Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 30 June 2016

மாணவர்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் கணக்குகளை தொடங்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது: போலீஸ் அறிவுரை

மாணவ–மாணவிகள் வாட்ஸ்-அப், பேஸ்புக் கணக்குகளை தொடங்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என்று சேலம் போலீஸ் கமி‌ஷனர் அறிவுருத்தியுள்ளார்.

கொண்டலாம்பட்டி:

சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்தும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் தங்களது குழந்தைகளுக்கு தனியாக வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் கணக்குகளை தொடங்கி பயன்படுத்த அனுமதிப்பதால் முன்பின் தெரியாத நபர்கள் இணையதளம் மூலமாக தொடர்பு கொண்டு நமது குழந்தைகளிடம் நயவஞ்சகமான முறையில் நல்லவர்களை போல தகவல்கள் பரிமாற்றம் செய்து, ஆபாச படங்களை காட்டி, அதுபோல ஜாலியாக இருக்கலாம் என்பது போன ஆசையை காட்டி, திருமண ஆசையை ஏற்படுத்தி திருமணம் செய்து கொள்வதாக கூறி தனிமையில் சந்திக்கலாம் என்று அழைத்து அவர்களுக்கு தெரியாமல் அவர்களை ஆபாச படம் எடுத்து, அவற்றை காட்டி மிரட்டியும் இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள்.

அல்லது விபசாரத்தில் ஈடுபடுத்தி அவர்களது வாழ்க்கையை சீரழித்து விடுவர். எனவே தங்கள் குழந்தைகளுக்கு வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் கணக்குகளை துவக்காமல் இருப்பது நல்லது.

மேலும் பொதுமக்களும், முன்பின் தெரியாமல் வரும் நபர்களிடம் இருந்து வரும் பதிவுகளை விருப்பம் தெரிவிக்காமல் இருப்பது நல்லது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் தேவையில்லாத பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். குழந்தைகளுக்கு இணையதள வசதியை பயன்படுத்துகின்ற வகையில் உள்ள செல்போன்களை வாங்கிதர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை குறைவு

பெட்ரோல் லிட்டருக்கு 89 பைசாவும், டீசல் லிட்டருக்கு 49 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தை விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

இந்த விலை குறைவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ALAGAPPA UNIVERSITY GENERAL INSTRUCTION FOR COUNSELLING (B.Ed.-DDE-ACADEMIC YEAR 2016-17)

ALAGAPPA UNIVERSITY GENERAL INSTRUCTION FOR COUNSELLING (B.Ed.-DDE-ACADEMIC YEAR 2016-17)

2015-16 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற CRC நாட்களின் ஈடுசெய் விடுப்பு காலாவதியாகும் நாளின் விவரம்.


DSE : HIGHER SECONDARY HEAD MASTER PANEL FOR THE YEAR 2016 - 2017

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை:சென்னையில் 10, 12-ம் வகுப்பு மற்றும் பட்டதாரிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாத 2 மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித்தகுதிகளோடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள், பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வருபவராகவும் இருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவு வெளியீடு.

SSLC March - 2016 - Retotal Mark Changed Roll No Details click here ...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுக்கூட்டல் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.மாணவர்கள் மறுகூட்டல் மதிப்பெண் பட்டியலை www.tndge.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"ஆரோக்கியத்துக்கு உதவும் வில்வம் இலை, காய், பழம்!"

நம் உணவில் பல சத்துக்கள் குறைவாக இருக்கின்றன. இந்தக் குறையை ஈடு செய்யக் கூடிய பழவகைகளை நாம் அடிக்கடி சேர்த்துக் கொள்ள முடிவதில்லை. காரணம், அவற்றின் விலை உயர்ந்திருப்பதுதான். ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள் தாம் உயர்ந்த சத்துள்ளவை என்று நினைக்கிறோம். இது உண்மையல்ல. உள்ளூரிலேயே எத்தனையோ பழங்களில் இந்த மாதிரி சத்துக்கள் நிரம்ப இருக்கின்றன. அந்தப் பழங்கள் சாதாரணமாக எங்கும் எப்பொழுதும் கிடைக்கக்கூடியவை. அவற்றில் ஒன்று வில்வப்பழம்.

ஹெல்மெட் அணியா விட்டால் பெட்ரோல் கிடைக்காது!

கேரளாவில் ஹெல்மெட்  அணியாவிட்டால், வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில், வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல்,ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது.

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு.

சென்னை:சென்னை பல்கலைக்கழகத்தில், இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஏப்ரல் மாதத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற் படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிட்டுள்ளன.

7Pay HRA Table(Your Revised House Rent Allowance)

7th Pay Commission Fitment Table


மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி அளிக்கலாமா? என்பது குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை இணையதளத்தில் மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.

 முன்னாள் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான குழு அண்மையில் சமர்ப்பித்த அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிளஸ் 2-வில் ஆங்கில வழி; பி.இ.யிலோ தமிழ்..!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆங்கில வழி பாடத் திட்டத்தில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சிலர், அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்பதற்காகவே தமிழ் வழி படிப்பை தேர்வு செய்திருக்கின்றனர்.பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் படித்து வரும் மாணவர்கள்பொறியியல் படிப்புகளில் சேரும்போது, ஆங்கில வழியில் பாடங்களைப் படிக்க முடியாமல் திணறினர்.

ஜூலை 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: இந்திய ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு.

அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செய லாளரும், மத்திய அரசு ஊழியர் போராட்டக்குழு உறுப்பினருமான ஸ்ரீ.ஸ்ரீகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:

யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணி

யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான 100 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு...யோகம் ! 7வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் உள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதிய உயர்வுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்தாண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து, முன்தேதியிட்டு, இது அமலுக்கு வருகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியங்கள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தி அமைக்கப்படுகிறது. முதல் ஊதியக் குழு, 1946ல் உருவாக்கப்பட்டது. கடைசியாக,கடந்த, 2006ல், 6வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு, 2008ல், நடைமுறைக்கு வந்தது.நீதிபதி, ஏ.கே.மாத்துார் தலைமையிலான, ஏழாவது ஊதியக் குழு,கடந்த, 2013ல் அமைக்கப்பட்டது. இந்தக் குழு, தன் பரிந்துரையை, கடந்த ஆண்டு நவம்பரில் தாக்கல் செய்தது. பல்வேறு துறைகளின் அரசு செயலர்கள் குழு, இதை பரிசீலித்து, தன் அறிக்கையை, சமீபத்தில் மத்திய அரசிடம் அளித்தது.

SSA - Primary CRC16.07.2016SABL Training*Upper Primary CRC30.07.2016ALM Training. SPD PROCEEDING

உத்தரகாண்ட் மாநிலத்தில் திருவள்ளு

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டது.

புதுடெல்லி :

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டது.

திருக்குறள் மற்றும் திருவள்ளுவரை பற்றி வட மாநில மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் நகரில் கங்கை நதிக்கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று டெல்லி மேல்-சபை பாரதீய ஜனதா எம்.பி. தருண் விஜய் அறிவித்து இருந்தார். அதன்படி, அங்கு சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வந்தார். 
இதற்காக, தமிழகத்தில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை உருவாக்கப்பட்டு ஹரித்துவாருக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் அரிக்கிபவுடி என்ற இடத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் அங்கு சிலை நிறுவ அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
இதனால் சங்கராச்சாரியார் சவுக் என்ற இடத்தில் சிலையை நிறுவ ஏற்பாடு செய்தனர். இதற்கான பணிகள் நேற்று முன்தினம் இரவு அங்கு நடைபெற்ற போது சாமியார்கள் சிலர் வந்து, அந்த இடத்தில் சிலை வைப்பதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்த அரசு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது.

இதைத்தொடர்ந்து, ஹரித்துவாரில் உள்ள உத்தரபிரதேச அரசுக்கு சொந்தமான பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை வளாகத்தில் நேற்று திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநில கவர்னர் ராம் நாயக் சிலையை திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மேகாலயா கவர்னர் சண்முகநாதன், டெல்லி மேல்-சபை காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன், தருண் விஜய், இலங்கை இணை மந்திரி செந்தில் தொண்டைமான் மற்றும் ஏராளமான தமிழர்கள் கலந்துகொண்டனர். 

பின்னர் தருண் விஜய் கூறுகையில், விரைவில் சிலை நிறுவும் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு சிலை மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

ஐ.டி.ஐ.,களில் சேரும் மாணவர்களுக்கு...சலுகை

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு அரசு பல்வேறு சலுகைகளை கூறி அழைப்பு விடுத்துள்ளது. பெரும்பாலான மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பு முடித்தவுடன் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து மருத்துவம் அல்லது பொறியியல் பட்டதாரியாகவே விரும்புகின்றனர். ஒரு சில ஏழைக் குடும்பத்தில் உள்ள மாணவர்கள் தான் தொழிற்கல்வி படிக்கின்றனர்.

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பின்னடைவு ஏன் : பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கை பின்னணி

அண்ணா பல்கலையின் இன்ஜி., பொது கவுன்சிலிங் ஜூன், 27ல் துவங்கியது. இதில், விளையாட்டு பிரிவு, மாற்றுத் திறனாளிகள் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவுக்கான அரசு இட ஒதுக்கீடு இடங்களை தவிர, பொதுப்பிரிவுக்கு, 1.83 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான கவுன்சிலிங் நடந்த இரு நாட்களிலும், பெரும்பாலான மாணவர்கள், குறிப்பாக மாணவியர், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இ.சி.இ., எனப்படும், 'எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ்' துறையை தேர்வு செய்துள்ளனர்.
கவுன்சிலிங் துவங்கிய முதல் நாளிலேயே, சென்னை, அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டிலுள்ள, கிண்டி இன்ஜி., கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லூரி, அரசு உதவி பெறும் கோவை பி.எஸ்.ஜி., கல்லூரி, மதுரை தியாகராஜா கல்லூரி போன்றவற்றில் இந்த படிப்புகளுக்கான இடங்கள் நிரம்பி விட்டன. மற்ற முன்னணி கல்லூரிகளிலும், இ.சி.இ., மற்றும் கம்யூ., சயின்ஸ் இடங்கள் நிரம்பி விட்டன. அதேபோல், 'எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன்ஸ்' பிரிவிலும் மாணவர்கள் அதிக அளவில் சேர்கின்றனர். இ.சி.இ.,க்கு அடுத்தபடியாக, மெக்கானிக்கல் படிப்பில் மாணவர்கள் சேர்ந்தாலும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல், மெக்கானிக்கல் பிரிவுக்கு தற்போது அதிக போட்டி இல்லாத நிலை உள்ளது. எலக்ட்ரிக்கல் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ் துறைக்கும் பெரிய அளவில் போட்டி இல்லை.
மெக்கானிக்கல் படிப்பு பின்னடைவை சந்தித்ததற்கு, வேலை வாய்ப்பின்மையும், குறைந்த சம்பளமுமே காரணம் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: கம்யூட்டர் சயின்ஸ் அறிமுகமான பின், அதற்கான மவுசு அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த, 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இம்முறை மெக்கானிக்கல், சிவில் மற்றும் எலக்ட்ரிக்கலுக்கு அதிக போட்டி இல்லை. இந்த நிலைக்கு வேலைவாய்ப்பின்மையே காரணம். கடந்த கல்வியாண்டில், தரவரிசையில் முதலில் உள்ள, 50 கல்லுாரிகளில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் சார்ந்த தொழிற்சாலை நிறுவனங்கள், வெறும், 8 சதவீதம் மட்டுமே வேலை அளித்துள்ளன.
அடுத்த கட்டத்திலுள்ள கல்லுாரிகளில், 40 - 50 சதவீத மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். அவர்களுக்கு மாதம், 8,000 ரூபாய் தான் சம்பளம் கிடைத்தது. முதல் தர கல்லூரிகளில், ஐ.டி., நிறுவன வேலைவாய்ப்பில், 25 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் கிடைத்துள்ளது. அவற்றில் ஐ.டி., நிறுவனங்களே அதிக வேலைவாய்ப்பை அளித்துள்ளன. அதனால் தான், மெக்கானிக்கல் பின்னுக்கு தள்ளப்பட்டு, கம்யூ., சயின்ஸ் மற்றும் அதை சார்ந்த படிப்புகள் முன்னிலைக்கு வந்துள்ளன, என்றார்.

'குரூப் - 2 தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 2 ஏ' பிரிவு தேர்வில் தேர்வானவர்களுக்கு, அடுத்த மாதம், 4ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. தமிழக அரசு துறையில், குரூப் - 2 ஏ பிரிவில், நேர்முக தேர்வு அல்லாத பணிகளில், 1,676 காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.

7 வது ஊதியக் குழு பரிந்துரை பற்றிய செய்தி தொகுப்பு...

7 வது ஊதியக் குழு பரிந்துரையினை 29.06.2016 அன்று புதுடெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை அடிபிறழாமல் ஏற்பு செய்து ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.குறைநதபட்ச ஊதியம் ரூ 18,000 என்றும் அதிகபட்ச ஊதியம் 2.5 லட்சம் ஆகும்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!