Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 2 June 2016

தினம் ஒரு புத்தகம்"அரிஸ்டாட்டில்"


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்"பாசிப்பயறு"

பாசிப்பயறு சத்தான பயறு வகைகளில் ஒன்றாகும். பண்டைய காலம் முதலே இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்த இந்த வகை பயறுகள், பின் தெற்கு சீனா, இந்தோ சீனா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் விளைவிக்கப்பட்டது.

நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்

வருமான வரியை குறைக்க என்ன வழி, எப்படி வரி செலுத்துவதிலிருந்து தப்பிகலாம் என பலரும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள்...

இதோ உங்களுக்குத்தான் இந்த 80 'சி'-யின் கீழ் வரி சேமிப்பு முதலீடு.  பின்வரும் 9 வரி சேமிப்பு முதலீட்டில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்வு செய்து வருமான வரியை குறைத்துக்கொள்ளலாமே...

வருங்கால வைப்புநிதியில் ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி கிடையாது ஜூன் 1முதல் அமல்

வருங்கால வைப்புநிதியில் இருந்து ரூ.30 ஆயிரம்வரை எடுத்தால், வரி பிடித்தம் கிடையாது என்ற நடைமுறை இப்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இந்த புதிய நடைமுறை  (ஜூன் 1–ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

Seventh pay commission - First salary and arrears will be paid in July...


எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் சென்றடைந்துவிட்டதா? உறுதி செய்துகொள்ள ஏற்பாடு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்காக மாணவர்கள் அனுப்பியுள்ள விண்ணப்பங்கள், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் சென்று சேர்ந்துவிட்டதா? என்பதை இணையதளம் மூலம் உறுதி செய்துகொள்ளலாம்.சுகாதாரத் துறையின் இணையதளமான www.tnhealth.org-இல் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு பள்ளி, ஒரு மாணவன், இரு ஆசிரியர்கள் சேர்க்கைக்கு பெற்றோர்களிடம் கெஞ்சும் அவலம்.


அரசு துவக்கப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்களிடம் கெஞ்சவேண்டிய பரிதாப நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் கோடைவிடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது.

கல்வி உதவித் தொகை அறிவிப்பு உண்மையா?

சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படும் என வரும் அறிவிப்பு காரணமாக அலுவலகங்களுக்கு பெற்றோர்கள் நடையாய் நடக்கின்றனர். இதனால் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பயிற்சிக் கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் 2016-க்கான பயிற்சிக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:

பிளஸ் 2 மறு மதிப்பீடுக்கு இரண்டு நாள் அவகாசம்.

பிளஸ் 2 தேர்வுக்கான மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடுக்கு, நாளைமுதல் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 17ல் வெளியாயின. இந்த தேர்வில், மதிப்பெண் குறைந்த மாணவர்கள், தங்கள் விடைத்தாளை ஆய்வு செய்வதற்காக, விடைத்தாள் நகல் வழங்கப்படுகிறது.

ஒரு மாணவிக்காக இயங்கிய அரசு பள்ளி 5 ஆண்டு சாதனை

மானாமதுரையில் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே ஒரு மாணவிக்காக அரசு பள்ளி இயங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் 68 தொடக்கப்பள்ளிகள், 24 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளை கண்காணிக்கவும், மாணவர் சேர்க்கையை வலியுறுத்தவும் நிர்வாக பணிகளுக்காக மானாமதுரையில் இரண்டு உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் அடங்கிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இலவச பஸ் பாஸ் தாமதம்: மாணவர்கள் அச்சம்.பஸ் பாஸ் வழங்கும் போதே, அதன் கால வரம்பை, ஜூன், 30ம் தேதி வரை நீட்டித்துவழங்கலாம்

பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து மாணவர்களும்,கட்டணமின்றி பள்ளிகளுக்கு சென்று வரலாம்.

மாணவர்களை குழப்பும் இன்ஜி., கல்லூரி பெயர்கள்

தமிழகத்தில், மாணவர்களை குழப்பும், ஒரே மாதிரியான பெயர்களையுடைய கல்லுாரிகளின் பட்டியலையும், அவற்றின் கவுன்சிலிங் குறியீட்டு எண்ணையும், தனியே வெளியிட, அண்ணாபல்கலைக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.அண்ணா பல்கலையில், ஜூன் இறுதி வாரத்தில் கவுன்சிலிங் துவங்கி, ஜூலை 31ம் தேதி முடியும்.

கலை கல்லூரிகள் ஜூன் 8ல் திறப்பு.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகள், கோடை விடுமுறைக்கு பின், 8ம் தேதி திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், 83 அரசு கல்லுாரிகள் உட்பட, 700க்கு மேற்பட்ட கலை, அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 2015 - 16ம் கல்வி ஆண்டிற்கான பருவத்தேர்வுகள், ஏப்ரலில் துவங்கி, மே 6ல் முடிவடைந்தன.

10 ம் வகுப்பில் குறைந்த மார்க் எடுத்தால்... பிளஸ் 1ல் சேர்ப்பதில் பள்ளிகள் கெடுபிடி

ஒரே பள்ளியில் பல ஆண்டுகள் படித்திருந்தாலும், 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பல மாணவர்களுக்கு, பிளஸ் 1 சேர்க்கையை, பள்ளி நிர்வாகம் மறுத்து வருகின்றன. இதனால், மாணவ, மாணவியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எம்.எல். சட்ட மேற்படிப்பை மீண்டும் 2 ஆண்டுகளாக உயர்த்த முடிவு

எம்.எல். சட்ட மேற்படிப்பை மீண்டும் இரண்டு ஆண்டுகளாக உயர்த்த பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கேரளாவில் மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - சென்னை மாணவன் 2-வது இடம்

கேரளாவில் மருத்துவ நுழைவுத்தேர்வில் முதல் 7 இடங்களை மாணவர்கள் பிடித்து சாதனை படைத்தனர். சென்னையை சேர்ந்த மாணவர் 2-வது இடம் பிடித்தார்.

SCERT - ஆசிரியர்களுக்கு ஒரு வாரம் மின் உள்ளடக்க பயிற்சி பணிமனை - இயக்குனர் செயல்முறைகள்

அங்கீகாரமற்ற 746 பள்ளிகளுக்கு ஜூன் 30 வரை தற்காலிக அனுமதி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

அங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் அங்கீகாரம் மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அப்பள்ளிகளுக்கு வரும் ஜூன் 30 வரை தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது.

மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் கிடையாது. அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி கடந்த மே 31-ம் தேதி வரை தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டது. அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விதிமுறைகளைக்கூட இப்பள்ளிகள் கடைபிடிக்கவில்லை. முறையற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதாலேயே கும்பகோணம் பள்ளி விபத்தில் இளம் குழந்தைகளை இழந்தோம்.

இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை தமிழக அரசு முறையாக கடைபிடிக்கவில்லை. இந்த 746 பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அங்கீகாரம் மே 31-ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் இப்பள்ளிகளை மூட கல்வித்துறை அதிகாரிகள் இன்னும் முன்வரவில்லை. இதனால் இப்பள்ளிகளில் பயிலும் பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் மீண்டும் இதே பள்ளியில் படிப்பைத் தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

2 மாதம் போதிய அவகாசம் இருந்தும் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரை அருகில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக தமிழக அரசு நியமித்துள்ள நிபுணர் குழுவும், இன்னும் அறிக்கையை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்தி வருவது அங்கீகாரமற்ற பள்ளிகளுக்கு தமிழக அரசும் ஆதரவாக செயல்படுகிறதோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அங்கீகாரமற்ற அந்த 746 பள்ளிகள் குறித்த தகவலை உடனடியாக இணையத்தில் வெளியிட்டு, அங்கு பயிலும் மாணவர்களை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது மனுதாரர் நாராயணன் ஆஜராகி தனது கோரிக்கையை முன்வைத்து வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த்பாண்டியன், ‘‘ இந்த வழக்கில் அரசின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க ஏற்கெனவே ஜூன் 30 வரை தனி நீதிபதி காலஅவகாசம் கொடுத்துள்ளார். எனவே ஜூன் 30 வரை இப்பள்ளிகளுக்கு தற்காலிக காலநீட்டிப்பு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த 746 பள்ளிகளிலும் சுமார் 5 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். எனவே இந்த விஷயத்தில் அவசர கதியில் முடிவெடுத்தால், அந்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘ஒரு பிரச்சனைக்கு இயந்திர கதியில் தீர்வு காண முடியாது. 5 லட்சம் மாணவர்களின் நலன் தொடர்பான பிரச்சினை இது. எனவே இது தொடர்பாக தமிழக அரசு குறைபாடுகளைக் களைய உரிய தேதிக்கு முன்பாகவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

தொழிலாளர் மேலாண்மை படிப்புகளுக்கு ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமாகும். இக்கல்வி நிலையம் சார்பில் எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை, தொழிலாளர் நிர்வாகத்தில் ஓராண்டு பகுதி நேர முதுகலை பட்டயப்படிப்பு,. தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல் சட்டங்களும் என்ற ஓராண்டு வார இறுதி பட்டயப்படிப்பும் நடத்தப்படுகிறது.

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததால், இப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.100. மற்றவர்களுக்கு ரூ.200 ஆகும். தபாலில் பெற விரும்புவோர் விண்ணப்பக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.50 சேர்த்து வங்கி வரைவோலை எடுத்து ‘The Director, Tamilnadu Institute of Labour Studies, chennai-5’ என்ற முகவரிக்கு அனுப்பி பெறலாம். மேலும், விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள், வி.ஜி.தியாகராஜன்- 98411 92332 , ஆர்.ரமேஷ்குமார்- 9884159410 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், எண்.5 காமராஜர் சாலை, சென்னை -5 என்ற முகவரியிலோ, 044-284401102 மற்றும் 28445778 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

திங்கள் கிழமை காலை வழிபாட்டு செயல்பாடுகள்,வகுப்பறை காலை வழிபாட்டு செயல்பாடுகள் மற்றும் கால அட்டவணை

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!