Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 30 May 2016

வாட்டர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்?

ஒரு வாட்டர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்? பிளாஸ்டிக்கில் நிறைய வகைகள் இருக்கின்றன. ‘பெட் பாட்டில்’களைத்தான் தண்ணீர் குடிக்கப் பயன்படுத்துகிறோம். நெகிழும் தன்மை கொண்ட பாட்டில்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் தன்மை கொண்டவை. தொடர்ந்து பயன்படுத்துவது நல்லதல்ல.
அதில் தண்ணீரை ஊற்றி, பாட்டிலை வெயிலில் வைத்தால் பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக உருகி, நீங்கள் குடிக்கும் தண்ணீரில் கலந்துவிடும்.
இது உடல் ரீதியாக நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தும். இவற்றை சரியான வெப்பநிலையில் வைத்திருப்பது நல்லது. பெட் பாட்டில்களை வருடக்கணக்கில் பயன்படுத்தக்கூடாது.
தண்ணீரில் பிளாஸ்டிக் வாசனை வந்தால் உடனடியாக பாட்டிலை மாற்ற வேண்டும். குழந்தைகள் வாய் வைத்துதான் குடிப்பார்கள். அதனால் கிருமிகள் உள்ளே நுழைந்து நிரந்தரமாகத் தங்கிவிடும். வாய்ப்பகுதி குறுகியதாக இருப்பதால் அடிக்கடி பிரஷ்ஷால் சுத்தம் செய்ய முடியாது. சோப் போட்டு கழுவுவதும் ஆபத்து. குறைந்தது 4 மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்றிவிடுவது நல்லது.
பாட்டிலின் அடிப்பகுதியில் முக்கோணமிட்டு, அதில் நம்பர் குறிக்கப்பட்டிருந்தால்தான் நல்ல பிளாஸ்டிக். அதிலும் 2, 5 என குறிப்பிட்டிருக்கும் வகை தரமானவை. மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்கும்போது அடர் வண்ணங்களை தவிர்த்து விடவும்.

ஆதி திராவிடர் நல விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் எனசென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 24 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் 2016-2017-ம் கல்வியாண்டில் புதிதாக மாணவ, மாணவியரை சேர்க்க பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரரின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவ மாணவியருக்கு இருப்பிடம், உணவு வசதி இலவசமாக செய்து தரப்படும்.இவ்விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் அவரவர் பயிலும் பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளின் காப்பாளர்களிடமிருந்து விடுதி சேர்க்கை விண்ணப்ப படிவத்தை பள்ளி விடுதிகளில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் கல்லூரி விடுதிகளில் கல்லூரி திறக்கும் நாளிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவத்தில் கோரியுள்ள ஆவணங்களுடன் 3 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், தங்களது குடும்ப அட்டை நகல், விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியரது பெயரில் தேசிய உடமை ஆக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டதற்கான வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் மற்றும் ஆதார் அட்டை இருப்பின் அதன் நகல் ஆகியவற்றில் சுய சான்றொப்பமிட்டு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

மேலும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் சான்றொப்பம் பெற்று உரிய சான்றுகளுடன் பள்ளி மாணவ, மாணவியர் ஜூன் 19-ம் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவ, மாணவியர் வரும் 14-ம் தேதிக்குள்ளும் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்'' என்று கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மெகா தேசிய மூவர்ண கொடி ஐதராபாத்தில் ஜூன் 2-ம் தேதி ஏற்றி வைப்பு

தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டையொட்டி ஐதராபாத் நகரில் இந்தியாவில் மிக உயரமாக தேசிய மூவர்ண கொடி பறக்கவிடப்பட உள்ளது. இதற்கான விழாவில் அம்மாநில முதல்வர் சந்திரசேகராவ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைக்கிறார்.

ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. அம்மாநிலத்திற்கு நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சியை பிடித்தது. முதல்வராக சந்திரசேகர ராவ் உள்ளார். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டை கொண்டாடும் விதமாக ஐதராபாத் நகரில் ஹுசைன்சாகர் ஏரிக்கரையில் உள்ள சஞ்சீவ் பார்க்கில் இந்தியாவில் மிகவும் பிரம்மாண்ட தேசிய மூவர்ண கொடியை நிரந்தரமாக அமைத்திட அம்மாநில அரசு முடிவு செய்தது. இதன்படி கோல்கட்டாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. மொத்தம் ரூ. 1.08 கோடி செலவில் 303 அடி உயரத்தில் சுமார் 50 டன் எடையுள்ள 6 ஸ்டீல் பைப்புகள் (கொடி கம்பங்கள்) 7 டிரக்குகளில் கொண்டுவரப்பட்டுள்ளன. கொடிகம்பம்( ஸ்டீல் பைப்) உச்சியில் மூவர்ண தேசிய கொடியை அமைக்க 108 அடி நீளமும், 72 அடி அகலம் கொண்ட பாலிஸ்டரால் ஆன 92 கி.கி. எடையுள்ள கொடியும் மும்பையில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. சூறாவளி காற்றும் மழை போன்ற இயற்கை பேரிடர்களால் கொடி சேதமடையாமல் இருக்க கூடுதலாக மூன்று மூவர்ண கொடிகளும் தெலுங்கானா மாநிலம் வந்திறங்கின சுமார் 10 உயரமுள்ள பீடத்தில் மேல் கொடிக்கம்பம் நிலைநிறுத்தப்பட உள்ளது.
வரும் ஜுன் 2-ம் தேதி நடக்க உள்ள விழாவில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்படுகிறது. இந்த விழாவில் முதல்வர் சந்திரசேகரராவ் கலந்து கொள்கிறார். இதன் மூலம் இந்தியாவில் மிக பிரம்மாண்ட தேசிய கொடி என்ற பெருமையை ஐதராபாத் நகர் பெறுகிறது.

உணவுப்பொருள் பாக்கெட்களில் படிக்கும் வகையில் தயாரிப்பு, காலாவதி விவரங்களை 40% அளவுக்கு அச்சிடுவது கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு ஜூலை முதல் அமலாகிறது

உணவுப்பொருள் பாக்கெட்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, எடை அளவு குறித்த விவரங்களை 40 சதவீத அளவுக்கு அச்சிட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு ஜூலை முதல் அமலுக்கு வருகிறது.

இன்றைய சூழலில் சந்தையில் விற்பனையாகும் உணவுப் பண்டங் கள், குடிநீர், மசாலா பொருட்கள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் பாக் கெட்களில்தான் விற்கப்படுகின்றன. எந்தவொரு பொருளாக இருந்தா லும் பாக்கெட்டில் விற்கப்பட்டால், அதன்மீது தயாரிப்பாளரின் முகவரி, விலை, எடை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி போன்ற விவரங் களை அச்சிடுவது கட்டாயமாகும்.

இந்த விவரங்கள் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்தால் தயாரிப்பாளர் மட்டுமின்றி, அதை நுகர்வோருக்கு விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அத் துடன், அவர்கள் விற்பனை செய்யும் பொருட்களை பறிமுதல் செய்யவும் சட்ட விதிகள் உள்ளன.

ஆனால் காலவதி, தயாரிப்பு தேதியை பார்த்து வாங்கும் நுகர் வோர் குறைவு. போதிய விழிப் புணர்வு இல்லாததே இதற்கு காரணம். அதுமட்டுமின்றி, பாக்கெட்களில் சிறிய அளவில் விவரங்கள் அச்சிடப்பட்டிருப்பதால் அதை கவனிக்க இயலாமல் போகிறது.

இந்தப் பிரச்சினையை கருத்தில் கொண்டு, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் எடை யளவு சட்ட விதியில் சில திருத் தங்களை செய்துள்ளது. அதன்படி, அனைத்து பொருட்களிலும் தயாரிப்பு தேதி, விலை, எடை, நுகர்வோர் குறைதீர் எண் உள் ளிட்ட விவரங்களை நுகர்வோர் எளிதில் படிக்கும் வகையில் பாக்கெட்டின் மொத்த அளவில் 40 சதவீத அளவுக்கு கட்டாயம் அச்சிட வேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளது. இந்த புதிய விதி முறை ஜூலை முதல் நடை முறைக்கு வரும் எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

கால அவகாசம் தேவை

இதுகுறித்து தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

மத்திய அரசின் புதிய விதிமுறை யில், 40 சதவீத அளவு என குறிப்பிடுவதிலேயே முரண்பாடு கள் உள்ளன. பாக்கெட்டின் ஒரு புறம் மட்டும் 40 சதவீத அளவுக்கு தகவல்கள் இடம்பெற வேண்டுமா அல்லது 2 பக்கங்களிலும் அச்சிட வேண்டுமா என்பது குறித்து தெரிய வில்லை. லேபிள்களில் அச்சிடப் படும் எழுத்துகளுக்கு அளவு ஏதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்ற விவரம் சரியாக இல்லை.

பிராந்திய மொழி

ஒரு வணிகர் தமிழகத்தில் மட்டும் தனது பொருளை சந்தைப் படுத்துவதாக இருந்தால் பிராந்திய மொழியில் மட்டும் அச்சடிக்க லாமா என்பதும் தெரியவில்லை. உணவுப்பொருள் உற்பத்தியாளர் கள், பொட்டலமிடுபவர்கள் தேவைக்கேற்ப லேபிள்களை ஏற் கெனவே அச்சிட்டு வைத்திருப்பர். அந்த லேபிள்கள் தீரும்வரை போதிய காலஅவகாசம் அளிக்க வேண்டும்.

மேலும், புதிய விதிமுறை குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். அதில் உள்ள குறைபாடுகளை களைந்த பிறகே விதிமுறையை அமல்படுத்த வேண் டும் என மத்திய அரசை கேட் டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வரவேற்கத்தக்கது

கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் துணை இயக்குநர் எம்.ஆர்.கிருஷ்ணன் கூறும்போது, ‘‘பாக்கெட் பொருட் களில் குறிப்பிட்டுள்ள தகவல்களை நுகர்வோர் எளிதாக கண்டறிந்து படிக்க ஏதுவாக மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுவரை காலாவதி தேதி, தயாரிப்பு தேதியை நுகர்வோர் தேடிக் கண்டுபிடித்து தெரிந்துகொள்ள வேண்டிய நிலை இருந்தது. மத்திய அரசின் புதிய விதிமுறை மூலம் எல்லா தகவல்களும் ஒரே இடத்தில் அச்சிடப்படும்போது, நுகர்வோர் அதைப் பார்த்துவிட்டு வாங்க வழிவகை ஏற்படும். எனவே, இந்த உத்தரவை வரவேற்கிறோம்’’ என்றார்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாட்டில் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்பு பயிலகங்கள் உள்ளன. இவற்றில் பொறியியல் பாடப்பிரிவுகளில் 3 ஆண்டு கால டிப்ளமா படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு புதிதாக 5 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.

2016-17-ம் கல்வி ஆண்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ.150. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை விண்ணப்பம் வாங்கிய பாலிடெக்னிக் கல்லூரியில் ஜுன் மாதம் 17-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று எஸ்.மதுமதி அறிவித்துள்ளார்.

2016-2017ஆம் கல்வியாண்டில் பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகள் குறித்து நாளை கள ஆய்வுக்கு வரும் அலுவலர் நிரப்பும் படிவம்

தினம் ஒரு புத்தகம்"சித்த மருத்துவம்"

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"மாம்பழத்தின் மருத்துவ பயன்கள்"

மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால்,
தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.

வேலைக்காக காத்திருப்பவர்களா நீங்கள்? - சுருக்கெழுத்து தெரிந்தால் மத்திய அரசு பணி

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும் துறைகளிலும் காலியாகவுள்ள குரூப்-சி, குரூப்-டி பணியிடங்கள் அனைத்தும் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission - SSC) நடத்துகின்ற போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன.

முடிவு தெரியாமல் தவிக்கும் மதுரை காமராஜ் பல்கலை மாணவர்கள்.

மதுரை:மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியில் 2014 - 15ம் ஆண்டில் 1,916 மாணவர்கள் நேரடி சேர்க்கை மூலம் தேர்வு எழுதினர். இதில் பலர் போலி சான்றிதழ் சமர்ப்பித்தனர்.

‘எதிர்காலத்தை திட்டமிட்டே, படிப்பை தேர்வு செய்ய வேண்டும்.

“எதிர்காலத்தை திட்டமிட்டு, படிப்பை தேர்வு செய்ய வேண்டும்,” என, திருப்பூரில், ‘தினமலர்’ சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி அறிவுறுத்தினார்.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டிவழங்க அரசு ஒப்புதலா?

சமூக வலைதளங்களில் உலாவரும் தகவலுக்கு அதிகாரிகள் மறுப்பு
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே காலை சிற்றுண்டி வழங்கப்படும் என சமூக வலை தளங்களில் தவறான தகவல் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

General Elections to Tamilnadu legislative Assembly-2016- Sanction of honorarium to the officers and staffs Requirements of funds Called for- Chief Election Officer...

மின் வாரிய ஊழியர் நியமனம்:எழுத்து தேர்வு தேதி அறிவிப்பு.

காலி பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வு நடக்க உள்ள தேதிகளை, தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டு உள்ளது.இதுகுறித்து, மின் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர ஜூன் 20 கடைசி நாள்.

அரசு தொழிற்பயிற்சி நிலையமான, ஐ.டி.ஐ.,க்களில் சேர, ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில்,வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், ஐ.டி.ஐ.,க்கள் நடத்தப்படுகின்றன. இதில்,

ஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லை-பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்.

ஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லாதது கவலைக்குரியது' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. புதிய கல்வி ஆண்டில்,ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.
அதன் முக்கிய அம்சங்கங்கள்:

கணினி வழிக் கல்வியில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களை தேர்வு செய்ய கல்வித் துறை உத்தரவு.

அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும், கணினி வழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களின்பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 31) அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்.: 4 நாள்களில் 13,725 விண்ணப்பங்கள் விநியோகம்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை கடந்த 4 நாள்களில் 13,725 மாணவர்கள் பெற்றுள்ளனர்.எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமை (மே 26) தொடங்கியது.

ஜூலை இரண்டாம் வாரத்தில் சி.பி.எஸ்.இ. சிறப்புதுணைத் தேர்வு.

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகளுக்கான சிறப்பு துணைத் தேர்வுகள் ஜூலை இரண்டாம் வாரத்தில் நடைபெறுகின்றன.இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தேர்வு நெறியாளர் கே.கே.சௌத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-

நல்ல புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்:பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வலியுறுத்தல்

பாடப் புத்தகங்களைத் தாண்டி நல்ல புத்தகங்களை வாசிக்க மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.பள்ளிகள் திறக்கப்பட்ட பின், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பைக், செல்லிடப்பேசியுடன் மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டாம்!:தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்.

பைக், செல்லிடப்பேசியுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி,பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்கு என உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

விளையாட்டு பல்கலை பணி:15க்குள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைகளில்,காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஜூன், 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பல்கலை பதிவாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

( ICT) தேசிய விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும், கணினி வழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 31) அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பி.இ. சேர்க்கை: 2,45,217 பேர் ஆன்லைனில் பதிவு ;விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய நாளை கடைசி

அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை ஞாயிற்றுக்கிழமை வரை 2,45,217 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

பள்ளியில் நீதி போதனை வகுப்பு நடத்த...உத்தரவு!தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.

"பள்ளிகளில், நீதி போதனை வகுப்பு கட்டாயம் நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கோடை விடுமுறைக்கு பின், நாளை மறுதினம் (ஜூன், 1), அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதற்கான ஆயத்த பணிகள் குறித்து, பள்ளி கல்வித்துறை, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:

TNTET :ஆசிரியர் தகுதித்தேர்வு கல்வித்துறையில் 'தீராத குளறுபடி! எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்!

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காததால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) அறிவுறுத்தலால், தமிழகத்தில் 15.11.2011ல், தகுதி தேர்வு அடிப்படையில்ஆசிரியர் நியமனம் நடக்கும் என (அரசாணை எண்: 181) உத்தரவிடப்பட்டது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!