Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 29 May 2016

ஹெல்மெட் இருந்தால்தான் பெட்ரோல் கிடைக்கும்

‘தலைக்கவசம் இல்லையெனில், எரிபொருள் கிடையாது’ என்ற விதியை அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களும் பின்பற்றுமாறு, ஒடிசாவில் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவது தொடர்பாக, தலைமைச் செயலாளர் ஏ.பி.பதி தலைமையில் புவனேஷ்வரில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சாலைவிபத்து அதிகளவில் நிகழும் இடங்களை அடையாளம் கண்டு, விபத்துக்கான காரணங் களை ஆராய்ந்து, 2 மாதங்களில் அவற்றை சரிசெய்ய வேண்டும் என, அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தர விட்டார். அதோடு, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டியது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, தலைக்கவசம் இல்லாமல் வரு வோருக்கு, பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படக் கூடாது என்றும் யோசனை தெரி விக்கப்பட்டது.

இதன்படி, ‘தலைக்கவசம் இல்லையெனில், எரிபொருள் கிடையாது’ என்ற விதியை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களும் பின்பற்றுவதை காவல்துறை உறுதி செய்யவேண்டும் என, தலைமைச் செயலாளர் ஏ.பி.பதி அறிவுறுத்தினார்.

தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2உயர்கிறது.

தனியார் பால் விலை லிட்டருக்கு நாளை முதல் 2 ரூபாய் உயர்கிறது. இந்த திடீர் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை அதிகமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தனியார் பால் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது.இந்த நிலையில் தனியார் பால் நிறுவனமான திருமலா, பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டு உள்ளது. இது நாளைமுதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மாநில தலைவர் பொன்னுசாமி வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் பாலுக்கான கொள்முதல் விலை மற்றும் வாகன எரிபொருள் விலை உயராத போது திருமலா நிறுவனம் நாளை திங்கட்கிழமை (மே.30) முதல் தங்களுடைய பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்த்துவதாக எங்களது பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவித்துள்ளது.ஏற்கனவே தமிழகத்தில் இருந்து வரும் முன்னணி பால் நிறுவனமான ஹட்சன் ஆரோக்கியா நிறுவனம் இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி மற்றும் மே மாதம் முதல் வாரத்தில் தங்களுடைய பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தியது.திருமலா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் எந்தவொரு முன் அறிவிப்பும் வெளியிடாமல் 200 கிராம் தயிர் பாக்கெட்டில் 0.25 கிராம் அளவை குறைத்து ஒரு கிலோவிற்கு ரூ.8.57 பைசா வரை மறைமுக விலையேற்றத்தை மக்கள் மீது திணித்தது. அத்துடன் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லிட்டருக்கு ரூ. 2 பால் விற்பனை விலையையும் உயர்த்தியது.

மக்கள் விரோத நடவடிக்கையாக பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை தன்னிச்சையாக உயர்த்தும் திருமலா நிறுவனத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள்நலச்சங்கம் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.மக்களை பாதிக்கின்ற வகையில் பால் விலை உயர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம் உடனடியாக விலை உயர்வினை திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

வருகிற 30 ந்தேதி முதல் உள்ளாட்சி தேர்தல் பணி துவங்க உள்ளது

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், டூ வீலர் கொண்டுசென்றால் ஒழுங்கு நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இருசக்கர வாகனங்களை கொண்டுவரக் கூடாது. மீறி கொண்டுவந்தால் அவர்கள் மீது பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதளம்: சுஷ்மா சுவராஜ் தொடங்கி வைத்தார்

ஆங்கிலம், இந்தியை தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட மேலும் 6 மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் அலுவலக செய்திகள் இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இதுவரை வெளியாகி வந்தது. இந்நிலையில், பிரதமர் அலுவலக இணையதளம், தமிழ் உள்ளிட்ட  மேலும் 6 மொழிகளில் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

மாநிலத் தரவரிசையில் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு கடும் பின்னடைவு!!!

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்ற பெருமைக்குரிய திருநெல்வேலி மாவட்டம், 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநிலத் தர வரிசையில் கடும் பின்னடவை சந்தித்திருப்பது கல்வியாளர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.

பேஸ்புக், டுவிட்டர், லெக்கிங்ஸ்சுக்கு தடை - தனியார் பள்ளியின் அதிரடி நிபந்தனைகள்...

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், தனியார் பள்ளிகளில்தான் மாணவர்களை சேர்க்கவும், படிக்க வைக்கவும் பெற்றோர் விரும்புகின்றனர். இதனால், அப்பள்ளிகள், பலவிதமான கெடுபிடிகள் விதிக்கின்றன.
இந்த வரிசையில், சென்னை குரோம்பேட்டையிலுள்ள தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளி ஒன்று,
மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பல நிபந்தனைகள் விதித்துள்ளது.
அதன் விவரம்:

பொருளாதார ரீதியில் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை !

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’
ரூ.34 லட்சம் கல்வி நிதி மாவட்டத்தில் தலா
10 பேருக்கு வழங்கப்படும்
சென்னை,
எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு கல்வி
நிதியாக, ‘தினத்தந்தி’ ரூ.34 லட்சம்
வழங்குகிறது. இந்த நிதி உதவி, ஒவ்வொரு
மாவட்டத்திலும் 10 பேருக்கு வழங்கப்படும்.
‘‘தினத்தந்தி கல்வி நிதி’’
கல்வியில் சிறந்து விளங்குவதற்காக,
மாணவர்களை ‘தினத்தந்தி’
ஊக்குவித்து
வருகிறது.

சதத்தைத் தாண்டியும் தொடரும் சாதனைகள்


தேவகோட்டை -தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  2015-2016 கல்வி ஆண்டில் சதத்தை தாண்டியும்  "கல்வி  மற்றும் சமுதாயம்" தொடர்பான சுமார் 131 செயல்பாடுகள்  நடை பெற்றுள்ளன.

தினம் ஒரு புத்தகம்"தமிழகத்தில் மாற்றுக் கல்வி"


தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"சோம்பு – மருத்துவ குணங்கள்"

பொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு  சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். சிலர் அதை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். ஆம் உண்ணும் உணவை ஜீரணிக்க வைக்கும் சக்தி இதற்குண்டு. எனவே எளிதில் ஜீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள்.

சீன பாடப் புத்தகங்களில் பாரம்பரிய கலாசாரத்துக்கு முக்கியத்துவம்

பள்ளிப் பாடப் புத்தகங்களில் சீனாவின் பாரம்பரியக் கலாசாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க சீனா முடிவு செய்துள்ளது.
 பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 1 சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் பள்ளிகள்!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்துள்ள நிலையில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், அறிவியல் மற்றும் வணிக படிப்புகளுக்கு அதிக போட்டி ஏற்பட்டுள்ளதால், சில தனியார் பள்ளிகள் நுழைவுத்தேர்வு நடத்தியே மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்குவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

கிரடிட், டெபிட் கார்டு மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு சேவை கட்டணம் ரத்து.

கிரடிட் மற்றும் டெபிட்கார்டு மூலம் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கான சேவைக் கட்டணம்ஜூன் 1-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கிட மத்திய ரயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அரசுப்பள்ளியில் பணியாற்றும் நம்மிடம் இருந்து வர வேண்டிய மாற்றங்களும், ஏற்றங்களும்!!!

1. ஆசிரியர்கள் தங்களை ஒரு சமூக மாற்றத்திற்கான விதைகள் என்பதை உணரவேண்டும்.

2. ஒரு சிறந்த ஆசிரியர் தொடர்ந்து தம்முடைய வாசிப்பின் மூலம் தன்னை வளப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.

3.வகுப்பறையில் தாம் மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல், மாணவர்களுக்கு தங்கள் கருத்துக்களை கூற வாய்ப்பு தரவேண்டும்.

பள்ளி வாகனங்களில் ஆய்வு தொடக்கம்: 9 வாகனங்களுக்கு தகுதிச் சான்று மறுப்பு

சென்னையில் பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தும் பணிகள் நேற்று தொடங்கியது. ஆய்வின்போது 9 வாகனங்களுக்கு எப்சி (தகுதி சான்று) மறுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொத்தம் 37,107 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

பொறியியல் படிப்பு விண்ணப்பிக்க மே 31 கடைசி நாள்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன் லைன் பதிவு மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு கடைசி தேதி மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. நேற்று மாலை 6 மணிநிலவரப்படி பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 44 ஆயிரத்து 120 பேர் பதிவுசெய்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை: மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவு.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்கூறியிருப்பதாவது:

4-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி இருக்க வேண்டும் - நிபுணர் குழு பரிந்துரை

சம்பளம் வழங்க கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரதம்

மருத்துவ விடுப்பு நாட்களை, பணி நாட்களாக கருதி, எட்டுமாதம் சம்பளம் வழங்க கோரி, தேனி மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலகம் முன், பள்ளி தலைமை ஆசிரியை, மகனுடன் உண்ணாவிரதம் இருந்தார்.தேனி மாவட்டம், போடி ஒன்றியம், கூழையனுார் அரசு நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியை கற்பகம், 46. இதற்கு முன், இவர் குண்டல்நாயக்கன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியையாக பணிபுரிந்தார்.

சேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டணம் உயரும்.

அடுத்த மாதம் முதல், சேவை வரி விகிதம் உயர்த்தப்படுவதால், ஓட்டல், பார்களுக்கு செல்வோர், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் என, பல தரப்பினரும், கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த, 2015ல், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சேவை வரியை, 12.36சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தார்.

மாணவர்களுக்கான திட்டங்களுக்கு ரூ.3,300கோடி ஒதுக்கீடு.

பள்ளி மாணவர்களுக்கான, 14 வகை நலத் திட்டங்களுக்கு, 3,300கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின், புதிய அமைச்சர் பெஞ்சமின் தலைமையில், துறை ரீதியான முதல் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது.

தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்

தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் வரும் ஜூன் 13-ம் தேதி நடைபெறவிருந்த தேர்தலை இந்தியதேர்தல் ஆணையம்ரத்து செய்துள்ளது.அதற்குப் பதிலாக வேறு தேதியில் தேர்தலை நடத்துவது குறித்து புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது.தேர்தல் ஆணைய வரலாற்றில் இவ்வாறாக தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.

இணைய சேவை மையங்கள் இன்று இயங்கும்

அரசு இணைய சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 29) இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை நடுநிலைப் பள்ளிஆசிரியரும் அப்பள்ளி மாணவியும் கலந்து கொண்ட "ஒரு வார்த்தை ஒரு லட்சம் "நிகழ்ச்சியானது வருகின்ற ஞாயிறு (29/05/16) அன்று மாலை  6 மணிக்கு விஜய்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அரசுப்பள்ளியின் முயற்சியை காணத்தவறாதீர்.

TAMIL UNIVERSITY TANJORE ADMISSION NOTIFICATION B.Ed 2016 Distance EducationTAMIL UNIVERSITYTANJORE

ADMISSION NOTIFICATION
B.Ed 2016 Distance Education
*Application issue from 24.04.2016
*Cost of Application Rs.600/-
*Course Fees
First Year- 25,300
Second Year- 25,000
*No Entrance Exam
*Last date for issue and filled in applications 31.05.2016 till 5pm

புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவ, மாணவிகள் பழைய பாஸ் பயன்படுத்தலாம்.

பள்ளி மாணவர்களுக்கு புதிய பாஸ் வழங்கும் வரையில் தற்போதுள்ள பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம். நடத்துநர்கள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1-ம் தேதி பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.

சென்னை :தமிழகத்தில் உள்ள பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

தமிழக அரசு அரசு இசைக் கல்லூரி மாணவர் சேர்க்கை அறிவிப்பு

5-ம் வகுப்பில் இருந்து தான் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரை

பள்ளிகளில் 5-ம் வகுப்பில் இருந்து தான் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரைத்து உள்ளது.
புதுடெல்லி :
பள்ளிகளில் 5-ம் வகுப்பில் இருந்து தான் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரைத்து உள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!