Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 3 July 2016

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள்"

திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள்.

ஆரம்ப காலத்தில் அயல் நாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த தால் இதற்கு கிசுமுசுப் பழம் எனப் பெயரிட்டனர்.! பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயா சம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
***
மருத்துவக் குணங்கள்:

1. இதில் விட்டமின் மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.!*

2. உலர்ந்த திராட்சை உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப் பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது. மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர, தோலின் நிறத்தைப் பாதுகாப்புக்குரியதாக்கும்.
*
3. குழந்தைகளுக்கு எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கல்சியம்தான். கல்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது.
*
4. இரத்த விருத்திக்கு எலும்பு மச்சைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மச்சைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.!
5. உடல் வலி குணமாக பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.
*
6. கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.!
*
7. பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சினை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கஷாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும். மலச்சிக்கல் தீரமலச்சிக்கலே நோய்கள் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு காலம் நோயின்றி வாழலாம்.
*
8. வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் ஜீரண உறுப்புகள் வலு விழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சினை தீராது. இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும்.
*
9. குடற்புண் ஆறஅஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவறை புண்ணாக்கி விடுகின்றன.!இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்க வைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடற் புண்கள் குணமாகும்.
*
10. இதயத் துடிப்பு சீராக சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதற்றத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.
*
11. சுகமான நித்திரைக்கு தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.
*
12. தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்

மாணவர்களே இல்லாத அரசு பள்ளி


விரைவில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய நிர்ணயக்குழு??


ரயில் கட்டண சலுகைக்காக அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

ரயில் கட்டண சலுகைக்காக அடையாள அட்டையைப் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அப்பா - கல்வி வணிகத்திற்கு எதிரான ஓர் திரைப்படம்.


கல்வி வணிகத்திற்கு எதிரான ஓர் திரைப்படம்:தைரியலெட்சுமி 1040 மதிப்பெண்களை பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்றதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். 4 ஆண்டுகளுக்கு முன்னர்.

தேர்வு முடிவுகளால் உலகளவில் அதிகமான தற்கொலைகள் நடைபெறுவது நம் நாட்டில் தான். அதிலும் முதலிடம் தமிழ்நாடு தான்.இதற்கான காரணங்களை தெளிவான கண்ணோட்டத்தில் அலசி நன்கு படமாக்கப்பட்ட அப்பா திரைப்படம் பல உண்மைகளையும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளையும் சமரசமின்றி தோலுரித்துக் காட்டுகின்றது.உறைவிடப் பள்ளிகளின் கொத்தடிமை முறைகளையும், கல்வி அறங்காவலர்களின் அயோக்கியத்தனத்தினையும் வெளிச்சமிட்டு காட்டும் பிற்பகுதி மிகுந்த கவனமான பகுதியாக அமைந்துள்ளது.

2014 ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியில் சேர்ந்த சமூக அறிவியல் ஆசிரியர்களின் பணி வரன்முறை ஆணை..

CPS -திட்டத்தில் இதுவரை 245 பேருக்கு பலன் -முகவரி தரமுடியாது என கருவூல கணக்கு இயக்குனரகம் கைவிரிப்பு

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் இனி தப்ப முடியாது - வழக்கு தொடர அரசு அனுமதி தேவையில்லை...

B.E, தமிழ் வழியில் சேர்க்கை அதிகம் : தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தகவல்

கிராமப்புற மாணவர்கள் பி.இ., தமிழ் வழியில் சேருவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது,” என காரைக்குடியில் இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையைபார்வையிட்ட தொழில் நுட்ப கல்வி இயக்குனர் மதுமதி தெரிவித்தார்.

பி.எட்., தேர்வில் கட்டுப்பாடு

ஆசிரியர் கல்வியான பி.எட்., படிப்பில், 2015ல், புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஓராண்டு படிப்பு, இரண்டாண்டுகளாக மாற்றப்பட்டு உள்ளது. முதலாம் ஆண்டுக்கு எழுத்து தேர்வு, வினாத்தாள் முறை மற்றும் மதிப்பீட்டு முறையில்,பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் விருதுக்கு,விண்ணப்பம் வரவேற்பு

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் விருதுக்கு, தகுதியானவர்கள், ஜூலை, 31க்குள்விண்ணப்பிக்கலாம்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கணினி வழிக் கல்விக்கு, மத்திய அரசு பல்வேறு திட்டங்களைஅறிவித்துள்ளது.

ஊதியக் குழு பரிந்துரையால் கூடுதல் நிதிச்சுமை: ரூ.31,000 கோடியைத் திரட்ட ரயில்வே முயற்சி.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதால் ஏற்படும் ரூ. 31,000 கோடி நிதிச் சுமையை, வருவாய் மூலமாக சமாளிப்பதற்கு ரயில்வே துறை முயற்சி செய்யும் என்று அந்தத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை கூறினார்.இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள்: ஜூலை 16-இல் தொடக்கம்.

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான சிறப்புத் துணைத் தேர்வுகள் வரும் 16-ஆம் தேதி தொடங்குகின்றன.23ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. அதன்படி 16-இல் சமூக அறிவியல், 18-இல் மொழிப் பாடங்கள், 19-இல் தொடர்பு ஆங்கிலம், ஆங்கிலம், 20-இல் அறிவியல், 21-இல் ஹிந்தி, 22-இல் கணிதம், ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு,23-இல் சம்ஸ்கிருதம், பஞ்சாபி, ஓவியம், தகவல் தொடர்பியல், சுற்றுலா அறிமுகம் என தேர்வுகள் நடைபெறவுள்ளன

அரசு பணி தேர்வில் தேறியோருக்கு நடத்தை சான்றிதழ் அவசியமில்லை.

அரசு பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணி நியமன ஆணை அனுப்ப, அவர்களின் நடத்தை சான்றிதழுக்காக, காத்திருக்க தேவையில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு பணியாளர் தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு, அவர்களது நடத்தை குறித்து, போலீஸ் சான்றிதழ் அளித்த பின்தான், அவர்களுக்கு பணி நியமன ஆணைஅனுப்பப்படுவது வழக்கமாக உள்ளது.

ஆகஸ்ட் மாதம் இடமாறுதல் கவுன்சிலிங்-இடமாறுதல் கவுன்சிலிங்கில் புதிய விதிகள் அமல்?

தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதலில், புதிய விதிமுறைகளை கொண்டு வரவும், இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஆகஸ்ட் மாதம் நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும், மே மாதம் இடமாறுதலுக்கான விருப்ப கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், சில ஆண்டுகளாக, ஜூன், ஜூலையில் தான் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் எப்போது நடக்கும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து புதிய முடிவுகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்?சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவு!

டாக்டர் முத்துக்குமரன் கமிட்டி தாக்கல் செய்த சமச்சீர் கல்வி திட்டத்தின்படி அரசுப்பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை நடத்த வாய்ப்புள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு 4 மாதத்துக்குள் பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்க சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நான்காண்டு பி.எட். படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு: மத்திய பள்ளிக் கல்வித் துறை திட்டம்

நாடு முழுவதிலும் 4 ஆண்டு ஒருங் கிணைந்த பி.எட் பட்டப்படிப்புகள் கடந்த ஆண்டு முதல் தொடங்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் இன்னும் கொண்டுவரப்படவில்லை. இப் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் பயிற்சிக் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்சிடிஇ) சார்பில், டெல்லியில் ‘பிராக் ஷிக் ஷக்’ எனும் ஆசியர்களுக்கான கல்வி இணையதள தொடக்கவிழா நடந்தது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சுபாஷ் சந்திரா குந்தியா பேசியதாவது:

ப்ளஸ் 2 முடித்த பின் ஒருங் கிணைந்த பிஎட் கல்வியில் சேர விரும்பும் மாணவர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுக்க தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு பலனளிக்கும். இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி கருத்து கேட்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் போதுமான அளவில் திறமையான ஆசிரியர்கள் இல்லை. ‘ஆக்ஸ்பாம்’ அமைப்பின் புள்ளி விவரப்படி, நாட்டில் 5 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன. 13 லட்சம் தொடக்கப்பள்ளிகளில் 6.6 லட்சம் ஆசிரியர்கள் முறையான பயிற்சி இன்றி பணியாற்றி வருகின்றனர். சுமார் பத்து சதவீதப் பள்ளிகள் ஒரே ஆசிரியருடன் இயங்கி வருகின்றன. ஆசிரியர்களை ஆண்டு தோறும் நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்த 20 ஆண்டுகளில் நம் நாட்டின் மாணவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் எண்ணிக்கை என்னவாக இருக்கும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. இதற்காக தேசிய நுழைவுத்தேர்வு நடத்த ஆலோசிக்கப்படுகிறது.

என்சிடிஇ அமைப்பின் அங்கீ காரம் பெற்று நாடு முழுவதிலும் சுமார் 18,000 அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், பி.எட்., எம்.எட்., பகுதிநேர பி.எட். மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றுக்கான கல்வி அளிக்கப்பட்டு வருகின் றன. இதற்கான மாணவர்கள் சேர்க்கை முறையை அந்த நிறுவனங்களிடமே விடப்பட்டுள்ளன. எனினும், ஒருங்கிணைந்த பி.எட். கல்விக் கான சேர்க்கையில் தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு அமல்படுத்தப்பட்டு விட்டால், மற்ற கல்விகளுக்கும் இதை மத்திய அரசு வலியுறுத்த வாய்ப்புகள் இருப்பதாகவும் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

   

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். 
1.  நெறியாளர் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும்.
2.  இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
3.  கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நெறியாளருக்கு முழு உரிமை உண்டு.
4.  தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
5.  இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
6.  தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!