Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 14 June 2016

1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு, உணவு இடைவேளைக்குப் பின் பிற்பகல் செயல்பாடான சொல்வது எழுதுதல் செயல்பாடு

தமிழ் : சொல்வது எழுதுதல்
1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு,  உணவு இடைவேளைக்குப் பின்னான பிற்பகல் செயல்பாடான
 "சொல்வது எழுதுதல் " செயல்பாட்டிற்கான வகுப்பு  வாாியான சொற்கள் இங்கு பகிரப்பட்டுள்ளது.
-நன்றி அறிவுச்சாளரம்.

தினம் ஒரு புத்தகம்'சுவையான செய்திகள்'


தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்'பனை வெல்லம், பனங்கற்கண்டு பயன்கள்"

பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

2016-2017 ஆம் ஆண்டிற்கு அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் ரு.2000/- உதவித்தொகை வழங்கும் திட்டம்


Chief Ministers Tamil Computer Award- Date Extended upto 15.07.2016

தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் இல்லாத தமிழக பள்ளிகள்

கணினி வழி கல்வியில் சிறப்பாக செயல்படும் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க தமிழகத்தில் பள்ளிகள் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. கணினி வழி கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் பள்ளி கல்வி இயக்குநரகத்தில் இருந்து கடந்த ஆண்டே அனுப்பி வைக்கப்பட்டது.

சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்புமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது. மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஒரு குழு அமைத்து அந்த குழு மூலம் மாவட்டத்திற்கு மூன்று ஆசிரியரை தேர்வு செய்து அந்த ஆசிரியர் பற்றிய விபரத்தை மே 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இது தொடர்பான முழு விபரங்களை பற்றி ஆசிரியர்கள் அறிந்துகொள்ள www.ciet.nic.in, www.ncert.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து அறிந்து கொள்ள வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் தமிழகத்தில் நீலகிரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பிற மாவட்டங்களில் இருந்து இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிறப்பாக பணியாற்றும் கணினி வழி கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் தகுதியுடைய ஆசிரியர்களை தேர்வு செய்து வரும் 17ம் தேதிக்குள் உடனடியாக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் மீண்டும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை சிறப்புக் குழு அமைத்து திடீர் ஆய்வு நடத்த வேண்டும்:அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி, கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள 300 அடி சுற்றளவில் அமைந்து இருக்கும் கடைகளில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க சிறப்பு குழு ஏற்படுத்தி திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த டி.சி.சரத் என்பவர் தாக்கல் செய்த மனு விவரம்: பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை உள்ளது. ஆனால் தடையை மீறி பொது இடங்களில் புகைப்பிடிப்பது வாடிக்கையாக உள்ளது. எனவே தடை உத்தரவின் அடிப்படையில், எங்கள் பகுதியில் தகுந்த நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி என்.கிருபாகரன் முன்பு திங்கள்கிழமை (ஜூன் 6) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர், தமிழக டி.ஜி.பி. ஆகியோரை தாமாக முன் வந்து எதிர் மனுதாரராக நீதிபதி சேர்த்தார். மேலும், இந்த மனுவுக்கு விரிவான பதில் மனுவையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, இந்த மனு மீண்டும் நீதிபதி கிருபாகரன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் பிறப்பித்த உத்தரவு: கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள 300 அடி சுற்றளவில் இருக்கும் கடைகளில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என்று விதிகள் உள்ளன.

இருப்பினும், விதிமுறைகளை மீறி பள்ளி, கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள கடைகளில் புகையிலை பொருள்களை விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், அவற்றை பள்ளி செல்லும் குழந்தைகள் எளிதில் அணுகுகின்றனர்.

பொது இடங்களில், புகையிலை பயன்படுத்துவதால் சுகாதாரச் சீர்கேட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும். கடந்த 1986, 1990-ஆம் ஆண்டுகளில் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை கூட்டத்தில், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பழக்கத்துக்கு ஆளாகியிருக்கும் குழந்தைகள், இளைஞர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தீர்மானம் இயற்றி உறுப்பு நாடுகளை வலியுறுத்தியது.

இதைத் தொடர்ந்து, கடந்த 2004-ஆம் ஆண்டு சிகரெட், பிற புகையிலைப் பொருள்கள் (விளம்பரத்தைத் தடை செய்வது மற்றும் விற்பனை, வர்த்தகம், உற்பத்தி, விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது) சட்டம் அமலுக்குக் கொண்டு வந்தது.

கல்வி நிறுவனங்கள் அருகில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்யக்கூடாது, 18 வயது நிரம்பாதவர்களுக்கு புகையிலை பொருள்களை விற்கக் கூடாது, பொது இடங்களில் சிகரெட் பிடிக்கக் கூடாது உள்ளிட்டவை சட்டத்தில் இடம்பெற்றன.

இந்த நிலையில், சென்னையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை, தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில், பள்ளி, கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள 300 அடி சுற்றளவில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் தடையின்றி விற்பனைக்கு கிடைக்கின்றன. மேலும்,
பொது இடங்களில் புகைப் பிடிப்பதற்கு தடை இருந்தும், 84 சதவீதம் பேர் கடைகள் முன்பே புகை பிடிக்கின்றனர்.

98.8 சதவீதம் கடைகளில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலை பொருள்கள் விற்பனை செய்ய தடை என்ற எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படவில்லை. 56 சதவீதம் கடைகளில் புகையிலை பொருள்கள் எளிதில் தெரியும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 87.7 கடைகளில் குழந்தைகள் தடையின்றி சிகரெட்டை வாங்கிச் செல்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதேபோன்று பல்வேறு அமைப்புகளும், ஆராய்ச்சி மாணவர்களும் நடத்திய ஆய்வில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனவே, கூட்டரங்கம், மருத்துவமனை, சுகாதார நிலையம், கல்வி நிறுவனம், நூலகம், நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்களின் அருகே சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிகரெட் புகையினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பொது மக்களை, குறிப்பாக குழந்தைகளைக் காப்பாற்றுவது அரசின் கடமையாகும். எனவே, தமிழக டி.ஜி.பி., சென்னை காவல்துறை ஆணையர், தமிழக சுகாதாரத் துறை ஆகியோர் பள்ளி, கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள 300 அடி சுற்றளவில் அமைந்து இருக்கும் கடைகளில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க சிறப்பு குழு ஏற்படுத்தி திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புகையிலை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகளுக்கு அருகில் புகையிலை பொருள்கள் குறித்த விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்றவேண்டும்.

பொது இடங்களில் நின்று புகை பிடிக்கும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோன்று எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவர அறிக்கையை வரும் 20-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான, தமிழ் எழுத்துகள் மற்றும் எழுத்துகளின் வரிசைப்படியான சொற்களின் அறிமுகம்

ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான, தமிழ் எழுத்துகள் மற்றும் எழுத்துகளின் வரிசைப்படியான சொற்களின் அறிமுகம் பருவ வாாியாக 3 பருவங்களுக்கும் இங்கு பகிரப்பட்டுள்ளது.
தமிழ் : எழுத்து – சொல்  அறிமுகம்

ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான, தமிழ் எழுத்துகள் மற்றும் எழுத்துகளின் வரிசைப்படியான சொற்களின் அறிமுகம் பருவ வாாியாக 3 பருவங்களுக்கும் இங்கு பகிரப்பட்டுள்ளது.

மூன்றாம் பருவ இறுதியில் வடமொழி எழுத்துகளும் இணைக்கப் பட்டுள்ளது.

நன்றி: அறிவுச் சாளரம்

மேற்கு வங்காள பள்ளிக்கு எம்.பி. நிதியில் இருந்து ரூ. 76 லட்சம் நிதி வழங்கிய சச்சின் தெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். இவர் தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ. 76 லட்சத்தை கொல்கத்தா பள்ளிக்கு நிதியாக வழங்கியுள்ளார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் சாதனை சிகரமாக விளங்கி வருபவர் சச்சின் தெண்டுல்கர். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சினின் சாதனையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுத்து சிறப்பித்துள்ளது.

சச்சின் தெண்டுல்கர் தனது எம்.பி. பதவி நிதியைக் கொண்டு பலவேறு நலத்திட்டங்களுக்கு உதவி செய்து வருகிறார். அந்த வகையில் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பள்ளிக்கும் எம்.பி. நிதியில் இருந்து ரூ.76 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

மேற்கு வங்காள மாநிலம் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள ‘ஸ்வர்ணமயி சாஸ்மல் சிக்சா நிகேதன்’ என்ற பள்ளி ஆசிரியர்கள் பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று சச்சினுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனை ஏற்று சச்சின் இந்த வருட துவக்கத்தில் 76 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். இந்த செய்தியை ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் பள்ளி முதல்வர் கூறுகையில் ‘‘சச்சின் செய்த உதவி என்ற உணர்வு இன்னும் முடிந்து போகவில்லை. எங்களது நன்றியை அவருக்கு தெரிவிக்க வார்ததைகளே இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

சச்சின் கொடுத்த நிதியின் மூலம் பள்ளியில் தற்போது நூலகம், ஆய்வகம் மற்றும் பெண்களுக்கு பொது அறைகள் போன்றவை கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கட்டங்கள் கட்டியபின் திறப்பு விழாவிற்கு சச்சின் தெண்டுல்கரை சிறப்பு விருந்தினராக அழைக்க இருக்கிறார்கள். 

சச்சின் ஏற்கனவே அந்திர மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தை தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ பொது நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு வேண்டும்: பிரதமரிடம் ஜெயலலிதா கோரிக்கை

மருத்துவ பொது நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமரிடம் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி:

டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதலமைச்சர், 29 அம்ச கோரிக்கை மனுவை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடகம் தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும். தமிழகத்திற்கான உணவு தானியங்கள் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைக்கக்கூடாது. மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது.

மாநில அரசுக்கு தரவேண்டிய நிதி உதவியை உடனடியாக விடுவிக்க வேண்டும். மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும். தமிழகம் பரிந்துரைத்த இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும். 

மருத்துவ பொது நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்கவேண்டும். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கவேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். ஜி.எஸ்.டி. மசோதாவில் தமிழகம் கோரிய திருத்தங்கள் செய்ய வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்துக்கு தடை! அரசு பள்ளிகளில் அடிப்படை தேவைகள் இல்லை....!

கோவை மாவட்டத்தில் செயல்படும், 70 சதவீத அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி பிரிவுக்கான, அடிப்படை விளையாட்டு உபகரணங்கள் இல்லாத அவலநிலை தொடர்வதால் மாணவர்களின் ஆர்வத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

இதுவரை 6.5 கோடி பேருக்கு ஆதார் எண்: இம்மாதத்துடன் தமிழகத்தில் பணி நிறைவு.தமிழகத்தில், இதுவரை, 6.5 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள், இம்மாத இறுதியில் நிறைவு பெறுகின்றன.ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், ஒருங்கிணைந்த அடையாள எண் எனப்படும், ஆதார் அட்டை வழங்கும் பணி, 2010 செப்டம்பரில் துவங்கப்பட்டது.
இதற்காக, 36 ஆயிரம் ஆதார் பதிவு
நிலையங்கள் அமைக்கப்பட்டு, 83 தனியார் ஏஜன்சிகளிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. 87 ஆயிரம் பேர், ஆதார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இயற்கை சீற்றங்கள், லோக்சபா, சட்டசபை தேர்தல்கள் என, பல்வேறு நிகழ்வுகளின் போதெல்லாம் ஒத்திவைக்கப்பட்டு, பல்வேறு கட்டங்களாக, ஆதார் எண் வழங்கும் பணி நடந்தது.

கிரெடிட், டெபிட் கார்டு மோசடியை தடுக்கும் புதிய ஆப் அறிமுகம்.

மும்பையைச் சேர்ந்த, மேக்சிமஸ் இன்போவேர் நிறுவனம், 'கிரெடிட், டெபிட் கார்டு' மோசடியை தடுக்க, 'மேக்சிமஸ் ரக் ஷா' என்ற மொபைல், 'ஆப்' - செயலியை அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து, மேக்சிமஸ் இன்போவேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான வெங்கட் சங்கர் கூறியதாவது:

ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன பொது நுழைவுத் தேர்வில், தமிழக மாணவர்கள் பின்தங்கியுள்ளதால், அரசு பள்ளிகளில் இதற்கான இலவச பயிற்சி அவசியம் என்ற கருத்து எழுந்துள்ளது.கடந்த மே மாதம் நடந்த, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வின் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. இதில், ராஜஸ்தான் மாணவர்கள் அதிக இடங்களை பிடித்துள்ளனர்.ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரத்தில் உள்ள பள்ளி மாணவர்களும், பயிற்சி மைய மாணவர்களும் முன்னணியில் வந்துள்ளனர். இந்த கோட்டா நகர பயிற்சி மையங்கள், கடந்தமூன்றாண்டுகளுக்கும் மேலாக, நுழைவுத் தேர்வில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.மும்பை மண்டலத்தில், 8,810 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தென் மாநிலங்களை உள்ளடக்கிய, சென்னை மண்டலத்தில், 6,702 பேர்; புதுடில்லி, 5,941; மேற்கு வங்கம், கரக்பூர், 4,560; கான்பூர், 4,443; ரூர்கி, 3,642; கவுஹாத்தி, 2,468 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தென் மாநிலங்களை பொறுத்தவரை, தெலுங்கானாவில், 2,515 பேர் அதிகபட்சமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆந்திராவில், 1,395; கர்நாடகாவில், 667; தமிழகத்தில், 650; கேரளாவில், 598; புதுச்சேரியில், 38 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழகம், தென் மாநிலங்களில், நான்காம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற, 650 பேரில், 400க்கும் மேற்பட்டோர் சென்னையை மையமாகக் கொண்டு தேர்வு எழுதிய வெளிமாநிலத்தவர்; மீதமுள்ள, 80 சதவீதம் பேர், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட மாணவர்கள்.தமிழக சமச்சீர் கல்வி மாணவர்கள், ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெறுவது குதிரை கொம்பாகவே உள்ளது. பாடத்திட்டம் மாற்றப்படாமலும், புதுப்பிக்கப்படாமலும் இருப்பது, இதற்கு முக்கிய காரணம் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே, பாடத்திட்டங்களை மாற்றும் வரை, அரசு பள்ளிகளில் ஐ.ஐ.டி.,க்கான பொது நுழைவுத் தேர்வு மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு, இலவச பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி மாணவ மாணவியர், மொபைல் போன் பயன்படுத்துவதால் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது.வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் மொபைல்போன் பயன்பாடு தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது. தகவல் பரிமாற்றம் மிக எளிமையாக்கி உள்ள மொபைல்போன், உலக நிகழ்வுகள் அனைத்தையும் உள்ளங்கைக்கு கொண்டு வரும் சாதனமாகவும், பல சமயங்களில் போலீசார் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க,உறுதுணையாகவும் உள்ளது.

ஜே.இ.இ., தேர்வில் பின்தங்கும் தமிழகம்:அரசு பள்ளிகளில் இலவச பயிற்சி அவசியம்.

ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன பொது நுழைவுத் தேர்வில், தமிழக மாணவர்கள் பின்தங்கியுள்ளதால், அரசு பள்ளிகளில் இதற்கான இலவச பயிற்சி அவசியம் என்ற கருத்து எழுந்துள்ளது.கடந்த மே மாதம் நடந்த, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வின் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. 

National Eligibility cum Entrance Test (UG) - NEETII 2016 | NEETII தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நேரமிது. LAST DATE 21.6.2016

இலவச பாடப் புத்தகங்கள்: கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு.

சென்னை ஜெய்கோபால் கரோடியா தொண்டு நிறுவனத்தின் புத்தக வங்கி சார்பில் இலவச பாடப் புத்தகங்கள் பெற கல்லூரி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கலை-அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை உயர்த்திக் கொள்ள அனுமதி:சென்னை பல்கலை. ஆட்சிமன்றக் குழு ஒப்புதல்.

கலை, அறிவியல் படிப்புகளில் சேருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதையடுத்து, இடங்களின் எண்ணிக்கையை அதிகபட்சம் 20 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.

முதல்வர் கணினித் தமிழ் விருது:ஜூலை 17 வரை விண்ணப்பிக்கலாம்.

முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 17-ஆம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.சிறந்த கணினி தமிழ் மென்பொருள் உருவாக்குபவரை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2015-ஆம் ஆண்டுக்கான முதல்வர் கணினித் தமிழ் விருது வழங்கப்படவுள்ளது.

5 ஆண்டு சட்டப் படிப்பு கலந்தாய்வு:ஜூலை 15-இல் தொடக்கம்.

ஐந்தாண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூலை 15-ஆம் தேதி தொடங்குகிறது.இளநிலை சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

சிறப்பு துணைத்தேர்வு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு, அறிவியல் செய்முறை தேர்வு, ஜூன், 20, 21ம் தேதிகளில் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தேர்வுத்துறைஇயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பி.எட்., கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்

தமிழகம் முழுவதும், 300க்கும் மேற்பட்ட, பி.எட்., கல்லுாரிகளில், போலி ஆசிரியர்கள் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. இந்த கல்லுாரிகளில், போலிகளை களையெடுக்க, ஆசிரியர் கல்வியியல் பல்கலை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

அரசு ஊழியர் மருத்துவ காப்பீடு:ரூ.7.50 லட்சமாக உயர்வு.

தமிழக அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்பு, பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலை ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 2007ல் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விட்டு, நான்கு ஆண்டுகளாக இத்திட்டம் செயல்படுகிறது. 

மாணவர்களுக்கு:ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் புதிய திட்டம்.

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம் கல்வித்திறன் குறைந்த குழந்தைகளை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது. 

எம்.பி.பி.எஸ்., படிப்பு இன்று ரேண்டம் எண் வெளியீடு

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பித்தோருக்கான, 'ரேண்டம்' எண் இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகள், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு, 2,853 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 1,055 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. 

அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு வழங்குவதில் காலதாமதம்: அட்டையில் முதல்வர் படம் இடம்பெறும் விவகாரம் காரணமா?

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 77 லட்சம் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்து 5 நாட்கள் ஆகியும் இன்னும் நோட்டுகள் வழங்கப்படாததால் மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

புதுச்சேரி அரசு பள்ளிகளில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு.

புதுச்சேரி:புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் முதல்வர் நாரயணசாமி ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.

முதலமைச்சருடன் கல்வி அமைச்சர் கமலகண்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

50-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலை.

போதிய மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன. இந்த வருடம் பயிற்சி பள்ளியில் சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கு 17-ஆம் தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசு சார்பில் தமிழ்நாட்டில் 29 3 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 38, சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 320 உள்ளன. 

பேங்க் ஆப் இந்தியா வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி


மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 517 கடன் அதிகாரி, மேலாளர், முதுநிலை மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி தினமாகும்.

தேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி 10-ம் வகுப்பில் தமிழ்வழிக் கல்வி அறிமுகம்.

தேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்) நடப்பாண்டு முதல் பத்தாம் வகுப்பில் தமிழ் வழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது.இதுதொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

TNPSC: 4,931 காலிப் பணியிடங்களை நிரப்ப அக்டோபர் மாதம் குரூப்-4 தேர்வு-ஜூலை மாதம் அறிவிப்பு வெளியாகிறது

இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 4,931 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியாகிறது.

7ஆவது ஊதியக்குழு - சம்பளம் கணக்கிடும் முறை


பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்டுத்த தடை விதித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 10. 06. 2016


7th Pay Commission Pay Scale Calculator

மின்வாரிய பணியிடங்களுக்கான தேர்வு: `ஹால் டிக்கெட்' பதிவிறக்கலாம்.(DATE OF EXAM : 19.06.2016)


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுகளுக்கன, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணயதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் ஏற்கெனவே மே 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.இதையடுத்து ஜூன் 19, ஆகஸ்ட் 27, 28 தேர்வுகள் நடைபெறும்என அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் ஜூன் 19-ஆம் தேதி தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர், உதவி வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிசீட்டை (ஹால் டிக்கெட்) கீழ் ரும் கல்விச்செய்தி Link மூலமாக Download  செய்து கொள்ளலாம்.

இதுதொடர்பானமேலும் விவரங்களுக்கு 044- 2235 8311, 2235 8312 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

DEE Proceeding-MPhil /Phd -Higher Studies Permission - Power Delegate to AEEO's

தொடக்கக்கல்வி செயல்முறைகள்-ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் -01.06.2016 -ல் உள்ளவாறு உத்தேச மற்றும் தற்போதைய ஆசிரியர் காலிப்பணியிடங்கள் சேகரித்தல் சார்பு.நாள்:09/06/16-இணைப்பு படிவம் A முதல் F வரை.


பள்ளிகளில் சத்துணவு திட்டம் சிறப்பாக செயல்படுவதை கண்காணித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்டுத்த தடை விதித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

DEE Proceeding-MPhil /Phd -Higher Studies Permission - Power Delegate to AEEO's


ஐஐடி நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மாணவர் தமிழகத்தில் முதலிடம்

ஐஐடி நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் சென்னை மாணவர் ஆர்.ராகுல் தமிழக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சேருவதற்கான ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு கடந்த மே 22-ம் தேதி நடந்தது. ஏற்கெனவே முதல்கட்டமாக நடத்தப்பட்ட ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் அட்வான்ஸ்டு தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் தமிழக மாணவர்கள் ஆவர்.

சத்துணவு கூடத்தை தொடக்க,நடுநிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் ஆய்வு செய்ய வேண்டும்...!


தேர்வு நிலை பெற கல்வி சான்றுகள் உண்மைத்தன்மை சான்றுதேவையில்லை (RTI) பதில்.


மருத்துவ கல்வி நுழைவு தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அனைத்துக் கட்சி ஆதரவுடன் தமிழக சட்டசபையில் தீர்மானம்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மருத்துவ கல்வி நுழைவுத்தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அனைத்துக் கட்சி ஆதரவுடன் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: 

தி.மு.க. பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது இணையதள முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 

மாணவர்களின் எதிர்காலத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் உள்ள மருத்துவ நுழைவு தேர்வினை நிரந்தரமாக ரத்து செய்ய தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியது அவசர அவசியமாகும். தமிழகத்தை பொறுத்த வரை, 2006-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க. அரசு சமூகநீதியை பாதுகாக்கும் வகையிலும், கிராமப்புற ஏழை மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படாத வகையிலும் மருத்துவம் மற்றும் பொறியியல் தொழிற்கல்விக்கான நுழைவு தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்தது. 

இதன் காரணமாக பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி - சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் கிராமப்புற ஏழை மாணவர்களும் இன்று டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும் உருவாகி இருக்கின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அடுத்த ஆண்டு முதல் மருத்துவக் கல்விக்கான நுழைவு தேர்வினை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு மாணவர்கள் ஆளாகியிருக்கிறார்கள். 

மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததன் மூலம் இந்த ஆண்டிற்கான நுழைவு தேர்வு தற்காலிகமாக அரைகுறையாக தடுக்கப்பட்டு இருக்கிறது. இது மாணவர்களுக்கான முழுமையான பலனை எதிர்காலத்தில் நிச்சயம் தராது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி-சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், கிராமப்புற ஏழை மாணவர்கள், தமிழ் வழிக் கல்வியில் பயில்வோர் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் இந்த நுழைவுத் தேர்வு மிகுந்த நெருக்கடியையும் பின்னடைவையும் உண்டாக்கி, அவர்களின் கல்விக் கனவையும் எதிர்காலத்தையும் சிதைக்கக் கூடியதாகும். 

திராவிட இயக்கங்களால், குறிப்பாக தி.மு.க. அரசின் முயற்சியால் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ள சமூக நீதிக்கு சிறிதளவும் பங்கம் வராத வகையில், தமிழகத்தைப் பொறுத்தவரை மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் தீர்மானத்தினை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து, உரிய விவாதம் நடத்தி, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானத்தினை ஒரு மனதாக நிறைவேற்றி, அதனை மத்திய அரசுக்கு அனுப்பி உரிய ஆணையைப் பெறத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து நுழைவுத் தேர்வே தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!