Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 7 June 2016

அறிவியல் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற என்ன காரணம்? - அமெரிக்க ஆய்வாளர்கள் விளக்கம்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாண பல்கலைக்கழகம் அறிவியல் பாடத் தேர்வுகளில் மாணவிகளை விட, மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற ஆய்வு நடத்தியது.

அதில் அறிவியல் தேர்வுக்கான கேள்விகள் வடிவமைக்கும் முறைகள் மாணவர் களுக்கு எளிதில் புரிவதால் அவர்கள் அதிக மதிப்பெண் பெறுகின்றனர் என தெரியவந்துள்ளது. இதே போல சமூக பொருளாதார அந்தஸ்தில் முன்னேறிய மாணவர்களும் அறிவியல் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமூக பொருளாதார அந்தஸ்தில் உயர்வு, தாழ்வு நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி திறன் சமமாக இருந்தாலும், சிந்தனையை தூண்டும் சவாலான கேள்வி பதில் தேர்வை மாணவிகளை விட, மாணவர்களே சிறப்பாக எழுதுகின்றனர். சுமார் 4,800 மாணவர்களிடம் 3 ஆண்டு களாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தின் கிறிஸ்டியன் ரைட் கூறும்போது, ‘‘சவால்கள் அடிப் படையில் மாணவ, மாணவிகளிடையே இத்தனை பெரிய பேதம் ஏற்பட்டுள் ளதை கண்டறிந்ததும் மிகவும் ஆச்சரிய மடைந்தோம். படிப்பில் கெட்டிக்காரர் களாக இருந்தாலும் சவாலான கேள்விகள் மாணவிகளையும், சமூக பொருளா தாரத்தில் பின்தங்கிய மாணவர்களையும் எதிர்மறையாக பாதிக்கிறது’’ என்றார். இந்த பேதங்கள் மறைய ஆக்கப் பூர்வமான கற்பித்தல் முறைகளை பின்பற்ற வேண்டும் என ஆராய்ச்சி யாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்

S.S.A-Inservice Training for Teachers-TRAINING TOPICS 2016-17

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"இந்திய முறை கழிப்பறை ஆரோக்கியத்தின் அடையாளம்!"


காலை எழுந்தவுடனும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்னும், நாம் பயன்படுத்துவது கழிப்பறை. இதைப் பற்றி பேசுவதற்குப் பலரும் முகம் சுளிக்கலாம். ஆனால், கழிப்பறைகளில்தான் நம் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது.

“இயல்பாகக் கிடைத்த நல்ல விஷயங்களையும் நாகரிகத்தின் பெயரால் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். அதில் கழிப்பறைகளும் அடக்கம்” என்கிறார் லாவண்ய சோபனா திருநாவுக்கரசு. இவர் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் இரா. திருநாவுக்கரசின் மனைவி.

தினம் ஒரு புத்தகம்"டார்வின் ஸ்கூல்"


G.O.165 Dt:01.06.16 MEDICAL AID – NHIS 2014 for Pensioners (including spouse) /Family Pensioners – List of Addl Hospitals covered under this scheme and Addl Specialties included in the Hospitals already empanelled under this Scheme – Approved


4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு அங்கீகாரம்.

ஒருங்கிணைந்த, பி.ஏ.,- பி.எட்., மற்றும் பி.எஸ்சி., -பி.எட்., நான்கு ஆண்டு படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி, திருக்கானுார், வாழப்பாடியார் நகரில் உள்ள, உஷா லட்சுமணன் கல்வியல் கல்லுாரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:

தேர்வு நிலை அந்தஸ்தை பெற, கவனிப்பை எதிர்பார்க்காத கல்வி அதிகாரி:'வாட்ஸ் ஆப்'பில் குவியும் வாழ்த்துகள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் பெறுதல், இடமாறுதல், 'பென்ஷன்' போன்றவற்றுக்கு அதிகாரிகளை கவனித்தே உத்தரவு பெறும் நிலையில், எதையும் எதிர்பார்க்காமல் உத்தரவிட்ட அதிகாரிக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் வாழ்த்துகள் குவிகின்றன.

பணிபுரியும் தொடக்கப்பள்ளியிலேயே b.ed கற்பித்தல் பயிற்சி எடுக்கலாம் என்பதற்கான அரசாணை.தேர்வு நிலை பெறும் ஆசிரியர்கள் HRA Slap பார்த்து பணப்பயன் பெறுங்கள்


தொழில்நுட்ப பிரச்னையால் 50 ஆயிரம் பேர் தவிப்பு!இன்ஜி., இடங்கள் நிரம்புமா? கல்லூரிகள் அச்சம்.

அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கிற்காக, 1.84 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ள நிலையில், 1.33 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பங்கள் அளித்துள்ளதால், இன்ஜி., கல்லுாரிகளில் இடங்கள் நிரம்புமா என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது.தொழில்நுட்ப பிரச்னையால் தவிக்கும், 50 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களையும் ஏற்க கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதி.

கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில்,நடப்பு ஆண்டில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது. இதனால், அரசு மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கை, 21 ஆகவும்; எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 2,760 ஆகவும் உயர்ந்துள்ளன.

சம்பளம் ஓரிடம்; பணி வேறிடம்: கல்லூரிகளுக்கு எச்சரிக்கை.

தமிழகத்தில் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள், அரசு உதவிபெறும் கல்லுாரிகள், ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் போன்றவற்றில், குறைந்த சம்பளத்தில் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை, தனியார் கல்லுாரிகள் பல பணிகளுக்கு பயன்படுத்துகின்றன. 

புத்தகங்கள் கிடைப்பதில் தாமதம்: பிளஸ் 1 வகுப்புகள் முடக்கம்.

பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவு வெளியாகி, 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், பிளஸ் 1 புத்தகங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடைகளிலும் விற்பனைக்கு வராததால், பிளஸ்1 வகுப்புகள் முடங்கியுள்ளன.தமிழகத்தில், 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள், மே, 25ல் வெளியாகின. 

பள்ளிக்கு வந்தால் ரூ.1,000 பரிசு அசுத்தும் தலைமையாசிரியர்!

அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கை குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளியில் சேர்ப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தலைமையாசிரியர் ஒருவர், 1,000 ரூபாய் பரிசு வழங்கி அசத்தி வருகிறார்.

போலி சான்றிதழ் கொடுத்தஆசிரியைக்கு 3 ஆண்டு சிறை

போலி சான்றிதழ் கொடுத்து,பணியில் சேர்ந்த ஆசிரியைக்கு,மூன்று ஆண்டு சிறை தண்டணை விதித்து,அரியலுார் கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.அரியலுாரை சேர்ந்தவர் தனபால் மனைவி ராஜாமணி, 36.இவர், 2000ம் ஆண்டு,மணக்கால் ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.

100 சதவீத தேர்ச்சிக்காக மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளியில் இருந்து வெளியேற்றக்கூடாது: மதுரை ஐகோர்ட்டு அறிவுரை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா பி.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

பள்ளிக்கல்வித் துறை செயலர் சபீதா முதல்வர் ஜெயலலிதாவின் செயலர் பதவிக்கு நியமனம்?

முதல்வர் ஜெயலலிதாவின், இரண்டாவது செயலர் ராம்மோகன் ராவ், முதலாவது செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.முதல்வர் ஜெயலலிதாவின், முதலாவது செயலராக ஷீலாபிரியா இருந்தார்;அவர் மே மாதம் ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து, இரண்டாவதுசெயலராக இருந்த ராம்மோகன் ராவ், ஜூன் 2ம் தேதி முதல், முதலாவது செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இரண்டாவது செயலர் பதவிக்கு, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபீதா நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பொறியியல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு எப்போது?

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு பொறியியல் சேர்க்கை பெரும்பாலும் முடிந்து விட்ட நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையேயும், பெற்றோரிடையேயும் எழுந்துள்ளது.

டான்செட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தயார்...!!

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான (டான்செட் 2016) ஹால் டிக்கெட்டுகள் தயார் நிலையில் உள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டுகளை தற்போது டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை.யில் ஆன்-லைனில் பதிவுகள் தொடக்கம்...!!

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (இக்னோஃ)) தொலைநிலையில் கல்வி பயில்வதற்கான ஆன்-லைனில் பதிவு செய்வது தொடங்கிவிட்டது.

மருத்துவ படிப்பிற்கு 24,100 விண்ணப்பங்கள் விற்பனை....!!

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு 24,100 விண்ணப்பங்கள் விற்பனை ஆகி உள்ளன. அதில் 2,700 விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் தரவிறக்கம் செய்யப்பட்டன. கடந்த 
ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு விண்ணப்ப விற்பனை குறைவாக உள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் - தமிழக முதல்வர்

தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வரும்போது தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளை அறிவித்தேன். அந்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் என உறுதி 
அளிக்கிறேன். தமிழ்நாட்டின் முன்மாதிரி தொகுதியாக ஆர்.கே., நகர் தொகுதியை மாற்றுவேன் என்ற உறுதியும் உங்களுக்கு அளிக்கிறேன்.
வழக்கத்துக்கு மாறாக ஆர்.கே., நகர் முழுவதும் ஜெயலலிதாவை வரவேற்று பிளக்ஸ் பேனர்கள் வைப்பது இம்முறையும் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் !!

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!