Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 1 June 2016

தினம் ஒரு புத்தகம்"லியோ டால்ஸ்டாய் நாடகம்"


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்"நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாகும் பழம்"

சங்க இலக்கியத்திலும், தெய்வ வழிபாட்டிலும், நாவல்மரத்திற்கு தனி இடமுண்டு. நாவல் மரம் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாக போற்றப்படுகிறது.

GO 264 ன்படி பள்ளி நடைமுறைகளுக்கான கால அட்டவணைபி.இ., - பி.டெக்., படிக்க 1.84 லட்சம் பேர் விண்ணப்பம்....!!

பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்வதற்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. 1.84 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி, விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்புக்கு உட்பட்ட, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்.,
படிப்புகளில் சேர, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள், ஏப்., 15 முதல், ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், நேற்றுடன் முடிந்தது. இரண்டு லட்சத்து, 52 ஆயிரத்து, 781 பேர் விண்ணப்பங்கள் பதிவு செய்திருந்தனர். இதில், ஒரு லட்சத்து, 84 ஆயிரத்து, 530 பேர் அதற்கான கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, நகல் எடுத்து, உரிய ஆவணங்களுடன், நேரிலோ அல்லது தபால் வழியாகவோ, ஜூன், 4 மாலை, 6:00 மணிக்குள்,
அண்ணா பல்கலையில் சமர்ப்பிக்க வேண்டும். நேற்று மாலை வரை, 81 ஆயிரத்து, 100 விண்ணப்பங்கள், பல்கலைக்கு வந்து சேர்ந்துள்ளன.

ஆசிரியர் பதவி உயர்வு, பணிட மாறுதல்களை ஜூன் முதல் வாரத்திலேயே மேற்கொள்ள தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தல்

ஆசிரியர்களின் பணியிடமாறுதல், பதவி உயர்வுஆகியவற்றை ஜூன் முதல்வாரத்திலேயேமேற்கொள்ள வேபண்டும்என்று தமிழ்நாடு ஆசிரியர்சங்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழுவலியுறுத்தியுள்ளது.
சென்னை தலைமைச்செயலகத்தில் அத்துறைஅமைச்சர் பென்ஜமினை
சந்தித்த அந்தக் குழுவினர்,ஆண்டின் இறுதியில் பதவிஉயர்வு, பணியிட மாறுதல்போன்றவை நடைபெற்றால்மாணவர்களின் கல்விபாதிக்கப்படுகிறது என்றுதெரிவித்துள்ளனர்

மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேசன் செய்ய வேண்டாம்

திங்கள் கிழமை காலை வழிபாட்டு செயல்பாடுகள்,வகுப்பறை காலை வழிபாட்டு செயல்பாடுகள் மற்றும் கால அட்டவணை

புற்றீசல்களாக சி.பி.எஸ்.இ., பள்ளிகள்... அதிகரிப்பு! வரைமுறைப்படுத்த நடவடிக்கை தேவை..

மருத்துவக்கல்லுாரி சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பை தொடர்ந்து பெற்றோர்களின் படையெடுப்பினால் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் புற்றீசல் போல் அதிகரித்து வருகிறது.

விதிமீறல் மதுரையில் 181 பள்ளி வாகனங்களில் ரூ.2 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவு !

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் குழுவாக இணைந்து கடந்த மே 24ல் ஒரே நாளில் 892 பள்ளி வாகனங்களை சோதனை செய்தனர். 181 வாகனங்களில் விதிமீறல் கண்டறிந்து சோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாகனங்கள் ஆய்வுக்கு (எப்.சி.) வரும்போது ரூ.2 லட்சத்து ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்படும்.

ஜூன் 12-ல் ஐஐடி-ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்...!!

ஜூன் 12-ல் ஐஐடி-ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
உயர்கல்வி நிறுவனங்களில் சேர உதவும் ஐஐடி-ஜேஇஇ தேர்வுகளை சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்தி வருகிறது. இதில் ஐஐடி-ஜேஇஇ மெயின் தேர்வுகள் முடிவடைந்தன.

மத்திய ஜவுளித்துறையில் உதவியாளர் பணி ...

இந்திய ஜவுளித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதிகரித்து வரும் ஐஐடி-ஜேஇஇ தேர்வு எழுதிய மாணவர்களின் தற்கொலை.!!

ஐஐடி-ஜேஇஇ தேர்வு எழுதிய மாணவர்களின் தற்கொலை நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகிலுள்ள மகாவீர் நகரைச் சேர்ந்த 17 வயது மாணவர்கள் நேற்று தற்கொலை செய்துகொண்டார். அந்த மாணவரின் பெயர் நிர்மல் யோகி. சவாய் மதோபர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவர்.

சேவை வரி உயர்வு : அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது.

மத்திய அரசு அறிவித்துள்ள 15 சதவீத சேவை வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஓட்டல் சாப்பாடு முதல் மொபைல் போன் ரீசார்ஜ் வரை அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு ஜூன் 3, 4ல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு, ஜூன் 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

HSC -MARCH 2016 SCAN COPY Download Retotal/Revaluation Application Format

HSC -MARCH 2016 SCAN COPY
Download Retotal/Revaluation Application Format in
http://scan.tndge.in/

மாணாக்கருக்கு புத்தகம், நோட்டு, சீருடை: நலத்திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும், கோடை விடுமுறை முடிந்து இன்று திறக்கப்பட்டன. இதனை முன்னிட்டு, மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, புத்தகம், நோட்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத தனியார் பள்ளிகளை மூடக் கோரிய வழக்கு:

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 746 மெட்ரிக் பள்ளிகளை இயக்குவதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு ஜூலை 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விதிமுறைகளைக்கூட கடைபிடிக்கவில்லை என மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி: 10-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

01-06-2006 காலமுறை ஊதியம் பெற்ற ஆசிரியர்களே உங்கள் கவனத்திற்கு...

01-06-2016 அன்று தேர்வுநிலை பெற உள்ளதால் விண்ணப்பங்கள் CEO அலுவலகத்தில் அளிக்க தயார்செய்வீர்!
1. உங்கள் வேண்டுதல் கடிதம்.மற்றும் தலைமை ஆசிரியர் செயல்முறைகள் கடிதம்(Covering Letter)
2.தேர்வுநிலைக்குரிய விண்ணப்ப படிவம்.
3.பணி நியமன ஆணை.
4.பணிவரன்முறை ஆணை.
5.தகுதிகான்பருவம்   ஆணை.

தலைமை ஆசிரியர் ஆய்வுக்கு பிறகே வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிக்க உத்தரவு.

பள்ளி வளாகங்களை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்த பின்னரே, வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

மாற்றுத்திறனை காரணம் காட்டி பள்ளியில் சேர்க்க மறுத்ததாக மாணவி புகார்: கட்டணச் சலுகையுடன் கல்வி வழங்க பள்ளி ஒப்புதல்

கோவையில் மாற்றுத்திறனைக் காரணம் காட்டி மாணவியை 9-ம் வகுப்பில் சேர்த்துக்கொள்ள தனியார் பள்ளி நிர்வாகம் மறுத்ததாகக் கூறி மாணவியின் பெற்றோர் ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியே மாணவியைசேர்த்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது.

நியாய விலைக் கடைகளில் பொருட்களைப் பெற ஆதார் அட்டை நகல் கட்டாயம் இல்லை: உணவுத்துறை அதிகாரிகள் தகவல்

கடந்த 2012-13ம் ஆண்டு நிதிநிலைஅறிக்கையில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பதிவு செய்யப்படும் உடற்கூறு பதிவுகள் அடிப்படையில் குடும்ப அட்டைகளுக்கு பதில், ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில், ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்கட்ட மாக செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களையும் பெற்றது.

ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவத் தயார்: ஏற்றம் தரும் ‘மாற்றம் ஃபவுண்டேஷன்

கடந்த மூன்றாண்டுகளில் உயர் கல்விக்கு வழி தெரியாமல் நின்ற ஏழை மாணவர்கள் 212 பேரை எவ்வித கட்டணமும் இல்லாமல் உயர்கல்வி படிக்க வைத்திருக்கிறது ’மாற்றம் ஃபவுண்டேஷன்’.இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மனித ஆற்றல் பிரிவின் (ஹெச்.ஆர்.) சென்னைக்கான தலைவர் ஜெ.சுஜித்குமார். 

அரசு உதவித் தொகையுடன் உயர்கல்வி பயில மாணவர்கள் தேர்வு

அரசுப் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், தலைசிறந்த தனியார் பள்ளிகளில் அரசு உதவித் தொகையுடன் உயர் கல்வி பயில தேர்வு செய்ய இருப்பதாக சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.  

மத்திய அரசு டாக்டர்கள் ஓய்வு வயது 65 ஆக உயர்வு: இன்று முதல் அமல்

மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், சஹாரன்பூர் நகரில் மத்திய அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தில் பேசிய பிரதமர்நரேந்திர மோடி, மத்திய, மாநில அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 65-ஆக உயர்த்தப்படும் என்றார்.

நம் நாட்டைப் பொருத்தவரை, மருத்துவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. அதேசமயத்தில், இரண்டே ஆண்டுகளில் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் கடினமாகும்.இதனைக் கருத்தில்கொண்டே, அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதானது, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே, நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65-ஆக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.இதன்படி மத்திய சுகாதாரத் துறையில் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒப்புதல் அளித்தார். மோடி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, நேற்று  முதல் அத்திட்டம்அமலுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் நிறைவேற்றப்படும் சுகாதாரத் திட்டங்ளை மேம்படுத்த முடியும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!