Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 11 June 2016

83 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி மறுப்பு

புதிதாக 83 மருத்துவ கல்லூரிகள் தொடங்க அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
புதுடெல்லி: 
புதிதாக 83 மருத்துவ கல்லூரிகள் தொடங்க அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது. 

ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணியத் தடை: ஹரியானா தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு

ஹரியானா மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிந்து பள்ளி மற்றும் கல்வி இயக்குனரகம் அலுவலத்திற்கு வரக்கூடாது என்று தொடக்க பள்ளி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் ‘‘தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்திற்கு ஜீன்ஸ் அணிந்து வருவதாக எங்கள் கவனித்திற்கு வந்தது. அவர்கள் சில வேலைகள் தொடர்பாக கல்வி இயக்குனரகம் அலுவலகத்திற்கு வரும்போது அவர்கள் அணிந்துள்ள ஜீன்ஸ் பொறுத்தமற்ற வகையில் உள்ளது.

SSTA வின் மாநில நிர்வாகிகள் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சந்திப்புSSTA வின் மாநில நிர்வாகிகள் 09/06/2016 மரியாதை நிமிர்த்தமாக மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து புதிதாக பொறுப்பேற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தினம் ஒரு புத்தகம்"நல்ல உணவுப் பழக்கங்கள்"


தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்" குணங்கள் நிறைந்த வெற்றிலை"

1. இருமல்-சளி நீங்க
இருமல், சளி தொல்லை உள்ளவர்களுக்கு வெற்றிலை சிறந்த மருந்து. 2 வெற்றிலை, நடுநரம்பு நீக்கிய 5 ஆடாதொடா இலையுடன் 10 மிளகு, ஒரு
பிடி 1.துளசி இலைகளை சேர்த்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 300 மில்லி நீர்விட்டு மூடிய பாத்திரத்தில் நன்றாக கொதிக்க வைத்து 75 மில்லி ஆனவுடன் வடிகட்டி குடிக்க வேண்டும். இதேபோல் தினமும் 2 அல்லது 3 வேளை சளி, இருமல் இருக்கும்வரை குடிக்கலாம். இப்படி செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

விரைவில் வருகிறது 7வது சம்பள கமிஷன்?

 மத்திய அமைச்சரவை செயலாளர் பிகே சின்கா தலைமையிலான செயலாளர்கள் குழு கூட்டம் இன்று கூட உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் வரும் ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை 6 முறை மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளிகளில் மாதம் ஒரு முறை பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு: இணை இயக்குநர் அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாதம் ஒருமுறை பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தவேண்டும்என பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் குப்புசாமி அறிவுறுத்தினார்.

டான்செட் தேர்வு முடிவுகள் 2 வாரத்திற்குள் வெளியிடப்படும்: டான்செட் இயக்குநர் பேட்டி

சென்னை:தமிழகம் முழுவதும் டான்செட் தேர்வு இன்று நடைபெறுகிறது. இத்தேர்வில் எண்ணற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.

இதுகுறித்து டான்செட் இயக்குநர் மல்லிகா அளித்த பேட்டியில்,

தொடக்கக் கல்வித்துறையில் 01/06/2016 ன்படி காலிப்பணியிட விவரம் கேட்பு-கலந்தாய்வுக்கு ஆயத்தமா?


கல்வியாளர் (அரசு பள்ளி ஆசிரியர்களின் )சங்கமம் - 2016 காரைக்குடியில் ஜூலை- 9 & 10 தேதிகளில் நடைபெறவுள்ளது..

நிகழ்ச்சி  பட்டியல்
நாள் :09.07.2016

9.30-10.30:தொடக்க விழா
10.30-11.30:வாங்க பழகலாம்(அறிமுகம்)
11.30-11.45:தேநீர் இடைவேளை
11.45-12.45:நீங்களும்  heroதான் (ஆளுமைத்திறன் வகுப்பு )
12.45-1.15:செய்தோம் செய்வோம் (சமுதாய மேம்பாடு )
1.15-2.00:உணவு இடைவேளை
2.00-2.30:பொம்மைகள் சொல்லும் பாடம் (பொம்மலாட்டக் கல்வி )
2.30-3.15:கதையும் கல்வியும் (சுட்டிகளின் உலகம் )
3.15-4.15:செய்தோம் செய்வோம் (சமுதாய மேம்பாடு )
4.15-4.30:தேநீர் இடைவேளை
4.30-5.00: பாட்டும் நடிப்பும் (பாடல் வழி கல்வி )
5.00-5.45:கூடி விளையாடு பாப்பா (விளையாட்டு )
5.45-6.00:ஓய்வு நேரம்
6.00-7.00:வகுப்பறை தொழில்நுட்பம்
(கல்விவாய்ப்பும் வளர்ச்சியும் )
7.00-7.30:செய்தோம் செய்வோம் (பள்ளி மேம்பாடு )
7.30-8.00:இளைய தலைமுறையோடு புதிய தலைமுறை
8.00-8.45:உணவு இடைவேளை
8.45-9.30:நல்லா பேசுங்க நாகரிகமா பேசுங்க(பேச்சு பயிற்சி )
9.30-10.00:தனித்திறன்

நாள் :10.07.2016

7.30-8.00:கூடி விளையாடு பாப்பா (விளையாட்டு )
8.00-8.45:உணவு இடைவேளை
8.45-9.30:கல்வி தொழில்நுட்பம்(வாய்ப்பும் வளர்ச்சியும் )
9.30-10.15:எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் (கற்றல் குறைபாட்டை களைவோம்)
10.15-11.00:படைப்போம் பயன்படுத்துவோம் (படைப்பாற்றல் கல்வி )
11.00-11.15:தேநீர் இடைவேளை
11.15-12.15:வகுப்பறை விஞ்ஞானம் (எளிய அறிவியல் சோதனை )
12.15-12.45:செய்தோம் செய்வோம் (பள்ளி மேம்பாடு )
12.45-1.15:வானம் வசப்படும் (நமது இலக்குகள் )
1.15-2.00:உணவு இடைவேளை
2.00-2.30:பயணமும் பார்வையும் (சவால்கள் )
2.30-3.45:சொல்லச் சொல்ல இனிக்குதடா(மாவட்ட திட்டமிடல் )
3.45-4.00:தேநீர் இடைவேளை
4.00-5.30:பயிலறங்க நிறைவு


இன்ஜி., கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியிட தயக்கம்! அரசு அனுமதி மறுப்பால் அண்ணா பல்கலை மவுனம்

தமிழகத்தில் இந்த ஆண்டு, 200 இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர்கள் தேர்ச்சி, 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. எனவே, கல்லுாரிகளின் தரவரிசை பட்டியல் வெளியிடுவதை, அண்ணா பல்கலை நிறுத்தி வைத்துள்ளது.தனியார் கல்லுாரிகளின் நெருக்கடி மற்றும் தமிழக உயர் கல்வித்துறை வற்புறுத்தலால், இந்த விஷயத்தில் அண்ணா பல்கலை மவுனமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அடைவுத் தேர்வு எழுத வேண்டும்

 கல்வித் தரத்தை அறிவதில் குழப்பம் இருப்பதால் அடைவுத் தேர்வு முறையை அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றியமைத்துள்ளது.அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை அறிய அனைவருக்கும்கல்வி இயக்கம் சார்பில் மாநில அடைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

பி.இ., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை 16,௦௦௦ விண்ணப்பம் பதிவிறக்கம்.

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு கடைசி நாளான நேற்று வரை 16 ஆயிரத்து 89 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர்.டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்தல், கடந்த மே 24-ம் தேதி தொடங்கியது.

ஐ.ஐ.டி., சுரங்கவியல் படிப்பில்மாணவியருக்கான தடை நீக்கம்

அண்ணா பல்கலையைத் தொடர்ந்து, இந்திய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான ஐ.ஐ.டி.,யிலும், சுரங்கவியல் படிப்புக்கு, இந்த ஆண்டு முதல், மாணவியர் சேர்க்கப்படுகின்றனர்.

        இன்ஜி., தொழில்நுட்ப படிப்பில், மாணவியரை பொறுத்தவரை, 'மெக்கானிக்கல், இண்டஸ்டிரியல் இன்ஜி., மற்றும் இன்ஜினியரிங் இன்ஸ்ட்ரூமென்டேஷன்' போன்ற படிப்புகளில் குறைவாகவும்; 'கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., டெக்ஸ்டைல் டெக்னாலஜி, மெடிக்கல் இன்ஜி.,' போன்ற படிப்புகளில் அதிகமாகவும் சேருவர்.

அதே நேரம், சுரங்கவியல் இன்ஜி., படிப்பில் மாணவியரை சேர்க்க, ஏற்கனவே தடை இருந்தது. இந்திய சுரங்கவியல் சட்டம் - 1952ன் படி, தரைக்கு கீழ் இருக்கும் சுரங்கங்களில், பெண்களை பணியமர்த்தவும், மற்ற சுரங்கவியல் பணிகளில், காலை, 6:00 மணி முதல் மாலை, 7:00 மணி வரை தவிர மற்ற நேரங்களில் பணியமர்த்தவும் தடை உள்ளது.

இந்த நிலையில், 'விதிகளுக்கு உட்பட்டு, சுரங்க பணிகள் மற்றும் தொழில்நுட்ப பணிகளில், பெண்கள் மேற்பார்வையாளராகச் செயல்படலாம்' என, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், அண்ணா பல்கலையின் சுரங்கவியல் படிப்பில், கடந்த ஆண்டு தடை விலக்கப்பட்டு, மாணவியர் சேர்க்க அனுமதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, இந்த ஆண்டு முதல், ஐ.ஐ.டி.,யிலும் சுரங்கவியல் படிப்பில், மாணவியரை சேர்ப்பதற்கான தடை விலக்கப்பட்டது. இதன்படி, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.எஸ்.எம்., எனப்படும் இந்திய சுரங்கவியல் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில், சுரங்கவியலில் மாணவியர் சேர்க்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை குறைகிறது! பிளஸ் 1 வகுப்பிற்கு கூட்டம் அலைமோதுகிறது

மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையில், பிளஸ் 1 சேர்க்கையில் கூட்டம் அலைமோதுவதால் தலைமை ஆசிரியர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு தடை: ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவு

பி.எட்., கல்லுாரிகள், நான்கு ஆண்டுகள் பி.ஏ., - பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., படிப்புகளை நடத்த, ஆசிரியர் கல்வியியல் பல்கலை தடை விதித்துள்ளது.

சான்றிதழ் சோதனையால் ஊதிய உயர்வுக்கு சிக்கல்.

ஆசிரியர்களுக்கு கல்விச் சான்றிதழ் உண்மைத் தன்மை பிரச்னையால், பல மாவட்டங்களில், ஆசிரியர்களுக்கு இரட்டை ஊதிய உயர்வு தடைபட்டுள்ளது.அரசு பள்ளிகளில், 10 ஆண்டு பணிபுரிந்தவர்களுக்கு தேர்வுநிலையும், 20 ஆண்டுகள் பணிபுரிந்தோருக்கு சிறப்புநிலை அந்தஸ்தும் வழங்கப்படும்.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு:ஆக., மாத இறுதியில் வெளியீடு.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பை, ஆக., மாதஇறுதியில் வெளியிட, மாநில தேர்தல் கமிஷன் முடிவெடுத்து உள்ளது.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட, 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 6,471 ஊராட்சி ஒன்றியங்கள், 12,524 ஊராட்சிகள் உள்ளன.

கிராமப்புற பள்ளி கழிப்பறைகளுக்கு விடிவு:பராமரிக்க நிதி ஒதுக்கீடு.

கிராமப்புற பள்ளி கழிப்பறைகளை தினமும் இருவேளை சுத்தம் செய்ய பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் அவதி நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சர்வ சிக் ஷா அபியான், ஆர்.எம்.எஸ்.ஏ ., நபார்டு மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் மூலம் கழிப்பறைகள் தலா ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது.

கலை, அறிவியல் கல்லூரிகளில் 'பிரிட்ஜ் கோர்ஸ்' கட்டாயம்.

தமிழகத்தில், வரும் 16ம் தேதி, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன. இதில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற அணுகுமுறை பயிற்சி நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 83 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் உள்ளன.

நோட்டு புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தவிப்பு.

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு சார்பில், 14 வகை நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதில், எந்த பள்ளி மாணவர்களுக்கும் இதுவரை நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!