Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 9 July 2016

TET நிபந்தனை ஆசிரியர்கள் - தமிழக முதலமைச்சருக்கு வேண்டுதல் மடல்:

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின்மேலான பார்வைக்காக...

வணக்கம்.                      
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளுடன் 23.08.2010 க்குப் பிறகு அரசு, அரசு உதவி பெறும்,சிறுபான்மையினர் பள்ளிகளில் முறையாக நியமனம் பெற்று தமிழகம் முழுவதும்பணியாற்றி வரும் சுமார் மூவாயிரம் பட்டதாரி  ஆசிரியர்கள் வாழ்வாதார பாதுகாப்புவேண்டி எழுதும் கடிதம்.

எங்களின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டுள்ள நிலையை எடுத்துக் காட்டி நல்லதீர்வை வேண்டி இக் கடிதம் எழுதியுள்ளோம். ஆசிரியப் பணி நியமனங்களில் ஆசிரியர்தகுதித் தேர்வு நடைமுறையில் வரும் முன்னர் ஏற்கனவே பல ஆண்டுகளாக அமலில் உள்ளகல்வித் துறையின் உரிய நடைமுறைகளான அரசின் வழிகாட்டுதலுடன் அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பட்டதாரிஆசிரியர்களாக அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக பதிவுப்பட்டியல் பெற்றும், நாளிதழ்களில் விளம்பரம், கல்வித் துறையின் அங்கீகாரம்பெற்று பள்ளிக் குழுவின் நேர்முகத் தேர்வு மற்றும் இனச்சுழற்சி முறை போன்றபலவகையான தெரிவு முறைகளில் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறையின் முழுஒப்புதலுடன் பட்டதாரி ஆசிரியப் பணியாற்றி வருகின்றோம்.மாண்புமிகு தமிழக முதல்வராக தாங்கள் ஆட்சி் பொறுப்பு ஏற்ற பின்னர் தான்நிரந்தர ஆசிரியர் பணியிடத்தில் நாங்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வரும் சூழலில் இன்று தங்களது ஆட்சிக் காலத்திலேயே எங்கள்பணிக்குஆபத்து உருவாகியுள்ளதை எண்ணி மிகுந்த வேதனையும் மனக் குழப்பமும் அடைந்துள்ளோம்.அம்மா, தற்போதைய நடைமுறையில் எங்களுக்கென புதிதாக பணியிடம் உருவாக்கவோ,சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தவோ, சான்றிதழ்கள் சரிபார்க்கவோ வேண்டியதேவை இருக்காது என்பதையும் தங்களது மேலான கவனத்தில் தெரிவிக்கின்றோம்.

பணிப்பாதுகாப்பு இல்லாமல் எங்களில் பலர் இன்று வரை ஊதியம், ஊக்க ஊதியம்,வளரூதியம், தகுதிகாண் பருவம் போன்ற பல பிரச்சனைகளில் நிம்மதியை முழுவதும்தொலைத்து விட்டு பணிபுரியும் சூழல்.கருணை உள்ளத்துடன் விரைவில் ஒரு நல்ல தீர்வு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்மிகவும் மன உளைச்சலை  வெளிக்காட்டாது பணியில் இருக்கின்றோம்.கட்சிக்காக உழைத்தவர்கள், தங்கள் ஆட்சி மீண்டும் அமைய பாடுபட்டவர்களின் குடும்ப பிள்ளைகளும் இதில் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.மேலும் முறையாக தகுதிக்காண் பருவத்தையும் முடித்தும் பல மாதங்கள் ஆகிவிட்டன.பணிப்பாதுகாப்பற்ற மனவேதனையிலும்  ஒரு மன நிறைவான வெற்றியாக நாங்கள் கருதுவது,எங்களிடம் கடந்த ஐந்து வருடங்கள் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்பல்வேறு பாடப் பிரிவுகளில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றும், சிலர் மாவட்ட,மாநில அளவில் தரம் பெற்றும் உள்ளனர் என்பதன் மூலமாக ஆசிரியப் பணி அறப்பணி என்றஎண்ணத்துடன் எங்களது ஆசிரியர் தகுதியினை ஒவ்வொரு ஆண்டும் அர்ப்பணிப்புஉணர்வுடன் நிலைநிறுத்தி வருகின்றோம்.

இதற்கிடையில், எங்களது நிபந்தனைப் பணிக்காலம் எதிர் வரும் நவம்பரில் முடியும்என்ற நிலையில், ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டு வாழ்வா, சாவா என்ற வாழ்க்கைப்போராட்டத்துடன் நகர்த்திக் கொண்டு இருக்கும் எங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து முழுமையான விலக்கு அளித்து எங்களின்  குடும்ப வாழ்வாதாரம்பாதுகாக்க உதவுமாறு பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கிறோம்.தாயுள்ளம் கொண்ட அம்மா,மாண்புமிகு தமிழக முதல் அமைச்சராகிய தாங்கள் மனது வைத்தால் TET நிபந்தனையில்பணியில் உள்ள எங்களுக்கு ஒரு தவிர்ப்பு ஆணை மூலம் விடுவிக்க இயலும்.பல மாதங்களாக எங்களது சூழலை எடுத்துக் காட்டி நிறைய நாளிதழ்களிலும், கல்விசார்ந்த இணைய தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன.தங்கள் மேலான கவனத்தில் கொண்டு சேர்க்க ஒரு சில ஆசிரியர் சங்கங்களை நாடியும்யாரும் உதவ முன்வரவில்லை.ஆதியும் அந்தமுமான தங்களால் அன்றி எங்களுக்கு யாராலும் முழுமையான தீர்வைத் தரஇயலாது.

நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சென்னைக்கு வந்து தங்கள் அலுவலகத்தில் நேரில்மனு அளிக்க ஒருங்கிணைப்பு செய்யக் கூட எங்களிடம் மனதளவில் தெம்பு இல்லை.TET லிருந்து முழுவதும் விலக்கு தங்களால் மட்டுமே சாத்தியம் என்பதை பட்டதாரிஆசிரியர்பணியில் உள்ள  நாங்களும் எங்களது குடும்பங்களும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன்,கண்களில் பெருக்கெடுக்கும் கண்ணீருடன் அன்புமிகு அம்மாவாகிய தங்கள் மீதானநம்பிக்கையை விடாமல் நல்ல தீர்வுக்கு காத்திருக்கிறோம்.எங்களைக் காப்பாற்றுங்கள்.இப்படிக்கு,தங்களது உண்மையுள்ள,ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்.( அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகள்.தமிழகம் )

செய்திவெளியீடு : தென்னகக் கல்விக் குழு,  கோவை.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு ("நீட்') அடுத்த ஆண்டு...!

நீண்ட இழுபறியைத் தாண்டி, நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு ("நீட்') அடுத்த ஆண்டு 
முதல்கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை, தனியார் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்று, கலந்தாய்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் எளிதாக சேர்க்கை பெற்று வந்தனர். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு, மாணவர்கள், பெற்றோர்கள் மட்டுமன்றி, சிறப்பிடம் பெற்ற மாணவர்களின் பட்டியலை வெளியிட்டு சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகளையும் சற்று அதிரச் செய்துள்ளது. பொதுவாக, தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ் பயின்ற மாணவ, மாணவிகளால் மட்டுமே எளிதாக எதிர்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ, மாணவிகள் சற்று அச்சத்துடனேயே "நீட்' தேர்வை எதிர் நோக்கியிருக்கின்றனர். எனினும், நீட் தேர்வு என்பது மாணவர்களைத் தயார்படுத்துவதில் உள்ள சிறிய வேகத் தடைதான். தற்போதுள்ள பாடத் திட்டத்துடன், மாணவர்களை "நீட்' தேர்விலும் வெற்றி பெறும் விதத்தில் தயார் செய்யும் வகையில் தனியார் பள்ளிகள் திட்டமிட்டு வருகின்றன

கொல்கத்தாவில் ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் கிடையாது என்ற புதிய விதியை அம்மாநில அரசு அமல்படுதியுள்ளது.

கொல்கத்தா: 

"பாதுகாப்பான பயணம் வாழ்க்கை பாதுகாப்பு" என்ற சாலை பாதுகாப்பு திட்டத்தை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது, இருசக்கர வகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமால் பயணம் செய்வது பற்றி கவலை தெரிவித்தார். மேலும், சாலை விபத்தை தடுக்க கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற புதிய விதியை கொல்கத்தா போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி, கொல்கத்தாவில் ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மட்டுமே  பெட்ரோல் வழங்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். 

கேரளாவின் சில நகரங்களில் இந்த விதி பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும்: பள்ளிக் கல்வி அமைச்சர் உத்தரவு.

ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் பா.பெஞ்சமின்உத்தரவிட்டுள்ளார். தொடக்கக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடப்பு கல்வி ஆண்டில் செயல்படுத்தப்பட வேண்டியதிட்டங்கள் குறித்தஆய்வுக்கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் பா.பெஞ்சமின் தலைமையில் சென்னை டிபிஐ வளாகத்தில் நடந்தது.

மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா முன்னிலை வகித்தார்.  தமிழ்நாடுபாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் மைதிலி கே.ராஜேந்திரன், அனைவருக்கும் கல்வி திட்ட மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளர் ராகுல்நாத், மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா நலத்திட்டங்கள், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு, ஆங்கில வழிப் பிரிவு தொடங்கப்பட்ட பள்ளிகள், அதில் மாணவர் சேர்க்கை போன்றவை குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. ஆசிரியர்களின் பணப்பலன்கள் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் விதிகளுக்கு உட்பட்டு ஆய்வுசெய்து அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்து மாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் பெஞ்சமின் உத்தரவிட்டார்.

செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆதார் எண் கொடுக்காவிட்டால் சமையல் கியாஸ் மானியம் ரத்து மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு.

வங்கி மற்றும் கியாஸ் ஏஜென்சிகளிடம் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆதார் எண் கொடுக்காவிட்டால் சமையல் கியாஸ் மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நேரடி மானிய திட்டம் நாடுமுழுவதும் உள்ள சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் வழங்கி வருகிறது.

ஆனால், சமையல் கியாஸ் வினியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அதை முறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.அதன் அடிப்படையில், சமையல் கியாஸ் நேரடி மானியத் திட்டம் கடந்த ஆண்டு (2015) ஜனவரி மாதம் நாடு முழுவதும்அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி, முதலில் வாடிக்கையாளர்கள் சமையல் கியாஸ் சிலிண்டரை சந்தை விலையில் வாங்க வேண்டும். அதன் பின்னர், அதற்கான மானியத்தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். புதிய உத்தரவு இதற்காக, தங்களது கியாஸ் ஏஜென்சியிடம் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு எண்ணை ஏற்கனவே அளித்துள்ளனர். இதற்கிடையே, வங்கி கணக்குடன் ஆதார் எண்ணையும் இணைப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து, ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த வாரம் எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. செப்டம்பர் வரை கெடு அதாவது, செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் வங்கி மற்றும் கியாஸ் ஏஜென்சிகளிடம் ஆதார் எண் கொடுப்பவர்களுக்கு மட்டுமே சமையல் கியாஸ் மானியம் வழங்க வேண்டும் என்றும், ஆதார் எண் தராதவர்களுக்கு மானியத்தை நிறுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆதார் எண் தராத வாடிக்கையாளர்களிடம் கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தினர் ஆதார் எண்ணை கேட்டுவருகின்றனர். இந்த மாதம் (ஜூலை) முதல் ஆதார் எண் தராதவர்களுக்கு மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் அவர்கள் ஆதார் எண்ணை கொடுத்துவிட்டால், நிறுத்திவைக்கப்பட்டுள்ள மானியத் தொகையும் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மானியம் ரத்து செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட்டால், இடைப்பட்ட காலத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மானியத்தொகை கிடைக்காது. எந்தமாதத்தில் அவர்கள் ஆதார் எண் கொடுக்கிறார்களோ, அதன் அடிப்படையிலேயே மானிய தொகை வரவு வைக்கப்படும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஒரு கோடியே 62 லட்சம் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், ஒரு கோடியே 55 லட்சம் பேர் கியாஸ் மானியம் பெறுகிறார்கள். இவர்களில், 60 லட்சத்து 25 ஆயிரத்து 930 பேர் ஆதார் எண்ணை கொடுத்துள்ளனர். மீதமுள்ளவர்கள் இன்னும் ஆதார் எண்ணை வழங்கவில்லை. இந்த 3 மாதத்திற்குள் இவர்கள் ஆதார்எண்ணை வழங்காவிட்டால் சமையல் கியாஸ் மானியம் ரத்தாகிவிடும்.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்"மூட்டுவலி போக்கும் முடக்கத்தான் கீரை"

நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம், நாம் அறியவேண்டியது ஒன்று. நாம் சிறுவயதில் ஓடியாடி விளையாடுகிறோம். சிறு வயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்து விடுகிறோம்.
வயதானால் நல்ல டாய்லட் தேடியோ, வேறு பல காரணங்களாலோ அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்துக்காகவும் நேரத்துக்காகவும் அடக்கி வைக்கிறோம். இந்த நிலை பெண்களுக்கு, 10 வயது முதலும், ஆண்களுக்கு, 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்ற இயலாமல் தவிக்கிறது. அப்பொழுது மூளையிலிருந்து செல்லும் உத்தரவு மூலமாக தற்காலிகமாக, சிறுநீரகம் தன் வேலையை நிறுத்தி வைக்கிறது. இதனால் நம் உடலில் ஓடும் ரத்தம், சிறுநீரை வெளியேற்றாமல் அப்படியே எல்லா இடங்களுக்கும் செல்கிறது.
அவ்வாறு செல்லும்போது, ரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ் (uric acid crystals) மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்த சிறு, சிறு கற்கள், சினோரியல் மெம்கிரேம் என்ற, எனும் இடத்தில் உட்கார்ந்து விடுகிறது. இது பல வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது. சிலருக்கு, 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் (rheumatoid arthritis) ஆரம்ப நிலை.
இந்தியாவில், 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில், இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை. நம் முன்னோர்கள், 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை, நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை.
முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை, இந்திய ஆராய்ச்சியாளர் குழுவினரும், ஆஸ்திரேலிய பல்கலை ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டுபிடித்தனர். இதன் சிறப்புக் குணம், நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து, சிறுநீரகத்துக்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று, சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை நம் உடலில் விட்டு செல்கிறது. இது ஒரு மிக முக்கியமான மாற்றத்தை, நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை.
முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிடலாம். கீரையை கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் இருக்கும் மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும். மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். தமிழக கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இக்கீரை படர்ந்து கிடக்கும் என்றால், இதன் முக்கியத்துவத்தை பார்த்துக் கொள்ளுங்கள்

உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவது சம்பந்தமான அரசாணையை செயல்படுத்தக்கோரி வழக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பரிசீலிக்க, ஐகோர்ட்டு உத்தரவு.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவது சம்பந்தமாக 2009–ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை செயல்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பரிசீலிக்க, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஐகோர்ட்டில் மனு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி இயக்குனர் கிரேடு–1 ஆக பணியாற்றி வருபவர் செந்தில். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–உடற்கல்வியில் டிப்ளமோ முடித்தவர்கள் உடற்கல்வி ஆசிரியர்களாக பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். உடற்கல்வியில் பட்டப்படிப்பு படித்தவர்கள் உடற்கல்வி இயக்குனர் கிரேடு–2 ஆகவும், உடற்கல்வியில் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் உடற்கல்வி இயக்குனர் கிரேடு–1 ஆகவும் பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர்.உடற்கல்வியில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்து விட்டு பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வு மூலம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளராக நியமிக்கப்படுகின்றனர்.டிப்ளமோ படித்தவர்களுக்கு பதவி உயர்வு தற்போது மாவட்டம் தோறும் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களே மாவட்ட உடற்கல்வி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பணியில் உள்ளனர். அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்களை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் தான் கண்காணிக்கின்றனர்.அப்படி இருக்கும்போது மாவட்ட உடற்கல்வி ஆய்வாளராக பணியில் நியமிக்கப்படுபவர்கள், உடற்கல்வியில் பட்ட மேற்படிப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும்.அவ்வாறு இல்லாமல் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளராக நியமிக்கப்படுவதால் குறைந்த கல்வி தகுதியை உடையவர்கள் அதிக கல்வி தகுதியை உடையவர்களை கண்காணிப்பது போன்றதாகி விடுகிறது.நடவடிக்கை எடுக்கவில்லை இதுகுறித்து அரசுக்கு பலமுறை மனு கொடுத்தோம். இந்த குறைபாட்டை சரிசெய்யும் வகையில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாகும்போது உடற்கல்வி இயக்குனர் கிரேடு–1 ஆக பணியாற்றுபவர்களை பணிமூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று 2009–ம் ஆண்டு அரசாரணை பிறப்பிக்கப்பட்டது.இந்த அரசாணையை செயல்படுத்த அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த அரசாணையை செயல்படுத்தி உடற்கல்வி இயக்குனர் கிரேடு–1 பணியில் இருப்பவர்களை கொண்டு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 1.3.2016 அன்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனர் ஆகியோருக்கு மனு கொடுத்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.பரிசீலிக்க உத்தரவு இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ஓ.தேவன்குமார் ஆஜராகி வாதாடினார்.மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கொடுத்த மனுவை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பரிசீலித்து 8 வாரத்துக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தியேட்டர்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவச திரைப்படம் கலெக்டர் தகவல்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தியேட்டர்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவச திரைப்படம் காண்பிக்கப்படும் என்று கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்தார்.ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கத்தின் சார்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தியேட்டர்கள் மூலம் குழந்தைகள் திரைப்பட விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஞானசேகரன் தலைமையில் நடந்தது.அப்போது கலெக்டர் பேசியதாவது:– இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் மூலம் 2016–ம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒரு வாரம் தியேட்டர்கள் மூலம் குழந்தைகள் திரைப்பட விழா நடத்தப்பட உள்ளது.இலவச திரைப்படம் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆகஸ்டு மாதம் 3–வது வாரம் குழந்தைகள் திரைப்பட விழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தியேட்டர்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரை குழந்தைகள் திரைப்பட விழா நடத்தப்படும்.அதில், இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்கள் தியேட்டர்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக திரையிட்டு காண்பிக்கப்படும்.பத்திரமாக... திரைப்படம் திரையிட்டு காண்பிக்கும் தியேட்டர்களின் செயல்பாட்டு செலவிற்காக ஒரு காட்சிக்கு ரூ.2 ஆயிரத்து 500 கட்டணமாக அளிக்கப்படும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தைகள் திரைப்பட விழா நடைபெறும் தியேட்டர்கள் அருகில் உள்ள பள்ளி மாணவர்களை பத்திரமாக அழைத்து சென்று வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.மேலும், பள்ளி மாணவர்களை தியேட்டர்களுக்கு அழைத்து வருவதற்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் குழந்தைகள் திரைப்பட விழாவின் பொறுப்பு அலுவலராக செயல்படுவார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் குழந்தைகள் திரைப்பட விழாவினை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கத்தின் உதவி வினியோக அலுவலர் வி.எஸ்.அகிலா, திரையரங்குகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!