Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 5 June 2016

புதிய கல்வி கொள்கை: மாநிலங்களின் கருத்துகள் பெறப்பட்ட பிறகே இறுதி முடிவு- ஸ்மிருதி இரானி

புதிய கல்வி கொள்கையை வகுப்பது தொடர்பாக மாநிலங்களின் கருத்துகள் பெறப்பட்ட பிறகே மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த 1986-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பள்ளி மற்றும் உயர்கல்வி குறித்த புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. அதன்பின் வந்த அரசுகள், அதில் திருத்தங்கள் மட்டுமே செய்துவந்தன.
இந்நிலையில், தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, புதிய கல்விக் கொள்கையை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, முன்னாள் மத்திய அமைச்சரவை செயலர் டிஎஸ்ஆர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. இதில், என்.சி.இ.ஆர்.டி., தலைவர் உள்ளிட்டோர் இடம் பெற்றனர். இந்த கமிட்டி தனது அறிக்கையை, சமீபத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
அதில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் காணப்பட்ட 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற முறையை மாற்றி 4-ஆம் வகுப்பு வரை மட்டுமே அனைவரும் தேர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை கூறியதாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்து தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, கல்வியாளர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் உள்பட பலரிடமும் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் பரிந்துரை கேட்கப்பட்டு வருகின்றன. பல்வேறு தரப்பின் கல்வி நிபுணர்களும் தங்களது பரிந்துரைகளை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் அளித்து வந்துள்ளனர்.
இதன் அடிப்படையில், புதிய கல்விக்கொள்கையை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்விக் கொள்கை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதை வெளியிடும் முன், மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து பரிந்துரைகளை பெற்ற பின்பே, புதிய கல்விக்கொள்கை குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்று ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

குரூப் 1, குரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்

குரூப் 1, குரூப் 2 மற்றும் விஏஓ தேர்வு முடிவுகள் விரைவில் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வட்டார சுகாதார புள்ளியியல் துறையில் உள்ள 172 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு இன்று நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார்  12,000 பேர் எழுதினர். 
கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள அம்மனியம்மாள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி ஆய்வு செய்தார். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நடைபெறும் குரூப் தேர்வுகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் நேரடிக் கண்காணிப்பில் நம்பகத்தன்மையுடன் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 
குரூப் 1, குரூப் 2 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அருள்மொழி கூறினார். ஜூன் மாதம் நடத்தப்பட்ட குரூப் ஒன் தேர்வு முடிவுகள் தாமதமாவதற்கு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பே காரணம் என்றும் கூறினார்.

Bharathidasan University Announces Admissions for the Academic year 2016-17 for all Programmes

""ஒரு ரூபாய் செலவில்லாமல்"" ,குறைதீர்ப்பு கூட்டத்திலேயே தேர்வு நிலை ஆணை வழங்கிய - மதுரை கிழக்கு உதவிதொடக்கக்கல்வி அலுவலகம்...!!

குறைதீர்ப்புக் கூட்டத்திலே ஆசிரியர்களின் குறைகளை உடனடியாக தீர்த்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர்!!!

ஆசிரியர்களின் குறைதீர்ப்புக் கூட்டம் தமிழகத்தின் பெரும்பான்மையாக பெயரளவிலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மதுரையிலும் அவ்வாறே நடைபெற்றுக் கொண்டிருந்தது.ஆனால்

தற்போது தேர்வுநிலை ஊதியத்திற்கான விண்ணப்பம் அளிப்பதற்காக 50க்கும் மேற்பட்ட இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் ,மதுரை கிழக்கு உதவிதொடக்கக்கல்வி அலுவலகம் சென்றிருந்தனர். ஆனால் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒருசேர ஒரே இடத்தில்.                                 "" ஒரு ருபாய் செலவில்லாமல்"" அனைவருக்கும் *தேர்வுநிலை ஆணை வழங்கப்பட்டுள்ளது.                                                                                                                         
தமிழகத்தில் எத்தனையோ ஒன்றியங்களில் ஒரு வருடமாக அலைந்து சென்று பல ஆயிரங்கள் செலவு செய்து தேர்வுநிலை ஆணை பெற்ற காலம் மாறி, மதுரை கிழக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு.ஜான் கென்னடி அலக்ஸாண்டர் P.hd
அவர்கள் ஆசிரியர்களின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
பல ஆண்டுகளாக தேங்கி இருந்த பல ஆயிரகணக்கான  ஆசிரியர்கள் விண்ணப்பங்களை பதவியேற்ற பின்  பனிபோல் விலக்கியுள்ளார்.
அன்னாரின் பணி தமிழகத்தின் அனைத்து உ.தொ.கல்வி அலுவலகங்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கு இன்னும் கூடுதலாக முழு ஈடுபாட்டுடன் கல்விப்பணியில் ஈடுபடுவதற்கு பேருதவியாக உள்ளது

தொ.ப.தலைமை ஆசிரியர், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ஊதியநீட்டிப்பு ஆணை ...!!

தினம் ஒரு புத்தகம்"மாணவர் நன்னெறிக் கதைகள்"


வருமான வரிக் கணக்கை இனி ஏடிஎம் மூலம் தாக்கல் செய்யலாம்!

வருமான வரிக் கணக்கினை ஏடிஎம் மூலம் தாக்கல் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளில் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம்... ( மறுபதிப்பு )

புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 

புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் புதுவை வளாகம் மற்றும் காரைக்கால் வளாகம் ஆகியவற்றை சேர்த்து எம்.பி.பி.எஸ். படிப்புக்கான 200 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, நுழைவுத் தேர்வு மூலம் நடைபெறும்.

கர்நாடகாவில் 5 லட்சம் அரசு ஊழியர்கள் போராட்டம் ...!!

5 லட்சம் அரசு ஊழியர்கள் போராட்டம் கர்நாடக அரசு எந்திரம் முடங்கியது
வேலைநிறுத்தம் காரணமாக வெறிச்சோடிக்கிடந்த கர்நாடக தலைமைச் செயலக சாலை
பெங்களூரு, ஜுன் 3 -
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கேட்டு 5 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்....?"

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?
கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!...
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

நியமனத்தில் இடஒதுக்கீடு: கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை.

அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர் சேர்க்கை, பேராசிரியர் மற்றும் பணியாளர் நியமனத்தில், இடஒதுக்கீடு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.

பி.இ.: கடந்த ஆண்டைவிட குறைந்தது விண்ணப்பிப்போர் எண்ணிக்கை

பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமையோடு கால அவகாசம் முடிவடைந்த நிலையில், அன்றையதினம் மாலை 5 மணி வரை நிலவரப்படி 1.33 லட்சம் பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.
சனிக்கிழமை மாலை 6 மணி வரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம் என்பதாலும், தபால் மூலம் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் திங்கள்கிழமை வரை பெறப்படும் என்பதாலும் இந்த எண்ணிக்கை மேலும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலவசக் கல்வித் திட்டத்தில் மாணவர் சேர்க்கை : சென்னைப் பல்கலைக்கழக அறிவிப்பு.

தேர்வு நிலை பெற கல்வி சான்றுகள் உண்மைத்தன்மை சான்றுதேவையில்லை (RTI) பதில் .

மரம் வளர்ப்போம்; ஆக்சிஜனை பெறுவோம்: இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர் அளவு ஆக்சிஜனை சுவாசிக்கிறான். ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் விலை 700 ரூபாய். மூன்று சிலிண்டர்களின் விலை ரூ. 2100. ஒரு ஆண்டு கணக்கு பார்த்தால் ரூ.7, 66,000 மதிப்பிலான ஆக்சிஜனை சுவாசிக்கிறான். மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 ஆண்டுகள் என்றால் ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் தேவைப்படுகிறது. 

BE கலந்தாய்வு எப்போது?

பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமையோடு கால அவகாசம் முடிவடைந்த நிலையில், அன்றையதினம் மாலை 5 மணி வரை நிலவரப்படி 1.33 லட்சம் பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.

மாநிலங்களை கலந்தாலோசித்த பின்புதிய கல்வி கொள்கை வெளியாகும்.

மாநிலங்களிடம் இருந்து பரிந்துரைகளை பெற்ற பின்பே, புதிய கல்விக்கொள்கை குறித்த அறிக்கை வெளியிடப்படும்' என, மத்திய அரசு தெளிவு படுத்தியுள்ளது. 

கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை: மத்திய அரசு அனுமதி.

தமிழக அரசு ஏற்று நடத்தும் கோயம் புத்தூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 2016 - 17ம் கல்வி ஆண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது.

96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று ஜப்பான் முதியவர் கின்னஸ் சாதனை


டோக்கியோ: ஜப்பான் நாட்டில் 96  வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.

20 ஆண்டுகளாக மாத சம்பளம் ரூ.70 மட்டுமே

சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு, 20 ஆண்டுகளாகியும் மாதம், 70 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. சேலம் நகராட்சியிலிருந்து, 1994ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட போது, ஜாரி கொண்டலாம்பட்டி மற்றும் கன்னங்குறிச்சி பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பஞ்சாயத்துகள்,
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. பகுதி நேரமாக...அப்போது, பஞ்சாயத்துகளில் டேங்க் ஆப்பரேட்டர்களாக பணிபுரிந்த, 63 பேரை மாநகராட்சி பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். பஞ்சாயத்துகளில் ஓரிரு மணி நேரம் வேலை என்பதால், பகுதிநேர ஊழியர்களாக இருந்தனர். ஆனால், மாநகராட்சியில் டேங்க் ஆப்பரேட்டர் பணி முழுநேரமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்குள் முன்பாக மகப்பேறு விடுப்பு உயர்வு ?

உள்ளாட்சி தேர்தலுக்கு முன், மகப்பேறு விடுப்பை ஒன்பது மாதமாக அறிவிக்க, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அதிகாரிகள்,
அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். அரசு துறைகளில் பணிபுரியும் பெண்கள், தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க,
தற்போது, ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.

மதுரை காமராஜ் பல்கலை தேர்வுகள் திடீர் ரத்துஇடவசதியின்றி தேர்வர்கள் அதிருப்தி.

தேர்வு எழுத போதிய இடவசதி இல்லாததால் நேற்று நடந்த மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

ஒப்பந்தத்தை மீறியதால் பிலிப்கார்ட், ரோட் ரன்னர்' உட்பட 6 நிறுவனங்களுக்கு ஐ.ஐ.டி.,கேம்பஸ் இண்டர்வியூக்கு தடை!!!

பிரபல, 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனமான, 'பிலிப்கார்ட்' மற்றும் புதிய நிறுவனமான, 'ரோட் ரன்னர்' போன்ற நிறுவனங்களுக்கு, 'கேம்பஸ் இன்டர்வியூ' எனப்படும், வளாக நேர்காணலில் பங்கேற்க, உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., கவுன்சில் தடை விதித்துள்ளன.

நேர்காணல்சென்னை, பெங்களூரு,கவுகாத்தி, காரக்பூர், டில்லி, மும்பை ஐ.ஐ.டி.,க்களில் வேலைவாய்ப்புக்கான வளாக நேர்காணல் நடத்த, வணிக நிறுவனங்களுக்கு, அகில இந்திய ஐ.ஐ.டி., வேலைவாய்ப்பு கமிட்டி அனுமதி அளிக்கும்.

இந்த அனுமதி படியே, ஐ.ஐ.டி., நிர்வாகம் அனுமதி வழங்கும்.கடந்த ஆண்டு நேர் காணலுக்கு வந்த நிறுவனங்களில், பிலிப்கார்ட், ரோட் ரன்னர் போன்ற நிறுவனங்கள், வேலைக்கு மாணவர்களை தேர்வு செய்த பின்,
ஒப்பந்தங்களை மீறியதால், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக, பிலிப்கார்ட் நிறுவனம், சென்னை ஐ.ஐ.டி.,யில் மாணவர்களை தேர்வு செய்து, 'அவர்கள் ஜூன் முதல் பணியில் சேரலாம்' என்று கூறி, சம்பள ஒப்பந்தமும் அளித்தது.

ஆனால், ஒப்பந்தத்தைமீறி, 'தேர்வான மாணவர்கள் டிசம்பரில் வேலைக்கு சேர்க்கப்படுவர்; ஒப்பந்தத் தில் கூறிய தொகையை விட குறைவான சம்பளமே தர முடியும்' என்று கூறிய தால், மாணவர்கள் பணி வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டனர்.

இதேபோல, ரோட் ரன்னர் நிறுவனமும், 'தேர்வு செய்த மாணவர்களை, தற்போது வேலைக்கு சேர்க்க முடியாது' என, பணி வாய்ப்பை தள்ளி போட்டது. இன்னும் சில நிறுவனங்கள், தாங்கள் பேசிய சம்பளத்தை தராமல், குறைந்த சம்பளம் தருவதாகக் கூறின. இதுகுறித்து, மாணவர்கள் தரப்பில் ஐ.ஐ.டி.,யில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஐ.ஐ.டி.,யின் வேலைவாய்ப்பு அனுமதி கமிட்டியின் ஆலோசனை கூட்டம், பெங்களூரில் நடந்தது.இதில், சென்னை ஐ.ஐ.டி., வேலைவாய்ப்பு கமிட்டி இயக்குனர் பாபு விஸ்வ நாதன் பங்கேற்று, சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள் பாதிக்கப்பட்டது குறித்து அறிக்கை அளித்தார். இதேபோல், மற்ற ஐ.ஐ.டி.,க்களிலும் இந்த நிறுவனங்களின் ஒப்பந்த மீறல் குறித்து அறிக்கை
தரப்பட்டது.

அனுமதி ரத்து:இதையடுத்து, பிலிப்கார்ட் நிறு வனத்துக்கு இந்த ஆண்டு மட்டும் நேர்காணலில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ரோட் ரன்னர் உட்பட, மூன்று நிறுவனங்கள், நேர்காணலில் பங்கேற்ற வர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கா ததால், அடுத்த ஆண்டு வரை நேர்காணலில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற, இரண்டு நிறுவனங்களும் ஆட்களை எடுத்துக் கொள்வதாகக் கூறியதால், அவர்களுக் கும் இந்த ஆண்டு மட்டும் வளாக நேர்காணலில் பங்கேற்கஅனுமதி ரத்து செய்யப்பட்டு, தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள் ளன.

விண்ணப்பம் நகல் எடுப்பதில் பிரச்னைஇன்ஜி., கவுன்சிலிங்கில் தீராத குழப்பம்...!!

சென்னை, அண்ணா பல்கலை யில் இன்ஜி., கவுன்சிலிங்குக்கு விண்ணப்பம் அளிக்க கால அவகாசம் முடிந்து விட்டது. எனினும், தொழில்நுட்ப பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் அவகாசம் தர கோரிக்கை எழுந்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில் பி.இ., - பி.டெக்., படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, 
அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க, 'ஆன்லைன்' விண்ணப்ப முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பல குளறு படிகள் ஏற்பட்டுள்ளதால், பல மாணவர்களும், பெற்றோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆன்லைன் பதிவு துவங்கிய நாள் முதலே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, அந்த குழப்பம் இறுதி நாள் வரை தீராததாகவே இருந்தது. விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திய பின்னரும் அவர்களின் கட்டணம், பல்கலையால் ஏற்றுக் கொள்ளப்பட பல நாட்கள் தாமதமானது. அதனால், விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்களை, ஆன்லைனில் பதிவேற்றும் வசதி முடங்கியது.
அதேபோல், பல மாணவர்களுக்கு அவர்கள் பணம் கட்டி விண்ணப்பித்த போதும், இணையதள பக்கத்துக்கான, 'யூசர் ஐ.டி.,'யான பயன்பாட்டு அடையாள வார்த்தையும், அதற்கான, 'பாஸ்வேர்டு' எனப்படும், ரகசிய குறியீட்டு எண்ணும், சரியாக இருந்தும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
அதனால், தங்கள் விண்ணப்பத்தை நகல் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்ட பலர், குறை கேட்பு தொலைபேசிக்கும், மாணவர் சேர்க்கை செயலருக்கும் தொடர்பு கொண்ட போதும், எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
மேலும், அண்ணா பல்கலைஅறிவித்த, 'இ - மெயில்' முகவரிக்கு புகார் அனுப்பியும் பலன் இல்லை. பலர் நேரில் சென்று விசாரித்த போதும், ஒவ்வொரு பிரிவாக அலைக்கழித்த அதிகாரிகள், இறுதி வரை பிரச்னைக்கு தீர்வை வழங்கவில்லை.
எனவே, பிரச்னைகளை தீர்க்காமலே அண்ணா பல்கலைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நேற்றுடன் முடிந்தது. இதனால், ஆன்லைனில் பதிவு செய்தும், விண்ணப்பம் நகல் எடுக்க முடியாதவர்கள், என்ன செய்வதென
தெரியாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு, 'பணம் ஏற்றுக் கொள்ளப்பட்டது' என்ற பதில் மட்டும், இ - மெயிலாக கிடைத்துள்ளது. ஆனால், விண்ணப்பத்தை நகல் எடுக்க வசதி செய்யப்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும், விண்ணப்பங்களை நகல் எடுக்கவும், அவற்றை பெறவும் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நியமனத்தில் இடஒதுக்கீடு: கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை ...!

அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர் சேர்க்கை, பேராசிரியர் மற்றும் பணியாளர் நியமனத்தில், இடஒதுக்கீடு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.
யு.ஜி.சி., சார்பில், அதன் இணை செயலர் கே.பி.சிங், அனைத்து 
பல்கலைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன் விவரம்:அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளிலும், அனைத்து பாடப்பிரிவுகளிலும், மாணவர் சேர்க்கை நடத்தும் போது, இடஒதுக்கீடு முறை மற்றும் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும்; விதிமீறல்கள் இருக்கக் கூடாது.
அதேபோல், பேராசிரியர் நியமனம் மற்றும் பணியாளர் நியமனங்களிலும், அதேபோன்ற விதிகளை பின்பற்ற வேண்டும். ஆதிதிராவிடர் பட்டியல் இனத்தவருக்கு, 15 சதவீதம்; பழங்குடியினருக்கு, 7 சதவீதம்; மற்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 27 சதவீதம் என்ற இடஒதுக்கீடு கொள்கையை, கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.-

பி.காம்., - கம்ப்யூ., சயின்ஸ், ஆங்கில இலக்கியம் படிக்க... ஆர்வம் கலை கல்லூரிகளில் சேர மாணவர்கள் போட்டாபோட்டி !!!

பிளஸ் 2 முடித்த மாணவர்களிடம், கலை, கல்லுாரிகளில் பி.காம்., படிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஆங்கில இலக்கிய படிப்புக்கும் மாணவியரிடம் அதிக போட்டி ஏற்பட்டுள்ளது.


பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுஉள்ளன. கல்லுாரிகளில் உயர்கல்வி 
சேர்க்கைக்கான பணிகள் நடக்கின்றன. மருத்துவம் மற்றும் இன்ஜி., படிப்புகளுக்கு கவுன்சிலிங் துவங்கவில்லை. அதேநேரம், இன்ஜி., படிப்பை போல், கலை, அறிவியல் பாடங்களுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இன்ஜி.,க்கு செல்ல விரும்புவோரும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், பட்டப்படிப்பில் சேர்ந்து வருகின்றனர்.20 மடங்குஅதனால், இரண்டாம் கட்ட மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும் பி.காம்., மற்றும் 'கம்பெனி செக்ரட்ரிஷிப்' படிப்புக்கு கடும் போட்டி உள்ளது.

ஒவ்வொரு கல்லுாரியிலும், ஒதுக்கப்பட்ட இடங்களை விட, 20 மடங்கு அளவுக்கு கூடுதல் விண்ணப்பங்கள் வந்துள்ளன. சென்னையில், ராணி மேரி, காயிதே மில்லத், பாரதி போன்ற மகளிர் அரசு கல்லுாரிகளிலும், எத்திராஜ், கிறிஸ்தவ கல்லுாரி, செல்லம்மாள் போன்ற தனியார் மகளிர் கல்லுாரிகளிலும், பி.காம்., ' சீட்'டுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி, விவேகானந்தா, வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலை, அறிவியல் கல்லுாரி, மாநில கல்லுாரி, நந்தனம் கலை கல்லுாரி போன்றவற்றிலும், பி.காம்., படிப்புக்கு அதிக
மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.அதேபோல், கணிதம் மற்றும் அறிவியல் படித்த மாணவி யரிடையே,கம்ப்யூ., சயின்ஸ் மற்றும் ஆங்கில மொழி படிப்புக்கு அதிக போட்டி உள்ளது.

இதுகுறித்து கல்லுாரி முதல்வர்கள் சிலர் கூறும்போது, 'மாணவியருக்கு ஆசிரியர் பணி, 'டியூஷன்' எடுப்பது, அலுவலக பணி, பேராசிரியர் பணியில் சேர்தல் போன்ற பணிகளில் சேரவே, அதிகம் விரும்புகின்றனர். அதனால், ஆங்கிலம், கம்ப்யூ., சயின்ஸ் படிப்புகளில்சேர விரும்பு கின்றனர்' என்றனர்.

அறிவியல் பிரிவில் மீண்டும், இயற்பியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுக்கு, மாணவர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர். அதனால், ஒரு சீட்டுக்கு ஒரே நேரத்தில் பலர் மோதுகின்றனர்.

வெளியேறுவர் அரசு கல்லுாரிகளில் மொத்த மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன்படி, முதல் கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடந்து வருகிறது.

இன்னும் இடம் கிடைக்காமல் இருப்பவர்களுக்கு, அரசியல் அறிவியல், வேதியியல், மனை அறிவியல், ஊட்டச்சத்து, உணவு பதப்படுத்துதல், சமூகவியல் போன்ற பாடப்பிரிவுகளில் இடம் வழங்கப்படுகிறது.

மருத்துவம் மற்றும் இன்ஜி., கவுன்சிலிங் முடியும் போது, பலர் கலை, அறிவியல் படிப்புகளில் இருந்து வெளியேறுவர். அப்போது காலியாகும் இடத்தில், வேறு பாடப்பிரிவில் அமர்த்தப்பட் டோர் நியமிக்கப்படுவர் என , கல்லுாரி முதல்வர்கள் தெரிவித்தனர்.

குவிந்த விண்ணப்பங்கள்: * சென்னை காயிதே மில்லத் மகளிர் கல்லுாரியில், பி.காம்., படிப்பில், 210 இடங்களுக்கு, 3,500 பேர்; பி.காம்., கம்பெனி செக்ரட்ரிஷிப்பில், 70 இடங்களுக்கு, 1,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். பி.எஸ்சி., கணிதம், 140 இடங்கள்; கணினி அறிவியல், ஆங்கிலம், இயற்பியல் போன்ற படிப்புகளில், ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் தலா, 40 இடங்களுக்கு, 700 - 900 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

* ராணி மேரி மகளிர் கல்லுாரியில், 150 பி.காம்., இடங்களுக்கு, 3,000 பேர்; பொருளாதாரவியலில், 70 இடங்களுக்கு, 600 பேர்; கணிதம், அறிவியல், கணினி அறிவியல், ஆங்கிலம், படிக்க, தலா,
600 - 800 பேர் விண்ணப்பித்துஉள்ளனர். இந்த கல்லுாரியில், மொத்தம், 16 ஆயிரம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
* வியாசர்பாடி அம்பேத்கர் கலை கல்லுாரியில், பி.காம்., படிப்பில், 140 இடங்களுக்கு, 750 பேர், பி.எஸ்சி., இயற்பியல், தாவர உயிரியல், 'அட்வான்ஸ்ட்'
விலங்கியல் போன்ற அறிவியல் பாடப்பிரிவு களுக்கு, 320 இடங்களுக்கு, 1,000 பேர் என, மொத்தம், 2,000 பேருக்கு மேல் விண்ணப்பித் துள்ளனர்.

விடைக்குறிப்பு, மதிப்பெண் ஒதுக்கீடு பட்டியல் அரசு தேர்வுத்துறை வெளியிட கோரிக்கை ...!!

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., போல், விடை குறிப்பு மற்றும் திருத்த முறையை வெளியிட வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் தன்னாட்சி பெற்ற அமைப்பான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், நாடு முழுவதும் உயர்கல்வி 
நிறுவனங்களால் முன்னுரிமை கொடுத்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும், 15 லட்சம் பேர், 10ம் வகுப்பு; 13 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வை எழுதி தேர்ச்சி பெறுகின்றனர்.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், பிளஸ் 2வில், 8 லட்சம் பேர்; 10ம் வகுப்பில் 10 லட்சம் பேர் பொதுத் தேர்வு எழுதுகின்றனர். ஆனால், ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்தில் பொதுத் தேர்வு திருத்த முறைகளில் பல சர்ச்சைகள் ஏற்படுவது உண்டு. சரியான விடை எழுதிய பலருக்கு, உரிய மதிப்பெண் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுகிறது.
* பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் முறை என்ன?
* அதற்கான தேர்வுத்துறையின் விதிகள் என்ன?
* விடைக்குறிப்பு சரியாக தயாரிக்கப்படுகிறதா?
* அதில் உள்ளது போல், மதிப்பெண் வழங்கப்படுகிறதா போன்ற பல கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைப்பதில்லை. வெளிப்படைத்தன்மை இல்லாமல், தமிழக அரசு தேர்வுத்துறையின் செயல்பாடு உள்ளதாக, பல ஆண்டுகளாக கல்வியாளர்கள் புகார் கூறி வருகின்றனர்.
எனவே, சி.பி.எஸ்.இ., போல், விடைக்குறிப்பு, மதிப்பெண் முறை மற்றும் விடைத் திருத்த முறை குறித்த விதிமுறைகளை வெளியிட வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு, விடைக்குறிப்பு, மதிப்பெண் ஒதுக்கீடு போன்ற விவரங்களை, சி.பி.எஸ்.இ., தரப்பில், பொதுவான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பார்த்து மாணவரும், பெற்றோரும் தங்கள் விடைத்தாள் சரியாக திருத்தப்பட்டுள்ளதா என பார்த்து, மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கின்றனர்.
தமிழகத்தில் மறு மதிப்பீட்டுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், விடைக்குறிப்பு மற்றும் திருத்த முறை என்னவென்றே தெரியாத நிலையில், மீண்டும் அதிக கட்டணம் செலுத்தி, மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என, தேர்வுத்துறைக்கு
கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு பல ஆண்டுகளாக உதவித்தொகை இல்லை. !!!

தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தவிக்கின்றனர்.
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க மத்திய அரசு தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு நடத்தி உதவித்தொகை வழங்குகிறது. 
இத்தேர்வை எழுத 7 ம் வகுப்பில் எஸ்.சி.,-எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள், மற்றவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 6,695 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படுகின்றன.
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 8 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.24 ஆயிரம் வழங்கப்படும். இந்த தொகை வழங்குவதற்காக மாணவர்களிடம் வங்கி சேமிப்பு கணக்கு எண் பெறப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன் தேர்ச்சி பெற்ற பல மாணவர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் உதவித்தொகை கிடைக்காதோர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலையும், அவர்களது சேமிப்பு கணக்கு எண்ணையும் அனுப்பி விடுவோம். அவர்கள் நேரடியாக மாணவர்கள் கணக்கில் உதவித்தொகைக்குரிய பணத்தை செலுத்திவிடுவர். உதவித்தொகை வரவில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, என்றார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!