Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 27 May 2016

தினம் ஒரு புத்தகம்"எது நல்ல பள்ளி"

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"ஆடுதீண்டாப்பாளை – மருத்துவ பயன்கள்"

ஆடு தீண்டாப்பாளை முழுத்தாவரமும் குமட்டலான மணமும் வெப்பத் தன்மையும் கொண்டது. ஆடு தீண்டாப்பாளை குடல் புண்களை ஆற்றவும் வயிற்றுப் புழுக்களைக் கொல்லவும் விஷத் தன்மையை முறிக்கவும் உடலைப் பலப்படுத்தவும் மாதவிலக்கைத் தூண்டவும் பயன்படுகின்றது.

ஆடு தீண்டாப்பாளை தரையோடு படர்ந்து வளரும் புதர்ச்செடி, மாற்றடுக்கில் அமைந்த, சாம்பல் படர்ந்த, முட்டை வடிவ இலைகள் கொண்டது. மலர்கள் ஆழ்ந்த சிகப்பு நிறமானவை. கனிகள் முதிர்ந்த நிலையில் உள்ளிருக்கும் விதைகள் வெடித்துச் சிதறும்.

ஆடு தீண்டாப்பாளை இந்தியா முழுவதும், முக்கியமாகச் சமவெளிகளில் வளர்கின்றது. கருப்பு மண் உள்ள நிலங்கள், சற்றே உப்புச்சுவை கொண்ட கழி நிலங்களில் மிகவும் பரவலாக வளர்கின்றது. பங்கம்பாளை, வாத்துப்பூ ஆகிய பெயர்களும் ஆடு தீண்டாப்பாளை தாவரத்திற்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.

வயிற்றுப் புழுக்கள் குணமாக ஆடு தீண்டாப்பாளை இலைச்சூரணம் ¼ தேக்கரண்டி அளவு வெந்நீருடன் கலந்து இரவில் குடிக்க வேண்டும் அல்லது ஆடு தீண்டாப்பாளை விதைச் சூரணம் ஒரு தேக்கரண்டி அளவு விளக்கெண்ணெயில் கலந்து இரவில் சாப்பிட வேண்டும். பேதியாகும் வாய்ப்பும் உண்டு. அவ்வாறு ஏற்பட்டால் மோர் சாதம் சாப்பிட்டு பேதியைக் கட்டுப்படுத்தலாம்.

பசுமையான ஆடுதீண்டாப்பாளை இலைகளை நசுக்கிப் பிழிந்து எடுத்த சாறு 50 மி.லி.யுடன் தேங்காயெண்ணெய் 50 மி.லி. சேர்த்து, நீர்வற்றும் வரை சுண்டக் காய்ச்சி, கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக் கொண்டு, மேல்பூச்சாகத் தடவிவர தோல் நோய்கள், சிரங்கு, கரப்பான், வண்டுக்கடி தீரும்.

Tamilnadu Schools Reopen Date: 1.6.2016

தமிழகத்தில் பள்ளிகள் ஜுன் 1 ம் தேதி திட்டமிட்டபடியே துவங்கும் . பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது.cbseresults.nic.in மற்றும் www.cbse.nic.in  ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 1- ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையும் நடைபெற்றது.

புதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிப்பு

புதுச்சேரியில் கடும் கோடை வெப்பம் நிலவி வருவதால் பளளிகளின் விடுமுறைக்காலம் வரும் ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை இயக்குநர் ல.குமார் வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் அரசு மறறும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1-ம் தேதி (புதன்கிழமை) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலவி வரும் கடும் கோடை வெயிலின் காரணமாக அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் துவங்கும் நாள் ஜூன் 6-ம் தேதி (திங்கள்கிழமை) ஆக மாற்றி அறிவிக்கப்படுகிறது.

மேலும் இடைப்பட்ட இவ்விடுமுறை நாள்களில் பள்ளிகளில் எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என குமார் எச்சரித்துள்ளார்

நாடு முழுவதும் அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 65 ஆகிறது.

நாடு முழுவதும் அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்த்தப்படும், இது தொடர்பாக மத்திய மந்திரிசபை ஒரு வாரத்தில் முடிவு எடுக்கும் என பாரதீய ஜனதா அரசின் 2-வது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி கூறினார். 2-வது ஆண்டு நிறைவு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்று 2 ஆண்டுகள் முடிந்து நேற்று 3-வது ஆண்டு தொடங்கியது.

இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம், சகாரன்பூரில் நேற்று மாலை பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர்நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அவர் கடந்த 2 ஆண்டுகளில் தனது அரசு சாதித்தது என்ன என்பது குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:- நமது நாட்டிலே திட்டங்களை ஜாதி, இனம் மற்றும் ஓட்டு வங்கி பார்த்து தொடர்புபடுத்துகிற வழக்கம் இருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் நாட்டில் உள்ள 125 கோடி மக்களும் எனது குடும்பம். அதில் ஜாதிக்கும், சமூகத்துக்கும் இடம் இல்லை. ரூ.2 லட்சம் கோடி திட்டம் 2022-ம் ஆண்டு, நமது நாடு சுதந்திரம் அடைந்ததின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிற வேளையில், நாட்டில் உள்ள ஏழைகள், விவசாயிகள்வருமானம் இரு மடங்காக உயர்கிற வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க விரும்புகிறோம். கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ.2 லட்சம் கோடி வழங்குகிற திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். இந்த திட்டத்தின் மூலம்கிராமங்கள் மாற்றி அமைக்கப்படும். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மின்வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

அதற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம். மண்ணில் இருந்து பொன் நமது நிலங்கள் பாழாய்ப்போய் விட்டன. எனவேதான் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கி இருக்கிறோம். எனவே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை விவசாயிகள் அறிவார்கள். நீர்ப்பாசனத்தை பொறுத்தமட்டில்நம்மிடம் பெரிய கனவுகள் இருக்கின்றன. நமது விவசாயிகளுக்கு தண்ணீர் தந்து விட்டால், அவர்கள் மண்ணில் இருந்து பொன்னை விளைவிப்பார்கள். கரும்பில் இருந்து எத்தனால் தயாரிக்கிற திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறோம். இது கரும்பு விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டம் ஆகும். பெண்களுக்கான திட்டம் இப்போது ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஏனென்றால் பெண் சிசுக்கொலைகள் நடைபெறுகின்றன. எனவேதான் நாங்கள் பேட்டி பச்சாவ் பேட்டிபதாவ் (பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்) திட்டத்தை செயல்படுத்துகிறோம். நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து, பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட எந்தவொரு பெரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊழல் 2 ஆண்டுகளுக்கு முன்பு, எங்கு பார்த்தாலும் ஊழல் பற்றிய செய்திகள்தான்.

அந்த அளவுக்குகொள்ளையடித்தனர். மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவா அவர்கள் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டார்கள? முந்தைய அரசு பணத்தையெல்லாம் என்ன செய்தது என்பது தெரியாது. முந்தைய அரசை விட இந்த அரசு ஒரு நாளில் இரு மடங்கு அளவுக்கு சாலைகளை அமைக்கிறது. நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக செய்தித்தாள்களில் தினமும் ஒரு ஊழல் செய்தி வந்து கொண்டிருந்தது. இந்த ஊழல்களில் பெரிய மனிதர்கள் பிடிபட்டனர். நாங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர், எங்கள் அரசில் எங்காவது ஊழல் இருக்கிறதா? எங்கள் எதிரிகளாவது எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியது உண்டா? கழுகுக்கண்கள் எனது அரசு எந்தளவுக்கு கண்காணிக்கப்படுகிறது என்பதை நீங்கள்அறிவீர்கள். எனது அரசு கழுகு கண்களால் கண்காணிக்கப்படுகிறது. இந்தளவுக்கு எனது பணியை நெருக்கமாக கண்காணிப்பதை நான் வரவேற்கிறேன்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பைசாவுக்கும் அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். நான் எனது டாக்டர் நண்பர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். ஒவ்வொரு மாதத்தின் 9-வது நாளில், ஏழை கர்ப்பிணிகளுக்கு இலவச சிகிச்சை அளியுங்கள். மருந்துகளை இலவசமாக வழங்குங்கள். டாக்டர்களின் ஓய்வு வயது உத்தரபிரதேச மண்ணில் இருந்து கொண்டு நான் ஒரு அறிவிப்பு வெளியிடுகிறேன். அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 60 ஆக இருந்தாலும், 62 ஆக இருந்தாலும் இனி நாடு முழுவதும் அவர்களின் ஓய்வு வயது ஒரே மாதிரியாக 65 ஆக ஆக்கப்படும். இது தொடர்பான முறையானமுடிவை மத்திய மந்திரிசபை ஒரு வாரத்தில் எடுக்கும். எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு, வளர்ச்சிதான். எனவே அதில் கவனத்தை செலுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்

கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர கோரிக்கை

கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பத்தை பெற்ற மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு வெளியான, 10 நாட்களுக்குள் கல்லுாரிகளில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான, மே, 17ம் தேதி முதல், 10 நாட்கள் என்ற கணக்கில், மே, 27ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில் விண்ணப்பம் வாங்கவே, காத்திருக்கும் சூழல் உள்ளது. பல மாவட்ட பள்ளிகளில், பிளஸ் 2 தற்காலிகமதிப்பெண் சான்றிதழ் மட்டுமே, வழங்கப்பட்டுள்ளது. கல்லுாரி படிப்பில் சேர தேவையான மாற்று சான்றிதழ் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்னும் வழங்கப்படவில்லை.

எனவே, அண்ணா பல்கலையில் விண்ணப்ப தேதியை நீட்டித்தது போல, கலை, அறிவியல் கல்லுாரிகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்க, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கிடைக்குமா அரசு 'லேப் - டாப்'

கடந்த ஐந்து ஆண்டுகளாக, பள்ளி மாணவ, மாணவியருக்கு வினியோகிக்கப்பட்டு வந்த இலவச, 'லேப் - டாப்', இந்த ஆண்டு தாமதமாக தான் கிடைக்கும் என, தெரியவந்து உள்ளது.இது தொடர்பாக, அதிகாரிகளிடையே பல குழப்பம் நிலவி வருகிறது.கடந்த, 2011ல் ஆட்சியில் அமர்ந்த போது, மாணவர்களுக்கு இலவச, 'லேப் - டாப்' திட்டத்தை அ.தி.மு.க., அரசு அமல்படுத்தியது.

ஐந்து ஆண்டு காலத்தில், 4,331 கோடி ரூபாயில், 32 லட்சம் லேப் - டாப்கள் வினியோகிக்கப்பட்டன.இந்த முன்னோடி திட்டத்தை, பல மாநிலங்கள் பின்பற்ற துவங்கின.தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்க வெகு சில நாட்களே இருக்கும் நிலையில், இலவச லேப் - டாப் பற்றிய எந்த முடிவும் எடுக்கப் படாமல் உள்ளது. ஆட்சிக்கு மீண்டும் வந்திருக்கும் அ.தி.மு.க., அரசு, அது பற்றிய உறுதியான முடிவை எடுக்காததே அதற்கு காரணம். இதற்கான உத்தரவு ஏதும் அரசிடம் இருந்து அதிகாரிகளுக்கு வராததால், லேப் - டாப் வினியோகம் தாமதமாகும் என, தெரியவந்து உள்ளது.இதுகுறித்து, தமிழக தகவல்தொழில்நுட்ப துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:அ.தி.மு.க., வெளி யிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், 'மாணவர்களுக்கு இலவச, லேப் - டாப்புடன், இலவச இணைய சேவை வழங்கப்படும்' என, கூறப்பட்டு இருந்தது.இலவச லேப் - டாப் மட்டும் என்றால், கொள்முதல் பணி இந்த நேரம் துவங்கி இருக்கும். ஆனால், இலவச லேப் - டாப்புடன் இணைய வசதி என, கூறப்பட்டுள்ள தால் சற்று குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, அரசு கொள்கை முடிவை எடுத்து, அந்த கோப்புகள் நிதித்துறைக்கு சென்று திரும்பிய பின்னரே, அது தொடர்பான உத்தரவு வெளியிடப் படும். அதனால், இந்த ஆண்டு, இலவச லேப் - டாப் பெற மாணவர்கள், சில மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இலவச இணைய இணைப்பு எப்படி:

'மாணவர் களுக்கு, லேப் - டாப்புடன் இலவச இணைய இணைப்பு வழங்கப்படும்' என, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இணைய வசதிக்காக, லேப் - டாப்புடன், 'சிம் கார்டு'பொருத்தக்கூடிய, 'டாங்கிள்' எனும், 'டேட்டா கார்டு' வழங்கப்படும் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால், லேப் - டாப்பிலேயே, சிம்கார்டு பொருத்தி வழங்கும் நடைமுறை பின்பற்றப்படவும் வாய்ப்பு உள்ளது.

மேலும், இணைய இணைப்பு, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம் வாங்கப்படுமா அல்லது தனியாரிடம் வாங்கப்படுமா என்ற குழப்பமும் நிலவுகிறது.இதுதவிர, லேப் - டாப்களை, சப்ளை செய்யும் நிறுவனத்திடமே இணைய வசதி இணைப்பை ஏற்பாடு செய்து தரும் பொறுப்பை தந்து விடலாமா, என்ற யோசனையும் உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்

இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை விண்ணப்பிக்க அவகாசம்

நாடு முழுவதும் மாணவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய மருத்துவ நுழைவுத் தேர்வான, 'நீட்' இரண்டாம் கட்ட தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.'அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, மருத்துவ நுழைவுத் தேர்வான, நீட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இதனால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மருத்துவ கவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டது. எந்த வித தயார்படுத்தலும் இல்லாமல் நுழைவுத் தேர்வை எப்படி எழுதுவது என, பிளஸ் 2 மாணவர்கள் தவித்தனர்.இதையடுத்து, மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, இந்த ஆண்டு மட்டும் மருத்துவ நுழைவுத் தேர்வை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடத்த விலக்கு அளித்து, அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.ஏற்கனவே, மே, 1ம் தேதி நீட் தேர்வு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான,சி.பி.எஸ்.இ., நேற்று அறிவித்தது. இந்த தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது.நுழைவுத் தேர்வுக்கு விலக்கு பெற்ற மாநிலங்களில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளின் மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லுாரிகளிலுள்ள மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்களில் சேர, இந்த தேர்வை எழுத வேண்டாம்.அதே நேரம், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளிலுள்ள மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் தனியார் ஒதுக்கீட்டு இடங்களில் சேர, நீட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.

ஜூன், 21 வரை ஆன்லைனில், http://aipmt.nic.in/aipmt/Welcome.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஜூலை, 24ல் தேர்வு நடக்கும். மே, 1ம் தேதி தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறுவோமா என, சந்தேகத்தில் உள்ளவர்களும்; மே, 1ம் தேதி தேர்வில் பதிவு பெற்று, எழுதாதவர்களும் கூட இந்த தேர்வில் பங்கேற்கலாம். ஆங்கிலம் மற்றும்இந்தியில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.முதல் நாள் 6,000 விண்ணப்பம்விண்ணப்பம் வினியோகம் துவங்கிய முதல் நாளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 6,123 பேர் ஆர்வமுடன் விண்ணப்பங்கள் பெற்றனர்.'நீட்' என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தியே, மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், தமிழகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. மத்திய அரசு, ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் வகையில், அவசர சட்டம் கொண்டு வந்ததால், சிக்கல் தீர்ந்தது.இதையடுத்து, மருத்துவக் கல்வி இயக்ககம், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகள், சென்னை பல் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகத்தை துவக்கியது. எப்போது சிக்கல் தீரும் என, காத்திருந்த மாணவ, மாணவியர் விண்ணப்பம் வாங்க ஆர்வமுடன் குவிந்தனர். நேற்று முதல் நாளில், 6,123 பேர் விண்ணப்பங்கள் பெற்றனர்.

இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறுகையில், ''கடந்த ஆண்டில், 33 ஆயிரம் பேர்விண்ணப்பம் பெற்றனர். இந்த ஆண்டில், 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. ஜூன், 6ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்,'' என்றார்.எம்.பி.பி.எஸ்., இடங்கள் திடீர் குறைப்புதமிழகத்தில், கடந்த ஆண்டில், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகளின், 2,665 இடங்கள்; எட்டு தனியார் கல்லுாரிகளில், 1,010 இடங்கள்; இ.எஸ்.ஐ., கல்லுாரி யில், 100 இடங்கள் என, மொத்தம், 3,765 எம்.பி.பி.எஸ்., இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு, முதற்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூன், 20ம் தேதி நடக்க உள்ளது.
* மதுரை அரசு கல்லுாரியில், 155 இடங்கள் இருந்தன. எம்.சி.ஐ., ஆய்வு நடத்தி, ஐந்து இடங்களை குறைத்து விட்டது
* அதேபோல், இன்னும் இரண்டு தனியார் கல்லுாரிகளுக்கு, எம்.சி.ஐ., அனுமதி தராததால், தனி யார் கல்லுாரிகளில், 250 இடங்கள் குறைந்துள்ளன. மொத்த இடங்களில், 255 குறைந்து, 3,510 இடங்களே உள்ளன.

இதுகுறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், ''இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில், சுயநிதி கல்லுாரிகளுக்கான இடங்கள் அதிகம் குறைந்துள்ளன. கவுன்சிலிங் நடக்கும் முன், விடுபட்ட இடங்களுக்கு அனுமதி கிடைக்கவிட்டால், சுயநிதி கல்லுாரிகளுக்கான, 'கட் ஆப்' மதிப்பெண்அதிகரிக்கும்,'' என்றார்.

எம்.எஸ்சி., - எம்.பில்., விண்ணப்ப பதிவு துவக்கம்

அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்புக்கு,ஆன் லைன் விண்ணப்ப பதிவு, ஜூன் 8ம் தேதி நிறைவடைகிறது.அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்புகளுக்கு, தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, மே 25ம்தேதி முதல், ஆன் லைனில் விண்ணப்ப பதிவுதுவங்கியுள்ளது.'எம்.எஸ்சி., இரண்டு ஆண்டு படிப்பு மற்றும் எம்.பில்., ஆகியவற்றுக்கு, ஆன் லைனில், ஜூன் 8ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

100 யூனிட் மின்சாரம் இலவசம்: கணக்கீடு எவ்விதம்? மின்சார வாரியம் அறிவிப்பு

தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சார இலவசம் என்ற அறிவிப்பையடுத்து, மின்கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து வீட்டு மின்நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதனையடுத்து மே 23-ஆம் தேதி ஜெயலலிதா முதல்வராக மீண்டும் பதவியேற்றதும், 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கான ஆணையில் கையெழுத்திட்டார். அதன்படி மே 23-ஆம் தேதிக்குப் பின்பு எடுக்கப்படும் அனைத்து கணக்கீடுகளுக்கும் இந்தச் சலுகை பொருந்தும். இந்நிலையில் மின்சார பயன்பாட்டுக்கான கட்டணத்தை எவ்வாறு கணக்கிடுவது என்று பல்வேறு குழப்பங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து மின்சாரத்தை கணக்கிடுவது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.

கணக்கீட்டு முறை: மின்சார வாரியம் 0 - 200, 201 - 500, 501 - 1100 வரை என்று மூன்று பிரிவுகளில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கிறது. புதிய சலுகையின்படி இரண்டு மாதங்களில் 100 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தினால் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

0 - 200 யூனிட்: ஒரு மின்நுகர்வோர் 120 யூனிட் பயன்படுத்தினால், அவருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம். மீதம் உள்ள 20 யூனிட்டுக்கு ரூ 1.50 வீதம் ரூ. 30, நிரந்தரக் கட்டணம் ரூ. 20 சேர்த்து ரூ. 50 செலுத்த வேண்டும். இதே போன்று 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 100 யூனிட்டை கழித்தது போக மீதி உள்ள யூனிட்டுக்கு ரூ. 1.50 கட்டணத்தில், நிரந்தரக் கட்டணம் ரூ 20 சேர்த்து வசூலிக்கப்படும்.201 - 500 யூனிட்: ஒரு மின்நுகர்வோர் 500 யூனிட் வரை பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம். அடுத்த 101 - 200 யூனிட்டுக்கு ஒரு யூனிட் ரூ. 2 என்ற அடிப்படையில் ரூ. 200, 201 - 500 யூனிட் வரை, ஒரு யூனிட்ரூ.3 என்ற அடிப்படையில் ரூ. 900, அதனுடன் நிரந்தக் கட்டணம் ரூ. 30 சேர்த்து, மொத்தம் ரூ. 1130 வசூலிக்கப்படும்.

501 - 1,100 யூனிட்: ஒரு மின்நுகர்வோர் 1,100 யூனிட் வரை பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம். 101 - 200 யூனிட் வரை, ஒரு யூனிட் ரூ. 3.50 என்ற அடிப்படையில் ரூ. 350, 201 - 500 யூனிட் வரை, ஒரு யூனிட்ரூ.4.60 என்ற அடிப்படையில் ரூ. 1,380, 501 - 1,100 வரை ஒரு யூனிட் ரூ. 6.60 என்ற அடிப்படையில் ரூ. 3,960, நிரந்தரக் கட்டணம் சேர்த்து ரூ. 50 சேர்த்து, மொத்தம் ரூ. 5,740 வசூலிக்கப்படும்.100 யூனிட் மின்சார சலுகை அனைத்து வீட்டு உபயோக மின் நுகர்வோர்களுக்கும் கிடைக்கும். வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு சப்-மீட்டர் வைத்திருந்தால் அவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கணக்கிடப்பட்ட மின்கட்டண விவரம்

யூனிட் -மின்கட்டணம்(ரூபாயில்)

120 - 50
160 - 110
200 - 170
250 - 380
300 - 530
450 - 980
500 - 1,130
650 - 2,770
800 - 3,760
950 - 4,750
1,100 - 5,740

சென்னையில் வரும் 28, 31-ல் பள்ளி வாகனங்கள் ஆய்வு:

பாதுகாப்பு குறைபாடு இருந்தால் தகுதிச் சான்று தரக்கூடாது- போக்குவரத்து ஆணையரகம் உத்தரவு
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 9 ஆர்டிஓக்கள் மூலம்அவர்களின் எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளின் வாகனங்களில் வரும் 28, 31-ம் தேதிகளில் ஆய்வு நடத்தப்படவுள்ளது. வாகனங்களின் பாதுகாப்பு குறைபாடு இருந்தால் எப்சி (தகுதி சான்று) வழங்கக்கூடாது என போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட் டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொத்தம்37,107 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்பட்டு வருகி றது. அந்த வகையில், கடந்தசில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தப் பட்டு வருகின்றன.பள்ளி வாகனங்களில் டயர்கள், அவசர கால கதவு,ஜன்னல்கள், படிகள், தீயணைப்புக் கருவிகள், முதல்உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப் பட்டு வருகிறது.

ஓட்டுநர்களுக்கும்...

பாதுகாப்பில் குறைபாடு இருந்தால் அந்த வாகனம் இயக்குவதற்கான எப்சி (தகுதிச் சான்று) அளிக்கப் படாது. இதுதவிர ஓட்டுநர்களின் பார்க்கும் திறன் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 9 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ) மூலம் அவர்களின் எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளின் வாகனங்களில் வரும் 28, 31-ம் தேதிகளில்ஆய்வு நடத்தப்படவுள்ளது.இது தொடர்பாக போக்கு வரத்து ஆணையரக அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘பள்ளிவாகனங்களில் ஆய்வு குறித்து நேற்று முன்தினம்மாவட்ட ஆட்சியர் தலைமை யில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

1,800 பள்ளி வாகனங்கள்

அதன்படி, சென்னையில் உள்ள அயனாவரம், அண்ணாநகர், தண்டையார் பேட்டை, வள்ளலார் நகர், கொளத்தூர், மந்தைவெளி,திருவான்மியூர், கே.கே.நகர், விருகம்பாக்கம் ஆகிய வட்டாரபோக்குவரத்து அலுவல கங்கள் மூலம் அவர்களின் எல்லைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்களில் வரும் 28, 31-ம் தேதிகளில் ஆய்வு நடத்தப்படும். சுமார் 1,800 பள்ளி வாகனங்கள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.ஆய்வின்போது வாகனத்தின் பாதுகாப்பில் குறைபாடுஇருந்தால் எப்சி வழங்கப் படாது. பெரிய அளவில் குறைபாடு இருந்தால், சம்பந்தப் பட்ட வாகனத்தின் பர்மிட்ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்’’ என்றனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!