Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 4 August 2016

மொபைல் ஆப்' உருவாக்குவது எப்படி? : சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய படிப்பு

'ஆன்லைன்' கல்வி திட்டத்தில், 'மொபைல் ஆப்' உருவாக்குவது எப்படி என்பது குறித்த புதிய படிப்பை, சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கியுள்ளது. மத்திய அரசு, அனைத்து தரப்பு மக்களுக்கும், தொழில்நுட்பம் சார்ந்த, தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ற படிப்புகளை நடத்த, திறந்தவெளி ஆன்லைன் படிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 

        இதற்கான அனுமதியை சில வாரங்களுக்கு முன், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வழங்கியது. இதையடுத்து, இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., 'மொபைல் ஆப்' குறித்த படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த படிப்பை யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம்; படிப்புக்கு கட்டணம் கிடையாது. ஆனால், தேர்வுக்கும், ஐ.ஐ.டி.,யின் சான்றிதழ் பெறவும் கட்டணம் உண்டு. சென்னை ஐ.ஐ.டி.,யின் www.imad.tech என்ற இணையதளத்தில், விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யலாம். அவர்களின் இ - மெயில் முகவரிக்கு, பாடங்கள் வீடியோவாக அனுப்பப்படும். இணைய தளம் மூலம் அதற்கான இணைப்பை பயன்படுத்தி படிக்கலாம். 'மொபைல் அப்ளிகேஷன்' என்ற, 'மொபைல் ஆப்' அனைத்து வகையிலும் பயன்படும் நிலையில், அதை தங்களுக்கு தாங்களே உருவாக்கி கொள்ளும் முறை குறித்து, இந்த படிப்பில் கற்றுத் தரப்படும். செப்டம்பரில் துவங்கி, ஐந்து வாரங்கள் நடக்கும். அதன்பின், அக்., 16 முதல் ஆன்லைனில் தேர்வு நடக்கும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பிரபல நிறுவனங்களில், களப்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான ஏற்பாடும் செய்யப்படும்.

பாடப்புத்தகம் அச்சடிக்கும் பணி: 'டெண்டர்' காலாவதி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும், இலவச பாடப் புத்தகங்களை, தனியார் அச்சகங்கள் மூலம் அச்சடித்து, பாடநுால் கழகம் வழங்கி வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பள்ளி பாடப் புத்தகங்கள் அச்சிட, தமிழ்நாடு பாடநுால் கழகம், பிப்., 28ல், 'டெண்டர்' அறிவித்தது. மார்ச், 30ல், டெண்டர் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

ஆனால், அன்றைய தினம், டெண்டர் திறக்கப்படவில்லை. இதற்கான விண்ணப்பங்கள், 120 நாட்களில், அதாவது, ஜூலை, 28ல் காலாவதி ஆனதையும், பாடநுால் கழகம் மறந்து விட்டது. அச்சகர்கள், அடுத்த டெண்டர் எப்போது என கேட்ட போது தான், விண்ணப்பங்கள் காலாவதியானதை அதிகாரிகள் அறிந்துள்ளனர். இதையடுத்து, விண்ணப்பதாரர்களுக்கு, அவசரமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், 'டெண்டர் விண்ணப்பங்கள் செல்லத்தக்க தேதியை, 60 நாட்கள் நீட்டிக்க உள்ளோம். அதற்கு ஒப்புதல் கடிதம் அனுப்ப வேண்டும்' என, பாடநுால் கழக மேலாண் இயக்குனர் மைதிலி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அச்சகர்கள் கூறுகையில், 'டெண்டர் அறிவிக்கப்பட்ட கால அவகாசத்தில், மூலப்பொருட்களுக்கு என்ன சந்தை விலையோ, அதற்கு ஏற்ப, விண்ணப்பத்தில் விலையை குறிப்பிடுவோம். இன்னும், இரு மாதங்கள் தேவை என்பதால் விலை மாறுபடும். காலாவதியான விண்ணப்பத்திற்கு பதில், புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும்' என்றனர்.

10 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கும் அபாயம் : பாடப் புத்தகங்கள் மாநில மொழிகளில் அச்சிடப்படுவதால், மொழி புரியும் வகையில், உள்ளூர் அச்சகர்களுக்கே, ஒவ்வொரு மாநிலமும் அனுமதி அளிக்கிறது. இங்கு, ஆந்திரா, கர்நாடகா அச்சகர்களை அனுமதிப்பதால், புத்தகங்களில் பல பிழைகள் இருந்தன. இந்த முறையும், 50 வெளிமாநில அச்சகங்கள் விண்ணப்பித்துள்ளன.

அதனால், உள்ளூர் அச்சகங்களுக்கு வாய்ப்பு குறைந்து, சென்னை மற்றும் சிவகாசியிலும் அச்சகங்களை நம்பியுள்ள, 10 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த, 50 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிப்படையும் அபாயத்தில் உள்ளதாக, அச்சகர்கள் கவலை அடைந்துள்ளனர். 

இன்ஜி., கல்லூரிகளில் 'அட்மிஷன்' சரிவு ஏன்? : 5 லட்சம் பேருக்கு வேலை இல்லை

தமிழகத்தில், இன்ஜினியரிங் படிப்பில், மாணவர்கள் அதிகளவில் சேராமல் புறக்கணித்ததற்கு, வேலைவாய்ப்பு இல்லாததே காரணம் என, தெரியவந்துள்ளது. 

 ஒவ்வொரு ஆண்டும், அண்ணா பல்கலை மூலம், இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 2 லட்சம் பேர் வரை, இன்ஜி., படிப்பில் சேர்ந்த காலம் மாறி, இந்த ஆண்டு வெறும், 90 ஆயிரம் பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். 1.02 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், காலியாக கிடக்கின்றன.

நிலைமை மோசம் : இந்த மோசமான நிலையால், இன்ஜி., கல்லுாரிகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கல்லுாரிகளை நடத்துவதா; வேண்டாமா என, ஆலோசனை நடத்தும் அளவுக்கும் நிலைமை மோசமாகி உள்ளது.

முன்னுரிமை : இந்த நிலைக்கு, இன்ஜி., படிப்புக்கு வேலைவாய்ப்புகள் சரிந்ததே காரணம் என, தெரிய வந்துள்ளது. பி.இ., - பி.டெக்., முடித்து, 2.45 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர்.

எம்.இ., மற்றும் எம்.டெக்., முதுகலை படிப்பு முடித்து, 2.36 லட்சம் பேர் வேலையின்றி உள்ளதாக, வேலைவாய்ப்பு மைய தகவல்கள் தெரிவித்து உள்ளன. டிப்ளமோ இன்ஜி., படிப்பை முடித்த, 3.34 லட்சம் பேரும், வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து, கல்வியாளர்கள் கூறும்போது, 'இன்ஜி., பட்டதாரிகளுக்கு, தமிழக தொழிற்சாலைகளில் முன்னுரிமை தர வேண்டும். அவ்வாறு அளித்தால், வேலையில்லாதவர் எண்ணிக்கை கணிசமாக குறையும்' என்கின்றனர்.

இது தொடர்பாக, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: தற்போதுள்ள பாடத்திட்டம் மிக பழமையானது. தொழிற்சாலைகளில், தற்போதுள்ள தொழில்நுட்பத்துக்கும், பாடத்திட்டத்துக்கும் தொடர்பே இல்லை. வேலைவாய்ப்பு பெற, பட்டதாரிகளுக்கு பலதரப்பட்ட திறன் தேவைப்படுகிறது.

கூடுதல் உதவி : ஆனால், பல கல்லுாரி கள் வெறும் படிப்பை மட்டும் கற்றுத் தருகின்றன. புதிய தொழிற்சாலை கள் மற்றும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, அரசு கூடுதல் உதவிகள் அளிக்க வேண்டும். இதுபோன்ற மாற்றங்களை கொண்டு வந்தால், இன்ஜி., படிப்பை தமிழகத்தில் தரமாக்கலாம். இல்லையென்றால், இன்னும் சரிவு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

70 ஆயிரம் அதிகம்! : கடந்த, 2015 நிலவரப்படி, 4.46 லட்சம் பேர் வேலையின்றி இருந்தனர். இவர்களில், 2.21 லட்சம் பேர், எம்.இ., - எம்.டெக்., முடித்தவர்கள். மேலும், டிப்ளமோ இன்ஜி., முடித்தவர்கள், 3.15 லட்சம் பேருக்கு வேலை இல்லை. இந்த ஆண்டு, இன்ஜி., பட்டதாரிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, 70 ஆயிரம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் பதவி உயர்வு பெற்றுச் சென்ற 3000 ஆசிரியர்கள் - மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதித்திட “தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்; சங்கம் கோரிக்கை.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு பதவி உயர்வில் சென்றவர்கள் குறித்து அளித்துள்ள வேண்டுகோள் கடிதம் வருமாறு.
கடந்த 2001 முதல் ஆசிரியர்களுக்கான மாறுதல் - ஓளிவு மறைவு இல்லாமல் நடத்திட கலந்தாய்வு முறையில் நடத்தப்பட்டு வருகிறது.கடந்த 10 ஆண்டுகளாக, முதல்கல்வியாண்டில் பதவிஉயர்வு மூலம் செல்லும் பட்டதாரி, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அடுத்த கல்வியாண்டில் மாறுதலில் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது. மேலும் பதவி உயர்வுக்கு செல்லும் போதே அடுத்த ஆண்டில் மாறுதல் கிடைக்கும் என்கிற நம்பிக்கையின் பேரிலேயே பலர் வெளியூர்களுக்கும்,வெளிமாவட்டங்களுக்கும் பதவி உயர்வில் சென்றுள்ளனர். ஆனால் இந்த ஆண்டு கடந்த 10 ஆண்டுகளாக பின்பற்றி வந்த நடைமுறையை,மாறுதலுக்கான பள்ளிக்கல்வித்துறைஅரசாணைஎண்: 258, நாள்: 06.07.2016ல் தெரிவிக்கப்படவில்லை இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் நேரிலும், கோரிக்கை மனுக்கள் மூலம் தெரிவித்தும் எவ்வித விதித்திருத்தங்களும் வழங்கப்படாத சூழலில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மிகுந்த மன உளச்சலில் குடும்பம் மற்றும் குழந்தைகளை பிரிந்து தொலைதூரத்தில் பணியாற்ற வேண்டிய சூழலில் உள்ளனர்.

ஆகவே தமிழக முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி மாறுதல் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன் கடந்த ஆண்டில் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களும் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளத்தக்க வகையில் உரிய ஆணை பிறப்பிக்குமாறும் மாறுதல் கலந்தாய்வில் எவ்வித முறைகேடும் தவறுகளும் இன்றி நடத்திட அறிவுரை வழங்குமாறும் கனிவுடன் வேண்டிக்கொள்கிறேன். முனைவர்.சாமி. சத்தியமூர்த்தி மாநிலத் தலைவர்

AEEO கலந்தாய்வை நேர்மையாகவும் ஒளிவுமறைவுஇன்றி நடத்தியமைக்கு AEEO சங்கம் மதிப்புமிகு கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வி/தொடக்கக்கல்வி இயக்குனர்களுக்கு நன்றி அறிவிப்பு

டிப்ளமோ நர்சிங்: 9ம் தேதி கலந்தாய்வு

'டிப்ளமோ இன் பார்மசி' படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 9ம் தேதி நடக்கிறது. டிப்ளமோ இன் பார்மசி படிப்புக்கு, மூன்று அரசு கல்லுாரிகளில், 240 இடங்கள் உள்ளன. 
டிப்ளமோ இன் பார்மசி முடித்தோர், இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரும், பி.பார்ம்., மற்றும் டிப்ளமோ நர்சிங் முடித்தோர், இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரும், 'போஸ்ட் பேசிக்' பி.எஸ்சி., படிப்புகளுக்கு, அரசு, சுயநிதி கல்லுாரிகளில், 1,300 இடங்களும் உள்ளன.இதற்கு, 6,000 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 9ம் தேதி நடக்கிறது. போஸ்ட்பேசிக் பி.எஸ்சி., படிப்புக்கு, 10ம் தேதி கலந்தாய்வு தொடர்கிறது. மேலும் விபரங்களை, www.tnhealth.org என்றஇணையதளத்தில் அறியலாம்.

மத்திய அரசின் ஏழாவது ஊதிய குழு நிர்ணயித்துள்ள உங்கள் ஊதியம் எவ்வளவுஇப்போதே கணக்கிட்டு பாருங்கள்...

7 TH CPC CALCULATOR.XLSX DOWNLOAD - 7 CPC CALCULATOR DOWNLOAD | மத்திய அரசின் ஏழாவது ஊதிய குழு நிர்ணயித்துள்ள உங்கள் ஊதியம் எவ்வளவுஇப்போதே கணக்கிட்டு பாருங்கள்...

7 TH CPC CALCULATOR.XLSX DOWNLOAD ..

EMIS new format 2016

7-வது ஊதியக் குழு பலன் எதிரொலி: அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை வீட்டுக் கடன்- சலுகை வட்டியில் அளிக்க எஸ்பிஐ திட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரையை ஆகஸ்ட் மாதத்திலிருந்து அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாத வருமானம் உயரும் என்பதால் ஊழியர்களுக்கு வீட்டுக் கடனை சலுகை வட்டியில் அளிக்க எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த பிற பணியாளர்கள் ஆகியோருக்கு நீண்ட காலஅடிப்படையில் குறைந்த வட்டியில் கடன் வழங்க முடிவு செய்துள்ளது.
ஊழியர்கள் வீட்டுக் கடனை திரும்ப செலுத்தும் காலத்தை தங்கள் வசதிக்கேற்ப நீட்டித்துக் கொள்ளலாம். அதிகபட்சம் 75 வயது வரை வீட்டுக் கடனை திரும்ப செலுத்த சலுகை அளிக்கப்படும் என வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது. வீட்டுக் கடனை திரும்ப அளிக்கும் வயது 70 வரை உள்ளது. இது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு என ``முன்னுரிமை வீட்டுக் கடன்’’ மற்றும் ராணுவத்தினருக்கென ``சவுகரிய வீட்டுக் கடன்’’ எனும் இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இரு சலுகை திட்டங்களில் கடன் பெறுவோர் ஏற்கெனவே உள்ள வீட்டுக் கடன் திட்டங்களுக்கான வட்டி விகித்தைக் காட்டிலும் குறைந்த வட்டியில் கடன் பெறுவர்.

ஊழியர்கள் தங்களுக்கு எந்த அளவுக்குக் கடன் கிடைக்கும் என்பதை இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரசுத் துறையுடன் வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த சலுகைத் திட்டத்தில் பரிசீலனைக் கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்டப்டுள்ளது.

பிற வங்கிகளில் கடன் பெற்று அதை செலுத்துவோர், அந்தக் கடனை எஸ்பிஐ-க்கு இந்த சலுகைத் திட்டத்துக்கு மாற்றிக் கொள்ள முடியும் எனவும் வங்கி தெரிவித்துள்ளது.

ஓய்வுக் காலத்தில் திரும்ப செலுத்தும் கடன் அளவு குறையும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசின் ஊதியக் குழு பரிந் துரையால் கூடுதலாகக் கிடைக்கும் தொகையின் மூலம் வீடு வாங்கு வது மற்றும் பெரிய வீடுகளுக் குச் செல்வது போன்ற நடவடிக்கை களை ஊழியர்கள் மேற்கொள்ள லாம். அதற்கு உதவும் வகையில் எளிய தவணையில் கடன் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவிக்கிறது

ஏ.இ.இ.ஓ.,க்கள் இடமாற்றம்

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், நேற்று துவங்கியது. முதற்கட்டமாக, ஏ.இ.இ.ஓ., எனப்படும், உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. 

இதில், 408 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இடமாறுதலில் பங்கேற்றனர். அவர்களில், 257 பேருக்கு, அவர்களின் விருப்பப்படி இடமாறுதல் கிடைத்தது. மற்றவர்களுக்கு விருப்பத்தின்படி, அருகிலுள்ள இடங்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. சிலர் விரும்பிய இடம் கிடைக்காததால், இடமாறுதலை தவிர்த்தனர்.

பி.எஸ்சி., நர்சிங் விண்ணப்பிக்க நாளை கடைசி

பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், இன்றுடன் முடிகிறது. பாரா மெடிக்கல் எனப்படும், பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள் உள்ளன. 

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., பிசியோதெரபி என்ற, மூன்று படிப்புகளுக்கு, சுயநிதி கல்லுாரிகளில், 7,190 இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோகம், 21 அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும், ஜூலை, 25ல் துவங்கியது. விண்ணப்பங்களை நேரில் பெறவும், www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும், இன்று கடைசி நாள். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, நாளை கடைசி நாள். இதில், எந்த மாற்றமும் இல்லை என, மருத்துவ கல்வி இயக்ககம் தெளிவுபடுத்தி உள்ளது.

குரூப் - 4 பதவிக்கு 2ம் கட்ட கவுன்சிலிங்

அரசுத் துறையில், குரூப் - 4 பதவிகளுக்கு, 9ம் தேதி முதல், 12ம் தேதி வரை, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. இதுகுறித்து, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் அறிவிப்பு: 

குரூப் - 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் வரைவாளர் பதவிகளுக்கு, நேரடி நியமனம் செய்ய, 2014 டிசம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்வு முடிவு, 2015 மே, 22ல் வெளியானது. இதில், முதல்கட்ட கவுன்சிலிங் முடிந்த நிலையில், மீதமுள்ள, 491 காலி இடங்களுக்கு, வரும், 9ம் தேதி முதல், 12ம் தேதி வரை, காலை, 10:00 மணிக்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கும். இதற்கு தகுதியானவர்கள் விபரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது; அழைப்புக் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!