Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 27 July 2016

அப்துல்கலாம் நினைவிடத்தில் ஏவுகணை, போர் விமானங்களின் மாதிரி 1–ந் தேதி வரை பார்க்கலாம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ராக்கெட்டுகள், இலக்கை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ், ஆகாஷ், பிருத்வி, தனுஷ் ஏவுகணை மாதிரிகள், மிராஜ், மிக்–2, தேஜஸ் ஆகிய போர் விமானங்களின் மாதிரிகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் வருகிற 1–ந்தேதி வரை பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், கலாம் நினைவாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அருங்காட்சியகத்தில், அப்துல் கலாமின் கண்டுபிடிப்புகள், அவர் எழுதிய புத்தகங்கள், அவர் உபயோகப்படுத்திய பொருட்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

சென்னைப் பல்கலைக்கழக உடனடித் தேர்வு முடிவு நாளை வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் 2016 ஜூலை மாதம் நடத்தப்பட்ட உடனடி தேர்வுக்கான முடிவுகள் நாளை (ஜூலை 28) வெளியிடப்பட உள்ளது.

முடிவுகளை www.result.unom.ac.in, www.ideunom.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

பி.ஆர்க். படிப்பில் சேர 1,605 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை

பி.ஆர்க். படிப்பில் சேர 1,605 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதற்கு உட்பட்ட கல்லூரிகளில் பி.ஆர்க். படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் ஏறத்தாழ 1,700 இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. கலந்தாய்வுக்கு 2,352 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், கலந்தாய்வில் கலந்துகொண்டு கல்லூரியை தேர்வுசெய்த 1,605 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. 203 பேர் கலந்தாய்வில் பங்கேற்றாலும் கல்லூரி எதையும் தேர்வு செய்யவில்லை.

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை ஜெ.இந்துமதி தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியல்

நிர்மல் ராஜ் - திருவாரூர் மாவட்ட கலெக்டர்.கோவிந்தராஜன் - கருர் மாவட்ட கலெக்டர்.அண்ணாதுரை - தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர்.ஆசிய மரியம் - நாமக்கல் மாவட்ட கலெக்டர்.ராமன் - வேலூர் மாவட்ட கலெக்டர்.வினய் - திண்டுக்கல் கலெக்டர்.ஞான சேகரன்- கடலூர் கலெக்டர்.ராஜாராமன் - நகராட்சி நிர்வாக இணை ஆணையர்.அர்ச்சனா - தோட்டக்கலைதுறை மற்றும் பயிர்கள்துறை இயக்குநர்.சுரேஷ்குமார் - நிலநிர்வாக இணை ஆணையர்.நந்தகுமார் - கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை இணை செயலாளர்.மதிவாணன் - சென்னை பெருநகர வளர்ச்சிகுழும தலைமை நிர்வாக அதிகாரி.சுப்பையன் - வேலை வாய்ப்பு , பயிற்சி துறை இயக்குனர்.காக்கர்லா உஷா- தமிழக நகர்புற கட்டமைப்பு நிதி சேவைகள் நிர்வாக இயக்குநர்.

 

ஐ.பி.எஸ்.அதிகாரிகள் பட்டியல்

சஞ்சய்குமார் - சேலம் மாநகர கமிஷ்னர்.சுமித்சரண் - சென்னை குற்றஆவண காப்ப ஐ.ஜி.பாரி - கோவை மேற்குமண்டல ஐ.ஜி.மஞ்சுநாதா- திருச்சி கமிஷ்னர்.சஞ்சய் மாத்தூர் - திருப்பூர் கமிஷ்னர்.ராஜன் - சேலம் எஸ்.பி.அமித்குமார் சிங் - நெல்லை துணை கமிஷ்னர்.மகேஸ்வரன் - நாமக்கல் எஸ்.பி.சிவகுமார் - ஈரோடு எஸ்.பி.ராஜசேகரன் - கரூர் எஸ்.பி.வந்திதா பாண்டே - சென்னை கண்ட்ரோல் ரூம் துணை கமிஷ்னர்.ஜெயசந்திரன் - சிவகங்கை எஸ்.பி.துரை - நாகப்பட்டிணம் எஸ்.பி.உமா - திருப்பூர் எஸ்.பி.சந்தோஷ் ஹதிமணி - சென்னை போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்.பி.மகேஷ்குமார் - கிருஷ்ணகிரி எஸ்.பி.சேவியர் தன்ராஜ் - சென்னை கியூ பிரிவு எஸ்.பி.

தொடக்கக்கல்வி - மாவட்டம் தோறும் தேர்தெடுக்கப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு"கணித ஆய்வகம்" அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் வெளியீடு.


எட்டாம் வகுப்பு மாணவருக்கு எழுத்துப்பிழைகள் வருகிறதா? : ஆய்வு நடத்த முடிவு.

 தமிழகம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.

பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழு, மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டிப்பு.

*இன்றைய சட்டசபை நிகழ்வு*

பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழு,மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டிப்பு.

சரியாக பணியாற்றாத" அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு கட் "7 வது ஊதியக்குழு பரிந்துரை !


70 பாட வினாத்தாள் மாற்றம்; அண்ணா பல்கலை அதிரடி

அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, 550 இன்ஜினியரிங் கல்லுாரிகள், அகில இந்திய கல்விக் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று இயங்குகின்றன.

இதில், தன்னாட்சி அந்தஸ்து பெற்ற, 13 கல்லுாரிகள் தவிர மற்ற கல்லுாரிகள், அண்ணா பல்கலை பாடத் திட்டம் மற்றும் தேர்வு முறையை பின்பற்றுகின்றன. இந்நிலையில், பி.இ., - பி.டெக்., மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்ற போதிலும், வேலை இல்லாமல் கஷ்டப்படுவது குறித்து, பல்கலை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் & 12 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு #ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

12 ஐஏஎஸ் அதிகாரிகளையும், 18 ஐபிஎஸ் அதிகாரிகளையும் தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது

● சென்னை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், கரூர் ஆட்சியராக மாற்றம்

● சென்னை மாநகர மண்டல துணை ஆணையர் அண்ணாதுரை, தஞ்சை மாவட்ட ஆட்சியராக மாற்றம்

● சென்னை மாகர துணை ஆணையர்  (கல்வி) ஆசிய மரியம் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக மாற்றம்

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு சார்ந்து 27.07.2016 அன்று இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தயாராக இருக்க உத்தரவு


மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வி: வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி ஜூலை 29-ல் வேலைநிறுத்தம்

மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந் ததையடுத்து திட்டமிட்டபடி வரும் 29-ம் தேதி வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல் மதிப்பெண் அளித்ததில் 5 மாவட்டங்களில் முறைகேடு: கல்வித் துறை விசாரணை

தமிழகத்தில் கடந்த மார்ச்சில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டதையடுத்து 5 மாவட்டங்களில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

TNPSC:குரூப்-1 மெயின் தேர்வு வரும் 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடக்கிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு வரும் 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடக்கிறது. சென்னையில் மட்டுமே நடத் தப்பட உள்ள இத்தேர்வில் 3,815 பேர் பங்கேற்கின்றனர்.துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர் ஆகிய பதவிகளில் 74 காலியிடங்களை நிரப்பும் வகையிலான டிஎன்பி எஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு ஜூலை 29முதல் 31-ம் தேதி வரை சென்னையில் மட்டும் நடத்தப்பட உள்ளது.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் - 21 அதிகாரி, உதவியாளர், எம்டிஎஸ், பணி

தமிழ்நாடு,திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தில்2016 - 2017-ஆம் ஆண்டிற்கான21துறை அதிகாரி,உதவியாளர்,எம்டிஎஸ்,பியூன் போன்ற குரூப் பி,சி பணியிடங்களுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஆகஸ்ட்12க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ‘செக்’ ஆசிரியர்கவுன்சலிங் விதிமுறைகளில் அதிரடி மாற்றம் : ஆசிரியர்கள் கலக்கம்

கவுன்சலிங் தொடங்க உள்ளநிலையில், மாறுதல் விதிமுறைகளில் மாற்றம் வர உள்ளதால் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, தலைமை ஆசிரியர்களுக்கு ஒவ்வொருஆண்டும் மே மாதத்தில் பணியிட மாறுதல் கவுன்சலிங் நடக்கும். 

B.Ed . படிப்பில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு: இந்த ஆண்டு முதல்முறையாக அமல்

பி.எட். படிப்பில் அறிவியல், கணித பாடப் பிரிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் புதிய நடைமுறை இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் வழங்கப்படும் பி.எட் படிப்பில் 1,777 இடங்கள் ஒற்றைச் சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 

TNPSC:சான்றிதழ் சரிபார்ப்புக்கு கூடுதல் விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவது ஏன்? - டிஎன்பிஎஸ்சி செயலாளர் விளக்கம்.

அரசு பணிக்கான தேர்வின் போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு காலியிடங்களைவிட கூடுதல் விண்ணப்பதாரர்களை அழைப் பது ஏன் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் எம்.விஜய குமார் விளக்கம் அளித்தார்.தமிழக அரசு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. 

உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை காலம் நீட்டிப்பு.

உயர்நிலை ,மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 31.07.2016 வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது சேர்க்கை காலத்தை
 30.09.2016 வரை நீட்டித்து பள்ளி கல்வி இயக்குநர் முனைவர்.ச.கண்ணப்பன் அவர்கள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெளிவுரை அனுப்பியுள்ளார்கள்.

7Pay:மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழு -அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

1) அனைவருக்கும் 2.57 ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் .
2) 1.1.2016 முதல் 7 வது ஊதிய குழு ஊதியம் பெறலாம் .
3)படிகள் எதுவும் ரத்து செய்யப்பட வில்லை.
4)pay band and grade pay க்கு பதில் pay level நடைமுறை படுத்தப்படுகிறது.
5)ஆண்டு ஊதிய உயர்வு ஜனவரி 1 , மற்றும் ஜூலை 1 ஆகிய நாள்களில் மட்டுமே வழங்கப்படும்.இது பணி நியமனம்.,பதவி உயர்வுக்கு பொருந்தும்.
6)குறைந்த நிலை ஊதியம் 18,000 ஆகும்.
7)ஊதிய திருத்தத்திற்கு மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியர் தேர்வாணையம் மூலம், 56,300 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்: சட்டசபையில் அமைச்சர் நிலோபர் தகவல்

வேலை வாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்தவர்களில், 60 சதவீதம் பேர் மேற்படிப்பு படித்து வருகின்றனர்,'' என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.

சரியாக வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுநிறுத்தம்: 7வது சம்பள கமிஷன் பரிந்துரையை ஏற்று அரசாணை வெளியீடு.

'சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்' என்ற, ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை ஏற்று, அரசாணையை வெளியிட்டுள்ளது, மத்திய அரசு.மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி அளிக்கும், ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளுக்கு, மத்திய அமைச்சரவை, கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. 

7-வது ஊதிய குழு பரிந்துரைகள் அமல் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் புதிய சம்பளம்.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை கள் அடுத்த மாதம் முதல் அமல் படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 2015 நவம்பரில் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம்அளித்தது.

வரையறுக்கப்பட்ட விடுப்பு விதிகள் ..

அ) தமிழக அரசு தமது அலுவலர்களுக்கு கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு 3 நாட்கள் என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது.

www.tnpl.com | தமிழ் நாடு நியூஸ் பிரிண்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு . விரிவான தகவல்கள்.


உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2016 - விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவு

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2016க்கான விண்ணப்பங்கள் www.deetn.com என்ற  இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்ஜி., துணை கவுன்சிலிங் : இன்று நேரில் விண்ணப்பம்

இன்ஜி., கல்லுாரிகளில் காலியாக உள்ள, ஒரு லட்சம் இடங்களை நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங்குக்கு, இன்று நேரில் விண்ணப்பிக்க வேண்டும். இன்ஜி., கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பொது கவுன்சிலிங், ஜூலை, 21ல் முடிந்தது; 84 ஆயிரத்து, 352 இடங்கள் நிரம்பின. 1,01,318 இடங்கள் காலியாக உள்ளன.

நவ., 30 வரை இலவச 'அட்மிஷன்' : மெட்ரிக் பள்ளி இயக்குனர் உத்தரவு

'வரும் நவம்பர், 30ம் தேதி வரை, கட்டாய கல்வி சட்டத் தில், மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, கட்டாய கல்வி வழங்க வேண்டும்.

அண்ணா பல்கலை தொலைநிலை கல்வி சேர்க்கை அறிவிப்பு

அண்ணா பல்கலையில், எம்.பி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., படிப்புகளுக்கான தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையில், தொலைநிலை கல்வி மூலம், எம்.பி.ஏ., படிப்பில் எட்டு பாடப்பிரிவு களிலும், எம்.எஸ்சி.,யில் கம்யூ., சயின்ஸ் பிரிவிலும், எம்.சி.ஏ., ஒரு பாடப்பிரிவிலும் தொலைநிலையில் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

சொந்த ஊராட்சியில் தேர்தல் பணி கூடாது : தேர்தல் கமிஷன் செயலர் உத்தரவு

உள்ளாட்சி தேர்தலின் போது சொந்த ஊராட்சியில் பணிபுரிய ஊழியர்களை அனுமதிக்கக் கூடாது,' என, தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் உத்தர விட்டுள்ளார்.மாநில, மாவட்ட மற்றும் மாநகராட்சி தேர்தல் அலுவலர்களுக்கு இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள்

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

2016-17 கல்வியாண்டில் முதல் வகுப்பு மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யப்பட வேண்டும்.

அனைவருக்கும் கல்வி இயக்ககம் மதிப்புமிகு மாநில திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரைப்படி EMIS இணையதளம் 2016-2017 கல்வியாண்டிற்கு மேம்படுத்தப்பட்டுவிட்டது.

தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் அனைத்துவகை பள்ளிகளும் கீழ் காணும்  வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Manonmaniam Sundaranar University 24th Annual Convocation 2016 - Notification


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!