Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 19 June 2016

நாடு முழுவதும் ஒரே எண் அறிமுகம்: மின் புகார்களை தெரிவிக்க 1912

மின்வெட்டு அல்லது கோளாறு தொடர்பான புகார்களை தெரிவிக்க 1912 என்ற 24 மணி நேர ஹெல்ப்லைன் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மின் இணைப்பு, மின்வெட்டு, மின்கோளாறு உள்ளிட்ட புகார்களை அந்தந்த மாநில அரசுகளும், மின்வாரியமும் நிர்ணயித்த தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தான் நுகர்வோர் தெரிவிக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் மின்சாரம் சம்பந்தமான புகார்கள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் மின் நுகர்வோர் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாடு முழுவதும் மின் புகார்களை தெரிவிக்க 1912 என்ற ஒரே எண்ணை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்துள்ளது.

கோவா தலைநகர் பனாஜியில் அனைத்து மாநில மின்சார துறை அமைச்சர்களின் இரு நாள் கருத்தரங்கு கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. அப்போது மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நாடு முழுவதும் ஒரே புகார் எண்ணை அமல்படுத்தும் புதிய முறையை அறிமுகம் செய்தார். 1912 என்ற இந்த தொலைபேசி சேவை 24 மணி நேரமும் இயங்கும். இந்த எண்ணை மின் நுகர்வோர் தொடர்பு கொண்டால் உடனடியாக அந்தந்த மாநில அரசு துறைகளுக்கோ அல்லது மத்திய அரசின் கட்டுப்பாட்டு அறைக்கோ அழைப்பு செல்லும். அப்போது மின்சாரம் சம்பந்தமான புகார்களை தெரிவித்தால், உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இருந்து பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவர். மேலும் புகார் சம்பந்தமான அனைத்து விவரங்களும் இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் கிடைக்கும்.

நேரடி கண்காணிப்பு

தவிர மின் உதவி எண்ணை நுகர்வோர் ஒருவர் தொடர்பு கொண்டால், அவரது பிரச்சினை என்ன? எப்பொழுது அவர் புகார் தெரிவித்தார். பிரச்சினையின் தீவிரம் என்ன? என அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். மத்திய அரசும் நேரடியாக இந்த சேவையை கண்காணிக்கவுள்ளது. இதனால் 1912 தொலைபேசி சேவை மின் நுகர்வோருக்கு மிகுந்த பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 To 5 வகுப்பிற்கான முதல் பருவ பாடத்திட்டம்

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "உணவை உண்னும் முன்பு அவசியம் கடை பிடிக்க வேண்டிய விதி முறைகள்"

சாப்பிட தொடங்கும் முன்பு முதலில் உண்ட உணவு நன்கு ஜீரணமாகி, வயிறு காலியாகி நன்கு பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்(RH) 2016

கல்வியாளர்கள் சங்கம அழைப்பிதழ் !!7th CPC GOVT employees to get increased salary with 6 months arrears on Aug 1-2016

As per media report, increased salary of july  will be credited to the 47 lakh central government employees and 52 lakh pensioners  accounts on August 1,2016.However ,there is clarity on whether the arrears of last 6 months will also be credited at the same time at one GO  or it will be deposited in installments.

சனிக்கிழமைகளில் பள்ளி முழு நாள் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கான மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரின் RTI பதில். (மறு பதிப்பு)


6,7,8-ஆம் வகுப்பு வாராந்திர பாடத்திட்டம்


மாநில நல்லாசிரியர் விருது - ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள்


மாநில நல்லாசிரியர் விருது - படிவம்


ஹிந்தி இல்லாத நவோதயா பள்ளி தமிழகத்தில் துவங்க யோசனை

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் நேரடி கட்டுப்பாட்டில், 'நவோதயா வித்யாலயா சமிதி' என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் கீழ், 598 இடங்களில், 'ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள்' இயங்கி வருகின்றன.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,பாடத்திட்டத்தில் இயங்கும் இந்த பள்ளிகள்தான், ஒவ்வொரு ஆண்டும், நாடு தழுவிய அளவில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், அதிக தேர்ச்சி பெறுகின்றன.கல்வியில் சிறந்த கிராம மாணவர்கள், தனியார் பள்ளிகளில் படிக்க வசதியில்லாத ஏழை மாணவர்கள், நுழைவுத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, நவோதயா பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். இந்த பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு, உணவு, உடை, இருப்பிடம் இலவசமாக வழங்கப்படுகிறது.நவோதயா பள்ளிகளில், 75 சதவீதம் கிராம மாணவர்களுக்கே முன்னுரிமை தரப்படுகிறது. இரு பாலரும் படிக்கும் இந்தபள்ளியில், மூன்றில் ஒரு பங்கு இடங்கள், பெண்களுக்கு ஒதுக்கப்படும். மாற்று திறனாளிகளுக்கு, மூன்று சதவீத இட ஒதுக்கீடு தரப்படுகிறது.இலவசமாக தரமான கல்வி அளிக்கும் இந்த பள்ளியில், மும்மொழி பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அதில், ஹிந்தி கட்டாயம். அந்தந்த மாநில மொழியை கற்பிக்கும் மொழியாகவும், அறிவியல், கணிதத்திற்கு ஆங்கிலமும், மனிதவளம் சார்ந்த ஒழுக்க பாடங்கள் போன்றவை இந்தியிலும் கற்றுத் தரப்படுகின்றன.ஹிந்தி இருப்பதால், தமிழகத்தில், 60 ஆண்டுகளாக நவோதயாபள்ளிக்கு அனுமதி வழங்கவில்லை. மற்ற மாநிலங்களில், இந்த பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் அனுமதி இல்லாததால், இதன் மண்டல தலைமை அலுவலகமும், ஆந்திராவுக்கு மாற்றப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் நவோதயா பள்ளி துவங்க, கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஸ்ரீராம், மத்திய, மாநில அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஹிந்தி இல்லாத நவோதயா பள்ளிகளை துவங்க முடியுமா என பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஹிந்தி கற்பிக்கப்படும் நிலையில், நவோதயா பள்ளிகளுக்கும் அனுமதி அளிக்கலாம் என, அரசு தரப்பில் ஆலோசிக்கப்படுகிறது.ஆனால், கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க, மத்திய அரசேஇடம் வாங்கிக் கொள்ளும். நவோதயா பள்ளிக்கு, தமிழக அரசுதான் இடம் இலவசமாக வழங்க வேண்டும் என்பதால், சிக்கல் நீடிக்கிறது.

தமிழகத்தில் உயர் கல்வி சேர்க்கை 44.8 சதவீதமாக உயர்வு.

தமிழகத்தின் ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை (ஜி.இ.ஆர்.) 44.8 சதவீதமாக உயர்ந்துள்ளது என, மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார்.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஏற்பாடுகள் குறித்து, பதிவாளர் கணேசனிடம் அன்பழகன் சனிக்கிழமை கேட்டறிந்தார்.பின்னர் அமைச்சர் மேலும் கூறியதாவது: 

உயர் கல்வித் துறை மேம்பாட்டுக்காக தமிழக அரசு சிறந்த திட்டங்களை வகுத்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 67 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 527 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 2 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 24-இல் தொடங்குகிறது.இதற்காக விண்ணப்பித்துள்ள 1,34,722 பேருக்கு சமவாய்ப்பு எண் ஜூன் 20-ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் 22-ஆம் தேதியும் வெளியிடப்படும். 

பின்னர், 24-இல் விளையாட்டுப் பிரிவினருக்கும், 25-இல் மாற்றுத்திறனாளிகளுக்கும் சேர்க்கை நடைபெறும். 27-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கப்படும்.கலந்தாய்வுக்கான அழைப்பக் கடிதம் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. பல்கலைக்கழக இணையதளத்தில் பெயர், பிறந்த தேதி, விண்ணப்ப பதிவு எண் ஆகியவற்றை பதிவு செய்து ஆன்-லைனில் இருந்தே அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்றார்.

ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் கற்பிக்க வேண்டும்இணை இயக்குனர் அட்வைஸ்!

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் கடமைக்கு அல்லாமல் ஈடுபாட்டுடன் கற்பித்தல் பணியை மேற்கொண்டால் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முடியும் என கல்வித்துறை இணை இயக்குனர் பேசினார்.கல்வியில் பின்தங்கியுள்ள கடலுார் மாவட்டம் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் 30ம் இடமும், 10ம் வகுப்பில் 29ம் இடம் பெற்றது. 

மாவட்டத்தில் அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திட பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, மாவட்டத்தின் பொறுப்பாளராகநியமிக்கப்பட்டுள்ள இணை இயக்குனர் (தொழில் கல்வி) பாஸ்கர சேதுபதி, தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கை குறித்து, தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.

கடலுார், கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலந்தாய்வுக்கு, தலைமை தாங்கிய இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி, தேர்ச்சி குறைவிற்கான காரணம், தேர்ச்சி சதவீதத்தை மேற்கொண்டுள்ள நடவடிக்கை, கடந்த 1ம் தேதி முதல் 17ம் தேதி வரை பள்ளிகளில் நடைபெற்ற கற்றல், கற்பித்தல் பணி விபரம், நடத்திய தேர்வுகள், மாணவர்கள் பெற்ற மதிப்பெண், தலைமை ஆசிரியர்மேற்கொண்ட வகுப்பறை கூர்ந்தாய்வு, மாணவர்கள் 100 சதவீத வருகையை உறுதி செய்திட மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்களிடம் தனித்தனியே கேட்டறிந்தார்.பின்னர் அவர் பேசுகையில், மாணவர்களின் பெற்றோர்களை நேரில் அழைத்து பேசுங்கள். மாணவர் பள்ளி நேரத்தில் வெளியில் செல்ல அனுமதிக்கக் கூடாது. தலைமையாசிரியர்கள் அடிக்கடி ஆசிரியர்களுடன் கலந்தாய்வு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும். ஆசிரியர்கள் கடமைக்காக அல்லாமல் ஈடுபாட்டுடன் கற்பிக்க வேண்டும்.ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையையும், மாணவர்களிடம்அவரின் அணுகு முறையை தலைமையாசிரியர் கண்காணிக்க வேண்டும். 

மாணவரின் வார, மாத தேர்வு விடைத்தாள்களை, ஆசிரியர் சரியாக மதிப்பீடு செய்துள்ளாரா என்பதை தலைமை ஆசிரியர் ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர்கள் கடலுார் குமாரசாமி,விருத்தாசலம் கோமதி, சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர்கள் முருகன், தேவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு சார்பான RTI தகவல்

பி.இ., - எம்.பி.ஏ., படிப்பு இரு கல்லூரிகளுக்கு தடை.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிகளை மீறியதால், இரண்டு இன்ஜினியரிங் கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், 530 இன்ஜி., கல்லுாரிகள் பி.இ., - பி.டெக்., படிப்பையும், 40க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் பி.ஆர்க்., படிப்பையும் நடத்துகின்றன.

இந்த கல்லுாரிகள் அனைத்தும், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்று, அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்து பெற்று, மாணவர்களை சேர்க்கின்றன.இந்த ஆண்டு, இன்ஜி., கல்லுாரிகளுக்கான அங்கீகாரம் மற்றும் இணைப்பு அந்தஸ்து நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. 2015ல், இணைப்பு பெற்ற, 500க்கும் மேற்பட்ட கல்லுாரிகளுக்கு, இந்த ஆண்டும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், விதிகளை பூர்த்தி செய்யாத, இரண்டு இன்ஜி., கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை.சென்னை அருகில் மாங்காட்டில் உள்ள முத்துக்குமரன் இன்ஜி., கல்லுாரியும், திருச்சியில் எம்.பி.ஏ., மட்டும் நடத்தும் கல்லுாரியும் அங்கீகாரத்தை இழந்துள்ளன. இதற்கிடையில், இரண்டு புதிய கல்லுாரிகள் அங்கீகாரம் கேட்டுள்ளன. ஈரோடு, ஸ்பெக்ட்ரம் இன்ஜி., கல்லுாரி மற்றும் கன்னியாகுமரி நீரஜ் இன்ஜி., கல்லுாரி ஆகியவை, புதிதாக அங்கீகாரம் கேட்டு, அண்ணா பல்கலைக்கு விண்ணப்பித்துள்ளன; அவை பரிசீலினையில் உள்ளன.

அதேபோல், தமிழகத்தில் முதல் முறையாக, ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு எம்.பி.ஏ., படிப்புக்கு, அண்ணா பல்கலை இணைப்பு அந்தஸ்து வழங்கியுள்ளது. கோவை எக்செல் கல்வி நிறுவன கல்லுாரிக்கு, இந்த படிப்பு துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இவை தவிர, 40க்கும் மேற்பட்ட பி.ஆர்க்., படிப்புக்கான கல்லுாரிகளின் விண்ணப்பங்களும், அண்ணா பல்கலை யின் பரிசீலினையில் உள்ளன. எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு, அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில் பல, தங்களது மாணவர் எண்ணிக்கை அளவை குறைத்துள்ளன. அதன் மூலம், பேராசிரியர்களுக்கான பற்றாக்குறை நீங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

B.Ed வினாத்தாள் மாற்றம்: மாணவர்கள் அதிர்ச்சி

பி.எட்., படிப்புக்கான, முதலாம் ஆண்டு உளவியல் தேர்வில், வினாத்தாள் முறை மாற்றப்பட்டு இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பி.எட்., பட்டப் படிப்பு, இந்த ஆண்டு முதல், ஓராண்டில் இருந்து இரண்டு ஆண்டாக மாற்றப்பட்டு உள்ளது. மத்திய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவுப்படி,புதிய பாடத்திட்டமும் அமலுக்கு வந்துள்ளது.

இந்த ஆண்டு, புதிய பாடத்திட்டத்தின் கீழ், 60 ஆயிரம் பேர், 650 கல்லுாரிகளில் படித்து வருகின்றனர். இவர்களுக்கான முதலாம் ஆண்டு பருவத்தேர்வு நேற்று துவங்கியது. முதல் நாளில், அனைத்து மாணவர்களுக்கும் பொதுவாக உளவியல் தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வில் ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி, 70 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும். அதில், இரண்டு மதிப்பெண்களுக்கு, 10 கேள்விகள்; ஐந்து மதிப்பெண்களுக்கு, ஆறு கேள்விகளில், நான்கு கேள்விகள்; 10 மதிப்பெண்களுக்கு, ஆறு கேள்விகளில், மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.ஆனால், நேற்று வழங்கப்பட்ட வினாத்தாளில் இந்த முறை மாற்றப்பட்டு இருந்தது.

இரண்டு மதிப்பெண்களுக்கு, ஐந்து கேள்விகள்; ஐந்து மதிப்பெண்களுக்கு, எட்டு கேள்விகள் வழங்கப்பட்டு, அவற்றில் ஆறு கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டியிருந்தது.மூன்றாவது பிரிவில், முன்னர் இருந்த, 10 மதிப்பெண்களுக்கு பதில், தற்போது, 15 மதிப்பெண்களுக்குஒரு கேள்வி என, 'சாய்ஸ்' அடிப்படையில் நான்கு கேள்விகள் இடம் பெற்று இருந்தன.இந்த வினாத்தாளை பார்த்ததும், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே, திட்டமிட்டு படித்த முறைக்கு மாறாகவினாத்தாள் இடம் பெற்றதால், பல மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவரா என்ற அச்சம் எழுந்துள்ளது.

முன்னறிவிப்பு இல்லை

பாடத்திட்டம் மாற்றப்பட்ட பின், தேர்வில் மாற்றம் இருக்கும் என்பது குறித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலை எந்த முன்னறிவிப்பும் செய்யவில்லை. மாதிரி வினாத்தாள் கொடுத்து இருந்தால், மாணவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்பட்டு இருக்காது. வரும் தேர்வுகளிலாவது பழைய வினாத்தாள் முறையை கொண்டு வர வேண்டும். உளவியல் தேர்வை பழைய முறைப்படி மீண்டும் நடத்த வேண்டும்.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்.- நமது நிருபர் -

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து புகார் செய்ய புதிய, 'செயலி' (மொபைல் ஆப்)

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து புகார் செய்ய புதிய, 'செயலி' (மொபைல் ஆப்) உருவாக்கப்பட்டு, தமி-ழகம் முழு-வதும், 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில், 'சைல்டு வாய்ஸ்'என்ற அமைப்பு செயல்படுகிறது. குழந்தை தொழிலாளர், குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்தல், குழந்தை திருமணம் போன்ற அவ-லங்-க-ளுக்கு எதி-ராக, இந்த அமைப்-பு போராடி வருகிறது.இந்த அமைப்-புடன் அருணோதயா, வேர்கள், ஜீவஜோதி, வைகை டிரஸ்ட், காருண்யா காப்பகம், புகையிலைக்கு எதிராக குழந்தைகளை காத்தல் போன்ற அமைப்புகள் இணைந்து, சி.ஆர்.எம்., (சைல்டு ரைட்ஸ் மானிட்டர்),'செயலியை' உருவாக்கின. இச்செயலியில் உறுப்பினராகி, டி.ஜி.பி., அலுவ-ல-கம், குழந்தைகளுக்கான, 'ஹெல்ப் லைன்' (1098), குழந்தைகள் நல வாரியம், மாநில குழந்தைகள் நல காப்பகம் ஆகி-ய-வற்றுக்-கு புகார்களை தெரி-விக்க முடி-யும்.இதன்- மூலம் அந்-தந்-த மாவட்ட கலெக்டர், எஸ்.பி.,க்கள் நடவடிக்கை எடுப்பர். இச்செயலி மூலம் புகார் கொடுத்து, தமிழகம் முழுவதும், 100க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

'சைல்டு வாய்ஸ்' நிர்வாக அறங்காவலர் அண்ணாதுரை கூறியதாவது: இச்செயலி மூலம் புகார்கள் மாநில தலைமை இடத்திற்கு செல்வதால், மாவட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். இச்செயலியை, 'யுனிசெப்'பின் தமிழக அதிகாரி, கடந்த பிப்ரவரியில் துவக்கி வைத்தார். புகார் கொடுப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். தவறானதகவல்கள் கொடுத்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசு பாக்கி ரூ.150 கோடிஇலவச மாணவர் சேர்க்கையில் கடும் பாதிப்பு

இலவச மாணவர் சேர்க்கையில், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு, 150 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இதனால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியார் பள்ளிகள் வேறு வழியின்றி, இலவச சேர்க்கை மாணவர்களிடம், கட்டணம் வசூலிக்கின்றன.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத இடத்தை, 5 முதல், 14 வயது வரையுள்ள ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி, இலவச கல்வி அளிக்க வேண்டும். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசே செலுத்தும்.

சேர்க்கை:

ஆனால், தமிழகத்தில் இந்த சட்டம், 5முதல், 14 வயது வரைஉள்ள அனைத்து மாணவர் களுக்கு என இல்லாமல், வெறும் எல்.கே.ஜி., வகுப்புக்கு மட்டுமே செயல்படுத்தப் படுகிறது. தனியார் பள்ளிகளில், அரசின் உத்தரவுப் படி, கடந்த மே, 31ம் தேதி வரை மனுக்கள் பெறப் பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.ஆனால், இதில் பல பள்ளிகள், இலவச மாணவர் சேர்க்கையிலும், நன்கொடையும், கல்வி கட்டணமு ம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரித்தபோது, தமிழக அரசு, 2014ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கல்விக் கட்டணத் தொகையில், 20 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ள தாக கூறப்படுகிறது. 2015 - 16ம் கல்வி ஆண்டில், 130 கோடி ரூபாய், தனியார் பள்ளிகளுக்கு, பாக்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.அதனால், கடனில் தவிக்கும் பள்ளிகள், மாணவர் களிடம் கட்டணம் வசூலிப்பதாகவும், அரசு நிதி அளித்தால், மாணவர்களிடம் பணத்தைதிருப்பி அளித்து விடுவதாகவும் தெரிவித்துள்ளன.இது குறித்து, தமிழக கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தும், அனைவருக்கும் கல்விஇயக்ககமான எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகம் தான், இந்த நிதியை தர வேண்டும். மத்திய அரசிடமிருந்து நிதி வராததால், தாமதம் ஏற்பட்டுள்ளது' என, தெரிவித்தனர்.

தீர்மானம்

இதற்கிடையில், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் சங்க கூட்டம், அதன் பொது செய லர் நந்தகுமார் தலைமையில் நடந்தது. இதில், தமிழக அரசு பாக்கி வைத்துள்ள, 150 கோடி ரூபாயை உடனடியாகசெலுத்த வேண்டும்; தனியார் பள்ளியில் இலவச மாணவர் சேர்க்கையில் சேர்ந்த மாணவர்களுக்கு, இலவச பாடப்புத்தகம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!