Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 10 June 2016

வகுப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு சூடு வைத்த விபரீதம்; ஆசிரியை கைது: தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

உளுந்தூர்பேட்டையை அடுத்த பாலி கிராம ஊராட்சிய ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வகுப்பில் பின் தங்கிய நிலையில் பயின்ற மாணவ, மாணவியருக்கு ஆசிரியை கற்பூரத்தால் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில், தலைமையாசிரியர் வரதராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை வைஜெயந்தி மாலாவை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம உளுந்தூர்பேட்டையை அடுத்த பாலி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கிவருகிறது.இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 53 மாணவ, மாணவிகள் பயிலுகின்றனர். கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளி திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இயங்கி வந்த பள்ளியில் நேற்று 4-ம் வகுப்பில் பாடம் நடத்திய ஆசிரியை வைஜெயந்திமாலா என்பவர், பாடம் தொடர்பாக மாணவர்களிடம் சில வினாக்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

அவர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்காத மாணவியர் சுப்புலட்சுமி, ப்ரீத்தி, அனிதா, மாணவர்கள் சுரேஷ்ராஜ், ஹரிகிருஷ்ணன் உட்பட 15 மாணவர்களை கண்டித்து பிரம்பால் அடித்ததாகவும், மாணவ, மாணவியர்களின் காலில் கற்பூரத்தை ஏற்றி ஆசிரியை வைஜெயந்திமாலா சூடு வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவ,மாணவிகள் காலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீக் காயத்துடன் வீட்டுக்குச் சென்ற மாணவர்கள் பெற்றோர்களிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நேற்று காலை வழக்கம்போல் பள்ளி திறந்தபோது, பள்ளியின் முன் திரண்ட பாதிப்புக்குள்ளான மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளித் தலைமையாசிரியரிடம் முறையிட்டுள்ளனர்.அதன்பின் மாணவ,மாணவிகள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், ஆசிரியை மற்றும் தலைமையாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படி மாவட்டக் கல்வி அலுவலர் இளங்கோவனுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக ஆசிரியை வைஜெயந்திமாலா மற்றும் தலைமையாசிரியர் வரதராஜன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று மாணவ, மாணவியர்களையும், பெற்றோர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பின் போது ஆசிரியை குறித்து பெற்றோர்கள் பல புகார்களை தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் பள்ளிகளில் மாணவ,மாணவியரிடம் மனித உரிமையை மீறும் வகையில் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார்.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் அளித்தப் புகாரின் பேரில் ஆசிரியை வைஜெயந்திமாலாவை உளுந்தூர்பேட்டை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பிறக்காத மழலையின் மடல்'- குஜராத் முதல்வரை கலங்கவைத்த 9-ம் வகுப்பு மாணவியின் பேச்சு

பெண் சிசுக் கொலை பிரச்சினையை முன்னிறுத்தி 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பேசியதைக் கேட்டு குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேல் கண்ணீர் சிந்தினார்.

குஜராத் மாநிலத்தில் கல்வி கற்போர் விகிதத்தை அதிகப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அம்மாநில அரசு சார்பில் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்படுகிறது.

அந்த வகையில் கேதா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஆனந்திபென் படேல் நேரடியாகக் கலந்து கொண்டார். முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஹரேஜ் துவக்கப் பள்ளி மாணவி அம்பிகா கோஹெல், 'பிறக்காத மழலையின் மடல்' என்ற தலைப்பில் கடிதம் ஒன்றை வாசித்தார். பெண் சிசுக் கொலை பிரச்சினையை முன்னிறுத்தி அக்கடிதம் எழுதப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தை வாசித்த அம்பிகா,"அம்மா, நான் இந்த உலகைப் பார்க்க விரும்பினேன். புது காற்றை சுவாசிக்க ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு அதற்கான வாய்ப்பு அளிக்கப்படவே இல்லை. உன் கருவில் இருந்த நான் ஒரு பெண் சிசு எனத் தெரிந்து கொண்டதாலேயே நீ என்னை கொலை செய்துவிட்டாய். இவ்வுலகில் பிரவேசிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாமலையே சவமாக்கப்படும் வேதனை மிகவும் கொடியது. அம்மா. நீ ஒன்றை தெரிந்துகொள் பெண் குழந்தை இல்லாத எந்த ஒரு இல்லமும் முழுமை பெறுவதில்லை" எனக் கூறி முடித்தார்.

அப்போது அங்கே கூடியிருந்தவர்களில் பெரும்பாலோனோ கண்ணீர் சிந்தினர். முதல்வர் ஆனந்திபென் படேலும் கண்ணீரை தனது கைக்குட்டையால் துடைத்தார்.

பின்னர் மாணவி அம்பிகாவை அருகில் அழைத்து ஆரத்தழுவி பாராட்டினார். பின்னர் பேசிய முதல்வர் ஆனந்தி, பிள்ளைகளில் ஆண் - பெண் பேதம் பார்க்கக்கூடாது. பெண் பிள்ளைகள் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

ஜாதிச் சான்றிதழ் வழங்காததால் கல்விக்கு முழுக்கு போடும் குடுகுடுப்பை சமுதாய சிறுவர்கள்: நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தகவல்

ஜாதிச் சான்றிதழ் வழங்காததால் “கல்விக்கு முழுக்கு” போட்டுவிட்டு, குடுகுடுப்பை சமுதாயத்தைச் சேர்ந்த சிறுவர்கள் குலத்தொழிலை பார்க்க புறப்படும் அவலம் தொடர்கிறது.

அதிகாலை நேரத்தில் “நல்ல காலம் பிறக்குது... நல்ல காலம் பிறக்குது”, ஜக்கமா வாக்கு தவறாகாது என்ற ஒலி ஒசையுடன் வீட்டின் வாசல் முன்பு நின்று குறி சொல்வதை குடுகுடுப்பைக்காரர்கள் குலத்தொழிலாக செய்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு நல்ல காலம் பிறக்க வேண்டுமானால், ஜாதிச் சான்று கிடைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஜாதிச் சான்று கிடைக்காததால் 5-ம் வகுப்புடன் “கல்விக்கு முழுக்கு” போட்டுவிட்டு தந்தையுடன் குலத்தொழிலை பார்க்க சிறுவர்கள் புறப்பட்டு விடுகின்றனர்.

திருவண்ணாமலை அருகே அய்யம் பாளையம் புதூர் கிராமத்தில் குடுகுடுப்பை சமுதாயத்தைச் சேர்ந்த 550-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களில், ஒருவருக்குக் கூட ஜாதிச் சான்று கிடைக்கவில்லை. உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி, உயர்கல்விக்கு செல்லவேண்டும் என்றால் ஜாதிச் சான்று அவசியம். அது இல்லாத காரணத்தால் கல்வியைத் தொடர முடியாத நிலை குடுகுடுப்பைக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

எங்களோடு கஷ்டங்கள் முடியட்டும்

இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவர் கூறும்போது, “ஜாதி சான்று இல்லாததால் படிக்க முடியவில்லை, வேலைக்குச் செல்ல முடியவில்லை. நாங்களும் 30 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

ஆனால், எங்களுக்கு இந்து - குடு குடுப்பைக்காரர் கணிக்கர் (பழங்குடியினர்) ஜாதிச் சான்று வழங்க அரசாங்கம் மறுக்கிறது. இதனால், எங்கள் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் 2 தலைமுறை மட்டும் இல்லாமல், 3-வது தலைமுறையும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒரு சிலர், படித்துவிட்டு வேலைக்குப் போக வேண்டியதானே என்கின்றனர். அவர்கள் கேட்பது நியாயமான கேள்வி. படிக்கவும், வேலைக்குச் செல்லவும் ஜாதிச் சான்று அவசியமாகிறது. போலீஸ் விசாரணை என்றால்கூட ஜாதிச் சான்று இருக்கிறதா? என்று கேட்கின்றனர். எங்கள் சமூகத்தினர் 8-ம் வகுப்பு வரை படிப்பதே அதிகம்.

காஞ்சிபுரம், சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் வசிக்கும் எங்கள் சமுதாய மக்களுக்கு கணிக்கர் என்று ஜாதிச் சான்று வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, எங்களுக்கும் வழங்கினால் கல்லூரி படிப்பு முடிந்து நல்ல வேலைக்கு செல்வோம். அனைத்து கஷ்டங்களும் எங்களோடு முடிந்து போகட்டும். அடுத்த தலைமுறையின் நிலை மாறவேண்டும். அதற்கு, எங்களுக்கு கணிக்கர் என்று ஜாதிச் சான்று வழங்கவேண்டும். கணிக்கர் என்று ஜாதிச் சான்று பெற்ற சிலர் படித்து வேலைக்கு சென்றுள்ளனர். அவர்களைப் போன்று எங்கள் பிள்ளைகளும் படித்து வேலைக்கு செல்லவேண்டும் என்பதே எங்கள் கனவு” என்றார்.

ஆய்வு செய்து நடவடிக்கை

இது குறித்து தி.மலை கோட்டாட்சியர் இரா.உமா மகேஸ்வரி கூறும்போது, “காஞ்சிபுரம் மாவட்டத்தில் கணிக்கர் என்று குறிப்பிட்டு ஜாதிச் சான்று வழங்கி உள்ளதாக, நகல் ஒன்றை கொடுத்தனர். கன்னியாகுமரி, செங்கோட்டை வட்டத்தில்தான் பழங்குடியினர் பட்டியலில் கணிக்கர் சமுதாயத்தினர் வசிப்பதாக அரசுப் பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது. திருவண்ணாமலை பற்றி குறிப்பிடவில்லை. அவர்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றதும், உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்போம். அவர்களது பூர்வீகம், கலாச்சாரம், வழிபாடு முறை போன்றவை குறித்து ஆய்வு செய்யவேண்டும். எந்த மனுக்களையும் நிராகரிக்க மாட்டோம்” என்றார்.

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: வெளிப்படையாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படுமா?


தனியார் பள்ளிகளில் ஆண்டுதோறும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீதம் இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கை 100 சதவீதம் இலக்கு எட்டப்படாமலே இருந்து வருகிறது.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் பள்ளிகளை தவிர்த்து தனியார் பள்ளிகளில் இலவச 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நலிவடைந்தப் பிரிவின் குழந்தைகளை மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும்.

இந்த சட்டத்தின் கீழ், தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் (2015-16) மொத்தம் 3,673 பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் மொத்தம் 61,876 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் வெறும் 39,329 மாணவர்கள் மட்டுமே சேர்க்கை நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் இந்த சட்டத்தின் கீழ் 2013-14-ம் ஆண்டில் 2,509 இடங்களில் 1,103 இடங்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடந்தது. 1,406 இடங்கள் காலியாக இருந்தது. 2014-15-ம் ஆண்டில் 2519 இடங்களில் 1,795 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. 724 இடங்கள் காலியாக இருந்தது. 2015-16-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட 2,617 இடங்களில் 1,673 இடங்களில் மாணவர் சேர்க்கை நடந்தது. 944 இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறாமல் காலியாக இருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஒருபுறம் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் 100 சதவீதம் மாணவர் சேர்க்கை இலக்கை நிறைவடையாமல் உள்ளதும், மற்றொருபுறம் இந்த சட்டத்தில் குழந்தைகளை சேர்க்க முடியாமல் பெற்றோர் தவிப்பதும் தொடர்கிறது. இதுகுறித்து மதுரையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் கூறியது:

ஒவ்வொரு ஆண்டும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர் சேர்க்கை 100 சதவீதம் இலக்கை எட்ட வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் நோக்கம். தனியார் பள்ளிகள், எல்கேஜி குழந்தைகளை சேர்க்க ஒரு கி.மீ., தூரத்திற்குள் வசிக்க வேண்டும் என உத்தரவு உள்ளது என தட்டிக் கழிக்கின்றனர்.

பெரும்பாலும், இந்த சட்டத்தில் எல்கேஜியில்தான் குழந்தைகள் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். தனியார் பள்ளிகள், 90 சதவீதம் நகரப் பகுதியில் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியிலே உள்ளன. நலிவடைந்த பிரிவினர் தனியார் பள்ளிகள் அமைந்திருக்கும் 1 கி.மீ. தூரத்துக்குள் வசிக்க சாத்தியமில்லை.

இதனால் நலிவடைந்த பெற்றோர், இந்த சட்டத்தில் குழந்தைகளை சேர்க்க முடியாமல் தவிக்கின்றனர். அதனால், இந்த ஆண்டு இலவச 25 சதவீதம் இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கையில் 100 சதவீதம் இலக்கை பூர்த்தி செய்ய கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பிரபல பள்ளிகளுக்கே முக்கியத்துவம்

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது: இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் நூறு சதவீத இலக்கு எட்டாமல் இருப்பதற்கு பெற்றோர் பிரபல பள்ளிகளில் மட்டுமே குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டுவதே முக்கிய காரணம். மற்ற சாதாரண பள்ளிகள், மக்கள் மனதில் நிற்காததால் அந்த பள்ளிகளில் காலியிடங்கள் ஏற்படுகின்றன. எல்கேஜியில் ஒரு கி.மீ. தூரத்துக்குள் வசிக்கும் குழந்தைகளை சேர்ப்பது, இலவசக் கட்டாயக் கல்வி சட்டத்தின் கொள்கை முடிவுகளில் ஒன்று. அதுபற்றி கருத்து கூற இயலாது என்றார்.

25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர 19 பள்ளிகளில் இன்று குலுக்கல்

மதுரை மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் எல்.கே.ஜி.யில் சேர 2,475 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சேர மாணவர்களிடமிருந்து 2,106 விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான 1,729 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 19 பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அதன்படி ஏழுமலை பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருமங்கலம் பி.கே.என். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவாதவூர் லெட்சுமி மெட்ரிக் பள்ளி, கீழவளவு ஸ்ரீபாலன் எவர்கிரீன் மெட்ரிக் பள்ளி, அவனியாபுரம் பி.எம்.எஸ்.வி. மெட்ரிக் பள்ளி, வில்லாபுரம் லிட்டில் டயமண்ட் மெட்ரிக் பள்ளி, எல்லீஸ்நகர் சிவகாசி நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பசுமலை எம்.டி. பி.கே.என். மெட்ரிக் பள்ளி, குட்ஷெப்பர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கென்னட்ரோடு எஸ்.டி.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோசாகுளம் சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எம்.ஆர்.ஆர்.எம்.ஏ.வி.எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சாரதா வித்யாவனம் (ம) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பி.டி.நகர் செயிண்ட் மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சின்னசொக்கிகுளம் எஸ்.டி.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கே.கே.நகர் மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அனுப்பானடி எஸ்.டி.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய 19 பள்ளிகளில் இன்று காலை 9.30 மணிக்கு குலுக்கல் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தொடக்கக்கல்வி - பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை MG நிதி கொண்டு உடனடியாக சரிசெய்ய வேண்டும் - மிகவும் பழுதடைந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் - இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

ரயில் பயணிகளின் வசதிக்காக, ரயில்வே விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள்

ரயில் பயணிகளின் வசதிக்காக, ரயில்வே விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் வசதிகள், வரும் ஜூலை, 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக, ரயில்வே அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர். ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் மற்றும் வசதிகள்:

* தத்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், 50 சதவீத பணம் திரும்ப கிடைக்கும்

* ராஜதானி மற்றும் சதாப்தி விரைவு ரயில்களுக்கு, மொபைல் டிக்கெட்டுகள் மட்டுமே செல்லுபடியாகும்

* ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் இனி, உள்ளூர் மொழிகளான, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வழங்கப்படும்

* ராஜதானி மற்றும் சதாப்தி விரைவு ரயில்களில், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

* சுவிதா ரயில்களில், காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு மாற்று வசதி கிடைக்கும்

* முக்கிய ரயில் நிலையங்களில், வை - பை வசதி, வி.ஐ.பி., காத்திருப்பு அறை, போன்ற உலகத் தரம் வாய்ந்த வசதிகள் கிடைக்கும். இவற்றை பயன்படுத்த, பயணிகள், மணிக்கு, 100 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்
இந்த தகவல்களை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்களின் விடுப்பு விவரம்,பணப்பலன், பணி மற்றும் இதரப்பலன்கள் உள்ளிட்ட அனைத்து கோப்புகள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளவும், பணிப்பதிவேட்டில் உடனுக்குடன் பதிவு 13.06.2016 முதல் 21.06.2016க்குள் முடிக்க இயக்குனர் உத்தரவு

CCE - தொடர் & முழுமையான மதிப்பீட்டு முறைக்காகத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறையால் உறுதியாக இறுதி செய்யப்பட்டவை 4 பதிவேடுகள் மட்டுமே.

1. *மாணவர் திரள் பதிவேடு*
2. *பாட ஆசிரியர் பதிவேடு*
3. *கல்வியிணைச் செயல்பாடுகள் பதிவேடு*
4. *வகுப்பு ஆசிரியர் (தொகுப்பு மதிப்பெண்) பதிவேடு*

முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் தகுதித்தேர்வு கட்டாயம்.


எல்லா செல்போன்களிலும் ‘அவசர உதவி பட்டன்’ மத்திய அரசு அதிரடி உத்தரவு

ஆபத்து காலத்தில் பெண்களுக்கு உதவுகிற வகையில் உபயோகத்தில் இருக்கும் எல்லா செல்போன்களிலும் ‘அவசர உதவி பட்டன்’ (பேனிக் பட்டன்) வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு கலைக் கல்லூரிகளில் இடங்கள் குறைக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் பாதிப்பு: கல்லூரி பேரவைகள் கண்டுகொள்ளாதது ஏன்?

பெரும்பாலான அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங் கலை, முதுகலை படிப்புகளில் இடங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் இடம் கிடைக்காமல் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர்.

கல்விக்கடனை வசூலிப்பதில் வங்கிகள் மும்முரம்:'தள்ளுபடி' என்ற வாக்குறுதியை நிறைவேற்றப்போகிறதா அரசு?

மாணவர்களின் கல்விக் கடன் களை தமிழக அரசு தள்ளுபடி செய் யக்கூடும் என்று கருதும் வங்கிகள், அவற்றை மாணவர்களிடம்வசூ லிக்கும் நடவடிக்கையில் தீவிர மாக இறங்கியுள்ளன. வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கும் நடைமுறையை முந் தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2008-ம் ஆண்டில் எளிமைப்படுத்தியது.

CPS - அரசாணை வெளியிட்டும் பலனில்லை-புது பென்ஷன் பலன்களை பெறமுடியாமல் ஓய்வூதியர்கள் பரிதவிப்பு.


ஏழாவது ஊதியக் குழு நாளை இறுதி வடிவம்.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு,இறுதி வடிவம் கொடுக்க, நாளை சிறப்பு கூட்டம் நடக்க இருக்கிறது.அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணி சார்ந்த பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஏழாவது ஊதியக் குழு, 2015 நவ., 19ம் தேதி, ஊதிய உயர்வு தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்தது.

RTI - LETTER PROMOTED PG'S APPOINTED IN THE PAST YEARS

த.அ.உ.சட்டம் 2005 - பள்ளிக்கல்வித்துறையில்ஏற்படும் முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு 50% நேரடி நியமனமும், 50%பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகிறது எனதகவல்.

10 ஆயிரம் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்காமல் கல்வித்துறை மவுனம்! பெற்றோருக்கு என்ன பதில் சொல்வது என நிர்வாகத்தினர் தவிப்பு கேள்விக்குறியாகிறது பல லட்சம் மாணவர்களின் எதிர்காலம்.

தமிழகத்தில், 10 ஆயிரம் தனியார் பள்ளி களுக்கு, அங்கீகாரம் வழங்காமல் கல்வித்துறை மவுனம் சாதித்து வருகிறது. அந்தப் பள்ளிகளைச் சேர்ந்த வாகனங்களின் உரிமங்களும், போக்குவரத்து துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால், இந்தப் பள்ளிகளில் படிக்கும்மாணவர்களின் பெற்றோருக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல், நிர்வாகத்தினர் தவித்து வருகின்றனர்.

அத்துடன், பல லட்சம் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிஉள்ளது.தமிழகத்தில், தனியார் மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை சார்பில் அங்கீகாரம்வழங்கப்படுகிறது. இந்த அங்கீ காரத்தை பெற, பல விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும். பெரும்பாலானபள்ளிகள், இந்த விதிகளை முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் செல்வாக்கில் அங்கீகாரம் பெற்று விடுவது வழக்கம்.ஆரம்பத்தில், பள்ளிகளுக்கான அங்கீகாரம், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்பட்டது. பின், பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியை காட்டி, ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் புதுப்பிக்கப்படுகிறது. 10 ஆண்டுகள்தொடர்ந்து அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்ட முறையும் நிறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளும் ஆண்டுதோறும் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதே, தற்போதுள்ள நிபந்தனை.நடப்பு கல்வி ஆண்டில், தமிழகத்தில், 4,000 மெட்ரிக் பள்ளிகள், 5,000 நர்சரி, பிரைமரி பள்ளிகள் உட்பட மொத்தம், 10 ஆயிரம் பள்ளிகளின் அங்கீகாரம் மே, 31ம் தேதியுடன் முடிந்து விட்டது. இந்த பள்ளிகள் தங்களுக்கு அங்கீகார நீட்டிப்புகேட்டு, கல்வித்துறை அலுவலகங்க ளில் மனு தாக்கல் செய்துள்ளன.ஆனால், இதுவரை நீட்டிப்பு உத்தரவு வழங்கவோ, மனுவை நிராகரிக்கவோ, தொடக்க கல்வி, பள்ளிக்கல்வி, மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்கள் நடவடிக்கைஎடுக்கவில்லை. இருப்பினும், தற்போதைய நிலையில், 10 ஆயிரம் பள்ளிகள் அங்கீகாரம் முடிந்தும், மாணவர்களை சேர்த்து பாடம் நடத்துகின்றன. இந்த பள்ளிகளில் ஏதாவது ஒன்றில் அசம்பாவிதம் ஏற்பட்டாலும், அதற்கு சட்டரீதியாக அணுக முடியாத சூழல் உள்ளது.மேலும் பள்ளி நிர்வாகங்கள், பள்ளி வாகனங்களுக்கு உரிமம்கேட்டு, போக்கு வரத்து அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளன. ஆனால், அங்கீகாரம் இல்லாத காரணத்தால், வாகன உரிமம் வழங்கும் பணிகளை போக்குவரத்து துறையும் நிறுத்தி வைத்துள் ளது.

இதுகுறித்து, தனியார் நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச்செயலர் நந்தகுமார் கூறும்போது, ''தமிழக அரசின் பள்ளிக்கல்வி செயலகம், பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை நீட்டிக்கவில்லை.அதனால், போக்குவரத்து துறை வாகன உரிமத்தை நிறுத்தி வைத்துள்ளது. பெற்றோருக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல், பள்ளி நிர்வாகிகள் தவிக்கின்றனர். எனவே, பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும்,'' என்றார்

10ம் வகுப்பு அசல் சான்றிதழ்பிழை திருத்த இறுதி கெடு.

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு,சான்றிதழில் பிழை திருத்த, கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது.ஏப்ரலில் நடந்து முடிந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு,முதல் கட்டமாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மொபைல் போன் எடுத்துவர அரசு பள்ளிகளில் தடை

'மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, அவர்களிடம் மொபைல் போனை கொடுத்து விடக்கூடாது,'' என பெற்றோருக்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.பள்ளிகளுக்கு மாணவர்கள் வரும்போது, பல பெற்றோர் தங்கள் பிள்ளையும், மொபைல் போன் பயன்படுத்த வேண்டுமென்ற ஆர்வத்தில், மொபைல் போன் கொடுத்து விடுகின்றனர்.

தொழிற்கல்வி மாணவர் கவுன்சிலிங் எப்போது?

தமிழகத்தில் உள்ள, பொறியியல் கல்லுாரிகளில், இன்ஜி., படிப்புகளில் சேர்வதற்கான, கலந்தாய்வு, ஜூன், 24ல் விளையாட்டுப் பிரிவுக்கும்; 25ல், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதே போல்,பொது கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

நாளை 'டான்செட்'நுழைவு தேர்வு

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜினியரிங்கல்லுாரிகளில், எம்.இ., - எம்.பி.ஏ., படிப்பதற்கான நுழைவுத் தேர்வு, நாளை, 20இடங்களில்நடக்கிறது.எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற தமிழக பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, நாளை துவங்குகிறது.

பள்ளி மாணவர்களுக்கு 31 லட்சம் 'பஸ் பாஸ்'

இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்காக, 31.11 லட்சம், 'பஸ் பாஸ்' தயாரிக்கும் பணி, விரைவில் துவங்க உள்ளது.தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். இந்த ஆண்டு பஸ் பாஸ் தயாரிக்கும் பணி இன்னும் துவங்காததால், பழைய பஸ் பாசை மாணவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் 12ல் பல்கலை தேர்வு

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கம் மூலம் படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 4ல் நடக்க வேண்டிய அல்பருவமுறை தேர்வு ஜூன் 12க்கு தள்ளி வைக்கப்பட்டது.

மாணவர்கள் தங்களது முந்தைய தேர்வுகளை எந்த மையத்தில் எழுதினார்களோ, அதே மையத்தில் ஜூன் 12ல் எழுத வேண்டும் என கூடுதல் தேர்வாணையர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

முதுநிலை தேர்வில் அரசு டாக்டர்கள் தோல்வி

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை யின் கீழ், எம்.எஸ்., - எம்.டி., போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இறுதித் தேர்வு எழுதிய டாக்டர்களில், 111 பேர் தோல்வி அடைந்துள்ளனர். சென்னையில், கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது, மீட்பு மற்றும் சிகிச்சை பணியில் ஈடுபட்டதே, தேர்வில் தோல்வி அடைந்ததற்கு காரணம் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் ரயில்வே ஊழியர் சங்கம் அறிவிப்பு.

ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற, 'ஸ்டிரைக்'கில் ஈடுபடுவது உறுதியாகி உள்ளது. தெற்கு ரயில்வே மஸ்துார் சங்கம், தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம், தட்சிண ரயில்வே ஊழியர் சங்கம் உள்ளிட்ட முக்கிய சங்கங்களின் நிர்வாகிகள், வேலை நிறுத்த நோட்டீசை, நேற்று காலை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரியிடம் அடுத்தடுத்து வழங்கினர்.

பாட புத்தகம் இல்லை: பிளஸ் 1 மாணவர்கள் தவிப்பு.

, ஜூன், 1ம் தேதி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்திறக்கப்பட்டன. அன்றே, மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள், வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.ஆனால், பிளஸ் 1 வகுப்புக்கு மட்டும், பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை; தனியார் பள்ளிகளுக்கும் கிடைக்கவில்லை.

சுவர், ஜன்னல், கதவுகளும் பாடம் கற்பிக்கின்றன: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உருவாக்கிய ‘மாதிரி வகுப்பறை’


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிக் கவுண்டம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 190 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். செயல் வழிக் கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், இந்த அரசுப் பள்ளிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

உலகை மாற்றியவர்கள் பட்டியல்: டைம் இதழில் இடம்பிடித்த ஒரே இந்தியரான தமிழர்


 புதிய படைப்புகள் மூலம் உலகை மாற்றியவர்கள் என்ற பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது.

ஆன்-லைனில் பதிவு செய்தால் வீடு தேடி வரும் பாடப் புத்தகம்

பள்ளி பாட புத்தகங்களை வீட்டில் இருந்தவாறே ஆன்-லைனில் பதிவு செய்து தபால் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியை தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவர்களிடம் விண்ணப்பம் வரவேற்பு

சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித்தொகையை பெற மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்ககோரி மனு

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள், தமிழ்நாடு.
பொருள் : பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்ககோரி மனு.

'பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் 517 அதிகாரி பணி: 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

'பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் 517 கிரெடிட் ஆபீசர், மேலாளர், சீனியர் மேலாளர் உள்ளிட்ட அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

LAW ADMISSION NOTIFICATION 2016-2017 | சட்டபடிப்புகளில் சேர விண்ணப்பங்கள் ஜூன் முதல் 13 வழங்கப்படுகிறது.


அரசாணை வெளியிட்டும் பலனில்லை - புது பென்ஷன் பலன்களை பெறமுடியாமல் ஓய்வூதியர்கள் பரிதவிப்பு

அரசாணை வெளியிட்டும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு புது
பென்சன் திட்ட பணப்பலன்கள் கிடைப்பதில் தொடர்ந்து இழுபறி
ஏற்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் குப்பையை குறைக்க மத்திய அரசு முயற்சி! அரசு விழாக்கள், கூட்டங்களில் பாட்டில் குடிநீருக்கு தடை

'மத்திய, மாநில அரசுகள் நடத்தும் விழாக்கள், கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்தக் கூடாது' என மத்திய குடிநீர் மற்றும் துாய்மை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. பிளாஸ்டிக் குப்பையை குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேஇ - 10ம் வகுப்பு சான்றிதழ் அச்சிடப்பட்ட உள்ளதால், மாணவர்களின் பெயர்/பிறந்த தேதி திருத்தும் இருப்பின் தலைமை ஆசிரியர்கள் 10.06.2016 குள் தெரிவிக்குமாறு அறிவுறுத்தல் - இயக்குனர் செயல்முறைகள்


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!