Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 2 August 2016

தலைமைஆசிரியா்களுக்கான தலைமைப்பண்பு மேம்பாட்டுப்பயிற்சி தொடக்க விழா.

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் கீழ்தலைமைஆசிரியா்களுக்கான தலைமைப்பண்பு மேம்பாட்டுப்பயிற்சி தொடக்க விழா. மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்.
புதுக்கோட்டை,ஆக.2-

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் சார்பில் தலைமைஆசிரியர்களுக்கான தலைமை மேம்பாட்டுப்பயிற்சியின் தொடக்கவிழா புதுக்கோட்டைலேணாவிளக்கு மவுண்ட்சீயோன்பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில்நடைபெற்றது. விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி தலைமை தாங்கிபயிற்சியினை குத்துவிளக்கேற்றி  தொடங்கி வைத்து பயிற்சியின் முக்கியத்துவம்குறித்து தலைமையுரை ஆற்றினார். முதற்கட்டமாக நேற்று தொடங்கி வருகிற5ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரையும், இரண்டாம் கட்டமான வருகிற 16ந்தேதி தொடங்கிவருகிற 20ந்தேதி வரையும் ஆக 10 நாட்கள் இப்பயிற்சி நடைபெறும். இப்பயிற்சியில்மாவட்டத்தின் அரசு உயா்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின்தெரிவுப்பெற்ற 30 தலைமைஆசிரியா்கள் பங்கேற்றுள்ளனா்.

சென்னை விஜயலட்சுமி,கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை கே.ஜெயந்தி,ஒத்தைப்புளிகுடியிருப்பு அரசு உயா்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியா் லெட்சுமி,வல்லத்திராக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சேகா், கனவுஆசிரியரைத்தேடி இயக்குநா் தாமரைக்கண்ணன் மற்றும் பா.முனிராமையா, புதியாசலம்,தென்கரைமுத்துப்பிள்ளை, ஆகியோர் கருத்தாளா்களாக கலந்துகொண்டுபயிற்சியளித்துவருகிறார்கள். முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும்புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட மாவட்ட உதவித்திட்டஒருங்கிணைப்பாளா் ஜெ.ராதிகாராணிபிரசன்னா வரவேற்று பேசினார். கொத்தமங்கலம்மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியா் ஜெயந்தி நன்றி கூறினார்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி அவா்களின்வழிகாட்டலின்பேரில் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளா்ஜெ.ராதிகாராணிபிரசன்னா, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சி.பன்னீா்செல்வன்,க.ராஜா ஆகியோர் செய்துள்ளனா்.

ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு

CLICK HERE-WP(C) No.416 OF 2012 - SUPREME COURT - TEACHER ELIGIBILITY TEST NOT ELIGIBLE FOR MINORITY EDUCATIONAL INSTITUTION REG ORDER

Pre Matric Scholarship to Minority Students for the year 2016-17

CLICK HERE-Matric scholarship to minority

M.Phil பட்டம் பயில அனுமதி கோரும் படிவம்.


2016 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் , திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் இடங்கள் சார்பான மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரின் நடைமுறை கடிதம்


புதிய கல்வி கொள்கை 2016 - தமிழ் மொழியாக்க புத்தகம்

ஒன்றாம் வகுப்பு முதல் ஆதார் அட்டை அவசியம் : மத்திய அரசு அறிவிப்பு.

தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களையும் அவர்களின் ஆதார் எண்ணுடன் எமீஸ் கணிணி திட்டத்தில் பதிவு செய்யும் பணியை விரைவுபடுத்தியிருக்கிறது.  தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசின் 14 வகை நலத்திட்டங்கள் செயல்படுவதில் பல்வேறு முறைகேடுகள் உள்ளன.

ஆசிரியர்களுக்கு உதவித்தொகை

கல்லூரி பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் எமெரிடஸ் உதவித்தொகை அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.

உதவித்தொகை:

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு  புதன்கிழமை (ஆகஸ்ட் 3) தொடங்கி செப்டம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் சார்பில் 2016-17ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பணி நிரவல், மாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்குகிறது.

மத்திய அரசு பணியில் பல்வேறு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

கடலுார் மாவட்டத்தில் பள்ளி செல்லாதவர்கள் எண்ணிக்கை...819! ஆசிரியர்கள் கணக்கெடுப்பில் தகவல்

கடலுார் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடந்த கணக்கெடுப்பு பணியில் பள்ளி செல்லாதவர்கள், பள்ளியை விட்டு இடை நின்ற மாணவ, மாணவியர் எண்ணிக்கை 819 என தெரியவந்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் 'நீட்' கட்டாயம் :மசோதா நிறைவேறியது.

அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும், 'நீட்' எனப்படும் தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்தும் மசோதாக்களுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.

BE:1 லட்சம் 'சீட்' - 1 வாரம் அவகாசம்

தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாக உள்ள, ஒரு லட்சம் இடங்களை நிரப்புவதற்கு, ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 523 இன்ஜி., கல்லுாரிகளுக்கு, ஜூலை, 29ம் தேதியுடன் கவுன்சிலிங் முடிந்தது.

சித்தா, ஆயுர்வேதம் 5,700 பேர் விண்ணப்பம்

சித்தா, ஆயுர்வேதம் படிப்புகளுக்கு, 5,700 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர். முந்தைய ஆண்டை விட, 2,400 விண்ணப்பங்கள் குறைந்துள்ளன. தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்களும்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்களும் உள்ளன.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!