Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 11 July 2016

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்'எள் – மருத்துவ பயன்கள்"

எள், முழுத் தாவரமும் இனிப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. வறட்சி அகற்றும். எள்ளில் அதன் விதையின் நிறத்தைக் கொண்டு வெள்ளை, கருமை, சிவப்பு என பல‌ வகைகள் அறியப்படுகின்றன‌. எள் வெப்பம் உண்டாகும். உடல் உரமாக்கும். சிறு நீர் பெருக்கும். பால் பெருக்கும். மலமிளக்கும். ருது உண்டாகும்.

டி.பார்ம். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் டி.பார்ம், போஸ்ட் பிஎஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.செவிலியர் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கான போஸ்ட் பி.எஸ்சி., டி.பார்ம், ஏற்கெனவே  டி.பார்ம் முடித்தவர்களுக்கான பி.பார்ம் (lateral entry) ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்களை (ஜூலை 11 முதல்) பதிவிறக்கம் செய்யலாம்.

உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவது சம்பந்தமான அரசாணையை செயல்படுத்தக்கோரி வழக்கு - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பரிசீலிக்க, ஐகோர்ட்டு உத்தரவு.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவது சம்பந்தமாக 2009–ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை செயல்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பரிசீலிக்க, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டில் மனு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி இயக்குனர் கிரேடு–1ஆக பணியாற்றி வருபவர் செந்தில்.

NEET Exam: பெருகி வரும் பயிற்சி மையங்கள்.

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய பொது நுழைவு மற்றும் தகுதித் தேர்வு ("நீட்') அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான பயிற்சி மையங்களும் பெருகத் தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

42 வயதில் பி.இ. சேர ஆர்வம் காட்டும் விவசாயி மகன்

தனது அரிய கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் பெறுவதற்காக 42 வயதில் பொறியியல் படிப்பில் சேரப் போகிறார் பெரம்பலூரைச் சேர்ந்த விவசாயியின் மகன்.  2016-17 கல்வியாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள இவர், பி.இ. தமிழ் வழி இயந்திரவியல் பிரிவைத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளார்.

கல்வி உதவி தொகை பெற அரசு, உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் பிசி, எம்பிசி, டிஎன்சி ஆகிய வகுப்பை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவி தெகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேசிய திறனாய்வு தேர்வு 9ம் வகுப்பு மாணவர்கள் ஆக.1 முதல் விண்ணப்பிக்கலாம்

அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆக.1 முதல் 8 வரை விண்ணப்பிக்கலாம். கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் பகுதிகளில் இருக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2016-17ம் கல்வியாண்டில் தொடர்ந்து 9ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகள் இத்தேர்வு எழுத தகுதி படைத்தவர்கள்.

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்ய...

*புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016*
பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள இணைப்பில் புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://tnnhis2016.com/TNEMPLOYEE/EmpECard.aspx
*பயனர்எண் :*
பழைய காப்பீட்டு அடையாள அட்டை எண். (எண் & எழுத்துகள் அடங்கிய 23 உறுப்புகள் உடையது)
*கடவுச்சொல் :*
பிறந்த தேதி

வேளாண் பல்கலை. முதல்கட்ட கலந்தாய்வு: 2,055 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் நடப்பு கல்வியாண் டுக்கு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில், 2,055 மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொறியியல் படிப்பு: 40 ஆயிரம் பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை.

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக் கழகத்தில் ஜுன் 27-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 13-வது நாளான நேற்றைய கலந்தாய்வுக்கு 5112 அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அவர்களில் 1896 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை.

மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால் ஆசிரியருக்கு "மெமோ" - இணை இயக்குனர் எச்சரிக்கை

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் சரியாக படிக்காவிட்டால், புத்தகத்தில் உள்ளதை வாசிக்கத் தெரியாவிட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து கல்வித் துறை இணை இயக்குநர் பாலமுருகன் கூறியதாவது:

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!