Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 10 July 2016

7th Pay:மத்திய அரசு ஊழியர்கள் 7-வது ஊதிய குழு ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்.

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான அறிக்கை ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பாக்கப்படுகின்றது. ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.

புதிய ஊதிய விகிதப்படி குறைந்தபட்சம் ஊதியம் ரூ. 7000-த்தில் இருந்து ரூ.18000 -ஆக உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. மேலும் அதிகப்பட்சமாக ரூ.90000-த்தில் இருந்து ரூ. 250000-ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் குறைந்தப்பட்சம் ஊதியம் ரூ. 26000-ஆக உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் சங்கம் வலியுறுத்திவந்தன. அந்த அளவுக்கு உயர்த்த மறுத்துவிட்ட மத்திய அரசு குறைந்தபட்சம் ஊதியம் ரூ.20000-ஆக உயர்த்த ஒப்புக்கொண்டதாக கூறப்படுகின்றது.

இது பற்றி மத்திய அரசு குழு பரிசீலிக்கும் என கூறப்பட்டது. இதனால் புதிய ஊதிய விகிதங்கள் உடனடியாகஅமல்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் நிலவி வந்தது. ஏனேனில் புதிய ஊதிய விகிதம் இம்மாதம் இறுதியில் கிடைக்கும் வகையில் அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று ஊழியர்களின் சங்கங்கள் கூட்டுநடவடிக்கை குழு அமைப்பாளர் கூறியுள்ளார்.

அரசு பள்ளியில் கணினி கல்வி: கணினி ஆசிரியர்கள் வாழ்வில் விரைவில் விடியல்..

தமிழக அரசு பள்ளிகளுக்கு கணினியும் அவை சார்ந்த உபகரணம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை கணினி ஆசிரியர் நியமனம் செய்யவில்லை

தமிழ்நாட்டில் 39019பேர் இதுவரை பி.எட் படித்த விட்டு அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.

இவர்களின் வாழ்வின் திருப்பு முனை நிகழ்ச்சியாக
பள்ளிக்கல்வி  சார்பில் ஒர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

கணினி ஆசிரியர்கள் தங்கள் வரும்போது கண்டிப்பாக கொண்டுவர வேண்டியவை:

1)இரண்டு புகைப்படம்.
2)பி.எட் கணினி அறிவியல் சான்றிதழ் நகல்.
3).வேலைவாய்ப்பு அலுவலக அட்டை நகல்
4)ஜாதி சான்றிதழ் நகல் இவற்றை தவறாமல் கொண்டுவரவும்.

நாள்:17.7.2016
காலை 9.36
இடம்:ஆசிரியர் இல்லம்,
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அருகில் ,
சைதாப்பேட்டை,
சென்னை.

தங்குவதற்கும் ,மதிய உணவிற்கு ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.

கணினி ஆசிரியர்கள் தங்கள் நண்பர்களுக்கு தெரியபடுத்தவும்.

நம் வாழ்வில் மாற்றம் ஏற்படும் நாட்கள் மிக விரைவில்...

வெ.குமரேசன்,
மாநில பொதுச்செயலாளர்
9626545446.

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.655/2014.

விழிகளை இழந்தாலும் வழிகாட்டும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்; தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து சாதனை!

விழிகளை இழந்தாலும், விடா முயற்சியால் அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப் பேற்று மாணவர்களை திறம்பட அரவணைத்துச் செல்வதுடன் அவர்களின் தேர்ச்சி விகிதத்தை யும் அதிகரித்து வருகிறார் மதுரை ஆனையூரைச் சேர்ந்த எஸ்.எஸ்.பாண்டியராஜன்.

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருபவர் எஸ்.எஸ்.பாண்டி யராஜன்(51). மதுரை ஆனையூரைச் சேர்ந்த இவர், தமிழகத்தின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தலைமை ஆசிரியர் என்ற பெருமைக்குரியவர்.நெடிய சட்டப் போராட்டத்தின் மூலமாக தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று, தனது பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகி றார். மடிக்கணினியில் பேசும் மென்பொருளை பயன்படுத்தி, மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அவர், சிறப்பு கரும்பலகையில் பாடங்களை எழுதுகிறார். மாணவர் களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சியும் அளித்து வருகிறார்.இதுகுறித்து தலைமை ஆசி ரியர் பாண்டியராஜன் கூறிய தாவது: பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தபோது, திடீரென பார்வைத் திறன் குறையத் தொடங்கியது. எவ்வளவோ சிகிச்சை அளித்தும் சரி செய்ய முடியவில்லை. 4 ஆண்டுகளில் பார்வைத்திறன் முற்றிலும் பறிபோனது. பின்னர் சராசரி மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே மீண்டும் சேர்ந்து பள்ளிப் படிப்பை முடித்தேன்.

ஆங்கிலத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட். முடித்த நான், 1994-ம் ஆண்டு தருமபுரியில் உள்ள நெருப்பூர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். 9 மாதங்கள் பணி புரிந்த பின்னர், மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றலானேன். அங்கு 1994-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டுவரை பணிபுரிந்தேன். பின்னர் 2002 முதல் 2014-ம் ஆண்டு வரை, மகபூப்பாளையத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்தேன். அப்போது தலைமை ஆசிரியர் பணிக்கான தகுதி இருந்தது. ஆனால், பணி உயர்வு பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை.இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். பார்வை யற்ற மாற்றுத்திறனாளி ஆட்சியராக இருக்கும்போது தலைமை ஆசி ரியர் பணியை சிறப்பாக செய்ய முடியும் எனக் கூறி, நான் ஆசிரிய ராக பணியில் இருந்தபோது மேற்கொண்ட அனைத்து உத்தி களையும் நீதிமன்றத்தில் எடுத்துக் கூறினேன். அதன்பிறகே எனக்கு தலைமையாசிரியர் பணி கிடைத்தது.2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சாப்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக சேர்ந்தேன். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் முழு ஒத்துழைப்பு வழங்கினர். அதற்கு முன் 60 சதவீதம் அல்லது 70 சதவீதமாக இருந்த தேர்ச்சி 2015-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் 97 சதவீதம், பிளஸ் 2 தேர்வில் 94 சதவீதம் ஆக அதிகரித்தது. பின்னர் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன்.

கடின உழைப்பு, தன்னம் பிக்கை, நேர்மறை எண்ணம், அனைவரையும்அரவணைத்துச் செல்லுதல் போன்ற பண்புகள் இருந்தால் எதையும் சாதிக்க லாம். எந்த மாணவரும் கெட்டவர் கிடையாது.சில புறக்கணிப்புகளால் அவர்களை நாம் அப்படி புரிந்துகொள்கிறோம். அவர்கள்தான் உண்மையிலேயே மிகவும் பாசமாக இருக்கிறார்கள். தவறானவர்கள் என நினைத்த சிலருடன் பேசும்போதுதான் அவர் களின் நிலை நமக்கு புரிந்தது. சிலர் கண்ணீர் விட்டு அழுத நிகழ்வுகளும் உண்டு என்றார்.பார்வையற்ற மாணவர்களின் கற்றல் திறனை கருத்தில்கொண்டு, தனது சொந்த முயற்சியால் www.eyesightindia.in என்ற வலை தளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். அதில் அவர்களுக்கு தேவையான அனைத்து விண் ணப்பங்கள், பாடமுறைகள், ஆடியோக்கள்மட்டுமின்றி, சராசரி மாணவர்களுக்குத் தேவையான போட்டித் தேர்வு நூல்களையும் பதிவேற்றம் செய்துள்ளார்.இந்தியாவிலேயே பார்வை யற்ற தேசிய சதுரங்க நடுவராக பாண்டியராஜன் மட்டுமே தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

பதவி உயர்வு ஏதுமின்றி ஓய்வு பெறும் உடற்கல்வி ஆசிரியர்கள்!

தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் உருவாக்கப்படாததால், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெறும் நிலை ஏற்படுவதாக உடற்கல்வி ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 3,566 மேல்நிலைப் பள்ளிகளில் 660 உடற்கல்வி இயக்குநர்களே பணியாற்றி வருகின்றனர்.

இதனால், கடந்த 25 ஆண்டுகளாக பல பள்ளிகளிலும் உடற்கல்வி இயக்குநர் பணியிடம் உருவாக்கப்படாமல், உடற்கல்வி ஆசிரியர்களே அந்தப் பொறுப்பில் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத் தலைவர் டி.ரவிச்சந்தர் கூறியதாவது:தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 2 உடற்கல்வி ஆய்வாளர்கள்மட்டுமே நிரந்தரப் பணியில் உள்ளனர். மீதமுள்ள 30 பணியிடங்களை மூத்த உடற்கல்வி இயக்குநர்கள் பொறுப்பில் கவனித்து வருகின்றனர்.மேலும், ஒருவர் பொறுப்பு பதவியில் 6 மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற அரசாணை இந்த விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. இதனால், 32 மாவட்டங்களில் ஆண்டுக் கணக்கில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பதவி பொறுப்பு பணியிடமாகவே தொடர்ந்து வருகிறது.

தோற்றுவிக்கப்படாத பணியிடங்கள்:

இதேபோல, 3,566 மேல்நிலைப் பள்ளிகளில் 660 உடற்கல்வி இயக்குநர்களே உள்ளனர். மேல்நிலைக் கல்வி தொடங்கப்பட்ட காலம் முதல், பலபள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் என்ற பதவி தோற்றுவிக்கப்படாமல் உள்ளது. இதனால், 6 முதல் பத்தாம் வகுப்பெடுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களே கூடுதலாக மேல்நிலை வகுப்புகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களாக இருக்கின்றனர். உரிய தகுதி இருந்தும் பதவி உயர்வு பெறாமல் 5,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 99 சதவீதம் பேர் உடற்கல்வி ஆசிரியராகப் பணியேற்று, அதே பதவியிலேயே பணி ஒய்வு பெறுகின்றனர்.

மறுக்கப்படும் வாய்ப்பு:

மற்ற பாட ஆசிரியர்கள் தலைமை ஆசிரியராகி, மாவட்ட கல்வி அதிகாரியாகி, முதன்மைக் கல்வி அதிகாரியாகி, இணை இயக்குநராகி, இயக்குநராகி பணி ஒய்வு பெறுகின்றனர். இந்த வாய்ப்பு பல ஆண்டுகளாக உடற்கல்வி இயக்குநர்களுக்கு மறுக்கப்படுகிறது. இதேபோல, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியமும் மறுக்கப்படுகிறது. ஆகவே,பொறுப்பு பதவி நிலையை மாற்றி, உடனே நிரந்திரப் பணியிடத்தில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும்.மேலும், உடற்கல்வி இயக்குநர் நிலை- 1, உடற்கல்வி இயக்குநர் நிலை- 2 ஆகியவற்றுக்கு மாநில அளவிலான பணிமூப்பின்படி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்றார் அவர்.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்"முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்!"

நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா?
ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்சரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும்.
ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து உபயோகிப்பது போன்ற பல பிரச்சனைகளை நாமே ஏற்படுத்தி கொள்கிறோம்.
எனவே வேலையின் போது சில விஷயங்களில் கவனம் கொண்டால் முதுகு வலி பிரச்சனையிலிருந்து நீங்கள் உஷாராக தப்பித்துவிடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை,
1.
உட்காரும் தோரணை
அலுவகத்திலோ, வீட்டில் சகஜமாக டிவி பார்க்கும் போதோ உட்காரும் நிலையை கவனம் கொள்ள வேண்டும். உட்காரும் போது விழிப்புடன் நேராகவும், சரியான உடல் தோரணையிலுமே அமர்ந்தாலும், வேலையின் பளுவால் நீங்கள் சற்று சோர்ந்து செளகரியமாக உட்கார நேர்ந்திடும். இப்படியான பட்சத்தில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும். இதனை மனதில் கொண்டு அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும். நாளடைவில் இது உங்களின் மாறா பழக்கவழக்கமாக மாறிவிடும்.
வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேர் முகமாகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.
2.
உடற்பயிற்சி
கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள், எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள்.
அடுத்த பயிற்சி, நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். ௦20 எண்ணிக்கைகள் வரை இதே வாக்கில் இருக்கவும். நாள்பட பயிற்சியின் நேரத்தை 2 நிமிடங்கள் வரை செய்யலாம்.
3.
உணவு முறை: பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள். கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.
4.
வைட்டமின்கள்: கால்ஷியம் எலும்பிற்கு முக்கிய தேவை, உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் உணவுகளை உடல் ஏற்காது. அதே போல வைட்டமின் பி 12 , எலும்பு மஜ்ஜையின் வாழ் நாள் உறுதி செய்ய இந்த வைட்டமின் முக்கியம் வாய்ந்தவை. ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். இதை தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, வைட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவையாலும்.
5.
தாதுக்கள்: எலும்பின் வளர்ச்சி, வலிமையை கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவையை உணவில் சரிவர எடுத்து கொள்ளுதல் ஒரு சீரான சத்தான உடலை அமைத்து கொள்ள உதவும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமக்கு முக்கியமானவை.
6.
சூடான குளியல்: வலி மிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான குளியளில் ஈடுப்படுவது நல்லது. உற்சாகத்தையும் இது தரும்.
7.
சப்ளிமென்ட்ஸ்: நல்ல உணவு அதனுடன் தேவையான சில சப்ளிமென்டுகளை எடுத்து கொள்ளுங்கள், பல சமயங்களில் உடனடி உடல் தேவையை சப்ளிமென்டுகள் ஈடு செய்யும்.
8.
மசாஜ்: வாரம் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள், வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில் நம் தசைக்களை உற்சாகப்படுத்த இது உதவும்.
9.
கடுகு எண்ணெய்: எலும்புகளை வலுவூட்ட கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடங்கள். கடுகு எண்ணெய் எலும்பிற்கு உகந்தது.
10.
ஆரோகியமான சூழ்நிலை: சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளும் சூழல், எண்ணம் கொண்ட நண்பர்களை வைத்து கொள்ளுங்கள், அவர்கள் அப்படி இல்லை எனில் அவர்களை மாற்ற பாருங்கள்.

பள்ளி பாடத்திட்டத்தில் மனித உரிமை சேர்ப்பதால் பயனில்லை: முன்னாள் நீதிபதி

பள்ளி பாடத்திட்டத்தில் மனித உரிமையை சேர்த்தால் எந்த பயனும் இருக்காது என, சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பேசினார்.

தாகூர் கலைக்கல்லுாரி தமிழ் துறை சார்பில் மனித உரிமை பயிலரங்கம் 
கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. தமிழ்த் துறை தலைவர் இளங்கோ வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கை துவக்கி வைத்து சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பேசியதாவது:

இந்தியாவில் 120 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதில் ஐந்தில் ஒரு பங்கு மக்களுக்கு சம மனிதன் என்கிற சம உரிமையே கிடைக்கவில்லை. இந்தியாவின் ஒரு கிராமத்தில் குறிப்பிட்ட இனத்தவர் ஆண் நாயை வீட்டில் வளர்க்க கூடாது என்ற வினோத கட்டுப்பாடு இருக்கிறது.

மற்றொறு கிராமத்தில் 5 வயதிற்கு பிறகு பெண்கள் பள்ளிக்கு சென்று படிக்கக் கூடாது என்று கட்டாய ஊர்க் கட்டுப்பாடு இருக்கிறது. இந்திய அரசியலைப்பு சட்டத்தில் சம உரிமை, கல்வி உரிமை என, அனைத்து உரிமைகளும் இருக்கிறது. ஆனால், அதனை நிலை நாட்டுவதில் தான் சிக்கலே இருக்கிறது.

பாகிஸ்தானின் பெண் குழந்தை பள்ளி செல்ல கூடாது என, துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், இங்கே துப்பாக்கி ஏந்தாமல், சமுதாய கட்டுப்பாட்டினை விதிக்கின்றனர். அப்புறம் எங்கே சம உரிமை ஜனநாயக குடியரசு காணமுடியும்.

பள்ளி குழந்தைகளுக்கு மனித உரிமையை போதிக்க வேண்டும் என்று இப்போது விவாதம் எழுந்துள்ளது. என்னை பொறுத்தவரையில், பாட திட்டத்தில் தனியாக சேர்க்க தேவையில்லை. அவர்களிடம் புரியாத விஷயத்தை சுமையாக திணிக்க தேவையில்லை. பள்ளி பாடத்திட்டத்தில் மனித உரிமை சேர்த்தால் எந்த பயனும் இருக்காது

இவ்வாறு அவர் பேசினார்.

சிறப்பு அமர்வுகளில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி திலகவதி, நீதிபதி கிருஷ்ணய்யர் நுாற்றாண்டு விழாக்குழு தலைவர் சுகுமாரன் பேசினர்.

தொடர்ந்து நடந்த குழு விவாதத்தில் பராங்குசம், தாமரைக்கோ, சுகுமாரன், ராஜராஜன், வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் நவச்சிவாயம், இன்ஜினியர் தேவதாசு பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் தமிழ்த் துறை பேராசிரியர் வியாசராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலை கல்லூரிகளில் உளவியல் ஆலோசகர் நியமிக்க உத்தரவு.

அனைத்து கலை கல்லுாரிகளிலும் உளவியல் ஆலோசகர் நியமிக்க வேண்டும், என, முதல்வர்களுக்கு கல்லுாரி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால், பல தவறான முடிவுகளை எடுப்பதுடன், தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகின்றனர். சமீப காலமாக கல்லுாரிமாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு முடிவு செய்துள்ளது.தவறு செய்ததற்காக அளிக்கப்படும் சிறு தண்டனை கூட மோசமான முடிவுகளை எடுக்க துாண்டும். இதனால் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை தடுக்கவும், மன உளைச்சலை போக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஒவ்வொரு பாடப்பிரிவிலும் ஒரு பொறுப்பாசிரியரை நியமிப்பது. அதிக நாள் விடுப்பு எடுக்கும் மாணவ, மாணவிகளை கண்காணித்து விடுப்பு எடுக்காமல் இருக்க ஆலோசனை வழங்குவது. தேர்வு எழுத குறைந்தபட்ச வருகை நாள் குறித்து கல்வி ஆண்டு துவக்கத்திலேயே மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். 

உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாணவ, மாணவிகளிடம் நெருக்கமாக பழகி ஆற்றுப் படுத்தும் திறன் கொண்ட ஆசிரியர் ஒருவரை அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும் சுய நிதி கல்லுாரிகளிலும் உளவியல் ஆலோசகராக நியமிக்கவேண்டும். அவர்களை மாணவர்கள் அலைபேசியில் தொடர்பு கொள்ள அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

முன்னாள் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு.

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணிபுரிந்து, 2013ம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை, மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதன் மூலம், 1.18 லட்சம் பேர் பயனடைவர்.'பொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், 2013 ஜூன், 10ம் தேதிக்கு முன், பணி ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும்' என, நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. 

அந்த தேதிக்கு பின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படும், 'பார்முலா'வில் மாற்றம் செய்யப்பட்டதால், கூடுதல் தொகை கிடைத்து வருகிறது. சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அந்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.அதன் மூலம், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் சமமான அளவில் ஓய்வூதியம் கிடைக்கும். 

இதன் மூலம், 1.18 லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயன் அடைவர். இதன் மூலம், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு, குடும்ப ஓய்வூதியர்களின், 24 கோடி ரூபாய் உட்பட, 155 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். இதுதவிர, பயனாளிகளுக்கு பின்தேதியிட்டு நிலுவைத்தொகை வழங்க, கூடுதலாக, 284 கோடி ரூபாய்செலவாகும்.

எஸ்சி-எஸ்டி மாணவர்களுக்கு ஓராண்டு இலவச கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பராமரிப்பு பயிற்சி.

தமிமத்திய அரசின் எஸ்சி-எஸ்டி  வேலைவாய்ப்பு  பயிற்சி மற்றும் வழிகாட்டி துறையின் சென்னை  துணை மண்டல வேலைவாய்ப்பு  அலுவலர் எஸ்.கே.சாகோ நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலைவாய்ப்பு அதிகமுள்ள  ‘ஓ லெவல்’ கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பராமரிப்பு பயிற்சி  எஸ்சி-எஸ்டி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக அளிக்கப்படும். இந்த பயிற்சி  ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஓராண்டுக்கு நடைபெறும். இந்த பயிற்சிப்பெற   2வில் அறிவியல் பாடங்களை படித்தவர்கள்,  ஐடிஐ பயிற்சியில்  எலக்ட்ரிக்கல்,  எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பொறியியல் பிரிவுகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 2வில் அறிவியல் பாடங்களைபடிக்காதவர்களுக்கு  ஜூலை 30ம் தேதி தகுதி தேர்வு ஒன்றை நடத்தி தேர்வு செய்யப்படுவர்.

விருப்பமுள்ள  எஸ்சி-எஸ்டி மாணவ, மாணவிகள்  ஜூலை 11ம்தேதி  முதல் ஜூலை 28ம் தேதிக்குள்  நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க வேண்டும். காலை 11 மணி  முதல் மாலை 5 மணி வரை அலுவலக நேரத்தில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பத்துடன்   கல்வி தகுதி சான்றிதழ்,  மதிப்பெண்பட்டியல், வேலைவாய்ப்பு அட்டை பதிவு  சான்று, சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை விண்ணப்பதுடன்  இணைக்க வேண்டும்.

 தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஜூலை 29ம்தேதி நேர்முகத்  தேர்வு நடத்தி ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும்  விவரங்கள் அறியவும், விண்ணப்பிக்கவும்  எஸ்சி-எஸ்டி வேலைவாய்ப்பு பயிற்சி  மற்றும் வழிகாட்டி மையம், 3வது மாடி, தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய  கட்டிடம், எண்:56 சந்தோம் நெடுஞ்சாலை, சென்னை -600004 என்ற முகவரியில்  நேரில் அணுக வேண்டும். முகவரி, பயிற்சி குறித்து 044-24615112 என்ற  தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பி.இ., இரண்டாம் ஆண்டு சேர்க்கை - எலக்ட்ரிகல்பிரிவில் 54 ஆயிரம் இடம் காலி : மெக்கானிகலுக்கு 'மவுசு'

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் எலக்ட்ரிகல் பிரிவில் 54 ஆயிரத்து 863 இடங்கள் காலியாக உள்ளன. பி.இ.,பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங், காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியில் கடந்த 29-ம் தேதி தொடங்கி, நேற்று முடிந்தது. 

மொத்தம் 16,143 பேர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ததில், சிவில் பிரிவுக்கு 3,425, மெக்கானிகல் 5,914, எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் 5,182, கெமிக்கல் - 140, டெக்ஸ்டைல் -79, லெதர் - 8, பிரிண்டிங் - 12, பி.எஸ்.சி., -13, உதிரி 12 என மொத்தம் 14,785 பேர் விண்ணப்பித்தனர். சிவில் பிரிவில் 2948 பேருக்கு சேர்க்கை அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. 532 பேர் ஆப்சென்ட். மெக்கானிகல் பிரிவில் 5,067 பேருக்கு அனுமதி கடிதம்வழங்கப்பட்டது. 921 பேர் ஆப்சென்ட். எலக்ட்ரிகல் பிரிவில் 4,463 பேரும், பி.எஸ்.சி., முடித்த 10 பேரும், கெமிக்கல் பிரிவில்129 பேரும், டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் 63 பேரும், லெதர் பிரிவில் 5 பேரும், பிரிண்டிங் பிரிவில் 6 பேரும் சேர்க்கை அனுமதி கடிதம் பெற்றனர்.தமிழகம் முழுவதும் உள்ள 526 கல்லுாரிகளிலிருந்து இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்காக மொத்தம் ஒப்பளிக்கப்பட்ட இடங்கள் 97,836. 

இதில் சிவில் - 14,677, மெக்கானிகல் 22,400, எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் 59,326, கெமிக்கல் 1,176, டெக்ஸ்டைல் 245, லெதர் 6, பிரிண்டிங் 6.சேர்க்கை கடிதம் பெற்றவர்கள் வரும் 13-ம் தேதிக்குள் கவுன்சிலிங்கில் தாங்கள் தேர்வு செய்த கல்லுாரியில் அசல் சான்றிதழ்களுடன் சென்று சேர அறிவுறுத்தப்பட்டது.ஏற்பாடுகளை முதல்வர் ராஜகுமார், துணை முதல்வர் இளங்கோ, ஒருங்கிணைப்பாளர் கணேசன் செய்திருந்தனர்.-----இறங்கு முகத்தில் சேர்க்கை: கடந்த 2015--16-ம் கல்வி ஆண்டில் சிவில் பிரிவுக்கு 14 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 3580 பேரும், மெக்கானிகல் பிரிவுக்கு 23 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்ததில் 6546 பேரும், எலக்ட்ரிகல் பிரிவுக்கு 66 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்ததில் 6546 பேரும் கல்லுாரிகளில் சேர்ந்தனர். 

மொத்தம் ஒருலட்சத்து 11 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 95 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு 85 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆண்டு 16,799 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்று கல்லுாரிகளில் சேர்ந்தனர். இந்த ஆண்டு12,782 பேர் என, 4 ஆயிரம் பேர் குறைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் மாணவர்கள் சேருவது குறைந்து வருகிறது

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!