Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 19 August 2016

ரியோ ஒலிம்பிக்: பி.வி.சிந்துவுக்கு வெள்ளி

ரியோ ஒலிம்பிக் மகளிர் பாட்மிண்டன் அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். அரையிறுதிப் போட்டியில் நொஸோமி ஒகுஹாராவை 21-19, 21-10என்ற நேர் செட்களில் அபாரமாக ஆடி வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார் பி.வி.சிந்து.
இதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளி உறுதியாகியுள்ளது. தங்கப்பதக்க போட்டியில் உலகின் முதல் நம்பர் வீராங்கனை கரோலினா மாரினைச் சந்திக்கிறார் சிந்து.ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 10-ம் நிலை வீராங்கனை இந்தியாவின் பி.வி.சிந்துவும், தரவரிசையில் முதலிடம் வகிக்கும் கரோலினா மரினும் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்துகின்றனர்.ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப் போட்டி முதல் செட்டை பிவி சிந்து 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார்.2-வது செட்டில் சிந்து சிறிது தடுமாறினார். முதலிலிருந்தே புள்ளிகளைக் குவித்த மரின், இறுதியில் 21-12 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றி சம நிலைக்குக் கொண்டு சென்றார். தற்போது வெற்றியை நிர்ணயிக்கும் 3வது செட் தொடங்கியுள்ளது.மூன்றாவது சுற்றிலும் மரினின் கை ஓங்கியது. இருவரும் சரிசமமாக மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனர். என்றாலும் மரினின் கையே ஓங்கியது. கடைசியில் 21-15 என்ற கணக்கில் மரினிடம் போராடி தோற்றார் சிந்து.

மஹாராஷ்டிரா வங்கியில் 1,315 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கு அழைப்பு!

புனேயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 'Bank of Maharadhtra' வங்கியில் நாடு முழுவதும் உள்ள கிளைகளில் நிரப்பப்பட உள்ள 1,315 அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபப்படுகின்றன.

பணி:General Officers officers MMGS-III - 100
பணி:General Officers officers MMGS-III -200
பணி:Security Officers officers MMGS-III -200
பணி:Clerks (Law) - 100
பணி:Clerks (Agri) - 200
பணி:Clerks (Non Conventional) - 200
பணி:Officer - 500

விண்ணப்பிக்கும் முறை:www.bankofmaharastra.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.09.2016

மேலும் தகுதி, அனுபவம், சம்பளம், அனுபவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.bankofmaharastra.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

TRB:் உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்த பட்டியல் வெளியீடு.

இன்ஜி., கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்த பட்டியலை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.அரசு இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர் இடங்களுக்கு, அக்., 22ல் எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள், நேற்று முன்தினம் முதல், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன;வரும், 7ம் தேதி வரை, விண்ணப்பங்களை அளிக்கலாம். இந்த காலியிடங்களுக்கு ஏற்கனவே, 2014ம் ஆண்டு முதல் அறிவிப்பு வெளியானது; அப்போதும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்; அவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 2014 விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்த பட்டியலை, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 191 சிறப்பு அதிகாரி பணி: விண்ணப்பிக்க அழைப்பு.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2016-ஆம் ஆண்டில் நிரப்பப்பட உள்ள 191 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.pnbindia.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மொத்த காலியிடங்கள்:191

பணி:Specialist Officer

பணியிடம்: இந்தியா முழுவதும்

தகுதி: பட்டம்,முதுகலை பட்டம்,பி.இ,பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்குரூ.600மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:www.pnbindia.com என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பிக்க தொடக்க தேதி:20.08.2016

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:09.09.2016

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:2016நவம்பர்,டிசம்பர் மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.pnbindia.comஎன்ற இணையதளத்தை பார்க்கவும்

ஏழு ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வில்லை : ஆர்.எம்.எஸ்.ஏ., பணியாளர் புலம்பல்.

பணியில் சேர்ந்து ஏழு ஆண்டுகளாகியும் இதுவரை ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை என, ஆர்.எம்.எஸ்.ஏ., பணியாளர்கள் புலம்புகின்றனர். 2009ல் ஆர்.எம்.எஸ்.ஏ.,எனப்படும் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. 
இத்திட்டத்தை செயல்படுத்த தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்களை மாநில அரசே நியமிக்க உத்தரவிடப்பட்டது.மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் இருந்து சம்பளம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி 2009ல் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கணக்கு மேலாளர்கள், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், கட்டடப் பொறியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். கணக்கு மேலாளர்களுக்கு ரூ.7,800, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களுக்கு ரூ.6,000, கட்டடப்பொறியாளர்களுக்கு ரூ.12 ஆயிரம்சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், ஏழு ஆண்டுகளைக் கடந்தும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இவர்களைப்போல் எஸ்.எஸ்.ஏ., எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும் நிலையில், தங்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என, புலம்புகின்றனர்.

22.08.2016 அன்று நடை பெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வில்கலந்து கொள்ள வேண்டிய ஆசிரியர்களின் பெயர் பட்டியல்.....

தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

சுதந்திர தினத்தன்று மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்காமல் காலதாமதமாக வந்து தேசியக் கொடி ஏற்றியதாக, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்துள்ள துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வளர்மதி என்பவர் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். சுதந்திர தினத்தன்று பள்ளிக்குதாமதமாக வந்த வளர்மதி, மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிக்காமல் தேசியக்கொடியை ஏற்ற முயற்சித்தார். இதையறிந்த ஊர் பொதுமக்கள் தேசியக் கொடியை ஏற்றவிடாமல் அவரைத் தடுத்து நிறுத்தி, இதுகுறித்து கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சந்திரிகாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வந்த கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரனிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. அதன்பேரில், தலைமை ஆசிரியை வளர்மதியை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

பத்தாம் வகுப்பை தனித்தேர்வராக எழுதிய மாணவியை சட்டக் கல்லூரியில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை தனித் தேர்வராக எழுதிய மாணவிக்கு சட்டக் கல்லூரியில் பயில அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சியைச் சேர்ந்த தாரணி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:திருச்சி ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2007-ஆம் ஆண்டு 9-ஆம் வகுப்பு முடித்தேன். பின்னர் மன அழுத்தம் காரணமாக 10-ஆம் வகுப்பை பள்ளியில் படிக்காமல் தனித் தேர்வராக எழுதித் தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளை, ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்தேன். 2013-இல் காட்சி தொடர்பியல்(விசுவல் கம்யூனிகேசன்) இளம் அறிவியல் பட்டம் பெற்றேன்.இந்த நிலையில், சட்டம் (எல்எல்பி) பயில்வதற்காக, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தேன். தாழ்த்தப்பட்டமாணவர்களுக்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக 71.318 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நான் 71.961 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். தேர்வுப்பட்டியலில் எனது பெயர் இல்லை.இதுதொடர்பாக விசாரித்தபோது, பத்தாம் வகுப்பை தனித்தேர்வராக எழுதியதால் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்புத் தேர்வை தனியாக எழுதி இருந்தாலும், அதைத் தொடர்ந்து பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பை முறையாக பயின்றதால் சட்டக் கல்லூரியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் நூட்டி ராம்மோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயின்றவர்களுக்கே அனுமதி மறுக்கப்படும் என சட்டக் கல்வி விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.மனுதாரர் 10-ஆம் வகுப்பை தனியாக எழுதியிருந்தாலும், பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பை முறையாகப் பயின்றதால் அவருக்கு சட்டக் கல்லூரியில் பயில அனுமதியளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

பள்ளி மாணவர்களுக்கு எரிசக்தி சேமிப்பு : விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்த உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு, எரிசக்தி சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியப்போட்டி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் சார்பில் தேசிய அளவில் எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.மாவட்ட வாரியாக 4,5,6 மற்றும் 7,8, 9ம் வகுப்பு மாணவர்களை ஏ, பி என இரு பிரிவுகளாக பிரித்து போட்டிகளைநடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. பள்ளி அளவில் சிறந்ததாக தேர்வு செய்யப்படும் இரு படைப்புகளை, சென்னையில் உள்ள எரிசக்தி துறை அதிகாரிகளுக்கு, செப்., 30க்குள் கிடைக்கும்படி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேனி முதன்மை கல்வி அலுவலர் வாசு கூறுகையில், “பள்ளி அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த இரண்டு படைப்புகள் தலைமை ஆசிரியர்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதில் தேர்வாகும் மாணவர்கள் மாநில போட்டிகளிலும், அதனை தொடர்ந்து தேசிய போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர். மாநில போட்டிகளில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாமிடத்திற்கு 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாமிடத்திற்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படவுள்ளன. ஆறுதல் பரிசாக 10 பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. தேசிய அளவில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும், ”என்றார்.

வீட்டுவசதி வாரிய வீடுகளுக்கு ஆன்-லைனில் இனிவிண்ணப்பிக்கலாம்: அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.

வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கீட்டுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.சட்டப் பேரவையில், வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:
வீட்டுவசதி வாரியத் திட்டங்களில் ஒதுக்கீடு பெற விண்ணப்பம் சமர்ப்பித்தல், ஒதுக்கீடு செய்தல், வீடு-குடியிருப்புகளை ஒப்படைப்பு செய்தல், ஒதுக்கீடு பெற்றதற்கான தொகை, மாத தவணைத் தொகை, வாடகைத்தொகையை வசூலிப்பது ஆகியன ஆன்-லைன் மூலமாக மேற்கொள்ளப்படும்.வாரியத்தின் அனைத்துத் திட்டங்களும், தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகைக் குடியிருப்புகள் ஒதுக்கீடு ஆகியவற்றுக்கும், தவணைத் தொகை, வாடகை வசூல் ஆகியவற்றை தினந்தோறும் கண்காணிக்கவும், அவற்றில் தவறு ஏதும் ஏற்பட்டால் அதனைச் சரிசெய்யவும் வழிவகை செய்யப்படும்.இலகுரக கடன்கள்:10 முதன்மை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களை தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் வாயிலாக கண்டறிந்து அந்தச் சங்கங்களின் வணிகச் செயல்பாட்டினைப் புதுப்பித்து சாத்தியமிக்க சங்கங்களாக உருவாக்கும். இதற்காக சங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.30 லட்சம் இலகுரக கடன் வழங்கப்படும்.அரசு அறிவித்துள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கப் பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். பணியாளர்களுக்கான கட்டணத்தை கூட்டுறவு வீட்டுவசதி இணையமும், கூட்டுறவு வீட்டுவசதிசங்கங்களும் ஏற்றுக் கொள்ளும்.கடன்-வசூலிப்புப் பணி: தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்தின் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அளிக்கப்படும் கடன் பட்டுவாடா, கடன் வசூலித்தல் பணிகள்,அன்றாட கணக்குகள் ஆகியன ஆன்-லைன் மூலமாக கணினிமயமாக்கப்படும்.

சங்கத்துக்கு அடமானம் செய்துள்ள கடன்தாரர்களின் அனைத்துச் சொத்துகளின் அமைவிடம் குறித்து புவிசார் குறியீட்டின்படி சேகரிக்கப்பட்டு, கடன்தாரர்கள் தங்களது கடனை நேரடியாகஆன்-லைன் வசதி மூலமாகவோ அல்லது வங்கிக் கிளையிலோ திருப்பிச் செலுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.இதனால் கடன் வழங்குவது, திருப்பிச் செலுத்துவதை முறைப்படுத்துவதுடன், திருப்பிச் செலுத்தாத கடன்தாரர்கள், முறையாக பராமரிக்கப்படாத கணக்குகள் ஆகியவற்றைத் தினமும் கண்காணித்து கடன்கள் தவறாமல் திருப்பி செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் சீரிய நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும்.தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், குடியிருக்கத் தகுதியுள்ள நிலையில் பராமரிக்கப்படும். அதன்படி, நிகழாண்டில் ரூ.20 கோடி மதிப்பில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகைகக் குடியிருப்புகளில் சிறப்பு பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.சி.எம்.டி.ஏ. ஆவணங்களையும் கணினி வழியில் பிரதி எடுக்கலாம்சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திலுள்ள (சி.எம்.டி.ஏ.) வரைபடம், ஆவணங்களை கணினி வழியாக பிரதி எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் திட்ட அனுமதி வழங்கப்பட்ட வரைபடம், ஆவணங்கள் குறுகிய ஆயுளை உடையதாலும், கரையான், பூச்சிகளால் சேதம் அடையும் என்பதால் அவற்றைப் பாதுகாப்பது அவசியம். எனவே, அவற்றின் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு அவற்றை கணினி வழிப் பிரதியெடுக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும்.

சட்டச் சிக்கல்களில் தீர்வு காணவும், கட்டி முடிக்கப்படும் கட்டடங்கள் திட்ட அனுமதியின்படியே கட்டப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யவும், வருங்காலங்களில் பொது மக்கள்வேண்டும் போது அவற்றின் பிரதிகளை எளிதாக வழங்கவும் அவசியமாகிறது.மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் முக்கியமான ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளதால் அவற்றை கணினி வழிப் பிரதி எடுத்தல் முக்கியம். இவ்வாறு கணினிமயமாக்கப்படும் தகவல் தொகுப்பு எதிர்காலத் திட்டமிடுதலுக்கும் பயன்தரும். இந்தத் திட்டத்துக்கான செலவினம், திட்ட அனுமதி வரைபட நகல், பிற ஆவணங்களைப் பெறும் மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணங்கள் வழியாக பெறப்படும்.

மூன்று வணிக வளாகங்கள்:

சென்னையில் சாஸ்திரி நகர், பெசன்ட் நகர், அசோக் நகர் ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகக் கட்டடங்களை இடித்து விட்டு அதிகபட்ச தரைப்பரப்பு, நவீன வசதிகளுடன் கூடிய வணிக-அலுவலகக் குடியிருப்பு வளாகங்கள் கட்டப்படும் என்றார்.

பி.எஸ்.என்.எல்., 'சண்டே ஜாலி' சலுகை : இணையதள இணைப்புக்கு கிடையாது.

பி.எஸ்.என்.எல்., தொலைபேசி (தரைவழி) வாடிக்கையாளர்களுக்கான ஞாயிற்று கிழமைகளில் இலவச அழைப்பு சலுகை, அலைபேசி மற்றும் இணையதள இணைப்புகளுக்கு பொருந்தாது' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தனியார் நிறுவனங்களின் வருகையால், பி.எஸ்.என்.எல்., தரைவழி இணைப்புகளின் பயன்பாடு குறைந்து விட்டது.தரைவழி இணைப்புகளை அதிகரிக்க செய்யும் நோக்கில், சலுகைகளை பி.எஸ்.என்.எல்., அளித்து வருகிறது. தினமும் இரவு 9:00 முதல் காலை 7:00 மணி வரை, தொலைபேசியில் இருந்து எந்த இணைப்புகளுக்கு பேசினாலும் கட்டணம் இல்லை. இதே போல ஆக.,15 முதல் புதிய சலுகை அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஞாயிற்று கிழமைகளில் தொலைபேசியில் இருந்து பேசும் அழைப்புகளுக்கு கட்டணம்இல்லை.இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வெளிநாடுகளில் வசிப்போருடன் பேசவும், இணையதள இணைப்புக்கும் இச்சலுகை கிடையாது. மற்ற விடுமுறை தினங்களுக்கும் பொருந்தாது. இத்திட்டத்தால்பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்' என்றார்.

'நீட்' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி : தனியார் பள்ளிகளில் துவக்கம்

அடுத்த ஆண்டு, 'நீட்' தேர்வு கட்டாயமாகும் நிலையில், தனியார் பள்ளிகளில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்.,ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர, அனைத்து மாநிலங்களிலும், அடுத்த ஆண்டு முதல், 'நீட்' எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்துவது கட்டாயம் ஆகியுள்ளது.
இந்த ஆண்டு மட்டும், நீட் தேர்வை அனுமதிக்காத மாநிலங்களில், அரசு கல்லுாரிகளில், நீட் தேர்வு இல்லாமல், மாணவர்களை சேர்க்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டும் விதிவிலக்கு உண்டா என்பது தெரியவில்லை.எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், நீட் தேர்வு அடிப்படையில் தான், மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தங்கள் பள்ளி மாணவர்கள், பிளஸ் 2வில் மட்டுமின்றி, நீட் தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என, தனியார் பள்ளிகள் விரும்புகின்றன. இதுதொடர்பாக, பல்வேறு பயிற்சி மையங்களுடன், தனியார் பள்ளிகள் ஒப்பந்தம் செய்துள்ளன.இந்த பயிற்சி மையங்களின் ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு சென்று, நீட் சிறப்பு வகுப்புகள் நடத்த துவங்கியுள்ளனர். சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமின்றி, மெட்ரிக் பள்ளிகளும் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. மேலும், நாமக்கல், ஈரோடு, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில், பிளஸ் 2 ரிசல்ட்டில் சிறப்பு கவனம் செலுத்தும் பள்ளிகளும், நீட் சிறப்பு வகுப்பை துவங்கியுள்ளன

ரியோ ஒலிம்பிக்: பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் சிந்து- வெள்ளி அல்லது தங்கத்தை உறுதி செய்தார்


உங்கள் சம்பளச் சான்றை ஆன் லைனில் பார்க்க !

*உங்கள் சம்பளச் சான்றை ஆன் லைனில் பார்க்க கீழ்கண்ட முகவரியில்*

1. உங்கள் PF / CPS number ஐ பதிவிடவும்
2. SELECT SUFFIX : PTPF
3. உங்கள் பிறந்த தேதி

இவற்றை பதிவிட்டு , பெறலாம்.

TN ePayslip - e-Payroll›http://epayroll.tn.gov.in/tngepay/Login/Payrolllogin.aspx epayslip

இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட மாறுதலுக்கான(DEE SGT Asst) காலிப்பணியிடங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட மாறுதலுக்கான காலிப்பணியிடங்கள்.(வ.எண் 34,35,36&37 ஆகிய பணியிடங்கள் உருது பணியிடங்கள்.)

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!