Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 13 June 2016

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"புளி தரும் பொன்னான நன்மைகள்"

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட வெப்ப மண்டல பயிர் புளி.
தெற்கு ஆசியாவில் அதிகமாக உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. புளிய மரம் 80 அடி உயரம் வரை வளரும். வெவ்வேறு நீளங்களில் காய்கள் காய்த்து பழுக்கும்.

தடித்த ஓடுக்குள் புளி பாதுகாக்கப்படுகிறது. அதன் உள்ளே கடினமான விதைகளும் இருக்கும்.

விதை நீக்கிய புளி சந்தையில் விற்கப்படுகிறது. ‘தாமரின்டஸ் இண் டிகா’ என்ற அறிவியல் பெயர் கொண்ட புளி ‘பபேசி யேசி’ தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.

புளியில் கால்சியம், வைட்டமின் ‘பி’ பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன, உணவில் மணமூட்டவும், சுவையூட்டவும் புளி பயன்படுகிறது.

புளி மட்டுமல்ல, கொழுந்து, புளி இலைகளும் சமைக்கப்பட்டு உண்ணப்படுகின்றன.

மேலும் புளியங்க்கொட்டையில் 63% மாவுப்பொருட்களும், 14-18% ஆல்புமினும், 4.5-6.5% பாதி உலரும் எண்ணெய்யும் இருக்கின்றன.

புளியின் மருத்துவ குணங்கள்

புளிய மரத்தின் இலை, பழம், பட்டை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது.

பிலிப்பைன்ஸில் இலைகள் ‘டீ’ யாக தயாரிக்கப்பட்டு, ஜுரம் தணிய உபயோகப்படுத்தப்படுகிறது.

வயிறு, ஜீரணக்கோளாறுகளுக்கு மருந்தாகிறது. புளி நீரில் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப்போட ரத்தக் கட்டுகள் கரையும்.

புளியந் தண்ணீரை கொப்பளித்தால் வாய்ப்புண்கள் குறையும்.

புளியுடன் சுண்ணாம்பு கலந்து குழப்பி சூட்டோடு தேள் கொட்டிய இடத்தில் போட, தேள் விஷம் இறங்கும்.

புளியங்கொட்டை பருப்பை இடித்து பொடியாக்கி, பசும்பாலில் அரைக்கரண்டி தூளைபோட்டு கற்கண்டு கலந்து குடித்து வர தாதுவிருத்தி உண்டாகும்.

புளியங்கொழுந்துடன் பருப்பு சேர்த்து செய்த கூட்டை சாப்பிட்டு வர உடல் நலம் பெறும்.

புளியம் பூக்களை துவையலாக அரைத்து உண்டால் மயக்கம், தலைச்சுற்றல் தீரும்.


மேலும் இதை அரைத்து கண்ணை சுற்றி பற்றுப்போட்டால் கண் வலி, கண் சிவப்பு குணமாகும்.

புளியமர வேர்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் குஷ்டரோகத்திற்கு உபயோகப்படுகின்றன.

புளிக் குழம்பு

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு , அரிசி, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் , தக்காளி சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்.

பின்னர் இதனை ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் ஊற்றி கடுகு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கிய பின், உரித்த பூண்டு பற்களை(இரண்டாக கீறி கொள்ளவும்) சேர்த்து வதக்கவும்.

இந்த கலவை நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கவும்.

பின்னர் அரைத்த தக்காளி – வெங்காய கலவை, மல்லி பொடி, ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

இவையனைத்தும் வதங்கியதும், அரைத்த தேங்காய், தேவைக்கேற்ப புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கினால் புளிக் குழம்பு ரெடி.

பயன்கள்

உடல்சூட்டை தணிக்கும் சிறந்த மருந்து.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

கண் எரிச்சல் சீக்கமே சரியாகிவிடும்

புளி கஷாயம்

முதலில் புளியின் இலை துளிர்களை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வாணலியில் கொஞ்சம் நீர் விடவேண்டும்.

இறுதியில் அந்த துளிர்களை நீரில் போட்டு நீண்ட நேரம் கொதிக்கவிட்டு இறக்கினால் புளி கஷாயம் தயார்.

பயன்கள்

மலேரியா வருவதை தடுக்கும்.

இரத்தத்தை சுத்திகரிக்க உதவும்.

மஞ்சள் காமாலை ஜலதோஷம் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை விரட்டும் தன்மை கொண்டது.

தினம் ஒரு புத்தகம்"எது நல்ல பள்ளி?

இந்திய கலாச்சாரம் பற்றிய புதிய படிப்புகளை அறிமுகம் செய்கிறது இந்திரா காந்தி தேசிய கலை மையம்;

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலும் சேர்க்க திட்டம்
மேற்கத்திய கலாச்சாரம் வேகமாக உலகம் முழுவதும் காலூன்றி வரும் நிலையில், மத்திய அரசின் 'ஸ்கில் இந்தியா மிஷன்' திட்டத்தின் கீழ் அருங்காட்சியகம் மற்றும் கலாச்சார மேலாண்மை சம்பந்தப்பட்ட புதிய படிப்புகளை அறிமுகப்படுத்த இந்திரா காந்தி தேசிய கலை மையம் முடிவு செய்துள்ளது.

கலாச்சாரங்களின் பல்வேறு கூறுகளை பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் விருப்ப பாடமாக இது போன்ற படிப்புகளை சேர்க்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் செயலாளர் சச்சிதானந்த் ஜோஷி தெரிவித்தவை பின்வருமாறு:-

கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல படிப்புகளை வழங்க ஏ.ஐ.சி.டி.இ-யுடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதன்படி, இந்திரா காந்தி தேசிய கலை மையம் அடுத்த கல்வியாண்டில் இருந்து டிப்ளமோ படிப்புகளை வழங்க துவங்கும். எனினும், இளங்கலை பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள், முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பி.எச்.டி படிப்புகளை வழங்க முன்னணி கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழங்களுடன் இணைந்துதான் வழங்க இயலும்.

பணி நிரந்தரம் கோரி கடிதம் அனுப்பும் போராட்டம்

பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி, 1.65 லட்சம் கடிதம் அனுப்பி போராட்டம் நடத்த, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

         தமிழகத்தில், 2012ல், ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, கணினி அறிவியல் என, பல பாடங்களுக்கு, 16 ஆயிரத்து, 549 பேர் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, மாதம், 7,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் பணி நிரந்தரம் கோரி, கடந்த ஆட்சியில் பல கட்ட போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தேர்தலுக்கு பின் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைத்துள்ள நிலையில், பகுதி நேர ஆசிரியர்கள், தங்கள் போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி, ஒவ்வொரு ஆசிரியரும், பிரதமர் மோடி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி, முதல்வர் ஜெயலலிதா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின், செயலர் சபிதா உள்ளிட்ட, 10 பேருக்கு, தலா ஒவ்வொரு கடிதம் என, 1.65 லட்சம் கடிதங்கள் எழுதி அனுப்ப முடிவு செய்துள்ளனர்

CCE - பாட நேர அட்டவணை 2016-17

மருத்துவ விடுப்பு குறைந்தபட்சம் எத்தனை நாட்கள் அனுமதிக்கலாம்?-RTI Letter

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் . கடைசி தேதி : 30.06.2016

1 லட்சம் சம்பளத்தில் பார்மஸி பட்டதாரிகளுக்குசயின்டிஸ்ட் பணி

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் "Indian Pharmacoeia Commission"-ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: IPC/A/Con./4/2016

மொத்த காலியிடங்கள்: 16

பணி: Senior Pharmacopoeia Scientists
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.1,00,000

பணி: Pharmacopoeia Scientists
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.50,000

மொத்த காலியிடங்கள்: 16

தகுதி: PharmaceuticalSciences, Biochemistry, Biotechnoloy, Pharmacology, Microbiology, Chemistry பாடப்பிரிவில் Ph.D. பட்டம் பெற்று 10 வருடபணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ipc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:Secretary-cum-Scientific Director,Indian Pharmacopoeia Commission,Sector-23, Raj Nagar. Ghaziabad-201 002

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.07.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ipc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

ரூ.7 லட்சம் வரை விலை போகும் பி.காம் படிப்பு

தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கூட்டம் அலைமோதுகிறது. ' பொறியியல் படிப்புகளைவிடவும், பி.காம் உள்ளிட்ட கலைப் பிரிவு பாடங்களை நோக்கியே மாணவர்கள் அணிவகுக்கிறார்கள்' என்கின்றனர் கல்வியாளர்கள்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்தே,கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் கூட்டம் அலைமோதியது. இன்றளவும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அறிவியல் பாடத்தை பிரதானமாக எடுத்துப் படித்த மாணவர்கள்கூட, பி.காம் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். தேர்வில் அதிகபட்ச மதிப்பெண் எடுத்த அறிவியல் மாணவர்கள் பலர், பிரபலமான கலைக் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பித்திருந்தனர். பல மாவட்டங்களில் பி.காம் சீட்டுகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டது. சென்னையில் உள்ள பிரபலமான கலைக் கல்லூரியில்,  பி.காம் சீட்டுகள் மட்டும் ஏழு லட்சம் முதல் பத்து லட்ச ரூபாய் வரையில் விலை பேசப்பட்டன.

பெற்றோர்களும் சத்தம் இல்லாமல் பணம் கொடுத்து அட்மிஷன் வாங்கிவிட்டனர். கோவையில் உள்ள சில கல்லூரிகள் ஒரு லட்சம் கேபிடேஷன் கட்டணம் என்றும், செமஸ்டருக்கு நாற்பதாயிரம் கட்டணம் என்றும் பட்டியல் போட்டு வசூல் செய்துவிட்டன. இதைவிடக் கொடுமை, கடந்தாண்டு அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் ஐம்பதாயிரம் பொறியியல் படிப்புக்கான இடங்கள் நிரப்பப்படவில்லை. சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டுவிட்டதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.

தற்போது கலைப் பிரிவு பாடங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஒற்றைச்சாளர முறையில்மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.பி.காம் படிப்புகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பது பற்றி நம்மிடம் விளக்கிய கல்வியாளர் ஒருவர், " இன்றைக்கு நேற்றல்ல. சுமார் 25 வருடங்களாகவே பி.காம் படிப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த ஒரு பட்டப் படிப்பை முடித்துவிட்டாலும் மார்கெட்டிங்பிரிவு, வர்த்தகம், ஃபைனான்ஸ், வங்கி, கணக்குப் பதிவியல், ஆடிட்டிங் உதவியாளர் என பல துறைகளிலும் மாணவர்கள் கோலோச்சலாம். அதற்குத் தகுந்தமாதிரி, பி.காம், பி.காம்(சி.ஏ), பி.காம்(பேங்கிங் அண்ட் இன்ஸ்யூரன்ஸ்) என பி.காம் படிப்பில் ஏகப்பட்ட வெரைட்டிகளைப் புகுத்திவிட்டனர்.

மாணவர்களின் மதிப்பெண்ணுக்கு ஏற்ற வகையில், ஏதாவது ஒரு பி.காம்பிரிவில் சேர்ந்து கொள்கின்றனர். தவிர, சாப்ட்வேர் நிறுவனங்களில், கணினியைக் கையாளும் திறமை உள்ளவர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கின்றனர். பி.இ பிரிவில் கணிப்பொறி அறிவியல் படித்தவர்களை விடவும், கலைப் பிரிவு மாணவர்களுக்கு வேலை எளிதாகக் கிடைத்துவிடுகிறது.பி.இ மாணவர்களுக்குக் கொடுப்பது போல், அதிக சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை. ஒரு பி.இ மாணவருக்குக் கொடுக்கப்படும் ஊதியத்தை மூன்று, நான்கு பி.காம் மாணவர்களுக்குக் கொடுத்துவிடலாம் என பல நிறுவனங்கள் கணக்குப் போடுகின்றன.

பத்தாம் வகுப்பில் இருந்தே லேப்டாப் உள்ளிட்ட கணினி உபகரணங்களை மாணவர்கள் கையாள்வதால், கணினிப் பயிற்சியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தவிர, அறிவியல் பாடப் பிரிவில் கடினமாக உழைத்தும் மாணவர்களுக்கு சரியான வேலை கிடைப்பதில்லை. அதுவே, எந்த காலத்திற்கும் கலைப் பிரிவு வகுப்புகள் மாணவர்களைக் கைவிட்டதில்லை. இதனை மிகத் தாமதமாகத்தான் பெற்றோர் உணர்ந்திருக்கிறார்கள். கலை அறிவியல் கல்லூரிகளை நோக்கிப் படையெடுப்பதற்கும் இதுதான் காரணம்" என்றார் விரிவாக.

பாடப் பிரிவுகளுக்கு டிமாண்ட் அதிகரிக்கும் போதெல்லாம், கல்விக் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்திவிடுகின்றன தனியார் கல்விக் கூடங்கள். அரசு இயந்திரங்களும் மறைமுகக் கட்டணக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றன எனக் குமுறுகின்றனர் பெற்றோர்கள்.

மாணவர் சேர்க்கை, விளம்பரம் வெளியிட தடை!

தமிழகத்தில், 690 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள் அனைத்தும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அங்கீகாரத்துடன், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில் இயங்குகின்றன.இந்த கல்லுாரிகளுக்கு பல்கலை சார்பில்,ஆண்டு தோறும் இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

கல்லுாரியின் உட்கட்டமைப்பு,ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் கல்வித்தகுதி அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பாடப்பிரிவுகள் குறித்து இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படும். மாணவர்களை சேர்த்த பின் அதற்கு தனியாக,பல்கலையில் சான்றிதழ் பெற வேண்டும்.இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் வழங்கும் பணி தற்போது துவங்கியுள்ளது.

கல்லுாரிகளின் விவரங்களை,ஆசிரியர் கல்வியியல் பல்கலை சேகரித்து வருகிறது. இவற்றில்,புதிதாக விண்ணப்பித்துள்ள பல கல்லுாரிகள்,தற்போதே பி.எட்., -எம்.எட்.,படிப்புகளில் மாணவர் சேர்க்கையை துவங்கியுள்ளன.மேலும் இதுதொடர்பாக விளம்பர அறிவிப்புகளும்,கல்லுாரிகளால் வெளியிடப்படுகின்றன. கல்லுாரிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு,ஆசிரியர் கல்வியியல் பல்கலைதடை விதித்துள்ளது.இதுகுறித்து,ஆசிரியர் கல்வியியல் பல்கலையிலிருந்து கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,பி.எட்.,கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள்,தற்போது தான் துவங்கி உள்ளன.

புதிய கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு,புதிய கல்லுாரிகளுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.எனவே,அங்கீகாரம் பெறும் முன்,எந்த கல்லுாரியும் மாணவர் சேர்க்கை நடத்தவோ,அது குறித்த விளம்பரம் வெளியிடவோ கூடாது. மீறினால்,கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என,கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் கல்விக்கு புதிய பல்கலை; மத்திய அரசு.

புதுடில்லி: வெளிநாடுகளைப் போல் இந்தியாவிலும் ஆசிரியர் கல்விக்கு புதிய பல்கலை.,அமைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

பள்ளி,கல்லூரி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை அதிகரிக்கும் நோக்கில்,அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் புதிய பல்கலையை அமைப்பது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. இதற்காக ஒரு குழுவை மத்திய அரசு தயாரித்துள்ளது.தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் ஏதேனும் ஒரு மண்டல நிறுவனத்தை,ஆசிரியர் கல்வி பல்கலையாகமாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் துவக்கம்: ஜூலை 15ல் தரவரிசைப் பட்டியல் வெளியாக வாய்ப்பு.

5 வரு சட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 15ல் வெளியிடப்படும் என்று சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடிதகவல் தெரிவித்துள்ளார்.இளநிலை சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகத்தை  இன்று அவர் தொடங்கி வைத்தார்.அப்போது அவர் பேசுகையில்,

3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு ஜூலை 15ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இளநிலை பட்டப் படிப்புக்கான முடிவுகள் வெளியான பின்பு 3ஆண்டு சட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மாணவர்கள்கூடுதல் விவரங்களை www.tndalu.ac.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

வரிசையில் நிற்க வேண்டாம் பெற்றோர்கள்...இனி பாடப்புத்தகங்கள் வீடு தேடி வரும்!

இணையதளத்தில் பதிவு செய்தால் பள்ளி மாணவர்களின் பாடப் புத்தகங்களை வீடு தேடி அனுப்பிவைக்கும் வசதியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

2016–17 ம் கல்வியாண்டிற்கான பாடநூல்களை பள்ளிகள், மொத்தமாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து வினியோகிக்கின்றன. மாணவர்களும் தமக்கு தேவைப்படும் 2016–17ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12–ம் வகுப்புவரையிலான பாடநூல்களைwww.textbookcorp.inஎன்ற இணையதளம் மூலம் பதிவுசெய்து பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

பாடநூல்களை எளிதில் வாங்கிடும் வகையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்ள இ–சேவை மையங்களில் தேவைப்படும் பாடநூல்களுக்கான தொகையை செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டால் பதிவுசெய்த பாடநூல்கள் 48 மணி நேரத்துக்குள் அவர்களது இல்லத்திற்கு கூரியர் சேவை மூலம் அனுப்பிவைக்கப்படும்.'இ- சேவை மையங்களின் விலாச விவரங்கள் www.textbookcorp.in என்ற இணையதளத்திலிருந்துதெரிந்து கொள்ளலாம்.

இணையத்தளத்தின் மூலமாக பாடநூல் விலை விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்' என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

சத்துணவு திட்டம் கண்காணிப்பு தொடக்ககல்வி இயக்குநர் செயல்முறைகள்

தமிழகத்தில் 1,800 போலி நர்சிங் பள்ளிகள் செயல்படுவது... அம்பலம்!உடனடியாக இழுத்து மூடும்படி கவுன்சில் கடும் எச்சரிக்கை.

தமிழகத்தில் அனுமதியின்றி, 1,800க்கும் மேற்பட்ட நர்சிங் பயிற்சி பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்படுவது அம்பலமாகி உள்ளது.'இந்த பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள், மாணவர்களை சேர்ப்பதையும், பாடங்கள் நடத்துவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்; பயிற்சி மையங்களை இழுத்து மூட வேண்டும்.

இல்லையெனில், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்துள்ளது.தமிழகத்தில், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்லுாரிகள் மற்றும் பள்ளிகள், அரசின் அனுமதி பெறுவதோடு, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலிலும் பதிவு செய்ய வேண்டும். இத்தகைய பள்ளி, கல்லுாரிகளில் படித்து வெளியேறுவோர், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்தால் உலகெங்கும் பணியாற்றலாம்.ஆனால், நர்சிங் கவுன்சிலின் அனுமதி பெறாமல், மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றதாகவும், 'பாரத் சேவக் சமாஜ்' என்ற அமைப்பின் அங்கீகாரம் பெற்றதாகவும், தமிழகத்தில் போலி நர்சிங் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்படுகின்றன.மூன்று மாதம் முதல், இரண்டு ஆண்டுகள் வரையிலான நர்சிங் உதவியாளர், கிராம செவிலியர், சுகாதார உதவியாளர் என, பல்வேறு படிப்புகளையும் இவை நடத்துகின்றன.

மாணவ, மாணவியர், இத்தகைய நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.அதனால், 'உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலுக்கு, பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற அனுமதியுடன், போலி நர்சிங் பயிற்சி பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளை மூடுவதற்கான கள ஆய்வில், தமிழ்நாடு நர்சிங்கவுன்சில் இறங்கியது. இதில், தமிழகம் முழுவதும், 1,800க்கும் மேற்பட்ட போலி நர்சிங் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்படுவது தெரிந்தது.இந்நிலையில், 'போலி நர்சிங் பயிற்சி பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் மாணவர்களை சேர்ப்பதையும், பாடங்கள் நடத்துவதையும், பயிற்சி அளிப்பதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். 10 நாட்களுக்குள் இதைச் செய்யத் தவறினால், சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், நர்சிங் பயிற்சி அளிக்க, 373 கல்லுாரிகள் மற்றும் பள்ளிகள் மட்டுமே முறையான அனுமதி பெற்றுள்ளன; மற்றவை போலியானவை.பாரத் சேவக் சமாஜ் அனுமதி பெற்றதாகக் கூறி நடத்தப்படும்நர்சிங் பயிற்சி பள்ளிகள், அங்கீகரிக்கப்படாதவை.அனுமதி பெற்ற நர்சிங் பயிற்சி பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் பற்றிய விவரங்களை, www.tamilnadunursingcouncil.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கவர்ச்சி விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

துாங்கி வழிந்தது ஏன்?:

தமிழகத்தில், 10 ஆண்டுகளாக புற்றீசல் போல, போலி நர்சிங் பள்ளிகள் துவக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதித்துள்ளது. அவர்கள், எந்த வேலைக்கும் போக முடியாமல் வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர்; நிறைய பணத்தையும் இழந்துள்ளனர்.அந்த போலி நிறுவனங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் துாங்கி வழிந்தது ஏன் என, தெரியவில்லை. இனியாவது, இதுபோன்ற அவலம் தொடராமல் இருந்தால் சரி.சுகாதார ஆர்வலர்கள்'கவனம் செலுத்தவில்லை': டாக்டர்களின் தேவையை விட, நர்ஸ்களின் தேவை பல மடங்கு உள்ளதை உணர்ந்த கேரளா நர்சிங் கவுன்சில், உலகம் முழுவதும் நர்சுகளை அனுப்பும்வகையில் திட்டமிட்டுள்ளது. இதில், தமிழகநர்சிங் கவுன்சில், சரியாக கவனம் செலுத்தவில்லை. தேவைக்கேற்ப அரசு நர்சிங் பள்ளி, கல்லுாரிகளை உருவாக்குதல்; கூடுதல் இடங்களை ஏற்படுத்துதல்; பயிற்சி மையங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தினால் இதுபோன்ற சிக்கல்கள் தீரும்.எஸ்.இளங்கோதமிழக தலைவர், இந்திய பொது சுகாதார சங்கம்.

அங்கீகாரமற்ற படிப்புகள் எவை?

தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற படிப்புகள் மற்றும் அங்கீகாரம் பெறாத படிப்புகள் விவரம்:

அங்கீகாரமுள்ளவை:

* பி.எஸ்சி., நர்சிங் - நான்கு ஆண்டு
* டிப்ளமோ இன் நர்சிங் - மூன்று ஆண்டு
* டிப்ளமோ இன் ஆக்சிலரி நர்ஸ் மிட்வைப் - இரண்டு ஆண்டுஇவை மூன்றும், பிளஸ் 2 படித்த பின் படிக்கலாம். இதை முடித்தோர், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்தால் உலகம் முழுவதும் பணியாற்றலாம்.

அங்கீகாரமற்றவை:

* டிப்ளமோ இன் நர்சிங் அசிஸ்டென்ட் - 6 மாதம் அல்லது இரண்டு ஆண்டு
* டிப்ளமோ இன் நர்சிங் - இரண்டு ஆண்டு
* டிப்ளமோ இன் பர்ஸ்ட் எய்டு நர்சிங் - இரண்டு ஆண்டு
* வில்லேஜ் ஹெல்த் நர்சிங் - இரண்டு ஆண்டு
* டிப்ளமோ இன் நர்சிங் எய்டு - இரண்டு ஆண்டு
* டிப்ளமோ இன் பர்ஸ்ட் எய்டு மற்றும் பிராக்டிக்கல் நர்சிங் - ஒன்று அல்லது இரண்டு ஆண்டு
* டிப்ளமோ இன் பிராக்டிக்கல் நர்சிங் - ஒன்று அல்லது இரண்டு ஆண்டு
* சர்ட்டிபிகேட் இன் நர்சிங் - ஒரு ஆண்டு
* அட்வான்ஸ் டிப்ளமோ இன் நர்சிங் அசிஸ்டென்ட் - ஒரு ஆண்டு
* டிப்ளமோ இன் ஹெல்த் அசிஸ்டென்ட் - ஒரு ஆண்டு
* நர்ஸ் டெக்னீஷியன்; ஹெல்த் கைடு; சர்டிபிகேட் இன் ஹெல்த் அசிஸ்டென்ட், சர்டிபிகேஷன் இன் பெட்சைடு அசிஸ்டென்ட், சர்டிபிகேட் இன் பேஷன்ட் கேர், சர்டிபிகேட்இன் ஹோம் ஹெல்த் கேர் என்ற, ஆறு மாத மற்றும் மூன்று மாத படிப்புகள்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!