Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 4 July 2016

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ராம மோகன ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டி.என்.ஹரிஹரன் கோவை மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்படுகிறார். சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் சந்திரமோகன், வருவாய்த்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பை வெங்கடேசன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.

பட்டுப்புழு வளர்ப்பு துறை இயக்குனர் சாந்தா, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தொல்லியல், கலை மற்றும் கலாச்சாரத் துறை ஆணையர் கார்த்திகேயன், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நுகர்பொருள் வாணிபக் கழக பொது மேலாளர் பாஸ்கரன் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்'நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்"

 நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.

ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

என்னென்ன சத்துக்கள் உள்ளன?

நெய்யில் Saturated fat – 65%, Mono – unsaturated fat – 32%, Linoleic – unsaturated fat -3%, விட்டமின் ஏ, டி, இ, கே மற்றும் விட்டமின் கே 2, ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் உள்ளது.

மருத்துவ பயன்கள்

1. தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது, இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

மாணவர்களின் பொது அறிவை மேம்படுத்த நூலகங்களில் மாணவர்களை உறுப்பினராக்கும் திட்டம் தொடக்கம்

மாணவிகளின் பொதுஅறிவை மேம்படுத்தும் விதத்தில் கன்னியாகுமரி மாவட்ட கல்வித்துறை சார்பில் நூலகங்களில் மாணவர்களை உறுப்பினராக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

விவசாய கடன் தள்ளுபடி.. அரசாரணை வெளியீடு.

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் அனைத்து தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வை எதிர்த்த வழக்கு: ஜூலை 7-ம் தேதி விசாரணை.

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வை எதிர்த்த வழக்கு ஜூலை 7-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.நீட் எனப்படும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க அவசரச் சட்டம் ஏற்றப்பட்டது.

10th :2016-17 syllabus (All Subjects)


Reality of 7th pay commission...


7 வது ஊதியக் குழு பரிந்துரை
============================
7 வது ஊதியக் குழு பரிந்துரையினை 29.06.2016 அன்று புதுடெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை அடிபிறழாமல் ஏற்பு செய்து ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.குறைநதபட்ச ஊதியம் ரூ 18,000 என்றும் அதிகபட்ச ஊதியம் 2.5 லட்சம் ஆகும்.தர ஊதிய நடைமுறை அறவே கைவிடப்பட்டுள்ளது.குழு காப்பீட்டு நிதி வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

'இனி ஆசிரியர்களுக்கும் Exam! Pass ஆகாவிட்டால் ஊதிய உயர்வு ✂ கட்!;


மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கையை வெளியிட்டுள்ளது. அதில்,

TET:3 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித் தேர்வு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் கவலை!

மத்திய அரசு திட்டமிட்டபடி, ஆண்டுக்கு 2 தடவை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக தகுதித் தேர்வு நடத்தப் படாமல் உள்ளது. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித் தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.

SSA: 2 to 8th Std படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் குறைபாடுகள் என்னென்ன உள்ளது என்பதை கண்டறியும், பிரத்யேக ஆய்வுப் பணிகள் இம்மாதம் துவக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

திறன் மேம்பாட்டில் மாணவரின் குறைகள் என்ன?
 அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் இரண்டு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் குறைபாடுகள் என்னென்ன உள்ளது என்பதை கண்டறியும், பிரத்யேக ஆய்வுப் பணிகள் இம்மாதம் துவக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுல் கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம்.

இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகம்
ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.

வரலாறு பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 1:1என்ற அடிப்படையில் பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

வரலாறு பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டதில் அனைத்து சங்கங்களிலும்  உள்ள  வரலாறு பாட ஆசிரியர்கள் சார்பாக அவர்களிடம் இருந்து பெறப்பட்ட அன்பளிப்பு மூலம் போடப்பட்டு வெற்றி பெற்ற வழக்கு விவரம்

நான்காண்டு பி.எட். படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு: மத்திய பள்ளிக் கல்வித் துறை திட்டம்?

நாடு முழுவதிலும் 4 ஆண்டு ஒருங் கிணைந்த பி.எட் பட்டப்படிப்புகள் கடந்த ஆண்டு முதல் தொடங்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் இன்னும் கொண்டுவரப்படவில்லை.இப் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தஆலோசிக்கப்பட்டு வருகிறது.

7வது ஊதியக்குழு பரிந்துரை | ஜூலை மாத சம்பளத்துடன் புதிய சம்பளம் வழங்கப்படும் என்றும் முதல் ஆறு மாதங்களுக்கான நிலுவைத் தொகை நடப்பு நிதி ஆண்டிலேயே வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காத்திருக்கிறது ரூ. ஒரு லட்சம் கோடி
 7வது ஊதியக்குழு பரிந்துரைஎந்த நாட்டின் பொருளாதாரமும் பணம் புழங்கினால்தான் செழிப்பாக இருக்கும். திடீரென ரூ.1 லட்சம் கோடி பணம் சந்தையில் பாய்ந்தால் என்னாகும்? கார் விற்பனை, டூ வீலர் விற்பனை, வீடு, மனை விற்பனை தூள் பறக்கும். அதுபோக, வீட்டுக்குத் தேவையான வாஷிங் மெஷின், ஏ.சி., 50 அங்குல டிவி என பணம் தாராளமாக புழங்கும்.

5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்த எளிய முறை! ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை..!


ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!

5 நிமிடத்தில் மாற்றி கொள்ள வழி இதோ

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள்: ஜூலை 16-இல் தொடக்கம்.

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான சிறப்புத் துணைத் தேர்வுகள் வரும் 16-ஆம் தேதி தொடங்குகின்றன.23ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

TRB:ஜூனியர் லெக்சரர், லெக்சரர், ஜூனியர் லெக்சரர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.15-7-2016-ந் தேதி முதல் 30-7-2016-ந் தேதிவரை விண்ணப்பம் பெறலாம்.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் தேர்வு வாரியம் சுருக்கமாக டி.ஆர்.பி. என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு சீனியர் லெக்சரர், லெக்சரர், ஜூனியர் லெக்சரர் போன்ற பணியிடங்களைநிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி.

நாகர்கோவிலில் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில உச்சரிப்புப் (ஜாலி பொனிடிக்) பயிற்சி அளிக்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாவட்டத்தில் உள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜாலி பொனிடிக் பயிற்சி அளிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் கவுன்சிலில் ஆங்கில மொழி: பயிற்சிக்கு முன்பதிவு செய்ய அழைப்பு.

பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆங்கில மொழி மையத்தில் வரும் 18-ம் தேதி தொடங்கவுள்ள ஆங்கில மொழி பயிற்சிக்கு முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.பிரிட்டிஷ் கவுன்சிலில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உகந்த பயிற்சிகளாக பொது ஆங்கிலம், ஆங்கில உரையாடல்,வணிக ஆங்கிலம், IELTS தேர்வுக்கான ஆயத்தப் பயிற்சி, ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆகியவை வழங்கப் படுகின்றன.

பி.இ. கலந்தாய்வு: தொடர்ந்து முன்னிலை வகிக்கும் ECE பிரிவு

பொறியியல் சேர்க்கை ஒற்றைச் சாளர கலந்தாய்வு தொடங்கி ஒரு வார காலம் முடிவடைந்த நிலையில், அதிக மாணவர்களின் விருப்பப் பிரிவாக மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவே தொடர்ந்து இருந்து வருகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில சாதனை எய்திட மீத்திறன் மாணவர்கள் 300 பேருக்கு சிறப்பு பயிற்சி.

2016-17ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில சாதனை எய்தும் வகையில் திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் உள்ள 3 கல்வி மாவட்டங்களில் தலா 100 பேர் தேர்வுசெய்யப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மத்திய அரசுப் பணிகளுக்கு இணையம் மூலம் தேர்வு

.முறைகேடுகளைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கிலும் மத்திய அரசின் இடைநிலைப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வை இணையதளம் மூலம் நடத்த பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) முடிவு செய்துள்ளது.

ஜூலை 8-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான ஓளிவுமறைவற்ற பொது மாறுதல் கலந்தாய்வை ஆசிரியர்கள், மாணவர்கள் நலன் கருதி உடனடியாக நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரத் தலைநகரங்களிலும் வருகிற ஜூலை 8-ம் தேதிவெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் தெரிவித்தார்.

சிறப்பு மருத்துவ படிப்பு: அவகாசம் நீட்டிப்பு.

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் பிற மாநில மாணவர்களும் பங்கேற்கும் வகையில் விண்ணப்பிக்கும் காலத்தை, 5ம் தேதி வரை, தமிழக அரசு நீட்டித்து உள்ளது.தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் எம்.எஸ்., - எம்.டி., படிப்புகளை முடித்தோருக்கான, டி.எம்., மற்றும் எம்.சி.எச்., என்ற மூன்றாண்டு உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு, 189 இடங்கள் உள்ளன.

அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் திறன் அதிகரித்துள்ளது என வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!