Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 19 July 2016

தமிழகத்தில் 14 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் 14 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை: 

ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக என்.கே.செந்தாரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக வி.வரதராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தஞ்சை மாவட்ட எஸ்.பி.யாக ஜே.மகேஷ், தேனி மாவட்ட எஸ்.பியாக வி.பாஸ்கரன், திருச்சி நகர துணை கமிஷனராக (சட்டம் ஒழுங்கு) ஏ.மயில்வாகனன், சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.ஜி. என் சேஷசாயி சென்னை தலைமையிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காலியாக இருந்த மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் மற்றும் ஐ.ஜி. பதவிக்கு அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உளவுப்பிரிவு கூடுதல் ஆணையராக பி.தாமரைக் கண்ணன், சென்னை பூக்கடை துணை கமிஷனராக ஆர்.சக்திவேல், திருச்சி எஸ்.பியாக டி.செந்தில்குமார், சென்னை அம்பத்தூர் துணை ஆணையராக ஆர்.சுதாகர், சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக எஸ்.செல்வக்குமார், சென்னை போக்குவரத்து துணை ஆணையராக ரூபேஷ் குமார் மீனா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Spelling Rules - Silent Letters


தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"அசல் தேனை கண்டுபிடிப்பது எப்படி?"

honeycomb-honey-wallpaper-4

மற்ற எந்த பொருள் மீதும் வராத சந்தேகம், தேன் என்றவுடன் ’அசல்’  தானா ? என்ற சந்தேகம்  நம்மில் ஏறத்தாழ 99 சதவீதம் பேருக்கு  வருவது   சகஜம் ! காரணம் தேன் மட்டுமல்ல விலை அதிகமுள்ள அனைத்து பொருள்களிலும் கலப்படம் செய்வது என்பது  நம் நாட்டில் சகஜம்.

வனவர், கள உதவியாளர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி 25-ல் தொடக்கம்: வனத்துறை தகவல்.

வனவர், கள உதவியாளர் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.இது தொடர்பாக வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்பவர்களே உண்மையான ஆசிரியர்கள்

குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்பவர்கள் மட்டுமே உண்மையான ஆசிரியர்கள் என்று குழந்தை நேய பள்ளித் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சுடரொளி பேசினார்.

விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள குழந்தை நேய பள்ளிகள் தலைமை ஆசிரியர்களுக்கான அறிமுகக் கூட்டம் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குழந்தை நேய பள்ளிக்கான கூட்டமைப்பின் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் வரவேற்றார். குழந்தை நேய பள்ளிகளுக்கான தேவை குறித்து, கூட்டமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர் சு.மூர்த்தி, சமூக கல்வி நிறுவன இயக்குநர் சியாம் சுந்தர் ஆகியோர் பேசினர்.

இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் சுடரொளி பேசியதாவது: ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பு மற்றும் சமூக கல்வி நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் நடப்பாண்டில் குழந்தை நேய பள்ளிகளை உருவாக்கும் முனைப்பில் இறங்கியுள்ளன.

குழந்தைகளின் உரிமைகளையும், அவர்களது ஜனநாயகத்தையும் புரிந்து கொள்பவர்கள் மட்டுமே உண்மையான ஆசிரியர்களாகவும், வாழ்வின் வழிகாட்டிகளாகவும் இருக்க முடியும். பள்ளியில் உள்ள
மொத்த ஆசிரியர்களையும் குழந்தை நேயர்களாக மாற்றும் முயற்சியின் தொடக்க கட்டம் இது.

அதே போல் குழந்தைகளுக்குத் தேவையான பல்துறைகளையும் அவர்களுக்கு அளிக்க உள்ளோம் என்றார். திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காமாட்சி நன்றி கூறினார்.

TRB: விரைவில் 1,120 விரிவுரையாளர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நியமனம்: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக தேர்வு.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி களில் விரைவில் 1,120 விரிவுரை யாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலம் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.

மதுரையில் நவீன ஆய்வகம் அமைக்க 6 பள்ளிகள் தேர்வு.

மாணவ, மாணவியரின் ஆய்வுத்திறனை மேம்படுத்தும் வகையில் நவீன ஆய்வகம் அமைக்க மதுரை மாவட்டத்தில் 6 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அப்பள்ளிகள் ஆய்வகத்துக்கான நிதி கோரி மத்திய அரசுக்கு நேரடியாக விண்ணப்பிக்க  உள்ளன.மத்திய அரசு அடல் இனோவேசன் மிஷன் எனும் சிறப்புத் திட்டத்தை பள்ளிகளில் செயல்படுத்தவுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி : 500 ஆசிரியர்களிடம் விசாரணை

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில், குளறுபடிகள் நடந்துள்ளது தொடர்பாக, 500 ஆசிரியர்களிடம் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், 3,500 மாணவர்கள், 'எங்கள் விடைத்தாள்கள் சரியாக திருத்தம் செய்யப் படவில்லை' எனக் கூறி, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர்.

பட்டதாரிகளுக்கு பிரசார் பாரதியில் பணி: 25க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு.

பிரசார் பாரதியில் நிரப்பப்பட உள்ள 7 Content Manager, PR Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் இதழியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா கையடக்கபஸ் பயண அட்டைகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

31 லட்சம் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு கட்டணம் இல்லாபஸ் பயண அட்டை திட்டத்தை ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

ரிசர்வ் வங்கி குரூப்-பி அதிகாரி பணியில் 182 காலியிடங்களை நிரப்ப ரிசர்வ் வங்கி முடிவுசெய்துள்ளது.

நம் நாட்டின் வங்கிப் பணிகளை ஒட்டுமொத்தமாக ஒழுங்குபடுத்தும் அமைப்பாகத் திகழ்வது இந்திய ரிசர்வ் வங்கிதான். இது, வங்கிகளின் வங்கி (Bankers’ Bank) என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தவிர மற்ற அனைத்து அரசு வங்கிகளுக்கும் தேவைப்படும் ஊழியர்களும் அதிகாரிகளும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் என்ற அமைப்பு மூலம் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

மருத்துவ நுழைவு தேர்வு தொடர்பான மசோதா இன்று தாக்கல் .

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இந்த ஆண்டு முதல் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர்களைசேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்கு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மாநில பாடத் திட்டத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை - DINAMANI

மத்திய அரசின் இடைநிலை கல்வி திட்டத்துக்கு இணையாக மாநில பாடத் திட்டத்தை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

BHARATHIDASAN UNIVERSITY Information Systems Manager RECRUITMENT 2016 | Last date for receipt of Filled-in Application is 06.08.2016 by 5.00 P.M ...


ஆதார் அட்டை எண் இருந்தால் தான் இந்த மாதம் ஊதியம் என கட்டாயப் படுத்தக்கூடாது. (RTI) தகவல் .


விரைவில் 1600 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர்.


மாணவர்களுக்கு 11 விதிமுறைகள் - பள்ளி கல்வித்துறை


பெண்கள் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.


RTI :SALEM VINAYAKA UNIVERSITY M.PHIL INCENTIVE REGARDING NEW RTI COPY

10ம் வகுப்பு அசல் சான்றிதழ் வினியோகம் துவக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்த மாணவர்களுக்கு, ஏற்கனவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம், நேற்று பள்ளிகளில் துவங்கியது.

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க கோரிக்கை

'உயர்கல்வி முடித்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, இரண்டு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை தர ஊக்க ஊதியம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் என, ஊதிய உயர்வுகள் வழங்கப்படுகின்றன. உயர்கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு, இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு, தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அகஇ - 2016-17ஆம் ஆண்டிற்க்கான பள்ளி மான்யம் வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் சார்ந்த இயக்குனரின் வழிகாட்டுதல்கள் நெறிமுறைகள்

தொலைக்காட்சி-கணினியில் நேரத்தை செலவிட வேண்டாம்!மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை

தொலைக்காட்சி-கணினியில் மாணவர்கள் தங்களது நேரத்தை செலவிடக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிப் பார்க்க அடையாறில் உள்ள சிஷ்யா பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை வருகை தந்தனர். இவர்களைப் பார்த்த முதல்வர் ஜெயலலிதா தனது அறைக்கு அழைத்து, இனிப்புகளை வழங்கினார். பின்னர், அவர்களைச் சந்தித்து உரையாடினார்.

அப்போது, அவர் பேசியது:-

அகில இந்திய சி.ஏ., தேர்வில் தமிழக மாணவர் ஸ்ரீராம் முதலிடம்


அகில இந்திய அளவிலான சி.ஏ., தேர்வில் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் முதலிடம் பெற்றுள்ளார்.அகில இந்திய சி.ஏ. தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இதில் சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம்,20. 800-க்கு 613 மார்க்குகள் (76.63 சதவீதம் )பெற்று முதலிடம் பெற்றார்.
இவரது தந்தை ஓய்வுப்பெற்ற போக்குவரத்துத் துறை ஊழியர், தாயார் நுாலகராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த ஜான் பிரிட்டோ முதலிடம் பிடித்திருந்தார். இதையடுத்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழகம் சி.ஏ., தேர்வில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!