எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!





Wednesday, 29 June 2016
புத்தகமில்லா பள்ளி நாளைக் கொண்டாடிய மாணவர்கள்
புத்தகப்பைகளைச் சுமக்காமல் வெறும் கைகளுடன் பள்ளிக்குவந்து புத்தகமில்லா நாளை உற்சாகத்துடன் மாணவ, மாணவிகள் இன்று கொண்டாடினர்.
புத்தகங்கள்தான் அறிவை விரிவடையச்செய்கிறது. புத்தகங்களால் ஓய்வு நேரத்தையும் பயனுள்ளதாக்கிக் கொள்ள முடியும். எச்சந்தர்ப்பத்திலும் நம்மை விட்டுப் பிரியாத நண்பர்கள் புத்தகங்களே. புத்தகங்கள் அலங்காரப்பொருளாக இல்லாமல் அறிவைப் பெருக்கும் பொருளாக மாற வேண்டும். மாணவர்களின் அறிவுத் தாகத்தை திணிப்பதும் புத்தகங்கள்தான். இவ்வாறு பல வழிகளில் புத்தகங்கள் நம்மால் உணரப்பட்டுள்ளன.இந்நிலையில், ஒரு நாள் முழுதும் புத்தகங்களே இல்லாமல் ஒரு நாளை பள்ளி மாணவர்கள் கொண்டாடியதை வித்தியாசமான நிகழ்வாகப் பார்க்க முடிந்தது.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் வெங்கடேஸ்வரா மேனிலைப்பள்ளியில் இன்று மாணவ, மாணவியர் பள்ளிக்கு பாட புத்தகங்கள் இல்லாமல் வருகை தந்து சக மாணவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள் எல்.கே.ஜி முதல் மேல்நிலை படிக்கும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடிக் கொண்டனர்.புத்தகமில்லாத் தினத்தையொட்டி களக்கமங்கலம் சக்திவேல்குழுவினரின் இசைப்பாடல்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாணவர்களும் ஆடிப்பாடி புத்தகமில்லா தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுடன் மாணவர்கள் அமர்ந்து ஒருவருக்கொருவர் உரையாடிக்கொண்டும், கதை பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும், கவிதைகள் பாடல்கள் பரிமாறிக் கொண்டும் ஆனந்தமடைந்தனர்.
சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.
சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூன் 30) வெளியிடப்பட உள்ளன.2016 ஏப்ரலில் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான இந்தத் தேர்வு முடிவுகளை www.result.unom.ac.in, www.ideunom.ac.in, http:egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
மறுமதிப்பீடு:
தேர்வு மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஜூலை 1-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை பல்கலைக்கழக இணையதளத்தில் ஆன்-லைனில் பதிவு செய்து, அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ரூ. 1,000-க்கான வங்கி வரைவோலையை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
மறுகூட்டல்:அதுபோல, மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களும், ஆன்-லைனில் பதிவு செய்த விண்ணப்பத்துடன் ரூ. 300-க்கான வங்கி வரைவோலையை இணைத்து ஜூலை 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஜூலை 23-இல் உடனடித் தேர்வு:இளநிலை பட்டப் படிப்பில் 5-ஆவது பருவத் தேர்வு வரை அனைத்துப் பாடங்களில் தேர்ச்சி பெற்று, 6-ஆவது பருவத் தேர்வில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியுற்றவர்கள் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.அதுபோல முதுநிலை பட்டப் படிப்பில் 3-ஆவது பருவத் தேர்வுவரை அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று, 4-ஆவது பருவத் தேர்வில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியடைந்தவர்களும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தொழில் படிப்பு மாணவர்களும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களைச்சமர்பிக்கவும் ஜூலை 8 கடைசித் தேதியாகும்.இந்த உடனடித் தேர்வு சென்னையில் மூன்று மையங்களில் ஜூலை23-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்வறை அனுமதிச் சீட்டை ஜூலை 18-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"வாழைப்பூ-மருத்துவக் குணங்கள்"
இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.
நம் முன்னோர்கள் வாழையை பெண் தெய்வமாக வழிபட்டனர். மணவிழா, மங்கள விழாக்களில் வாழை முக்கிய இடம்பெற்றிருக்கும். வாழையின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டுள்ளன.
இனி மாணவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு மதிப்பு இருக்குமா...!?
நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1200க்கு 1180 மதிப்பெண் பெற்று இருக்கிறீர்களா...? ஆனால், உங்களுக்கு இளங்கலை ஆங்கிலம் படிக்க தான் விருப்பமா...? நல்லது. ஆனால், அந்த மதிப்பெண்ணை தூர வையுங்கள். இன்னும் சில ஆண்டுகளில் அது உங்களுக்கு பயன்படாமல் போகலாம்.
ஆம். நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிபெண்கள் பெற்றிருந்தாலும், நீங்கள் உயர் கல்வியில் சேர இன்னொரு தகுதிதேர்வு எழுத வேண்டும். அதில் வெற்றி பெற்றால் தான், நீங்கள் விரும்பிய படிப்பைபடிக்க முடியும்.என்ன... கலை படிப்பில் சேர தகுதி தேர்வா? மருத்துவத்திற்கே தகுதி தேர்வு கூடாது என போராடி வரும் சூழலில், கலை படிப்பிற்கு ஏன் தகுதி தேர்வு? உளறாதீர்கள் என்கிறீர்களா. இல்லை நான் உளறவில்லை. புதிய கல்வி கொள்கையை வடிவமைப்பதற்காக வழங்கப்படுள்ள சுப்பிரமணியன் குழு அறிக்கையில் அவ்வாறு தான் உள்ளது.அந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டால், நிச்சயம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பின், நீங்கள் என்ன படிப்பு படிக்க விரும்பினாலும், அதற்கான தனி தகுதி தேர்வு எழுத வேண்டி நிலை வரும்.
புதிய கல்விக் கொள்கை...:
அண்மையில் பீகார் கல்வி அமைச்சர், இந்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் சமூக ஊடகத்தில் ‘டியர், புதிய கல்விக் கொள்கையை எப்போது வெளியிடப்போகிறீர்கள்..?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.ஆனால், துரதிருஷ்டமாக புதிய கல்விக் கொள்கை என்ற சொற்றொடர் கவனம் பெறாமல், டியர் என்ற சொல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பெரும் விவாதமாக மாறியது. சரி, நாமாவது புதிய கல்விக் கொள்கை மீது கொஞ்சம் கவனம் செலுத்துவோம்.
இந்தியாவின் அடுத்த தலைமுறையின் தலையெழுத்தை நிர்ணயக்க போவது இந்த புதிய கல்விக் கொள்கை தான். இந்தியாவின் கல்வி துறை எத்திசையில் பயணிக்க வேண்டும் என்பதை வழிக்காட்ட போவதும் இந்த புதிய கல்விக் கொள்கை தான்.இதற்காக மத்திய அரசு முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து இருக்கிறது.இந்த குழுவின் பணி, நாடு முழுவதும் பயணித்து மக்களை, ஆசிரியர்களை, கல்வியலாளர்களை சந்தித்து, அவர்களின் கருத்தை கேட்டு அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசிடம் வழங்க வேண்டும்.அதன் அடிப்படையில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும். சுப்பிரமணியன் குழு அறிக்கையை சமர்பித்துபல மாதங்கள் ஆகியும் இன்னும் மத்திய அரசு அதை வெளியிடாமல் இருக்கிறது. ஆனால், அந்த 230 பக்க அறிக்கையை பொதுபள்ளிக்கான மாநில மேடை அமைப்பு எப்படியோ கைப்பற்றி, தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
என்ன இருக்கிறது அந்த அறிக்கையில்...?
அந்த அறிக்கை குறித்து பொதுபள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசிய போது, “அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தும், கல்வித் துறையில் மாநில அரசின் அதிகாரத்தை குறைப்பதாகவே இருக்கிறது.அதாவது, இந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ள பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், மத்திய அரசு தான் கல்வி குறித்த முடிவுகளை எடுக்கும். அதை செயல்படுத்தும் அதிகாரம் மட்டும் தான் மாநில அரசிற்கு இருக்கும்.அதுமட்டுமல்லாமல், மாநில அரசின் அதிகாரம் நகைப்பிற்குரியதாகவும் மாறும். மாநில அரசால் வைக்கப்படும் தேர்வுகளுக்கு மதிப்பில்லாமல் போகும்.பன்னிரெண்டாம் வகுப்பில் மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும், அதற்கு எந்த மதிப்பும் இருக்காது. எந்த படிப்பில் சேர வேண்டுமென்றாலும், அதற்கான தனி தகுதி தேர்வு இருக்கும். அதில் வெற்றிபெற்றால் தான், மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான படிப்பில் சேர முடியும்” என்றவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்,
சரி.. இந்த அறிக்கை எப்படி தயார் செய்யப்பட்டது?
இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், வட்ட அளவில் கூட்டங்கள்நடத்தி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியலாளார்கள் ஆகியோரிடம் கருத்து கேட்டு, இந்த அறிக்கையை தயார் செய்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அப்படி அவர்கள் யாரையும் சந்தித்து கருத்து கேட்டதாக தெரியவில்லை.கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில்ஏறத்தாழ 20,000 பேரை சந்தித்து, இந்த புதிய கல்வி கொள்கை குறித்து உரையாடினோம்.அவர்களிடம் புதிய கல்வி கொள்கை குறித்து உங்களிடம் ஏதேனும் கருத்து கேட்கப்பட்டதாஎன்று கேட்டோம். ஆனால், அவர்கள் யாருக்கும் புதிய கல்வி கொள்கையை இந்தியா வடிமைக்கிறது என்பதே தெரியவில்லை. அதாவது யாரிடமும் கருத்துக் கேட்கப் படவில்லை.
யாரிடமும் கருத்துக் கேட்கபடவில்லையா ?
மத்திய அரசிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் வேண்டுமானால் கருத்து கேட்கப்பட்டிருக்கலாம். அந்த குழு, மக்களின் கருத்தை கேட்க தான் வடிவமைக்கப்பட்டது. ஆனால், அவர்கள் மக்களைசந்தித்து கருத்து கேட்கவில்லை. மக்களின் கருத்தை பெறாமல் ஒரு புதிய கொள்கையை வடிவமைப்பது ஜனநாயக படுகொலை.
இந்த அறிக்கையில் வேறு என்ன பரிந்துரைகள் இருக்கிறது ?
அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்று அனைவரும் குரல் கொடுத்து வரும்பட்சத்தில், இந்த அறிக்கை அதிகாரம் முழுவதையும் மத்திய அரசின் கைகளில் திணிக்கிறது. மத்திய அரசின் விருப்பமும் அதுவாக தான் இருக்கிறது.
கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா...?
இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, புதியகல்விக் கொள்கை வடிவமைக்கப்படும்பட்சத்தில், மத்திய அரசு உருவாக்கும் பாடத்திட்டத்தை, மாநில அரசுபின்பற்றும் நிலை ஏற்படும். இந்தியா பல இனங்கள், பல கலாச்சாரங்களை கொண்ட நாடு. வடகிழக்கில் உள்ள கலாச்சாரம் வேறு, தமிழ் நாட்டின் கலாச்சாரம் வேறு.இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், மத்திய அரசு உருவாக்கும் பாடத்திட்டத்தை மாநிலங்கள் பின்பற்ற வேண்டுமென்று கட்டாயப்படுத்தினால், விளைவுகள் படுமோசமானதாக இருக்கும். இது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும், அரசியல் அமைப்பிற்கும் எதிரானது.கல்வி நிர்வாகப் பணிக்கு ‘இந்திய கல்வி பணித் தேர்வு (IES)’ என்ற பரிந்துரையையும்வழங்கப்பட்டு இருக்கிறது. அதாவது, இனி கல்வி துறையை நிர்வகிப்பதில் கல்வியாளர்களின் பங்களிப்பு என்பது குறைந்து, நிர்வாகிகளின் பங்களிப்பு அதிகமாகும்.புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்டுள்ள சுப்பிரமணியன் குழுவே முழுக்க நிர்வாகிகளை கொண்ட குழுவாக தான் இருக்கிறது. அதில் உள்ள ராஜ்புட் ஒருவரை தவிர மற்ற யாரும் கல்வியாளர்கள் இல்லை.கல்வியாளர்கள் பெரும்பான்மையாக இல்லாத ஒரு குழு கல்வி குறித்த ஒரு கொள்கையை வடிவமைத்தால் இப்படி தான் இருக்கும்.
நம் கோரிக்கைகள் என்ன...?
மத்திய அரசு வெளிப்படையாக செயல்பட வேண்டும். உடனடியாக இந்த குழுவின் அறிக்கையை வெளியிட்டு, கல்வியலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோருடன் விவாதம் நடத்தி, அவர்களின் கருத்தினை இப்போதாவது பெற வேண்டும் என்பது தான் நமது பிரதான கோரிக்கை. அது மட்டுமல்ல, கல்வித் துறையில் மாநிலத்தின் அதிகாரங்கள் முழுவதுமாக பறிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அதனால் மாநில அரசும் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
நன்றி-விகடன்
- மு. நியாஸ் அகமது
Flash News:7ஆவது ஊதியக்குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.இனி மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப ஊதியம் ரூ.18,000.
தில்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
7வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படுகிறது.ஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அமைச்சரவை செயலர் பி.கே. சின்ஹா தலைமையிலான செயலர் குழு இறுதி செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நிதி அமைச்சகம் அமைச்சரவைக் குறிப்பைத் தயார் செய்தது.
இதையடுத்து, ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு இன்று புது தில்லியில்நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.7-ஆவது ஊதியக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் அடிப்படையில், அதன் பரிந்துரைகள் சென்ற ஜனவரி 1-ஆம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படும். இதனால், 50 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 58 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர்.7வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவதால், மத்தியஅரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதலாக செலவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 0.7 சதவீதம்.7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 14.27 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியில் சேரும் அறிமுக நிலை பணியாளருக்கான மாத ஊதியம் தற்போதைய ரூ.7,000-லிருந்து, ரூ.18,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், அமைச்சரவை செயலரின் அதிகபட்ச மாத ஊதியம் தற்போதைய ரூ.90,000-லிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கல்விக்கடன்: வங்கிகள் இந்த ஆண்டுமுதல் புதிய அணுகுமுறை.
7th Pay:மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அமைச்சரவை இன்றுஒப்புதல் அளிக்கிறது?
போட்டித் தேர்வு மூலம் 272 விரிவுரையாளர்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.
பயிற்றுநர்களுக்கான பயிற்சி தொடக்கம்.
மேலும் 220 பள்ளிகளில் "ஸ்டெம்' பயிற்சித் திட்டம்.
ஜூலையில் 11 நாள்கள் வங்கிகள் செயல்படாது...
சித்தா, ஆயுர்வேதாவுக்கு 541 விண்ணப்பம்.
சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் நாளை கடைசி நாள்.
மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து இன்று...முடிவு! பேச்சுக்கு அரசு அழைத்தால் வாபஸ் வாங்க சங்கங்கள் தீவிரம்
மனித ஆற்றல் தரவரிசை: பின்லாந்து முதல் இடம், இந்தியாவுக்கு 105-வது இடம்
மனித ஆற்றலை உருவாக்கி, வளர்த்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது, இந்தியா பின்தங்கி, 105-வது இடத்தில் உள்ளது.
தியான்ஜின்:
மனித ஆற்றலை உருவாக்கி, வளர்த்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது, இந்தியா பின்தங்கி, 105-வது இடத்தில் உள்ளது.
சீனாவின் தியான்ஜின் நகரத்தில் உலகப் பொருளாதார அமைப்பின் ஆண்டுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் பொருளாதார வளர்ச்சிக்காக மனிதர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ளுதல், ஒட்டுமொத்த வளர்ச்சி அடைய நாடுகளின் திறமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மனித ஆற்றல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
மொத்தம் 130 நாடுகளிடையே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், பொருளாதார வளர்ச்சிக்கு மனித வளத்தை அதிக அளவில் (85 சதவீதம்) பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளில் முதல் இடத்தை பின்லாந்து பிடித்துள்ளது. நார்வே இரண்டாம் இடத்தையும், அதற்கடுத்த இடங்களை ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், நியூஸிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, கனடா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளும் பிடித்து, இப்பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளன.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 100-ஆவது இடத்தைப் பிடித்த இந்தியா, இந்த ஆண்டு 105-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இந்தியா 57 சதவீத அளவுக்கு மட்டுமே மனித ஆற்றலைப் பயன்படுத்தியுள்ளதாக உலகப் பொருளாதார அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் கூறப்பட்டது.