந்த ஆண்டு மட்டும் மாநில கல்வி வாரியத்தின் கீழ் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு, மாநில அரசு நடத்திவரும் மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகளில் பொது நுழைவுத்தேர்வு இன்றி மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்தது. இந்த அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை கடந்த வெள்ளிக்கிழமைஒப்புதல் அளித்தது.ஜனாதிபதி கேள்விஅந்த அவசர சட்டம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் உடனே ஒப்புதல் அளித்துவிடாமல், இதுதொடர்பாக சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டுள்ளார்.அதோடு, இந்த அவசர சட்டத்துக்கு என்ன அவசியம் வந்தது என்று விளக்கம் அளிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடமும் அவர் கேட்டார்.

மந்திரி நேரில் விளக்கம்

இதையடுத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா நேற்று நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது ஜே.பி.நட்டா மாநில வாரியான கல்வித்திட்டங்கள் உள்பட பல்வேறு விளக்கங்களை அளித்தார்.ஆனாலும் மேலும் சில விளக்கங்களை ஜனாதிபதி சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் கேட்டதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சீனா புறப்பட்டு செல்ல இருப்பதால், ஜனாதிபதி கேட்ட விளக் கங்களை அனுப்ப அமைச்சக அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்த அவசர சட்டம், அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கெஜ்ரிவால் கடிதம்

தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மாநில அரசு ஒதுக்கீட்டு (கோட்டா) இடங்களுக்கு மட்டுமே மத்திய அரசு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ள அவசர சட்டத்தில் விலக்கு கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கக்கூடாது என்று ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

பிளஸ் 2 உடனடி துணை தேர்வு: ஜூன் 22ம் தேதி துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான உடனடி துணைத் தேர்வு, ஜூன், 22 முதல் ஜூலை, 4 வரை நடக்கும்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு வராதவர்களுக்காக, சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த துணைத் தேர்வு, ஜூன், 22 முதல் ஜூலை, 4 வரை நடக்கும். இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள், தங்கள் பள்ளி மற்றும் தேர்வு மையம் மூலம் மட்டுமே, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க முடியும். தனியார், 'பிரவுசிங்' மையங்கள் மூலம் விண்ணப்பிக்க முடியாது. தேர்வு எழுத விரும்புவோர், இன்று முதல் மே, 27 வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை

நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கைக்குப் பதிலாக புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலம், ஃபரூக்காபாதில்மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா  செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கையில் சில அடிப்படை மாற்றங்களைச் செய்து, அதை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதாவது தற்போதைய கல்விக் கொள்கையில், 8ஆம் வகுப்பு வரையில் தேர்வுகளில் மாணவர்களை தோல்வியடையாமல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியக் கல்விக் கொள்கைக்கு உலகம் முழுவதும் ஆதரவு அதிகரித்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளும் இந்தியக் கல்விக் கொள்கையை ஏற்கத் தொடங்கியுள்ளன. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டில் புதிதாக 20 தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்தப் பல்கலைக்கழகங்களில்,மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு சர்வதேசத் தரம் வாய்ந்த 500க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், முஸ்லிம்கள் மீது காட்டும் அன்பு போலியானது. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோருவதில் தவறில்லை.ஆனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தலித்துகள் ஆகியோருக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அஸ்ஸாம் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்குதான் முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களித்தனர். தலித்துகளின் பெயரில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நிதி வசூலிக்கிறார். ஆனால், அந்தப் பிரிவினரிடையே அவரால் மீண்டும் செல்வாக்கு பெற முடியாது என்றார் கட்டேரியா.

பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை:'ஆன் லைனில்' விண்ணப்பம்

பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஆன்-லைனில் இன்று(மே 24) முதல் விண்ணப்பிக்கலாம் என, காரைக்குடி பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் மாலா தெரிவித்தார்.அவர் கூறியதாவது:டிப்ளமோ, பி.எஸ்.சி., முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., 2 ம் ஆண்டில் நேரடியாக சேரலாம். இதற்கான விண்ணப்பம், www.accet.co.in, www.accet.edu.in, www.accetlea.com என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பத்தை 'ஆன்-லைனில்' பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அத்துடன் சேர்க்கை கட்டணம் ரூ.300 க்கான டி.டி.,-மதிப்பெண் விபர பட்டியல், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும். முன்னாள் ராணுவவீரர் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், அதற்குரிய ஆதாரங்களை இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை செயலர், பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை, அழகப்ப செட்டியார், பொறியியல் கல்லுாரி, காரைக்குடி என்ற முகவரிக்கு ஜூன் 10 க்குள் அனுப்ப வேண்டும். எஸ்.சி.,-எஸ்.டி., மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. டி.டி., இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், என்றார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!