Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 23 June 2016

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"உணவு உண்ணும் முறை"

உணவு உண்ணும் முறை:

உணவு உண்பது ஒரு கலை. அது ஒரு தவம்.

 உணவு அறுசுவை உணவாய் இருக்கட்டும்.

அறுசுவையையும் திகட்டும்படி சாப்பிடு.

முதலில் இனிப்பு அதன் பின்னர் மற்ற சுவைகளை சுவைக்கும்படி சாப்பிடு.

 நாக்கில் சுவைத்து ரசித்து கூழ்மமாக்கி சாப்பிடு.

DEE DIARY : 2016-17 Academic year

DEE DIARY:
2016-17 Academic year working days in Saturday for Primary & Middle Schools (1- 8th std)

*July -            23.07.16
*August -       27.08.16
*September- 17.09.16
*November-  19.11.16
*April-            22.04.17

Exam Time Table
*Ist Term Exam
19.09.16 to 23.09.16
*IInd Term Exam
19.12.16 to 23.12.16
*IIIrd Term Exam
24.04.17 to 28.04.17

எங்களுக்கான AEEO இப்படி இருந்தால் - மகிழ்ச்சி!

1. எங்களைத் திட்டக் கூடாது

2. எங்களுக்குத் தெரியாததை நன்றாக சொல்லித்தர வேண்டும்

3.ஒன்றியத்தை ஒற்றுமையாக (தலைமையாசிரியர்-ஆசிரியர்) வைத்து             கொள்ள வேண்டும்

4. நல்லவராக இருக்க வேண்டும்

5. எங்கள் அலுவலகத்திலேயே இருக்க வேண்டும்

விரைவில் ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு: சட்டமன்றத்தில் அமைச்சர் வீரமணி தகவல்

ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என்று வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர்  பேசும்போது,
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை தேவை. ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வையும் வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும் என்று கூறினார்.

TAMIL UNIVERSITY ( THANJAVUR ) RECRUITMENT 2016


தஞ்சாவூர் - தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

..www.tamiluniversity.ac.in...

கடைசி தேதி 08.07.2016

பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழச்சாறு வழங்கும்திட்டம்: முதல்வர் விளக்கம்.

பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழச் சாறு வழங்கும் திட்டம், மருத்துவர்களின் ஆலோசனைப் படி கைவிடப்பட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்து உரையாற்றினார்.

என்ன சொல்கிறது 7-வது ஊதியக் குழு?

ஏழாவது ஊதியக் குழு தன் அறிக்கையை 19.11.2015-ல் மத்திய நிதியமைச்சரிடம் வழங்கி, பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தியது. அன்று முதல், ஊடகங்களும் சமூக வலைதளங்களும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக அளவில் ஊதிய உயர்வு வழங்கப்படுவதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றன. ஆனால், உண்மை நிலை என்ன?

மருத்துவ காப்பீட்டை அரசே நேரடியாக அமல்படுத்தக் கோரி வழக்கு- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்


மருத்துவ காப்பீட்டை அரசே நேரடியாக அமல்படுத்தக் கோரி வழக்கு.
தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.

பிளஸ் 1 புத்தகங்கள் விநியோகிக்க சிறப்பு கவுன்ட்டர்.

சென்னை கல்லூரி சாலை டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடுபாடநூல் நிறுவனத்தில் பிளஸ் 1 பாடப் புத்தகங்களை விநியோகிக்க வியாழக்கிழமை (ஜூன் 23) சிறப்புக் கவுன்ட்டர் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை தரமணியில் இயங்கும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரி யில் பிஏ, எல்எல்பி, பிபிஏ, எல்எல்பி, பிகாம்.எல்எல்பி, பிசிஏ எல்எல்பி ஆகிய ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால சட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

டான்செட் பொது நுழைவுத்தேர்வு: ஒரு வாரத்தில் முடிவு வெளியீடு

எம்பிஏ, எம்சிஏ மற்றும் எம்இ, எம்டெக் உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான டான்செட் எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தால் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான டான்செட் நுழைவுத்தேர்வு ஜுன் 11, 12-ம் தேதிகளில் நடைபெற்றது.

199.75 கட் ஆஃப் பெற்று சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்!

தேர்ச்சியில் முத்திரை பதித்தாலும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் இடம் கிடைப்பது என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. பிளஸ் டூ மதிப்பெண்ணால் அதிக கட் ஆப் பெற்று மருத்துவ இடம் பெற்றிருக்கிறார் அரசு பள்ளி மாணவர் ஒருவர்.

பிற மாநிலங்களில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது சரியா?

ஐஐடி-க்களில் சேர வேண்டும் என்பதற்காக ஆந்திரம், தெலங்கானா சென்று பள்ளிப் படிப்பை மாணவர்கள் மேற்கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இவ்வாறு பிற மாநிலங்களுக்குச் சென்று பிளஸ்1, பிளஸ் 2 படித்து வரும் மாணவர்களுக்கு தமிழகத்தில் உயர் கல்வி படிக்க மாநில ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிப்பதற்கு கல்வியாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

'உண்மை தன்மை சான்றிதழ்' தாமதத்தால் ஆசிரியர்கள் தவிப்பு

ஆசிரியர்களுக்கு உண்மை தன்மை சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால் பணப் பலன்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.தமிழகத்தில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் 40 ஆயிரத்து 500 பேர் உள்ளனர். இவர்களுக்கு 2006 ஜூன் 1ல் காலமுறை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

விரைவில் ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு

ADW SGT 30% POSTINGS JUDGEMENT

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
( Special Original Jurisdiction )
Monday, the Eighteenth day of April Two Thousand Sixteen
PRESENT
The Hon`ble Mrs Justice PUSHPA SATHYANARAYANA
WP(MD) No.16547 of 2014
S.RAMAR ... PETITIONER
Vs

பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு கண்காணிக்க மத்திய குழு வருகை

தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கான 25 சதவீத இட ஒதுக்கீடுமுறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, விருதுநகரில் மத்திய அரசு அலுவலர்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.

இன்ஜி., கவுன்சிலிங் நாளை துவக்கம்

சென்னை அண்ணா பல்கலையில், இன்ஜி., படிக்கவிண்ணப்பித்துள்ள, 1.31 லட்சம் பேருக்கான கவுன்சிலிங், நாளை துவங்க உள்ளது. முதற்கட்டமாக, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, நாளை கவுன்சிலிங்நடக்கும்.

இன்ஜி., 'ரேங்க்' பட்டியலிலும்கேரள மாணவி முதலிடம்


 கேரள மாநிலம், மூவாட்டுப்புழாவில் வசிக்கும் மாணவி அபூர்வா தர்ஷினி, முதலிடம் பிடித்தார்.

மருத்துவ கல்லூரி டாக்டர்கள் இடம் மாற இன்று கலந்தாய்வு

மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கான, ஐந்து நாள் இட மாறுதல் கலந்தாய்வு, மருத்துவக்கல்வி இயக்ககத்தில், இன்று துவங்குகிறது.தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகள், அதைச் சார்ந்த மருத்துவமனைகள் உள்ளன.

2015 ன் படி உயர், மேல்நிலைப் பள்ளிகளில் ஒதுக்கப்படும் பாடவேளைகள் - RTI தகவல்

TAMIL UNIVERSITY *B.Ed 2016 COUNSELLING TWO DAYS 28.06.16 & 29.06.16 *B.Ed 2016 SELECTION LIST PUBLISHED

TAMIL UNIVERSITY

*B.Ed 2016 COUNSELLING TWO DAYS 28.06.16 & 29.06.16

*B.Ed 2016 SELECTION LIST PUBLISHED

VISIT THE WEBSITE www.tamiluniversity.ac.in

பல்கலை.,மானிய குழு விதிமுறையில் மாற்றம்: மனித வள அமைச்சகம்

புதுடில்லி: பல்கலை கழக மானிய குழு விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்தி குறி்பபில் : மாணவர்களின் கல்வி தரத்தை மெம்படுத்துவதற்காக வெளிநாட்டு கல்வி நிறுவனத்துடன் இணைந்து யு.ஜி.சி. செயல்படும். யு.ஜி.சி.,க்கு கீழ் செயல்படும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவர் என தெரிவித்துள்ளது.

காப்பீட்டுக் கணித அறிவியல் - புதிய படிப்பு அறிமுகம்

சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்தில் இன்சூரன்ஸ் துறையில் வேலை வாய்ப்புகள் பெறும் வகையில் காப்பீட்டுக் கணித அறிவியல் என்ற புதிய பட்டப்படிப்பைத் தொடங்கி உள்ளது.

இதுதொடர்பாக அப்துர்ரகுமான் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கணிதவியல், புள்ளிவிவரவியல்,பொறியியல், வணிகவியல்,பொருளாதாரம் பயின்ற பி.எஸ்.சி, பி.காம், பி.ஏ. பட்டதாரிகள் இந்தப் படிப்பில் சேரலாம். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு காப்பீட்டு நிறுவனங்கள்,நிதி முதலீடு ஆலோசனை மற்றும் மேலாண்மை நிறுவனங்கள்,பணி ஓய்வு,வங்கிகள், மருத்துவமனைகள் ஆகிய துறைகளில் உடனடியாக வேலைவாய்ப்புகளைப் பெறவும், அதிக சம்பளம் பெறவும் மிகுந்த வாய்ப்புள்ளது.

காப்பீட்டு கணித அறிவியல் பட்டதாரிகள் சொந்தமாகவும் தொழில் தொடங்க முடியும்.

இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலான தொழில் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனத்தையும் தொடங்கி பயன் பெறலாம்.

நான்கு செமஸ்டர் படிப்புகளைக் கொண்ட காப்பீட்டு கணித அறிவியல் படிப்பை நிறைவு செய்யும்போது முழுமையான தொழில் பயிற்சி பெற்று, வேலை பெறும் தகுதியானவர்களாக திகழ முடியும்.

மும்பையில் உள்ள காப்பீட்டு கணித அறிவியல் கழகம் பிளஸ்-2 தேர்வில் கணித பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தி வருகின்றது.

தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் இந்தியாவெங்கும் சில கல்லூரிகள் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுவரும் இளநிலை காப்பீட்டு கணித அறிவியல் பட்டப்படிப்பிலும், பின்னர் முதுநிலை காப்பீட்டு கணித அறிவியல் பட்டப்படிப்பிலும் சேர முடியும்.

தமிழ்நாட்டில் பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள காப்பீட்டு கணித அறிவியல் படிப்பில் சேர விரும்புகிறவர்கள் தொலைபேசி எண் 044-22759200, செல்லிடப்பேசி எண் 9444182227 மூலம் தொடர்பு கொள்ளலாம்.

குழந்தைகளைத் தேடும் நூலகம்

புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இன்று படிப்படியாக மறைந்துவருகிறது. நூலகம் போவதும் சிறுவர் சிறுமிகளிடம் குறைந்துவருகிறது. அவர்கள் எப்போதும் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் கேம்ஸ்களிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். வாசிப்புப் பழக்கத்தைக் குழந்தைகளிடம் ஏற்படுத்த என்ன வழி என்று சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த கோபி யோசித்தார். அதன் விளைவு நடமாடும் நூலகம்!

அதென்ன நடமாடும் நூலகம்? தெருவில் காய்கறி, ஐஸ் போன்ற உணவுப் பொருட்களை வண்டியில் வைத்துக்கொண்டு விற்று வருவார்களே, அதுபோலத்தான் இதுவும். ஒரு வேன் நிறைய அலமாரிகள் அமைத்து நூல்களுடன் தெருக்களைச் சுற்றி வருகிறார் கோபி. ஐஸ்கிரீம் வண்டியைப் பார்த்தால் எப்படித் துள்ளிக்குதித்துச் சிறுவர்கள் வருவோர்களோ, அதேபோல நடமாடும் நூலக வண்டியைப் பார்த்ததும் சிறுவர் சிறுமிகள் ஆர்வத்தோடு ஓடுகிறார்கள்.இப்படி பெரிய நகரான சென்னையை ஒவ்வொரு பகுதியாகச் சுற்றி வருகிறார் இவர். ஒவ்வொரு மாதமும் எப்படியும் ஒவ்வொரு பகுதிக்கும் கோபி சென்றுவிடுவார். தெருக்களைச் சுற்றும் அதேவேளையில், நாம் கேட்ட நேரத்தில் நம் வீட்டு முன்னே வந்தும் இந்த நூலகம் நிற்கும். சென்னையைச் சுற்றி வருவது எவ்ளோ கஷ்டம். அப்படியிருக்க எதற்காக இந்த நடமாடும் நூலகம்? இதுபற்றிக் கோபியிடம் கேட்போமா?

“நான் நூலகப் படிப்பு படித்தவன். கடந்த 15 வருடங்களாக ஹிக்கின்பாதம்ஸில் வெளிநாட்டுப் பத்திரிக்கைகளைப் பராமரிக்கும் வேலை பார்த்தேன். என் குழந்தைகளுக்கு நிறைய புத்தகங்களை வாங்கிக்கொடுப்பேன். ஒரு கட்டத்தில் என் வீட்டில் மலைப்போல் புத்தகங்கள் குவிந்துவிட்டன. என் பிள்ளைகள் மட்டுமல்லாமல் எல்லோரும் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கே.கே. நகரில் ‘புக் வார்ம்ஸ்’ என்ற பெயரில் நூலகம் தொடங்கினேன்” என்று சொன்னார்.

முதலில் நூலகமாகத் தொடங்கிய இவர், பலரும் கேட்டதால் நடமாடும் நூலகத்தைத் தொடங்கியிருக்கிறார். “கே.கே.நகரிலிருந்து வேறு இடங்களுக்கு வீடு மாறியவர்கள், அந்தந்தப் பகுதிகளில் நல்ல நூலகங்கள் இல்லை என்று என்னிடம் குறைப்பட்டார்கள். அவர்களது குறையைத் தீர்க்க, நடமாடும் நூலகத்தைத் தொடங்கினேன். இப்போது எனக்கு ஒரு போன் போட்டால் போதும், அவரவர் வீடு தேடிப் புத்தகம் வரும்” என்கிறார்.

இந்த நடமாடும் நூலகத்தில் பெரும்பாலும் குழந்தைகள் புத்தகம்தான். இந்த நூலகத்தில், பதிவு செய்தவர்கள் மாதம் ஒரு முறை 10 புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம். ஒரு மாதத்துக்குப் பிறகு புத்தகங்களைத் திரும்பித் தந்துவிட வேண்டும். ஜெரோநிமா ஸ்டின்சன், கூஸ்பம்ஸ் புத்தகங்கள், சிறுவர் நாவல்கள், அறிவியல் நூல்கள், வரலாற்று புத்தகங்கள் எனப் பல புத்தகங்கள் இங்குக் குவிந்து கிடக்கின்றன.

என் குழந்தை புத்தகங்களே படிப்பதில்லை என்று சலித்துக்கொள்ளும் பெற்றோரும், நூலகம் தூரமாக இருப்பதால் போக முடியவில்லை என்று வருத்தப்படும் குழந்தைகளும் கவலையேபட வேண்டாம். ஒரு போன் செய்தால் போதும், சிறுவர் புத்தகங்கள் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.

நடமாடும் நூலகர் கோபியைத் தொடர்புகொள்ள: 9841028327

பல்கலை.,மானிய குழு விதிமுறையில் மாற்றம்: மனித வள அமைச்சகம்

புதுடில்லி: பல்கலை கழக மானிய குழு விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்தி குறி்பபில் : மாணவர்களின் கல்வி தரத்தை மெம்படுத்துவதற்காக வெளிநாட்டு கல்வி நிறுவனத்துடன் இணைந்து யு.ஜி.சி. செயல்படும். யு.ஜி.சி.,க்கு கீழ் செயல்படும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவர் என தெரிவித்துள்ளது.

தனியார் இன்ஜி., கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை எச்சரிக்கை

அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகளின், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலையில் ஒற்றை சாளர முறையில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இந்த கவுன்சிலிங்கில் மாணவர்கள், தங்களுக்கான பாடப்பிரிவு மற்றும் கல்லுாரிகளை தேர்வு செய்ய வசதியாக, கல்லுாரிகளின் செயல்திறன் தேர்ச்சி பட்டியலை வெளியிட, இரு ஆண்டுகளுக்கு முன், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, இந்த ஆண்டும் இன்ஜி., கல்லூரிகளின் செயல்திறன் மற்றும் தேர்ச்சி சதவீத தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிக தேர்ச்சி பெற்ற கல்லுாரிகள், குறைந்த தேர்ச்சி பெற்ற கல்லூரிகளுக்கு எதிராக பிரசாரம் செய்வதாகவும், தேர்ச்சி சதவீதத்தை, தங்களது நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கு, வணிக ரீதியாக பயன்படுத்துவதாகவும், அண்ணா பல்கலைக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து, அண்ணா பல்கலையின் தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி உமா, தனியார் இன்ஜி.,

கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மாணவர் தேர்ச்சியை அடிப்படையாக கொண்டு, கல்லுாரிகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், சில கல்லுாரிகள், இந்த பட்டியலை வணிக நோக்குக்காக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அவ்வாறு ஈடுபடுவது, விதிகளுக்கு முரணானது. எந்த கல்லூரியாவது இப்படி செயல்படுவது தெரியவந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்துள்ளார்.

குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தர புது ஆப்ஸ்

குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தர புது ஆப்ஸ்
மற்றும் ஒளி வடிவில் ஆரம்பநிலை பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கற்றுத்தர புதிய ஆப்ஸ் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை சரியாக அடையாளம் காணவும், அவற்றை சரியாக உச்சரிக்கவும் இந்த ஆப்ஸ் உதவ உள்ளது.

247 தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள் மற்றும் அவற்றை உச்சரிக்கும் ஆடியோக்களுடன் இந்த ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் போனின் ஸ்க்ரீனிலேயே எழுத்துக்களை அழிக்கவும், சரியாக எழுதவும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இது தொடர்பாக இந்திய கல்வித்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் பக்தாச்சலம் கூறுகையில், தமிழகத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் 40 சதவீதம் மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை சரியாக கண்டறிய தெரியாதவர்களாகவும், அவற்றை சரியாக உச்சரிக்க தெரியாதவர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த குறைபாட்டை போக்குவதற்கு இதுவரை எந்த ஆப்ஸூம் இல்லாமல் இருந்தது. இதனால் ஒலி-ஒளி வடிவில் இந்த ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக இந்த ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கூகுள் பிளேஸ்டோரில் ஜூலை 4ம் தேதி முதல் ரூ.50 க்கு இந்த ஆப்சை பெறலாம்.

இந்த ஆப்ஸ் பிரபலப்படுதஅதுவதற்காக தமிழகத்தில் உள்ள 800 பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளி ஆசிரியர்களிடம் கூறி, மாணவர்களின் பெற்றோர்கள் இந்த ஆப்ஸ் டவுன்லோட் செய்து, அதன் மூலம் வீட்டில் எளிய முறையில் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக் கொண்டும்படி அறிவுறுத்தப்பட உள்ளது.

இந்த புதிய ஆப்ஸ்க்கு சுட்டி தமிழ் அறிச்சுவடி என பெயரிடப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கு அவர்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும், தமிழ் கற்றுத்தர அவர்களுக்கு தேவையான வசதிகளை இந்த ஆப்ஸ் மூலம் செய்து தரவும் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எந்தெந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எப்போது கலந்தாய்வு? - அண்ணா பல்கலை. இணையதளத்தில் வெளியீடு

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது. மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் www.annauniv.edu தங்கள் விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு தங்களின் தரவரிசையை தெரிந்துகொள்ளலாம்.

விளையாட்டுப் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வை தொடர்ந்து பொது கலந்தாய்வு ஜூன் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 21-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

எந்தெந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எப்போது, எந்த நேரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும்? என்ற பட்டியல் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டது. இதன்மூலம், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களுக்கான கலந்தாய்வு நாள், நேரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ளலாம்.

கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதம் யாருக்கும் தபால் மூலம் அனுப்பப்படாது. மாணவர்கள் அழைப்புக்கடிதத்தை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!