Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 12 June 2016

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016 (NHIS 2016) அறிமுகம் - அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது: பொது பள்ளி மேடை அமைப்பு வலியுறுத்தல்.

மத்திய அரசு பரிந்துரைக்கும் புதிய கல்விக் கொள்கையை, மக்களிடம் கருத்து கேட்காமல் தமிழக அரசு ஏற்கக் கூடாது என்று பொது பள்ளி மேடை அமைப்பு செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்.திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது:

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்து, புதிய கல்விக் கொள்கை தொடர்பான பரிந்துரைகளைப்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பரிந்துரைகளின் உள்ளடக்கத்தை இதுவரை மக்களுக்குத் தெரிவிக்கவில்லை. எனவே, அதன் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அனைத்துத் தரப்பினரிடமும் கருத்துகளைப் பெற்ற பின்னர்தான், புதிய கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும்.பன்முக பண்பாட்டைக் கொண்டாடக் கூடிய கல்வி முறைதான் இந்தியாவுக்கு தேவை. கல்வி வளாகமும், வகுப்பறையும் மதச்சார்பற்ற இடம். எனவே, கல்வியில் வணிகமயம், வகுப்புவாதம் கூடாது. அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை வலுப்படுத்த வேண்டுமே தவிர, தனியாரை அனுமதித்து, கல்வியை வியாபாரப் பொருளாக்கக் கூடாது.

கல்விக் கொள்கையை உருவாக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகளை, கல்வியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்து, பின்னர் தனது நிலையை மத்திய அரசுக்கு தமிழக அரசு தெரியப்படுத்த வேண்டும். மக்களிடம் கருத்து கேட்காமல், புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது. இது தொடர்பாக முதல்வரை சந்திக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி: பீகார் முதல்வர் அறிவிப்பு

மீட்கப்படும் ஒவ்வொரு குழந்தை தொழிலாளிக்கும் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

பாட்னா:

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி பாட்னாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில், குழந்தை தொழிலாளர் கண்காணிப்பு அமைப்பை (சிடிஎல்எஸ்) முதல்வர் நிதிஷ் குமார் இன்று தொடங்கி வைத்தார். குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்படும் குழந்தைகளுக்கு முறையான மறுவாழ்வு வழங்கப்படுகிறதா? அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? என்பதை இந்த அமைப்பு கண்காணிக்கும்.

இந்த கண்காணிப்பு அமைப்பை தொடங்கி வைத்து நிதிஷ் குமார் பேசுகையில், “மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களின் கோரிக்கைகளை கொள்கை அளவில் நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அவர்களின் கோரிக்கையை நிறைவேறுவதற்காக தலைமை செயலாளர் தலைமையிலான ஒரு குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

மீட்கப்படும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக சென்று சேரும். இது கண்காணிப்பு அமைப்பின் கீழ் பதிவு செய்யப்படும்” என்றார்.

மேலும், குழந்தைகளுக்கு தேவையான வசதிகளையும் அரசு வழங்கியபோதிலும் குழந்தை தொழிலாளர் இன்னும் இருப்பது ஆச்சரியம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

தினம் ஒரு புத்தகம்"எளிமையே பெருமை தரும்"


தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்!"

நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்ச்ரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும்.

அரசு இசைப் பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி வெளியிட்ட அறிக்கை:

பீகார் தேர்வு முறைகேடு: தப்பியோடிய தலைமை ஆசிரியர் கைது

பீகாரில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடு தொடர்பாக, பிஷன் ராய் கல்லூரி செயலாளர் மற்றும் தலைமை ஆசிரியரான பச்சா ராய் என அழைக்கப்படும் அமித்குமாரை வைசாலி மாவட்டதில் உள்ள பகவான்பூர் போலீசார் கைது செய்தனர்.

இஸ்லாம் மதத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை ஜும்மா வழிபாடு செய்ய அனுமதி உண்டு. மேலும் ரம்ஜான் நோண்பு காலத்தில் அலுவலக பணி நேரத்திலிருந்து தினமும் அரைமணி நேரம் முன்னதாக வீட்டுக்கு சென்று நோண்பு முடிக்க அனுமதி வழங்கப்படுகிறது.


தகுதிகாண் பருவத்தில் பணிபுரியும் ஆசிரியருக்கு RL & CL & தொழுகை அனுமதி உண்டு - RTI தகவல்.ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–பிளஸ்–2 முடித்த மாணவர்கள் உள்ளிட்டோர் இடை நிலை ஆசிரியர் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழக தனியார் பள்ளிகள் பிரதமர் மோடிக்கு... கடிதம்! சி.பி.எஸ்.இ., துவக்குவதில் சிக்கல் நீக்கக் கோரிக்கை.

கல்வித் துறையில், தமிழகம் மட்டுமல்லாது, அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாகி விட்ட நிலையில், தமிழக மாணவ, மாணவியர், மெதுவாக, மாநில அரசு பாட முறைகளை கைவிட்டு, மத்திய அரசு பாட முறைகளைப் படிக்கத் தயாராகி வருகின்றனர்.

பி.எட்., தேர்வு மாற்றப்பட்டது ஏன்?

ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புஇந்தஆண்டு முதல் ஓர் ஆண்டில் இருந்து, இரண்டு ஆண்டாகமாற்றப்பட்டு உள்ளது.முதலாம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை, பல்கலை வெளியிட்டது.

RTE சட்டத்தின் படி பள்ளி மாணவர்களுக்கு ஏற்ப ஆசிரியர்களது எண்ணிக்கை.அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியீடு.

தமிழ்நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் பள்ளி அங்கீகாரம் பெற்றதா இல்லையா என்பதை, தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரக இணையதளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். அங்கீகாரம் பெற்ற மெடரிக் மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியலை மாவட்ட வாரியமாக இந்த இணைய தளத்தில் பார்க்கலாம்.
Click Here

ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை: மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!