எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!





Thursday, 21 July 2016
தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்" உடலில் உள்ள நோய்களைக் வெளிக்காட்டும் “நகங்கள்” – அறிந்து கொள்வோம்"
ஆந்திர அசத்தல்: உள்துறை அமைச்சரை தொடர்புகொண்ட 'ஜூனியர் உள்துறை அமைச்சர்'
ஆந்திர மாநிலம் உள்துறை அமைச்சர் பரமேஷ்வரனுக்கு தக்ஷினா பகுதியை ஒட்டிய சிறிய கிராமத்தில் அமைந்துள்ள பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வின் புத்தூர் தாலுக்காவைச் சேர்ந்த ஹராடியில் திவித் என்ற எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர் அப்பள்ளியிலுள்ள மாணவ சட்ட சபையின் உள்துறை அமைச்சராக உள்ளார்.
திவித் பயிலும் பள்ளியில், பள்ளி நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கையால் நான்கு ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
TNPSC:குரூப் 1 முதன்மைத் தேர்வு: வரும் 29 இல் தொடக்கம்.
இதுகுறித்து, தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு விரைவில் புத்தாக்கப்பயிற்சி.
EMIS :2016-2017 கல்வியாண்டிற்கு தங்களது பள்ளியின் மாணவர்களை பதிவு செய்யலாம்.
தமிழக பட்ஜெட் 2016-17 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த உயர்மட்ட குழு
PG Promotion - தேர்வு நிலையை கருத்தில்கொண்டு திட்டமிட்டு கடந்தாண்டு பதவி உயர்வு பட்டியலுக்கு பெயர் அனுப்பாத ஆசிரியர்கள் மீது விரைவில் ஒழுங்கு நடவடிக்கை - கல்வித்துறை
தமிழக பட்ஜெட் 2016-17:கல்வித்துறை முக்கிய அம்சங்கள்
அதில் தமிழக பட்ஜெட் 2016-17:கல்வித்துறை முக்கிய அம்சங்கள்:
*பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.24,130 கோடி நிதி ஒதுக்கீடு.
*தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.32 கோடி ஒதுக்கீடு
*இலவச மடிக்கணினிகள், பாடநூல்கள், சீருடைகள் திட்டத்துக்கு ரூ.2,705 கோடி ஒதுக்கீடு.
* தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு ரூ.1,429.94 கோடி ஒதுக்கீடு.
* அடுத்த ஓராண்டில் மாணவர்களுக்கு 5.35 லட்சம் லேப்-டாப்கள் வழங்கப்படும்.
தமிழக பட்ஜெட் 2016-17: முக்கிய அம்சங்கள்
ஏழைகளுக்கு 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள்
புதிய வரிகள் எதுவும் இல்லாத தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக, ஏழைகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகளைக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. | அதன் விவரம்: ஏழைகளுக்கு 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் |
தமிழக சட்டப்பேரவையில் 2016-17 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்:
தமிழக பட்ஜெட் 2016-17: துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்.
ஆசிரியர் உயிரைக் காக்க முதலமைச்சருக்கு கோரிக்கை மனு எழுதிய 400 மாணவர்கள்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ரூ.408 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
வேகமாக சார்ஜ் ஆகும் 'ஓப்போ எப்1
இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாணவர்களின் திறமையை வளர்ப்பது குறித்த கலந்தாய்வு:40 பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பு
பொது கலந்தாய்வு விதியில் மாற்றம் : ஆசிரியர்கள் வலியுறுத்தல்
ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய விதிமுறையால் பெரும்பாலான ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஆக., 3ல் துவங்கி செப்., 4 வரை நடக்கிறது. இந்தாண்டில் கலந்தாய்வு விதிமுறையில் கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது.
இதன்படி 1.6.2016க்கு முன் பணியேற்றவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்தாண்டு கலந்தாய்வு ஆகஸ்டில் தான் நடந்தது. இதனால் பெரும்பாலான ஆசிரியர்கள் 1.6.2016க்கு பின் தான் பணியேற்றனர். இந்த விதியால் பெரும்பாலான ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் கழகம் மாநில தலைவர் சுரேஷ் கூறியதாவது:
புதிய விதிமுறையால் பெரும்பாலான ஆசிரியர்கள் நடக்கவுள்ள கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. 1.6.2015ல் கலந்தாய்வு நடந்திருந்தால் இந்த விதிமுறை சரியாக இருக்கும். ஆனால் ஆகஸ்டில் தான் கலந்தாய்வு நடந்தது.மேலும் சென்றாண்டு தலைமையாசிரியர்களாக பதிவு உயர்வு பெற்றவர்களுக்கும் கலந்தாய்வில் எவ்வித தளர்வும் வழங்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு இதுவும் ஏமாற்றமான விஷயம் தான். சம்பந்தப்பட்ட விதிமுறையில் திருத்தம் கொண்டு வந்து அனைவரும் பங்கேற்க கல்வித்துறை வாய்ப்பளிக்க வேண்டும். மேலும் இக்கல்வியாண்டிற்கான தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் மற்றும் ஆசிரியர் பணியிடங்களையும் வெளியிட்டு கலந்தாய்வில் சேர்க்கப்பட வேண்டும், என்றார்.
பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வு 'ரிசல்ட்' இன்று வெளியீடு
பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வின் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஜூன் மற்றும் ஜூலையில், பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, சிறப்பு துணைத்தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை, மாணவர்கள் மற்றும் தேர்வர்கள், காலை, 11:00 மணிக்கு மேல், http://www.dge.tn.nic.in/ என்ற தேர்வுத் துறை இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலாகவே பார்க்கலாம்.
தேர்வரின் பெயர், பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஜூலை, 25 முதல், 27 வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், அதற்காக வழங்கப்படும் ஒப்புகை சீட்டை, பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள எண்ணை
பயன்படுத்தியே, மறுகூட்டல் முடிவை பெற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மாணவர்கள் பிறந்த நாளிலும் சீருடை அணிவது கட்டாயம்; கல்வித்துறை உத்தரவு
பள்ளிக்கு வரும் மாணவர்கள், பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில் வர வேண்டும். மொபைல் போன், இரு சக்கர வாகனங்கள் கொண்டு வருவதற்கு தடை உள்ளிட்ட, 11 விதிகளை பின்பற்ற வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், பள்ளி துவங்கி இரு மாதங்கள் ஆகிவிட்டன. மாணவர் சேர்க்கை, வளாக பராமரிப்பு, கல்வி திட்டங்கள் பின்பற்றுதல் உள்ளிட்ட, பல்வேறு நடைமுறைகளுக்கு, கல்வித்துறை சார்பில், விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அறிவுறுத்துவது வழக்கம். மாணவர்கள் ஒழுக்க நெறிமுறைகள் பின்பற்றுவதை, கட்டாயமாக்கும் விதமாக, பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதில், கல்லுாரி மாணவர்களை போல, மேல்நிலை வகுப்பு மாணவர்களும், முறுக்கு மீசை வைத்து, கடுக்கன் அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். இது, மாணவர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகளில் இருந்து மீறும் செயலாகும். இதனால், மாணவர்கள் சீருடை அணியும் முறை, இறுக்கமில்லாத அரைக்கை சட்டை மட்டும் அணிதல், தலைமுடி வெட்டுதல், கைகளில் ரப்பர் பேண்டு, செயின் அணிந்து பள்ளிக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், பிறந்த நாளாக இருந்தாலும், சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும். விடுப்பு எடுப்பதாக இருந்தால், பெற்றோர் கையெழுத்தோடு, வகுப்பு ஆசிரியரின் ஒப்புதல் பெறுவது கட்டாயம் என, 11 விதிமுறைகள் வகுக்கப்பட்டு, தலைமையாசிரியர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில்,'கல்வித்துறை அறிவித்துள்ள நெறிமுறைகளை மாணவர்களுக்கு எடுத் துக்கூறியுள்ளோம். 'இருசக்கர வாகனங்களில் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால், பெற்றோருக்கு தெரியப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகள் மீறும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
இன்ஜி., பேராசிரியர் அக்., 22ல் தேர்வு
அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு, அக்டோபர், 22ல் நடத்தப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு, 2014 ஜூலையில் வெளியானது. அப்போது, 139 உதவி பேராசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், விண்ணப்பதாரர் வயது வரம்பு, 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது
.
192 ஆக...: அதனால், பேராசிரியர் தகுதிக்கான, 'நெட்' தேர்வு முடித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வயது வரம்பை அதிகரிக்க கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், வயது வரம்பு, 57 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, உதவி பேராசிரியர் நியமனத்துக்கான புதிய அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. அதில், பணியிடம் எண்ணிக்கை, 192 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
புதிய விதிமுறைகள் : அதன்படி ஆகஸ்ட், 17ல் விண்ணப்ப வினியோகம் துவங்குகிறது. செப்டம்பர், 7க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அக்டோபர், 22ல் தேர்வு நடத்தப்படும்.
இதில், 2014ம் ஆண்டு அறிவிப்பின் படி விண்ணப்பித்தவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. ஆனால், புதிய விதிமுறைகளை அவர்கள் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப தேர்வுக்கு தயாராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை, http://trb.tn.nic.in/ இணையதளத்தில் அறியலாம்.
அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டம்: முதல்வர் ஜெ., துவக்கி வைப்பு
அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்து, ஐந்து அரசு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளை, முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். ஜூலை, 1ம் தேதி முதல், நான்கு ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை, சில கூடுதல் பயன்களுடன் செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம், ஜூலை, 1ம் தேதி முதல், 2020 ஜூன் 30 வரை, இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
*புதிய திட்டத்தில், அரசு பணியாளர் குடும்பத்திற்கு அனுமதிக்கப்படும், மருத்துவ காப்பீட்டுத் தொகை, நான்கு லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
*குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படும் நிதியுதவி, 7.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
*இத்திட்டத்தில், அரசு துறை, உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசு பல்கலைக்கழகங்கள், ஆகியவற்றின் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் பலன் பெற முடியும்
*இத்திட்டத்திற்கு, அரசுப் பணியாளர்கள் சந்தா தொகையாக, மாதம், 180 ரூபாய் செலுத்த வேண்டும். தமிழக அரசு தன் பங்காக, 17.90 கோடி ரூபாயை, ஆண்டுதோறும் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கும். இத்திட்டத்தால், 10.22 லட்சம் அரசு பணியாளர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறுவர்.
ஐகோர்ட் நீதிபதிகளுக்கு உதவியாளர் பதவி : டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பு
உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு உதவியாளர் பதவி உட்பட, 309 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு, ஆக., 28ல் நடக்க உள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதன்படி, நீதிபதிகளுக்கு, 76 தனி உதவியாளர்; பதிவாளருக்கு, ஏழு தனி உதவியாளர்; துணை பதிவாளருக்கு, ஒரு தனி உதவியாளர் நியமிக்கப்பட உள்ளனர்.இவர்களை தவிர, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் 61; தட்டச்சர்கள் 84; ஆய்வாளர் 80; காசாளர் இரண்டு; ஜெராக்ஸ் ஆப்பரேட்டர் ஆறு என, மொத்தம், 317 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கு, http:/www.tnpsc.gov.in/ என்ற டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் 'ஆன்லைனில்' ஆக., 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை ஆக., 5ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். உதவியாளர் தேர்வு ஆக., 27லிலும்; மற்ற பதவிகளுக்கு
ஆக., 28ல் நடக்கும். தேர்வு குறித்த தகவல்களை டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.