Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 13 July 2016

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"குல்கந்தின் பயன்கள்"

‌சிலரு‌க்கு ‌பி‌த்த உட‌ம்பாக இரு‌க்கு‌ம். அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் அதிக பித்த அளவை குறை‌க்க கு‌ல்க‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.
வயிற்றுக் கோளாறுகளுக்கு‌ம் நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும்.

தொடக்க கல்வி - ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாள் முன்னிட்டு சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து பரிசுதொகை வழங்குதல் சார்ந்து வெளியிட்ட அரசானை குறித்து இயக்குனரின் செயல்முறைகள்...TNPSC - VAO Certificate Verification Schedule


பொதுமாறுதல் கலந்தாய்வு வெளியானால் ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும்...!


ரிசர்வ் வங்கியில் 182 கிரேடு 'பி' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 182 கிரேடு 'பி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 182

பழைய ஓய்வூதியத் திட்டம் என்னவாயிற்று? : கலைஞர் அறிக்கை

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’ தமிழகத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
புதிய பென்ஷன் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், தர ஊதியம் (கிரேடு பே), அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் 10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படுகிறது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் பயணிக்கும் கிராபிக்ஸ் நாவல்கள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கிராபிக்ஸ் நாவல்கள் மூலம் மாணவர்களுக்கு கதைப் பகுதிகள், வரலாற்று நிகழ்வுகள் விளக்கப்பட்டு வருகின்றன.
ஆயிரம் வார்த்தைகள் மூலம் உணர்த்த முடியாத கருத்தை ஒரு புகைப்படத்தின் மூலம் எளிதாக உணர்த்தலாம். இதனை மையக் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையே கிராபிக்ஸ் நாவல்கள். வெவ்வேறு இடங்களில் தயாரான இவ்வகை நாவல்களைப் பள்ளிகளில் பொதுமைப்படுத்துவதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இக்கிராபிக்ஸ் நாவல்கள் மகாபாரதம் முதல் மார்க்ஸ் வரை தங்களை பார்வையாளர்களிடம் அடையாளப்படுத்தி வந்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டத்தை அறவே ரத்து செய்க: கருணாநிதி வலியுறுத்தல்

அரசு ஊழியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டத்தை அறவே ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடருவதற்கான அறிவிப்பினை ஜெயலலிதா செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.

தினமும் காலை, மாலை வேளைகளில் வகுப்பறைகளை கண்காணிக்க வேண்டும், என, தலைமை ஆசிரியர்களுக்கு,கல்வித்துறை அட்வைஸ் வகுப்பறை கண்காணிப்பு; கல்வித்துறை அட்வைஸ்

தினமும் காலை,மாலை வேளைகளில் வகுப்பறைகளை கண்காணிக்க வேண்டும்,என,தலைமை ஆசிரியர்களுக்கு,கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

2016 - 17 List Of Holidays Vellore District


காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந்துகொள்வோம்

1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்ஞாபகசக்தி மிகுந்திருந்தது.

2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.

உள்ளூர் பள்ளியை உயர் தரத்துக்கு மாற்றிய ஆசிரியை!அன்பாசிரியர் - ராதாமணி.தனியார் பள்ளிகளின் உள், வெளிக்கட்டமைப்புக்கு ஒரு படி மேல் அமைந்திருக்கிறது திருப்பூர், வேலம்பாளையம் அரசுப்பள்ளி. முழுக்க கான்க்ரீட் தளத்தால் கட்டப்பட்டிருக்கும் பள்ளியில், தனித்தனியாக கணினி வகுப்பறை, உச்சரிப்பு பயிற்சிக்காக ப் ரொஜெக்டர் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

5 மாதத்தில் யாரையும் சந்திக்காத புதிய பென்ஷன் திட்ட ஆய்வு குழு : அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

புதிய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, 5 மாதங்களில் யாரையும் சந்திக்கவில்லை என்பது தகவல் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்தது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தமிழகத்தில் 2003 ஏப்.,1ல் புதிய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

பி.எட். கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தத் திட்டம்?

பி.எட். சேர்க்கைக்கு ஜூலை 4-ஆம் வாரத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, செப்டம்பர் 2-ஆவது வாரத்துக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்கப்படலாம் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் இலவச பஸ் பாஸ்

நிகழ் கல்வியாண்டில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள அனைத்து மேலாண் இயக்குநர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

2 ஆசிரியர்களின் நல்லாசிரியர் விருது பறிப்பா?

இரண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கியது தொடர்பாக புகார்எழுந்துள்ளதால், வழங்கப்பட்ட விருதுகள் பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நினைவாக, ஆண்டுதோறும் பள்ளிஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

கால்நடை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் இன்று துவக்கம்

தமிழக கால்நடை மருத்துவக் கல்லுாரியில், இளநிலை படிப்புகளில் சேர, மாணவர்களுக்கான கவுன்சிலிங், இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
கால்நடை அறிவியல் படிப்பில், 320 இடங்கள்:

ஜூலை இறுதியில் பி.ஆர்க்., கவுன்சிலிங்

அண்ணா பல்கலை மூலம் பி.ஆர்க்., படிப்பில் சேர, 2,600 பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஜூலை இறுதி வாரம், கவுன்சிலிங் நடத்தப்படும் என தெரிகிறது. அண்ணா பல்கலையில் தற்போது, பி.இ., - பி.டெக்., படிப்புக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், 27ல் துவங்கி நடந்து வருகிறது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!